Tuesday, November 29, 2011

ஞானச்சுடர் விளக்கு







அன்பே தகழியா ஆ ர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்

-என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்




தேவாரம் போற்றும் திருவண்ணாமலை... ஊரை நெருங்கும்போதே, விண் தொட்டுத் தெரிகிறது அண்ணாமலையாம் அருணாசலம்!

அருணகிரி, அருணாசலம், சோணாசலம், சோணகிரி, முக்திகிரி, தென்சிவகிரி, சிவலோககிரி, சோணாத்ரி, அருணாத்ரி என்றெல்லாம் அழைக்கப்படுகிற அழகான மலை.

ஆமைப் பாறை, மயிலாடும் பாறை, வழுக்குப் பாறை முதலான மலையும் சுனைகளோடும் இயற்கை கொஞ்சித்தவழும் எழில் மலை!
Arunachaleswarar Temple, Tiruvannamalai - Tiruvannamalai, Tamil Nadu

'அடிக்கொரு லிங்கம், அடித் துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்கள்' என்று பெரியோர்களால் போற்றப்படும் தலம்.

கரும்பாறை மலையாகக் கண்ணுக்குப் புலப்பட்டு, காந்த மலையாக
இருந்து மகான்கள் பலரையும் ஈர்த்துக் கொள்ளும் தலம்.
ஞானியர் இல்லம், சித்தர்களின் சரணாலயம் எனும்
அடைமொழிகளுக்கு விளக்கமாகத் திகழும் விந்தைத் தலம்.

ஊரே சக்கர வடிவில் இருப்பதாலும், அதன் ஒன்பது கோணங்கள் ஒளிர்வதாலும், 'நவ துவார புரி' என்றழைக்கப்படும் தலம்.
வேதங்களால் 'ஞானாக்கினி' என விவரிக்கப்படும் தலம்.
தமிழர்தம் திருநாட்களிலேயே பழைமை மிக்கதான கார்த்திகை தீபத் 
திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பெறும் தலம்.
Sri Arunachaleswarar
மாசி சிவராத்திரியும், கார்த்திகை திருக்கார்த்திகையும், 
மார்கழித் திருவாதிரையும் தோன்றுவதற்குக் காரணமான தலம்.


ஆறுமுகப் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, சந்தக் கவிகளால் முருகனைச் சொந்தமாகப் பாடிய அருணகிரிநாதரின் பிறப்புத் தலம்.

வியாசர் தொடங்கி துர்வாசர் தொடர்ந்து அகத்தி யரும் இடைக்காடரும் 
குகை நமசிவாயரும் குரு நமசிவா யரும் தவமியற்றிய தலம்.
காட்சிக்கு இனிய மலை, 
கண்டார் துயர் தீர்க்கு மலை, 
முந்தைப் பழவினைகள் முடிவுறச் செய்யும் மலை, 
எத்திசையும் தோற்று மலை, 
முக்திக்கு ஒரு மலை, 
நெஞ்சை இளக்கும் மலை, 
நெஞ்சத்துள் பேரின்பம் வளர்க்கும் மலை, 
தாயாய் சற்குருவாய் நின்ற மலை என்றெல்லாம் குரு நமசிவாயர் இந்த மலையைப் போற்றுகிறார்.
 
குன்றக்குடி ஆதீனம் தோன்றிய தலம்.
வனவாச காலத்தில் பாண்டவர்கள் தவம் செய்த தலம்.

சூர சம்ஹாரம் செய்யப் போகும் வழியில், அண்ணாமலையாரிடம்
முருகப் பெருமான் அருள்பெற்ற தலம்.

மங்கைபாகனாரான சிவபெருமான், மலையாக இருந்து, ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒவ்வொரு வகையாகக் காட்சி தந்து அருள் வழங்கும் தலம்.
அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக, சொல்லச் சொல்லத் திகட்டாத சுகமாக, எண்ண எண்ணக் குன்றாத ஏற்றமாக, திருவண்ணாமலையின் சிறப்புகள் தொடர்கின்றன.
ஒரே மலையில் நிறைய சிகரங்கள். எனவே, ஒவ்வொரு திசையிலிருந்தும் இடத்திலிருந்தும் பார்த்தால், ஒவ்வொருவிதமாகத் தோற்றம் தரும் இந்த மலை,

இறைவனும் ஒவ்வொருவர் பார்வைக்கு ஒவ்வொரு விதமாகவும்,
ஏகன் அநேகனாகவும் தோற்றம் தருபவர்தாம் எனும் தத்துவத்தை
விளங்க வைக்கிறது.
அண்ணுதல் என்றால் அணுகுதல் என்று பொருள்;

தேடியவர் அணுக முடியாத மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர்.

