Tuesday, November 15, 2011

வையகம் காக்கும் ஸ்ரீவைத்யநாதர்




.
வைத்தியநாதனைப் போற்றி தொழுவாருக்கு 
அவனே ...மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் 
தீராநோய் தீர்த்தருள வல்லான்...
என்ற அப்பர்பெருமானின் தேவாரப் பகுதி இறைவன் வைத்திய நாதர் என்னும் பெயர் பூண்ட காரணத்தைப் புலப்படுத்துவதாகும்.



கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் 
பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் 
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் 
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
-திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் பாடிப் போற்றியுள்ளார்..


திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், ஆகிய அருளாள்ர்கள் பாடிப்பரவிய ஆலயம்.

திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார்.

தருமையாதீனம் 10வது மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி அருளிய செல்வமுத்துக்குமாரசாமி திருவருட்பாவும் குமரகுருபரர் அருளிய பிள்ளைத் தமிழும் இத்தலம் பற்றிய அழகு தமிழ்ப் பாடல்கள்.

பிறவிப் பெரும்பயனையும் தேடித்தருவான் பிறவிப்பிணி 
வைத்தியராகிய வைத்தியநாதப்பெருமான்..

4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது.

இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது.

இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய்
வாங்கி தேய்த்து நீராடுகின்றனர்.

தையல் நாயகி திருக்கரத்தில் தைலபாத்திரமும், அமிர்தசஞ்சீவியும், வில்வத்தடி மண்ணும் எடுத்துக்கொண்டு உடன் 4448 வியாதிகளையும் தீர்க்கின்ற இடம். தருமை ஆதீனத்தின் அருளாட்சிக்குட்பட்டது.

வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் ஸ்ரீவைத்யநாதர், ஸ்ரீதையல் நாயகி சமேதராய் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு அருளும் திருக்கோயில் ...

இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.   

உயர்ந்த மதில்களோடும் கூடிய கோயில்.  

5 பிரகாரங்களைக் கொண்ட கோயில் மேற்கு திசை நோக்கியது


மரகதலிங்கம் புகழ்பெற்றது. 
மூலவருக்கு முன் தங்கம், வெள்ளியால் ஆன இரண்டு கொடிமரங்கள் ...

பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும்.

ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் சிவன் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை.

மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவன் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும். இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது.

பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர்.

உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர்.

தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.

இராமர், இலட்சுமணன் ,சப்தரிஷிகளும் இத்தலம் வந்து
வணங்கியதாக ஐதீகங்கள் உண்டு.
 
. வாசல் முன்னிருந்தாலும், வசதி என்னவோ பின் வாசல் வழி செல்வதுதான்.

வைத்தீஸ்வரன் கோவிலில் மேற்கு திசை நோக்கி 
தென்திசைகடவுள் தட்சிணாமூர்த்தி அருள்புரிகிறா



கிழக்குக் கோபுர வாயிலில் உள்ள வேம்பு தல விருட்சமாகும். இதனை ‘வேம்படிமால்’ என்கின்றனர். ஆதிவைத்தியநாதபுரம் இதுதான் என்பர்.

கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், 
ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார்.

மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம்.  

வைத்தியநாதரும் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்..
எதிரே அதிகார நந்தி பகவான் பெருமித்துடன் ...

அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
தெற்கில் கணேசன் திகழ் மேற்கில் பைரவரும். 
தொக்கவடக்கில் தொடர்காளிமிக்க கிழக்கு 
உள்ளிருக்கும் வீரனையும் உற்றுப் பணிந்துய்ந்தேன். 
புள்ளிருக்கு வேளூரிற்போய்.

எனும் பாடலின் மூலம் வைத்தியநாத ஸ்வாமி ஆலயத்தைத் தெற்கில் கணபதியும்,மேற்கில் பைரவரும், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர் என்று அறியலாம்.

