Friday, November 18, 2011

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே


Mahalaxmi
ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை !!!!
ஞான கணேசா சரணம் சரணம்
ஞான ஸ்கந்தா சரணம் சரணம்
ஞான ஸத்குரு சரணம் சரணம்
ஞான னந்தா சரணம் சரணம் 



வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ! ....
மந்திர வேத மயப் பொரு ளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ! .....
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ! ......
வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே......
மாமே ருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ! .....
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ! ....

அற்புத சக்தி யெல்லாம் சிவரத்தினமாய்த் திகழ்வாரவாரே 

மாயச் சூரன் றறுத்த மைந்தன் தாதைதான்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே....

பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான 
மின்னேர் சடைகள் உடையான் மீயச் சூரானைத் 
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார் 
அன்னேர் இமையோர் உலகம் எய்தல் அரிதன்றே.
-திருஞானசம்பந்தர்

சோழர் காலக் கற்கோயிலாக கலையழகு கொஞ்சும் சிற்பங்களுடன் கஜப்பிருஷ்ட விமான அமைப்புடன் புராணசிறப்பும் கொண்டு உலகின் அனைத்து நன்மைகளையும் அருளும் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை அமர்ந்த கோலத்தில் காண்பவர் மனம் மயங்கும் ராஜதர்பார் நடத்தும் அழகு திருமீயச்சூரில் கண்கொள்ளாக் காட்சியாகும்.

அன்னை லலிதாம்பிகையின் திருமுகத்தைக் காணும்போது அன்னையைக் கண்ட ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். முப்பெருந்தேவியரான பார்வதி, லெட்சுமி, சரஸ்வதி இணைந்த வடிவமாகத் திகழ்பவள்  லலிதாம்பிகை அன்னையின் திருவுருவத்தை, வடிவத்தை உலகில் வேறு எங்கும் காணமுடியாது என்பது இத்தலத்தின் பெருஞ்சிறப்பு.

சூடாமணி முதல் பாதாங்குலீயகம் வரை பல ஆபரணங்கள் அணிந்த அன்னை, தனது பக்தை ஒருவரிடம் கொலுசு வாங்கி போட்டுக் கொண்டுள்ள அதிசயமும் சமீப காலத்தில் நிகழ்ந்துள்ளது. பக்தையின் கனவில் தோன்றிய அன்னை தான் எல்லாவிதமான அணிகலன்களையும் அணிந்துள்ளதாகவும், கொலுசு மட்டும் அணியவில்லை, அதனை தனக்கு அணிவிக்குமாறு கூறிச் சென்றுள்ளார்.

 இதனால் ஆனந்த அதிர்ச்சி அடைந்த அந்த, பெரும் புண்ணியம் செய்த பக்தை அழகு கொலுசினை செய்து கொண்டு ஊர் ஊராக அலைந்து கடைசியாக, திருமீயச்சூர் வந்துள்ளார். இங்கு வந்து கோயில் சார்ந்தவர்களிடம் இந்தச் செய்தியினை அவர் கூற அவர்கள் நம்பவில்லை. அந்தப் பெண்மணியின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு அன்னையின் காலின் சுற்றுப் பகுதியில் கொலுசு அணிவிக்க வசதியாக துளை ஏதும் உள்ளதா என ஆராய்ந்துள்ளனர். பல காலம் அன்னைக்கு செய்த அபிஷேகங்களினால், அந்தப் பொருட்கள் துளையை மூடியுள்ளதைக் கண்டுபிடித்து, கொலுசிட துவாரம் உள்ளதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர். இதன் பின்னரே அன்னையின் திருவிளையாடலை புரிந்து கொண்டு அம்பாளுக்கு கொலுசு அணிந்து மகிழ்ந்தனர். தான் பிறந்த பலனையும் அடைந்ததாக கொலுசிட்ட பெண்ணும் மகிழ்ந்தார்.

பரபிரும்மத்தின் சக்திகள் அனைத்து இணைந்த வடிவமாகவே துதிக்கப் படுகிறாள் அன்னை லலிதாம்பிகை. இத்தலத்தில் லலிதாம்பிகையிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர்தான் ஸ்ரீ ஹயக்ரீவர். 