ஆனாலும் வேடிக்கை! ஆணவத்தால் தேடியபோது அடியோ முடியோ கிட்டவில்லை; 

ஆயின், அன்புடன் பக்தர்கள் தேடினால், அடியையும் முடியையும் காணலாம் என்று அத்தாட்சியாக நிற்கிறது மலை.!!!!!
அருணம், சோணம் என்ற சொற்கள் செம்மை நிறத்தைக் குறிப்பவை;
சிவந்த மலை என்பதால் சோணாசலம், அருணாசலம்!

மலையே சுயம்பு. இறைவனாரே மலையாக உருவெடுத்ததால், இந்தத் தலத்தில் மலை வழிபாடு பிரதானம். மலை சுற்றுவதும் மலையை வழிபடுவதும் தவறாமல் செய்யப்படுகின்றன.
அது சரி... மலையை வழிபடலாம்; ஆனால் அபிஷேகம் ஆராதனை செய்வதென்றால்... மலைக்கு எப்படிச் செய்வது?

பார்த்தார் பரமனார்! பக்தர்களுக்காகத்தானே அவர் வடிவம் எடுக்கிறார்!

சிறிய மனங்களுக்குப் புரிவதற்காக சிறிய வடிவில்
மலையடிவாரத்தில் கோயில் கொண்டுவிட்டார்.

உலக வாழ்க்கை முறையில், திருவண்ணாமலைக்கு
முக்கியமான இடம் உண்டு.
பஞ்ச பூதங்களில், ஆகாயமும் காற்றும் சாதாரண மனிதக் கண்களுக்குப் புலப்படாதவை.

அந்த வகையில் கண்களுக்குப் புலனாகும் முதல் நிலை, அக்னியான நெருப்புக்கு மட்டுமே உண்டு.

அருவமாக, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஆண்டவன், சராசரி மனிதக் கண்களுக்குப் புலனாவதற்காக எடுத்த முதல் நிலை, அக்னி நிலை.

அதுவே திருவண்ணாமலை என்பதால் இந்த முக்கியத்துவம்!

அக்னியாக இருந்தால் கண்ணுக்குப் புலப்படும்; ஆனாலும், அருகில் நெருங்க முடியுமா? தகித்துப் போய்விட மாட்டோமா? 

ஆதலால், ஆண்டவன் குளிர்ந்தார்; குவலயம் காக்கத் 
தாமே கல்லாகிப் போனார்.


நெருப்புப் பிழம்பு மெள்ளக் குளிர்ந்தது; மலையாக உருவெடுத்தது. 
அதுவே திருவண்ணா மலை ஆனது.

ஆணவத்தால் தேடினால் கிடைக்காத ஆண்டவன், அன்பால் தேடினால் கிடைப்பார் என்பதால்தான், அடிமுடி கதை நடந்த அதே இடத்தில், பிற்காலத்தில் பற்பல ஞானியர் வந்து ஆண்டவனின் அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.

மலையைச் சுற்றி வரும்போது. கிழக்குப் பகுதியி லிருந்து பார்த்தால், மலை ஒற்றையாகத் தெரியும். ஏக லிங்கமாக, ஒன்றே கடவுள் என்பதை உணர்த்தும்.

சற்று தூரம் சென்ற பின்பு பார்த்தால், இரண்டாகத் தெரியும். ஆணாகவும் பெண்ணாகவும் உலகை இயங்க வைக்கும் அர்த்தநாரீஸ்வரர்.

மேற்கு திசையிலிருந்து நோக்கினால், மூன்று சிகரங்களைக் காணலாம். மும்மூர்த்திகளின் திருவிளையாட்டுதானே திருவண்ணாமலை! மூன்றாகப் பிரிந்து உலகை நடத்தும் மும்மூர்த்திகளுக்கிடையே போட்டியாவது பொறாமையாவது?! நமக்குப் புரியவைக்க அவர்கள் அப்படியரு ஆட்டம் ஆடினால்தானே உண்டு. 