புள்(ஜடாயு). இருக்கு(ரிக்வேதம்), வேள்(முருகன்), ஊர்(சூரியன்) ஆகிய நால்வரும் பூசித்ததால் புள்ளிருக்கு வேளூர் எனும் பெயர் கொண்டது.

சடாயு புரி, கந்தபுரி,வேதபுரி என்றும் அங்காரகன் வழிபட்டமையால் அங்காரகபுரம் என்றும் , அம்பிகையைப் பூசித்தமையால் அம்பிகாபுரம் எனவும் அழைக்கப்பெறும். 

வினைதீர்த்தான் கோயில், தையல்நாயகி கோயில் மற்றும் வழக்கில் உள்ள வைத்தீஸ்வரன்கோயில் எனப் பல பெயர்களும் உண்டு.

முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.

18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர்.

அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம்.

இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள
நோய்கள் தீருகின்றன.

வைத்தீஸ்வரன் கோவில் "திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல
நோய்களும் தீரும் என்பது திண்ணம்.

இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும்
கூட அகலும் சக்தி வாய்ந்த தலம்.

மூர்த்தி தலம் தீர்த்தம் அனைத்தாலும் தன்னிகரில்லாத திருத்தலம் ..

சித்தர்கள் இறைவனுக்கு அபிஷேகித்த தேவாமிர்த்தத்தை 
கலந்ததால் சித்தாமிர்த குளம் எனப் பெயர் பெற்றது.

அங்கரகனின் செங்குஷ்டத்தை தீர்த்த தீர்த்தமாக விளங்குகிறது..

நவக்கிரகங்களுக்கு அடுத்தாற்போல் 63 நாயன்மார்கள், ஸப்த கன்னியர் ஆகியோரையும் மற்றும் ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி சித்தர் விஷ்ணு ஸ்வரூபத்தில் அமர்ந்திருக்கும் வடிவத்தையும் காணலாம். 

துர்க்கை மற்றும் சஹஸ்ர லிங்கமும் விசேஷமானவை.

முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கிய தலம் இது.

இறைவன் 4448 நோய்களையும் அதோடு ஊழ்வினைகளையும் தீர்க்கவல்ல வைத்தியநாதராய் எழுந்தருளியுள்ளார்.

அவருக்கு உதவியாய் அம்பாள் கையில் தைல பாத்திரமும், அமிர்த சஞ்சீவியும், வில்வமரத்தடி மண்ணும் ஏந்தி வர, இருவரும் தீராத நோய்களையும், வினைகளையும் தீர்த்து வைக்கும் வேதியத் தம்பதிகளாகின்றனர். 

தீர்த்தம்:
கோயிலுக்குள் விளங்கும் சித்தாமிர்த்த தீர்த்தம் விசேஷமானது.

நான்கு புறங்களிலும் மண்டபத்தோடும் படிக்கட்டுகளோடும் நடுவில் நீராழி மண்டபத்தோடும் விளங்குகின்றது.

இங்கே கிருத யுகத்தில் காமதேனு இறைவனை பால் அபிஷேகம் செய்தது. அதுவே புனித தீர்த்தமாக பெருகி இங்கு அமைந்ததென்பர். 
இதன் காரணமாக கோக்ஷர தீர்த்தம் என்று பெயர் பெறலாயிற்று.

சதானந்த முனிவர் இங்கு தவம் செய்து கொண்டிருந்தபோது பாம்பால் துரத்தப்பெற்று தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தை கலைத்தது.

முனிவர் குளத்தில் பாம்பும் தவளையும் வாசஞ் செய்யக்கூடாது என்று சபித்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை என்பர். 
Sri Vaidyanathaswami Temple   Vaidheeswaran Koil

நோய் தீரக் குளத்தில் வெல்லம் கரைத்து விடுவதும் பிரகாரத்தில் உள்ள மரப்பெட்டியில் உப்பு, மிளகு இரண்டையும் கலந்து கொட்டுவதும் இன்றும் உள்ள ஒரு பிராத்தனை வழக்கம். 