அகத்தியரின் மனைவி இங்கு வந்து அன்னையை வழிபட்ட போது , அவருக்கு அம்பாள் நவரத்தினங்கள் வடிவில் காட்சி தந்தார். இதன் காரணமாகவே அகத்தியர் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே எனத் தொடங்கும் லலிதா நவரத்தின மாலையை அருளிச் செய்து நல்ல பலன்களைப் பெற்றார்.

ஸ்ரீஹயக்ரீவரிடம் லலிதா சகஸ்ராம உபதேசம் பெற்ற அகஸ்தியர் லலிதம்பாளை எங்கு தரிசிக்கலாம்? என்று கேட்க திருமீயச்சூர் செல் என்றார்
ஸ்ரீ ஹ ய க் ரீவ ர்.
 லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் முழுபலனையும் திருமீயச்சூரில் வாசிப்பதினால் பெறலாம் என்றார். அகத்தியரும் திருமீயச்சூர் வந்து  லலிதாம்பிகை அன்னையை வணங்கி லலிதாசகஸ்ர நாமம் படித்து பூரண அருள் பெற்றார். இங்கிருந்துதான் "லலிதா பஞ்சரத்னமாலை " என்ற தோத்திரமும் தோன்றிற்று


 . லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. இவளுக்கு அதிக சக்தியும் உண்டு. 
சித்திரை 21 முதல் 27 வரை உள்ள நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவனின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.
மேகநாத சுவாமிக்கு அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்கின்றனர்.

இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை.
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிரண்டை சாதத்தை தாமரை இலையில் வைத்து சுவாமிக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகின்றனர்.
காசிப முனிவரின் மகனான அருணனை வஞ்சித்த சூரியன் ,தனது சாபம் தீருவதற்காக மீயச்சூர் வந்து இறைவனை வழிபட்டான். வெகுகாலம் ஆகியும் தனது சாபம் தீராததால் வருத்தத்துடன் " ஹே மிகுரா" என கதறிய போது ஏகாங்தத்தில் இருந்த தேவி கோபமுற , இறைவன் சாந்தப்படுத்துகிறார். சாந்தமடைந்த அன்னை பராசக்தி தன் முகத்திலிருந்து, "வசின்யாதி வாக் தேவதைகளை வரவழைத்து தன்னை ஆயிரம் திருநாமங்களால் வர்ணிக்கும்படி கட்டளையிட்டாள். இதுவே "ஸ்ரீ மாத்ரே' என துவங்கும் "லலிதா சகஸ்ரநாமம்' ஆயிற்று.

கோவையிலிருந்து சகஸ்ர நாமக்குழுவினருடன் சென்று லலிதா சகஸ்ரநாமம் பிறந்த இடத்திலேயே லலிதா சக்ஸ்ர நாமம் சொல்லும் பெறற்கரிய பேறு கிடைத்தது.

திருமீயச்சூர் மேகநாதர் கோயிலின் உள்ளே வடக்குப் பிரகாரத்தில் உள்ள திருமீயச்சூர் இளங்கோயிலில் கிழக்கு நோக்கி இறைவன் சகல புவனேச்வரரும், தெற்கு நோக்கி இறைவி மின்னு மேகலையாளும் தனித்தனி கருவறையில் வீற்றிருக்கக் காணலாம். 

அப்பர் பெருமான் தனது பதிகத்தின் 6-வது பாடலில் இத்தல இறைவியை மின்னு மேகலையாள் என்று குறிப்பிடுகிறார்.
இறைவன் கருவறைச் சுற்றில் கோஷ்டத்தில் வழக்கமாக துர்க்கை காணப்படும் இடத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் அருள்கிறார்..
நான்கு முக சண்டிகேஸ்வரர்                                 
முருகன்
[Gal1]

        



திருத்தல வரலாறு:
காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை என்ற இருவரும் சிவபெருமானை மனதில் நினைத்து கடும் தவம் புரிந்தனர். இவர்களது தவத்தின் பலனாக இறைவன் இவர்கள் முன்தோன்றி இருவருக்கும் ஒரு முட்டையை பரிசாகக் கொடுத்தார். 

இந்த முட்டையை ஒரு வருட காலம் பாதுகாத்து பூஜை செய்து வந்தால், ஒரு ஆண்டு கழித்து உலகமே போற்றும் வண்ணம் ஒரு மகன் பிறப்பான் எனக் கூறி விட்டு மறைந்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து விநநையின் அண்டத்தில் இருந்து ஒரு பறவை பிறந்து அது பறந்து சென்று விட்டது. 