இன்னும் இன்னும் நடந்து மலையைத் திரும்பிப் பார்த்தால், இப்போது ஐந்து கூம்புகள்... ஆமாம், இறைவனாரின் பஞ்சமுக தத்துவம்... பஞ்ச பூதப் பெருமை.
அண்ணாமலை மலையும் சரி, லிங்கமும் சரி, 250 கோடி ஆண்டுகள் பழைமையானவை என்று கணிக்கப்பட்டுள்ளன (அடேயப்பா! இமயத்தின் தொன்மை எவ்வளவு தெரியுமா? 5 கோடி ஆண்டுகள். அப்படியானால், திருவண்ணாமலை, முன்னைப் பழைமைக்கும் பழைமையானது!).
அண்ணாமலையார் அக்கினிப் பிழம்பு; அதே போன்று மகனான முருகனும் அக்கினிப் பிழம்பு. அவர் தந்தையார்... ஆகவே மூத்தவர்; இவர் மகனார்... ஆதலால், இளையனார். முருகப் பெருமான் சந்நிதிதான் கம்பத்து இளையனார் சந்நிதி என்பது!

 
திருவண்ணாமலையில் அரசவையின் ஆஸ்தான புலவராக விளங்கிய சம்பந்தாண்டான் பொறாமை கொண்டு, அருணகிரியாரை எப்படியேனும் மட்டம் தட்டவேண்டும் என்று . அரசராக இருந்த பிரபுட தேவ மகாராஜாவிடம்  அருணகிரியாரை முடியுமானால் முருகனை வரவழைக்கச் சொல்லுங்கள் என்று தூண்டி விட்டார்.

அருணகிரிநாதர் மயிலை வேண்டிப் பாடினார்; மயில் முருகனை வேண்ட, ஆடும் மயில் மீது ஆடிக்கொண்டே ஆறுமுகனும் காட்சி கொடுத்தார். அதுவும் கம்பத்தில் வந்து காட்சி கொடுத்தார். அந்தக் கம்பமே கருவறையாக அமைந்த சந்நிதியே, கம்பத்தில் இளையனார் தோன்றிய கம்பத்து இளையனார் சந்நிதி.

அதல சேடனார் ஆட அகில மேரு மீதாட
அபினகாளி தானாட அவளோடு அன்(று)
அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட
அருகு பூத வேதாளம் அவையாட
மதுர வாணி தானாட மலரில் வேதனார் ஆட
மருவு வானுளோர் ஆட மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனார் ஆட
மயிலுமாடி நீயாடி வரவேணும்  

இதுதான் அருணகிரியார் மயிலை வேண்டிப் பாடிய திருப்புகழ்.
 அருணகிரிநாதர் கிளியாக மாறி, பாரிஜாத மலருடன் திரும்பி வந்தபோது, தன் பூத உடல் இல்லாததைக் கண்டு, கிளி உருவிலேயே `கந்தர் அனுபூதி' பாடிய கிளிக் கோபுரம் அமைந்திருப்பதும் இங்கேதான். 
அண்ணாந்து பார்த்தாலே அண்ணாமலையில் ஆயிரம் கதைகள்!

ஒளியின் தாத்பர்யம் நம்முன் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும். பண்டைய காலத்தில் ஞாயிறு, திங்கள், நெருப்பு இம் மூன்றையும்தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.

அதிகாலையில் நான்கு மணிக்கே திருவண்ணாமலைக் கோயிலில் பரணி தீப தரிசனம் காட்டப்படும். அண்ணாமலையின் திருச்சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டு, அந்த தீபம் கோயிலிலுள்ள பிற தேவதைகளின் சன்னதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தச் சன்னதிகளில் ஏற்றப்படும். பின்னர் அந்த எல்லா தீபங்களும் மீண்டும் ஒன்று சேர்க்கப்படும். "ஒரே பரம்பொருள் பலவாய்த் தோன்றி மீண்டும் ஒன்றாகிறது" எனும் தத்துவத்தை இந்நிகழ்ச்சி விளக்குகிறது. 

தினமும் காசியிலும், ஹரித்துவாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

கார்த்திகை தீபக் காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்றார் பொங்கையாழ்வார்

காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.

முருகப் பெருமானைக் கார்த்திகைப் பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்திகேயனாக ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக ‘பரணி தீபம்’ கொண்டாடப்படுகிறது.

வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமசிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.