சித்தாமிர்த்த தீர்த்தம் தவிர கோதண்ட தீர்த்தம், கௌதம தீர்த்தம், வில்வ தீர்த்தம், அங்கசந்தனத் தீர்த்தம், முனிவர் தீர்த்தம் என்று வேறு தீர்த்தங்களும் உள்ளன.

சடாயு குண்டம்:
சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது, அதனைத் தடுத்த ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டி வீழ்த்தினான்.

பின்னர் இராமன் அவ்வழியில் சீதையைத் தேடி வந்த நேரத்தில், நடந்தவற்றைச் சொல்லிய ஜடாயு இராமனது காலடியில் உயிர்ததுறந்தான்.

இராமபிரான் ஜடாயுவின் வேண்டுகோள்படி சிதையடுக்கி அவனது உடலைத் தகனம் செய்த இடம் ‘ஜடாயு குண்டம்’ என்று அழைக்கப் பெறுகின்றது.


இன்றும் இக்குண்டத்தில் உள்ள திருநீற்றினை அணிந்தால் தீராத நோய்களும் தீரும் எனும் நம்பிக்கை உண்டு.

ஜடாயு குண்டத்திற்கு அருகில் ஜடாயு மோட்சத்தைச்
சிலை வடிவில் காணலாம். 

ஜடாயு உற்சவ மூர்த்தியாகவும் இருக்கின்றார்.

திருச்சாந்துருண்டை:
இது வைத்தியநாதப் பெருமானின் பிரசாதமாக நோய் நீங்கும் பொருட்டு அளிக்கப்பெறுவது.

ஆலயத்தில் விபூதி குண்டத்தில் (ஜடாயு குண்டத்தில்) உள்ள விபூதியையும் சித்தாமிர்த தீரத்த நீரையும் சேர்த்துக் குழைத்து, ஐந்தெழுத்து மந்திரமாகிய ‘நமசிவாய’ என்பதனை ஓதிக்கொண்டே முத்துக்குமார சுவாமி சந்நிதியில் உள்ள குழியம்மியில் அரைத்து உளுந்தளவில் உருட்டி, அம்பாள் திருவடியில் வைத்து அர்ச்சித்து எடுத்துச் சேகரித்து வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு அந்த உருண்டை வழங்கப் பெறுகின்றது.

இதனை உண்டோர் நோய் (தீவினை) நீங்கி வாழ்வாங்கு வாழ்ந்து,
பின் முக்தி எய்துவர்.

காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பாண்டிய நாடு வரும்போது கீரணி அம்மனையும் தங்களோடு கொண்டு வந்தார்கள் என்பது வரலாறு. இதனைக்  கும்மிப்பாடல் வழி அறியலாம்.
காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்ததொரு
காவலன் மாறனழைத்து வர பூவிரிப்
புலன்மிகும் பாண்டிய நாட்டினிற்
பொங்கத்துடன் வந்தமர்ந்தானே”


ஆண்டுதோறும் நகரத்தார்கள் சித்திரை மாதத்தில் வண்டிப் பயணமாக வேளூருக்கு வரும் வழக்கம் உண்டு. ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பயணம் ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகு சித்திரைத் திங்களில் நடைபெற்று வருகின்றன.






அடுத்த பகுதியில் சக்தித் திருமகன் செல்வமுத்துக்குமரனும், 
செவ்வாய் பகவானும் அருள்கின்றனர்..

51 comments:

  1. வையகம் காக்கும் வைத்யநாதரை தரிஸித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
  2. நம் தொந்திப்பிள்ளையார் அழகாக அம்மா மடியில், அருகில் எலியார், காளை மாடு, முருகன் மயில் சிவலிங்கம் உள்பட ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர். முதல் படம் ஜோர்!

    ReplyDelete
  3. கோயில் கோபுரங்கள், அகன்ற மிகப்பெரிய பிரகாரங்கள் வெகு அழகாகப் படமாக்கிக் காட்டியுள்ளீர்கள்.

    வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி என்றைக்கு எழுதுவீர்களோ என்ற என் எக்கம் இன்றைக்கே இப்போதே நிறைவேறியதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. தங்கம் + வெள்ளியில் இரண்டு தனித்தனிக் கொடிமரங்களும் காட்டப்பட்டுள்ளது இந்தப்பதிவை கொடிகட்டிப் பறக்கச் செய்திடும்.

    ReplyDelete
  5. கோயில் குளம் இப்போது படு சுத்தமாகப் பராமரிக்கப்படுவது, தங்களின் அழகான படத்திலேயே தெரிகின்றது.

    ReplyDelete
  6. காமதேனுவின் படம் அப்படியே தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளதே!

    மருந்தின் மகத்துவம், குளத்தின் தீர்த்தத்தின் நோய்கள் தீர்க்கும் அதிசயம், கோக்ஷீர தீர்த்தப்பெயர்க் காரணம், தவளையும் பாம்பும் இல்லாத அந்த அழகிய நடு மண்டபத்துடன் கூடிய குளத்தின் அருமையான தோற்றம், அழகிய குளக்கரையை இந்தக்கோடிக்கு அந்தக்கோடி காட்டியுள்ளது, பார்க்கவே கோடி புண்ணியம் கிடைப்பதாக மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said.../

    அருமையான கருத்துரைகள் வழங்கி பதிவைச்சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  8. கும்மிப்பாடலுடன் கூடிய குதூகலப் பதிவு தான் இது.

    ஆஹாஹா! வரிசையாக பல்வேறு கலை நுணுக்கங்களுடன் கூடிய கோபுர தரிஸனம். பல கோடி புண்ணியங்களைத் தந்திடுதே!

    யானை முகத்தைக் காட்டாமல் என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க! அதற்குத் தான் தலை இருக்குமே! தலையிருக்கும் போது வால் ஆடலாமா? அதைத் தாங்கள் இப்படிக் காட்டலாமா? OK OK அதுவும் ஒரு தனி அழகு தான் போங்க!!!!))))))).

    ReplyDelete
  9. அதானே பார்த்தேன்! வைதீஸ்வரன் கோயில் எவ்வளவு பெரியது அதற்குள் முடித்துக் கொண்டு விட்டீர்களோ என்று பயந்தே விட்டேன்.

    தொடரும் என்பதில் மட்டில்லா மகிழ்ச்சியே.

    அழகான படங்களுடன், அற்புதமான பதிவைத் தந்துள்ள தங்களுக்கு நன்றியோ நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
  10. வைத்தியநாதனின் அருள் எல்லோர்க்கும் கிடைக்க செய்ததற்கு நன்றி மேடம்!

    ReplyDelete
  11. பிரகாரங்களும் தெப்பக்குளங்களும்
    பிரமிப்பூட்டுகின்றன
    படங்களும் பதிவும் மிக மிக அருமை
    இன்று முதல் தரிசனம் தங்கள் பதிவே
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. மரகத லிங்கம் அமைந்த தலங்கள் , திருவாரூர், திருமறைக்காடு, திருக்காரவாசல்,சிக்கல், மற்றும் திருத்துறைப்பூண்டி. மரகத லிங்கம் படம் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

    ReplyDelete
  13. உங்கள் பதிவின் சிறப்பு அம்சமே நீங்கள் பகிரும் படங்கள்தான் அருமை

    ReplyDelete
  14. அழகான படங்களுடன் அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  15. இந்த கோயிலின் சிறப்புகளைப்பாற்றி அறிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  16. அழகான படங்கள் பிரமிப்பூட்டுகின்றன - அருமையான தொகுப்பு.

    ReplyDelete
  17. படங்கள் அத்தனையும் அருமை. கடவுள் அருள் பெற்றேன். நன்றி

    ReplyDelete
  18. படங்கள் அத்தனையும் அருமை. கடவுள் அருள் பெற்றேன். நன்றி

    ReplyDelete
  19. ஒவ்வொரு கார்த்திகைக்கும் வைத்தியநாதனை தரிசித்து வருவேன்.