தனக்கு மகன் பிறக்காமல், இப்படி ஆகிவிட்டதே என்று ஈஸ்வரனிடம் வருந்தி கேட்க ,முக்கண்ணன் ''நான் கூறியது போலவே அவன் மகாவிஷ்ணுவுக்கு வாகனமாக கருடன் என்ற பெயருடன் உலகமெங்கிலும் போற்றிப் புகழப் படுவான்'' என்று கூறினார்.

இதனிடையே விநநைக்குக் குழந்தை பிறந்து விட்டதே என்று அவசரப்பட்டு தனக்குக் கொடுக்கப் பட்ட முட்டையை பிரித்துப் பார்த்தாள் கர்த்துரு. இவளது அவசரத்தினால் அந்த முட்டையில் இருந்து சரியானபடி வளர்ச்சி அடையாத தலை, முதல் இடுப்பு வரை மட்டுமே வளர்ந்த குழந்தை பிறந்தது. தான் செய்த தவறை உணர்ந்த கர்த்துரு இறைவனை நாடி, இப்படி ஆகி விட்டதே என மனம் வருந்தினாள். சிவபிரானும், ''நான் சொல்லியதுபோல் இக்குழந்தை சூரியனுக்கு சாரதியாக விளங்கி உலகப் புகழ் பெறுவான்'' என்று கூறினார்.

இந்நிலையில் கர்த்துரு தனது மகனுக்கு அருணன் எனப் பெயர் சூட்டினாள். இறைவனின் ஆணைப் படி சூரியனுக்கு சாரதியாக விளங்கினான். அருணன் சிவனின் இருப்பிடமான கைலாசம் சென்று அவரை தரிசித்து வர சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியன் அருணனை பரிகசித்து, பெருமானை பார்க்கச் செல்ல உன்னால் முடியாது என்றும் கூறினான். நம்பிக்கை இழக்காத அருணன் இறைவனை நினைத்து தவமியற்றினான். சூரியன், இப்போதும் அருணனுக்கு பலவிதங்களில் தொல்லைகளைக் கொடுத்தாலும், தன் மனம் தளராத அருணன் மேலும் தீவிரமாக தவமிருந்தான்.

இதனைக் கண்ணுற்ற கைலாசநாதன், அருணனுக்கு காட்சி கொடுத்து அருள் புரிந்தார். சூரியனிடம், ''என்னைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் தவமிருந்த அருணனுக்கு நீ கொடுத்த கஷ்டங்கள் என்னை வருத்தமடையச் செய்தது. இதன் காரணமாக உன் மேனி கார் மேக வண்ணமாய் மாறட்டும்'' என்று சாபமிட்டார். இதன் காரணமாக இப்பூவுலகமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ட பரமேஸ்வரி தாய் சிவனிடம், சூரியன் கரு நிறமாய் ஆனதினால் உலகமே இருண்டுவிட்டது. சூரியன் இன்றி உலகம் இயங்காதே என வினவினார். கவலை கொள்ள வேண்டாம் தேவி. அருணனின் தவ பலத்தினால் உலகம் வெளிச்சம் பெரும் என பெருமான் கூறினார். தனது தவறினை உணர்ந்த கதிரவன் இறைவனிடம் மன்னித்தருள வேண்டினார். ஈசன் சூரியனிடம் "எம்மை நீ ஏழு மாத காலம் வணங்கினால் உனது சாபம் நீங்கும்'' என்றார்.

அதன்படியே சூரியன் இத்திருக்கோயில் வந்து ஏழு மாத காலம் தவமிருந்து பூஜை செய்து வழிபட்ட பின்னரும் தனது கருமை வண்ணம் குறையவில்லையே என்று மனம் வருந்தி தன்னைக் காப்பாற்றும்படி கதறுகிறார். இவர் செய்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து கோபம் கொண்ட பார்வதி தாயார், தானும் சாபமிட முற்படுகிறார். அவரி தடுத்தாட்கொண்ட இறைவன், இவ்வுலகம் பிரகாசம் பெறவும், நீ சாந்தமடையவும் தவமிருப்பாயாக என்று கூறிவிட்டு, சூரிய பகவானுக்கு சாப விமோசனம் அளித்தார்.
அம்பாளும் சாந்த நாயகி ஆகிறார். சூரியனும் தனக்கிட்ட சாபத்திலிருந்து 
மீண்டு வந்ததினால் இத் திருத்தலம் மீயச்சூர் என விளிக்கப் படுகிறது.