ருக்வேகத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னி பகவான் முக்கிய இடம் பெறுகிறார்.

கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்

நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…
என்று கார்நாற்பது கூறுகிறது.
நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.
இறைவன் சந்நதியில் ஏற்றப்படும் தீப ஒளியின் மகிமையை மகாபலி சக்கரவர்த்தியின் கதை மூலம் அறியலாம்.

முற்பிறவியில் மகாபலி சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தான். தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்ததன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று.

அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது.

இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.

அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.
தை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதியில் ‘மகரஜோதி’ தரிசனம் கேரளத்தில் மிகவும் பிரசித்தம்.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.

‘சொக்கப்பானையை வணங்குவது சொக்கப்பனையாகும்’. சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.

தொல்காப்பியம் ‘வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்’ என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.

கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழா கும்.
பிறவிப் பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெற, கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று தொழுது, முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கி நன்மை அடைவோம்.

கயமுகாசுரனைக் கொன்று, அவன் குருதியைத் தன் உடலில் பூசிக்கொண்ட செந்தூர விநாயகர், அமுதப்பாலை ஊட்டும் தாயாக, அருளை வழங்கும் அன்னையாகக் காட்சி தரும் அபீத குசலாம்பாள் என்னும் உண்ணாமுலையம்மை.

முருகன் காட்சி தந்த கம்பத்திளையனார் சன்னதி, ரமணர் தவமிருந்த பாதாளலிங்கேஸ்வரர் சன்னதி, தலபுராணத்தைச் சொல்லும் லிங்கோத்பவர் சன்னதி என்று, பார்த்துப் பார்த்துப் பரவசப்பட இங்கே ஏராளமான கடவுள் தரிசனம்.

எல்லாவற்றிலும் மேலாக, கருவறையில் லிங்க உருவில் காட்சி தரும் அண்ணாமலையாரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்படுகிறது. விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் காட்சி தந்தவர்; நினைத்தாலே முக்தி தருபவர்


தமிழ் மன்னர்களின் கட்டடக்கலை சிறப்புக்கு மட்டுமல்ல பண்டைய தமிழகத்தின் செல்வ வளத்திற்கும், சமயப்பற்றுக்கும் சாட்சியாக இன்றும் நின்று கொண்டிருக்கிறது அண்ணாமலையார் ஆலயம். 

தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். தீப தரிசனத்துக்குப் பின்பு அண்ணாமலையார் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதிகளில் வலம் வருவார்.

பதிமூன்றாம் நாள் அண்ணாமலையார் தெப்போற்சவம் நடைபெறும். பதினான்காம் நாள் அண்ணாமலையார் கிரிவலம் செய்வார். பின்னர் பதினைந்தாம், பதினாறாம் நாட்களில் முறையே அம்பிகைக்கும் முருகனுக்கும் தெப்போற்சவம் நடைபெறும்.

கடைசி நாளான பதினேழாம் நாள் சண்டிகேசுவரர் உற்சவத்துடன் கார்த்திகை தீப விழா நிறைவு பெறுகிறது.
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம.

picture for poem
நன்றி....

37 comments:

  1. ஞானச்சுடர் விளக்கு கார்த்திகை மாதம் முழுவதும் எரியும் போலத் தோன்றுகிறதே! மிக்க மகிழ்ச்சி.
    சுடர் விளக்கை கண்டு களித்து மீண்டும் வருவேன். vgk

    ReplyDelete
  2. நேற்றைய படங்களில் சிலவற்றை இரவு மின்விளக்குகளுடன் காட்டியுள்ளது மிகவும் அழகாக உள்ளன.

    உதாரணமாக கோயில் கோபுரங்களும் , ஊரின் ஒட்டுமொத்தத் தோற்றமும், அதைவிட அந்த கோயிலின் குளமும் அழகோ அழகாக உள்ளன.

    ReplyDelete
  3. அந்த கருத்த் சிவலிஙகம் அடடா! பளிச் பளிச் .... வெள்ளையாக மூன்று பட்டைகள், நடுவில் சிவப்பாக குங்குமம். தலையில் அந்த ஞான ஒளி நம் அக்ஞானங்களை நீக்கவே எங்கும் பிரகாஸமாய். ஜோர் ஜோர் !))))