    படங்கள் தலபுராணம் என்று அசத்தி விட்டீர்கள்.

    திருவெண்காடு, மாயவரம் வள்ளலார்கோவில் போன்றவற்றில் நவகிரகங்கள் வைத்தியநாதன் கோவிலில் உள்ள மாதிரி ஒரே வரிசையில் தான் இருக்கும்.

    ReplyDelete
  20. வைத்தியத்துக்கு நாதனாம்
    வைத்தியநாதனின்
    அருள் பெற்றோம் சகோதரி.
    படங்கள் அனைத்தும் நேரில் கோவிலை
    பார்த்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

    ReplyDelete
  21. செவ்வாயன்று செவ்வாய் க்ஷேஷெத்ரமா!அருமை.

    ReplyDelete
  22. ஆண்டுதோறும் வைத்திய நாதனை தரிசிக்கும் நாங்கள் பார்க்கப் பார்க்க அதன் ப்ராகாரங்கள் கட்டப் பட்டிருக்கின்றன. அங்குள்ள முத்துக்குமாரஸ்வாமியும் அங்காரகனும் பிரசித்திப் பெற்றவர்கள். எனக்கு தணியாத ஆச்சரியம் என்னவென்றால் , இம்மாதிரி ஒரு பதிவிட எவ்வளவு உழைக்கவேண்டும்.?உம்மால் எப்படி இது சாத்தியமாகிறது. ?பாராட்டுக்கள்.

    ReplyDelete
  23. தங்களை போன்ற பெரியவர்கள் ஆசீர்வாதம் கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்..

    பாராட்டுகளுக்கும் கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  24. சென்னை பித்தன் said...
    செவ்வாயன்று செவ்வாய் க்ஷேஷெத்ரமா!அருமை.//

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  25. மகேந்திரன் said...
    வைத்தியத்துக்கு நாதனாம்
    வைத்தியநாதனின்
    அருள் பெற்றோம் சகோதரி.
    படங்கள் அனைத்தும் நேரில் கோவிலை
    பார்த்த மகிழ்ச்சியைக் கொடுத்தது./

    தங்கள் கருத்துரை மகிழ்ச்சியளித்தது.

    மிக்க நன்றி..

    ReplyDelete
  26. கோமதி அரசு said...
    ஒவ்வொரு கார்த்திகைக்கும் வைத்தியநாதனை தரிசித்து வருவேன்.

    படங்கள் தலபுராணம் என்று அசத்தி விட்டீர்கள்.

    திருவெண்காடு, மாயவரம் வள்ளலார்கோவில் போன்றவற்றில் நவகிரகங்கள் வைத்தியநாதன் கோவிலில் உள்ள மாதிரி ஒரே வரிசையில் தான் இருக்கும்.//

    ஆம்.. தரிசித்து வியந்திருக்கிறோம்.
    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  27. ராஜி said...
    படங்கள் அத்தனையும் அருமை. கடவுள் அருள் பெற்றேன். நன்றி//

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  28. தமிழ் உதயம் said...
    அழகான படங்கள் பிரமிப்பூட்டுகின்றன - அருமையான தொகுப்பு./

    அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  29. பாலா said...
    இந்த கோயிலின் சிறப்புகளைப்பாற்றி அறிந்து கொண்டேன். நன்றி./

    சிறப்பான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  30. ராமலக்ஷ்மி said...
    அழகான படங்களுடன் அருமையான பகிர்வு. நன்றி.

    அழகான அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  31. K.s.s.Rajh said...
    உங்கள் பதிவின் சிறப்பு அம்சமே நீங்கள் பகிரும் படங்கள்தான் அருமை/

    சிரமப்பட்டு தொகுக்கும் படங்களை ரசித்துப் பாராட்டிக் கருத்துரை அளித்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  32. சந்திர வம்சம் said...
    மரகத லிங்கம் அமைந்த தலங்கள் , திருவாரூர், திருமறைக்காடு, திருக்காரவாசல்,சிக்கல், மற்றும் திருத்துறைப்பூண்டி. மரகத லிங்கம் படம் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்/

    நாளைய பதிவில் மரகத லிங்கம் இணைத்திருக்கிறேன்..