திருக்கோயில் சிறப்பு:
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை சூரியன் உதிக்கும் நேரத்தில் இவ்வாலய சிவலிங்கத்தின் மேல், கதிரவனின் செங்கதிர்கள் விழுவது இயற்கையின் கொடை. இயற்கையே இறைவன்.

சூரிய பகவான், அருணன், காசிப முனிவரின் மனைவிகளான கர்த்துரு, விநநை, அகத்திய முனிவர், என்று இவர்களோடு அல்லாமல் , எமன் இக்கோயிலிலேயே தங்கி எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருந்து பூஜை செய்து வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை கடலில் தோன்றுவதால் சங்கிற்கு ஆயுளைக் கூட்டும் சக்தி உள்ளது என்பதால், சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன், அதிக ஆயுளைத் தரவல்ல சங்கினைக் கொண்டு 1008 சங்காபிஷேகம் செய்து, சக்தி வாய்ந்த மூலிகைகள், எமலோகத்தின் தலவிருட்சமான பிரண்டை கலந்த சாதத்தினை அன்னதானம் செய்து சிவபிரானை வழிபட்டார் என்பது இக்கோயில் ஐதீகம்.

தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடை அரற்கு
ஏற்றம் கோயில்கண்டீர் இளங்கோயிலே.

என திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள திருமீயச்சூர் தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

இராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரது காலத்தில் கோயில் திருப்பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. சோழ நாட்டின் காவிரி தென்கரை பாடல் பெற்ற திருத்தலங்களில் 56, 57-வது திருத்தலங்கள்..

தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி

திருக்கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும் ஏழு கலசங்களுடனும், கோயிலின் இரண்டாவது உள் கோபுரம் மூன்று நிலைகளுடன் ஐந்து கலசங்களுடனும் காணப் படுகின்றன. முதலில் அன்னை லலிதாம்பிகை குடிகொண்டுள்ள சன்னதி தனி கோபுரத்தின் கீழ் உள்ளது. அதனை அடுத்து, பெருங்கோயிலின் இரண்டாவது உள் கோபுரத்தில் நுழையும்போது ரத விநாயகர் நம்மை வரவேற்கிறார். 
முதலில் மேகநாத சுவாமி சன்னதி அமைந்துள்ளது. உட் பிரகாரத்தின் தென் பகுதியில் நாக பிரதிஷ்டைகள், சேக்கிழார், போன்றோரது திருவுருவங்களும், சப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள், சுற்றி வரும்போது பிரகாரத்தில், அக்னி, எமன், இந்திரன் வழிபட்ட லிங்கங்கள், வள்ளி, தேவசேன சமேத சுப்பிரமணியர், நிருதி, வருணன், குபேரன், அகத்தியர், ஈசான லிங்கங்களும் உள்ளனர்.



சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவம் அமைந்துள்ளது. இந்த சிற்பத்தில் என்ன ஒரு விசேஷம் என்றால், அம்பாளையும், ஈஸ்வரனையும் ஒரு புறத்தில் இருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும், மற்றொரு புறத்தில் இருந்து காணும் போது கோபமாகவும் தோன்றும் வண்ணம் இந்த சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. 

இந்த சிற்பத்தை காணும்போது வீட்டில் கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சினைகள் நடந்து, சண்டை சச்சரவுகள் நடந்தாலும், வெளியில் இருந்து ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் என்றால் அப்படியே கோபமான முகத்தை, சாந்தமான முகமாக மாற்றிக்கொண்டு விருந்தோம்பல் புரிவது நமது பண்பாடு.

இவ்வாறு இறைவன் கூட அவர்களைக் காணச் சென்ற பக்தர்களாகிய நம்மை விருந்தினர்களாக நினைத்து தன் மனைவியை சிரித்த முகத்துடன் இருக்குமாறு சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. ஈஸ்வரனுக்குத்தான் அவரது பக்தர்கள் மேல் எத்தனை பிரியம்!

தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சந்திரசேகரர், அஷ்டபுஜா துர்க்கை, ரிஷபாருடர், ஆகியோரது திருவுருவங்களையும் கடந்து செல்கின்றோம். இந்த பெருங்கோயிலின் அர்த்தமண்டப வாயிலில், துவார கணபதிகளையும், போதிகை தூண்களும் அழகு சேர்க்கின்றன. 
இக்கோயிலின் வடப் பக்கத்திலே இளங்கோயிலை தரிசனம் செய்யலாம்.


இளங்கோயிலின் குறிப்பு:
தல மூர்த்தி : அருள்மிகு ஸகல புவனேஸ்வரர்
தல இறைவி : அருள்மிகு வித்வன் மேகலாம்பிகா (மின்னும் மேகலையாள்)
தல விருட்சம் : மந்தார மரம்
தீர்த்தம் : காளி தீர்த்தம்
இக்கோயிலின் பிரகார சுவற்றில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சதுர்முக சண்டிகேஸ்வரர் உள்ளனர். தலவிநாயகர், சண்டிகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், பைரவர், சூரிய பகவான், ஆகாச லிங்கம், வாயுலிங்கம் ஆகியோரும் வீற்றிருக்கின்றன

திருக்கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது ஒரு இடத்தில் நின்று காணும் போது ஐந்து கோபுரங்களின் தரிசனம் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரங்களின் தரிசனம் கோடானு கோடி புண்ணியம்.

Temple - Ambal decorated as Sri Lalithambika of Thirumeeyachur 
in the golu mandapam on the seventh day





32 comments:

  1. ஸ்தலபுராணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  2. வழக்கம்போல எல்லாமே அருமை... எப்படி உங்களுக்கு மட்டும் இவ்வளவு விசயங்கள் கிடைக்குது!

    ReplyDelete
  3. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் ஒன்று You-Tube லிருந்து சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/_CF6agcwMdg" frameborder="0" allowfullscreen></iframe

    மேற்கண்ட லிங்க் உபயோகமாக இருந்தால் பிளாக்கில் இணைக்கவும்.

    ReplyDelete
  4. வெள்ளிக்கிழமை விடியலில், விஷேஷ தரிசனம்.

    ReplyDelete
  5. அருமை ஓவ்வொறு பதிவுக்குமான உங்கள் உழைப்புக்கு ஒரு சலூட்

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் said...
    As usual, Very Good Post.
    Thanks for Sharing. vgk/

    மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  7. DrPKandaswamyPhD said...
    ஸ்தலபுராணம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது./

    சுவாரஸ்யமான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  8. விச்சு said...
    வழக்கம்போல எல்லாமே அருமை... எப்படி உங்களுக்கு மட்டும் இவ்வளவு விசயங்கள் கிடைக்குது!?/

    அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  9. DrPKandaswamyPhD said...
    லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் ஒன்று You-Tube லிருந்து சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/_CF6agcwMdg" frameborder="0" allowfullscreen></iframe

    மேற்கண்ட லிங்க் உபயோகமாக இருந்தால் பிளாக்கில் இணைக்கவும்./

    லிங்க் மிகவும் பயனுள்ளது...
    நன்றி ஐயா..

    ReplyDelete
  10. கவி அழகன் said...
    Good post/

    கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  11. FOOD said...
    வெள்ளிக்கிழமை விடியலில், விஷேஷ தரிசனம்./

    விஷேஷ கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்

    ReplyDelete
  12. K.s.s.Rajh said...
    அருமை ஓவ்வொறு பதிவுக்குமான உங்கள் உழைப்புக்கு ஒரு சலூட்/

    மிகவும் நன்றி.

    ReplyDelete
  13. அற்புத தரிசனம்.
    ஆனந்தம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  14. தங்கள் புண்ணியத்தில் வெள்ளிக் கிழமை
    லலிதாம்பிகையின் முதல் தரிசனமும்
    முக தரிசனமும் கிடைத்தது
    படங்களுடன் பதிவும் வழக்கம்போல்
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இன்று காலைப்பொழுதை மங்களகரமாக லலிதா ஸஹஸ்ர நாமம் கேட்டபடி ஆரம்பித்தேன்.இங்கு வந்தால் உங்கள் லலிதாம்பிகை பற்றிய அருமையான பதிவு!
    நன்றி.