    ReplyDelete
  4. அந்த ஐந்து முகத்துடன் எரியும் குத்து விளக்கு, எப்போதும் உயர்ந்து நெட்டையாக இருப்பினும், நம் செளகர்யத்திற்காகவே, அதன் கழுத்தை நாம் திருகினாலும், தலையைத் துண்டித்து தனியாகவே எடுத்து விட்டாலும், அதற்காக கோபப்படாமல், வளைந்து கொடுத்து சுடர் தந்து ஒளி வீசும் அழகே அழகல்லவா! )))))

    ReplyDelete
  5. அந்த மிகச்சிறிய அகல் வரிசைகளின் அழகிய அணிவகுப்பு அருமையோ அருமை. எவ்வளவு ஜோராக முத்துப்போல எரிகின்றன. எனக்கு மிகவும் பிடித்தமான குட்டிகுட்டி பனை நொங்குகள் நினைவுக்கு வந்தன.

    ReplyDelete
  6. குட்டிக்குட்டி தீபங்களால் அந்தக் குளக்கரை எவ்வளவு அழகாக உள்ளது பாருங்கள். பார்த்துக்கொண்டே இருந்தால் மனதுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது. அருமையான புகைப்படம் அது. நேரில் பார்ப்பது போலவே பரவஸம் ஏற்படுகிறது. ;))))))

    ReplyDelete
  7. 250 கோடி ஆண்டுகள் பழமையானது.
    OLD IS GOLD. இமயத்தின் தொன்மை வெறு 5 கோடி ஆண்டுகளே!

    அருமையான தகவல்கள்!

    சுற்றிலும் அசஞ்சாடிகள் தொங்கவிட்டுள்ள அந்தத்தனி அம்மன் படம் எவ்வளவு அழகாய் உள்ளது பாருங்கள். ;))))))))

    ReplyDelete
  8. என் நாக்கில் நீரை வரவழைத்த அந்தப்பொரி உருண்டைகள் எல்லாவற்றையும் விட சூப்பரோ சூப்பர். சூடாக பாகுபதமாக தித்திப்பாக நடுந்டுவே தேங்காய் வெல்லத்துடன் பல்பல்லாக, ஏலக்காய் மணத்துடன் எனக்கு இப்போதே வேண்டுமே! )))))

    ReplyDelete
  9. அஷ்டலிங்க தரிஸனம் செய்வோர்களில் உங்களைத் தேடினேன். பிறகு நீங்கள் தானே புகைப்படம் எடுத்திருக்க வேண்டும் அதனால் தான் காணோம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

    அந்த மிகப்பெரிய சிவலிங்கக் கோலம் போட்டவருக்கும், அதை படமெடுத்துக் காட்டியுள்ள தங்களுக்கும் என் தனிப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. கருத்துரைகளால் பதிவைச் சுடர்விடச்செயதமைக்கு ஆதமார்த்தமான நன்றிகள்..

    ReplyDelete
  11. சஹஸ்ர லிங்கக்க்கோலமும், கோயில் கோபுரங்களும் இன்றைக்கும் எங்களுக்கு மேலும் ஒரு கோடி புண்ணியத்தைத் தர வழி வகை செய்து விட்டீர்கள். )))))

    தங்களின் கடும் உழைப்புக்கு எந்தன் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இனி தான் மீண்டும் பொறுமையாக எல்லாவற்றையும் படித்து மகிழ இருக்கின்றேன். தேவைப்பட்டால் மீண்டும் வருவேன். இப்போதைக்கு Bye Bye !

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  12. இரவில் வெகு நேரம் கண்முழித்து வேலை செய்வதற்கு பலன் இந்தப் பதிவை படிப்பதுதான். அருமையான புகைப்படங்கள் செய்திகள்.

    ReplyDelete
  13. //சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனையாகும்//

    பனைஓலைகளையே இதற்குப்பயன் படுத்துகிறார்கள். அது எரியும் போது பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு வடிவில் சிவனை தரிஸிப்பது என்ற விளக்கம் அறிந்து மகிழ்ந்து கொண்டேன்.

    எத்தனை எத்தனை விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள். அடி முதல் நுனி வரை, அன்ன வடிவம் கொண்ட பிரும்மாவாலும், வராஹ வடிவம் கொண்ட அந்த மஹா விஷ்ணுவாலும்
    சிவனை உணர முடியாமல் போயினும், தாங்கள் அடி முதல் நுனி வரை அனைத்து விஷயங்களையும் அள்ளித் தந்து அசத்தி விட்டீர்கள்.