    சிறப்பான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  33. Ramani said...
    பிரகாரங்களும் தெப்பக்குளங்களும்
    பிரமிப்பூட்டுகின்றன
    படங்களும் பதிவும் மிக மிக அருமை
    இன்று முதல் தரிசனம் தங்கள் பதிவே
    தொடர வாழ்த்துக்கள்/


    வாழ்த்துகளுக்கும் கருத்துரைகளுக்கும் மன்ம் நிறைந்த நன்றிகள்..

    ReplyDelete
  34. வை.கோபாலகிருஷ்ணன் said...
    அதானே பார்த்தேன்! வைதீஸ்வரன் கோயில் எவ்வளவு பெரியது அதற்குள் முடித்துக் கொண்டு விட்டீர்களோ என்று பயந்தே விட்டேன்.

    தொடரும் என்பதில் மட்டில்லா மகிழ்ச்சியே.

    அழகான படங்களுடன், அற்புதமான பதிவைத் தந்துள்ள தங்களுக்கு நன்றியோ நன்றிகள். அன்புடன் vgk//

    உற்சாகமூட்டும் அருமையான கருத்துரைகள் தந்து பதிவை ஜொலிக்கச் செய்தமைக்கு நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  35. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒரு முறை சென்றிருக்கிறேன்.

    படங்களுடன் நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  36. அருமையான படங்களும் விளக்கங்களும். ஆழ்ந்து படித்து இன்புறவேண்டும்.

    ReplyDelete
  37. வழமைபோல உங்களின் இடுகை காண கண் கோடி வேண்டும் என்பார்களே அதுபோல சிறந்த கலைநயத்துடன் படங்கள் பாராட்டுகளும் நன்றிகளும்

    ReplyDelete
  38. சூப்பர் பதிவு,படங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!!

    ReplyDelete
  39. அருமை!..அருமை!..அருமை!...படங்கள் சொல்லி வேலையில்லை .அருமையான படைப்பு வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கு
    வாழ்த்துச் சொல்வோம் சிறுவர்களுக்கு .

    ReplyDelete
  40. படங்களும் பதிவும் அருமை...

    ReplyDelete
  41. இதைவிடவும் சிறப்பாக ,அழகான படங்களுடன் கோயிலைப்பற்றி ஒருவர் எழுதமுடியும் என்று தோன்றவில்லை.

    ReplyDelete
  42. உண்மையிலேயே எனக்கு சமயத்தில் நாட்டம் இல்லாதபோதும். உங்கள் எழுத்துநடையிலும் இணைக்கும் அழகிய படங்களிலும் லயித்து உங்க ரசிகனாகிவிட்டேன்.

    ReplyDelete
  43. முதல் இரண்டு படமும் அப்ப்பப்பா.. மிக அருமையாக இருக்கு....

    ReplyDelete
  44. நோய்களை தீர்க்கும் தீர்த்தம் உள்ள குளத்தைப்பற்றிய செய்தி அருமை... பகிர்வுக்கு மிக்க நன்றி... மீண்டும் வந்து படிக்கிறேன்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. படங்களும் பதிவும் பிரமிப்பை தருகின்றன

    *******************************


    சவால் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  46. ;) ஓம் ஸுமுகாய நம:

    ;) ஓம் ஏகதந்தாய நம:

    ;) ஓம் கபிலாய நம:

    ;) ஓம் கஜகர்ணகாய நம:

    ;) ஓம் லம்போதராய நம:

    ReplyDelete
  47. 1337+9+1=1347 ;)))))

    இரண்டு பதில்கள் - இரட்டிப்பு மகிழ்ச்சி ;)

    ReplyDelete
  48. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (06/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/6.html#comment-form
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete
  49. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    ReplyDelete