    ஒரு கட்டுரையைத்தொடங்கி விட்டால் அதன் நீளம் அகலம் ஆழம் என அனைத்து பரிமாணங்களையும் உட்ப்குந்து போய் ஒன்றுவிடாமல் எடுத்துச் சொல்வது என்ற தங்களின் தனிச்சிறப்பு, எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.

    அமுதப்பாலை ஊட்டும் தாயாக, அருளை வழங்கும் அன்னையாக காட்சி தரும் அபீத குசலாம்பாள் என்ற (உண்ணாமுலையம்மை) பெயரும் விசித்திரமாக அழகாக உள்ளதே!;)))

    ReplyDelete
  14. ஜெம்ஸ் போல கலர்கலர் சிறிய வட்டங்கள் ப்ளாக் கலர் பேக் கிரவுண்டில் துடித்து ஒளிர்வது போலவும் சுற்றி சுற்றி வருவது போலவும் காட்டியுள்ளது ரொம்ப நல்லா இருக்கு. அதுவும் அருகருகே ட்புள் ஆக்‌ஷனில்.

    அதன் மேலே உள்ள இரண்டு படங்களும் வெகு அருமையாக கலை உணர்வுடன் ரஸிக்கத்தகுந்ததாக உள்ளன. (பாவை விளக்கு + அழகிய கோலத்தில் உள்ள அழகான விளக்குகள்)

    தங்களின் வியப்பளிக்கும் கடும் உழைப்புக்கு எங்களால் இந்தச் சிறிய பாராட்டுரையைத் தவிர வேறு ஏதும் பெரிதாகச் செய்யமுடியவில்லையே என்றும் எண்ணத் தோன்றுகிறது.

    நன்றி நன்றி நன்றி vgk

    ReplyDelete
  15. அவ்வளவு பெரிய யானையார், அடக்க ஒடுக்கமாக உள்ளடங்கி சமத்தாக நின்று கொண்டிருக்கிறாரே!;)))))

    மாறிமாறித்தோன்றும் அந்தக் கடைசி படமும் வெகு அருமை.

    எதைச்சொல்வது எதை விடுவது. எல்லாமே மொத்தத்தில் மிகவும் அருமையோ அருமை தான்.

    விட்டகுறை தொட்டகுறையுடன் vgk

    ReplyDelete
  16. கார்த்திகை தீபத்திற்கான வண்ணமயமான பதிவு. அழகான விளக்கங்களுடன்.பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  17. கார்த்திகை மாதத்திற்கேற்ற பதிவு.

    ReplyDelete
  18. சிறப்பான படங்கள் மூலம் சிறப்பான ஒரு ஆலய தரிசனம் கிடைத்தது நன்றி

    ReplyDelete
  19. எனக்கு மிகவும் பிடித்த கோவில்....

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  20. இந்தப் படங்கள் எல்லாம் கலெக்ட் பன்னி , பல அறிய தகல்வல்கள் தேடி பதிவா போட்ட உங்க உழைப்புக்கு ஹாட்ஸ் ஆப் சகோ..

    ReplyDelete
  21. திருவண்ணாமலையாரின் முதல் படமே மிக அருமை. காலையில் நல்ல தரிசனம். நன்றி

    ReplyDelete
  22. மேலும் விவரங்களும் படங்களும் கொடுத்தளித்த வள்ளன்மைக்கு மிக்க நன்றி!! கோலங்களும் கோபுரங்களும் தீபங்களும் பொரி உருண்டைப் படமும் சூப்பர்!

    ReplyDelete
  23. தீப தரிசனத்தைக் கண்டு விட்டேன்... நன்றி..

    http://jayarajanpr.blogspot.com/2011/11/27.html

    ReplyDelete
  24. திருவண்ணமலை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தபோது ரமணர் வாழ்ந்த இடம் காண மலை ஏறிப் போகும் போது ஒரு வைப்ரேஷனை உணர முடிந்தது. “ஓம் “என்னும் ஓங்கார நாதம் செவிகளில் ஒலித்துக் கொண்டு இருந்தது. உண்மையா பிரமையா தெரியவில்லை. உங்கள் பதிவைப் பார்க்கும்போது மீண்டும் மலையேற வேண்டும் என்னும் ஆவல் பிறக்கிறது. வழக்கம்போல் சர்க்கரை இனிக்கிறது என்றுதானே சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  25. சொக்கப்பானை விளக்கம் இன்றுதான் அறிந்தேன்.விளக்கியதற்கு நன்றி.

    சூரிய ஒளியின் பின்ணணியில் சிவலிங்கம் அற்புதம்.
    அந்த ரங்கோலியில் உள்ள சிவலிங்கம்!!!! இதைக் கோவிலைச் சேர்ந்தவர்களே போடுகிறார்களா அல்லது பக்தர்களா? என்ன அருமை!!

    உங்க வீட்ல கார்த்திகைக்கு பொரி உருண்டை பிடிக்கறது வழக்கம்தானே?ஏன் கேக்கறேன்னா ஃபோட்டோலயே சாப்பிடணும் போல இருக்கே அதான் நேர்லயே வந்து நீங்க பண்ற பொரி உருண்டையை ஒரு கை, இல்ல இல்ல இரண்டு கை பாக்கலாம்னு(ஒரு கை பாத்தா குறைவாதான் கிடைக்கும்) :-)

    ReplyDelete
  26. நல்ல பகிர்வு. படங்களும் அழகு.

    ReplyDelete
  27. திருவண்ணாமலையைப் பலமுறை
    பார்த்தவன் தான் என்றாலும் இப்பதிவு மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது!
    படங்கள் அருமை!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. ஜொலிக்கிறது.அருமை.

    ReplyDelete
  29. அண்ணாமலை தீபம் இன்றே வந்து விட்டதே!அழகு!

    ReplyDelete
  30. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  31. உங்க பதிவுல copy paste ஆக மாட்டேங்குது.என்ன பிரச்சனைன்னு பாருங்க மேடம்

    ReplyDelete
  32. raji said...
    //உங்க பதிவுல copy paste ஆக மாட்டேங்குது.என்ன பிரச்சனைன்னு பாருங்க மேடம்//

    அவங்க அதெல்லாம் பார்க்கவே மாட்டாங்க! கடந்த 2 மாதங்களாகவே இந்தப்பிரச்சனை உள்ளது.

    ஒரிரு வரிகளில் பின்னூட்டம் தரும் தங்களுக்கே இது கஷ்டமாக இருக்கும்போது, என் நிலைமையை சற்றே யோசித்துப்பாருங்கள்!!

    -oOo-

    கார்த்திகை தீபத்திருநாளுக்கு ஜோராக காரசாரமாக அடை வார்ப்பார்கள்.

    நெல்பொரி, அவல்பொரி, அடை மூன்றும் தான் கார்த்திகைப் பண்டிகைக்கு, சிறப்புச் சிற்றுண்டிகள்.

    சூடான அடையில் சுடச்சுட உருக்கிய நெய்யை ஊற்றி, தொட்டுக்கொள்ள மண்டைவெல்லத்தை சீவிய தூளும் சேர்த்து சாப்பிட்டால் ’தூள்ள்’ ஆக இருக்கும்.

    அதைப்பற்றித்தான் ஏதோ எழுதியுள்ளீர்களோ என நினைத்தேன்.

    கடைசியில் பார்த்தால் ‘அடைமொழி’ என்று ஏதோ எழுதியிருக்கிறீர்கள்.

    சப்பென்று ஆகிவிட்டது எனக்கு.

    நானும் நீங்களும் அடை+பொரி, பிரஸாதமாக இந்த தெய்வாம்சம் பொருந்திய பதிவர் கையால் வாங்கிச் சாப்பிட கோயம்பத்தூர் வரை போய் வரலாமா?

    vgk

    ReplyDelete
  33. அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையின்
    பதிவு நெஞ்சை நிறைத்தது சகோதரி.....

    ReplyDelete
  34. இந்த ஞான சுடர் பதிவை வந்து படிக்கிறேன் சகோ!

    ReplyDelete
  35. அருமையான பதிவு.
    அத்தனை படங்களும் அற்புதம்.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. ;)
    ஹரே ராம, ஹரே ராம,
    ராம ராம ஹரஹரே!
    ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரஹரே!!

    ReplyDelete
  37. 1432+15+1=1448 ;)

    குட்டியூண்டு அகல்போலச் சுடர்விடும் ஒரே ஒரு பதிலாக இருப்பினும், அதை ஆத்மார்த்தமாகக் கொடுத்துள்ளதற்கு மகிழ்ச்சி.

    ReplyDelete