    ReplyDelete
  16. தேவையான விளக்கங்கங்களுடன் அருமையான காட்சிப்பதிவு.

    ReplyDelete
  17. மிக விரிவான விளக்கங்களுடன் கூடி பகிர்வுக்கு நன்றி... சகோ...

    ReplyDelete
  18. லலிதாம்பிகையின் ஆனந்த தரிசனம்
    பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி...

    ReplyDelete
  19. படங்களுடன் நல்லதொரு தரிசனம்.

    லலிதா நவரத்தின மாலை எனக்கு கேட்கவும், பாடவும் மிகவும் பிடிக்கும்.

    வெள்ளியாதலால் வழக்கம் போல் நானும் ரோஷ்னியும் இன்று மாலை லலிதா சகஸ்ரநாமம் சொல்லச் செல்வோம்.

    ReplyDelete
  20. அருமையான படங்கள் செய்திகள் அன்னை லலிதாம்பிகைப் பற்றி.

    நான் போயிருந்த போது அன்னைக்கு அபிஷேகம் செய்ய வந்திருந்தவர் ’லலிதா நவரத்தினமாலை’
    தெரிந்தவர்கள் பாடுங்களேன் என்று சொன்னார். அன்னையே பாடச் சொன்னது போல் பரவசமாய் பாடினேன். நான் சிறுமியாய் இருக்கும் போதிருந்து அடிக்கடிப் பாடும் பாடல்.

    நீங்களும் லலிதா ஸகஸரநாமம் பாடியது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

    ReplyDelete
  21. அருமையான புகைப்படங்கள், தகவல்கள், விளக்கங்கள்... கோயிலுக்கே சென்ற உணர்வு.

    லலிதாம்பிகை பார்வதி தாயின் வடிவானவள் என்று நினைத்திருந்தேன், முப்பெரும்தேவிகளின் வடிவானவள் என்ற தகவலுக்கு நன்றி.

    பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  22. முழுமையான தகவல்கள்,படங்கள் அருமை.

    ReplyDelete
  23. மாதாஜெய ஓம் லலிதாம்பிகை சூப்பர்.

    ReplyDelete
  24. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. இறை தரிசனம் பெறவேண்டும் என்றால் சகோதரி உங்கள் தளம்தான்
    முதலில் ஞாபகத்துக்கே வருகின்றது .எப்படி உங்களால் இவ்வளவு
    அற்புதமாக இந்த அளவிற்கு படங்களுடன் ஆக்கம் எழுத முடிகிறது...!!!!!அருமை!..எனக்கு ஒரு சின்ன ஆசை இந்த ஆக்கத்தின் தலைப்பில் தோன்றும் விளக்கெரியும் அன்னையின் திருவுருவப் படத்தினை என் தளத்தில் வலது கை மேல் முனையில் இணைக்க வேண்டும்போல்
    உள்ளது .முடிந்தால் இதனை எவ்வாறு இணைப்பது என எனக்கொரு தகவல் தருவீர்களா?....மிக்க நன்றி சகோதரி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  26. மூல‌க்க‌ன‌லே ச‌ர‌ண‌ம் ச‌ர‌ண‌ம்!
    முடியா முத‌லே ச‌ர‌ண‌ம் ச‌ர‌ண‌ம்!!

    பிர‌மாத‌மான‌ இடுகை ச‌கோத‌ரி! ந‌வ‌ர‌த்தின‌ மாலை நாவுக்கினிமை! தாயின் த‌ரிச‌ன‌ம் ம‌ன‌துக்கு குளுமை!! அம்பாளின் தேஜ‌ஸ் நேர‌டி த‌ரிச‌ன‌த்தில் ந‌ம்முள் ந‌ல்ல‌திர்வுக‌ளை ஏற்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து. பெரிய‌ நாத்த‌னார் வீட்டிலிருந்து சில‌ கிலோமீட்ட‌ர்க‌ள் தூர‌த்தில் உள்ள‌தால் போகும்போதெல்லாம் போனாலும் தீரா அவா த‌ரும் கோயில‌து. ல‌லிதா ந‌வ‌ர‌த்தின‌மாலை நினைத்த‌போதெல்லாம் ம‌ன‌துள் ஓடும்போது சின்ன‌ஞ்சிறு வ‌ய‌திலேயே அரிய‌ ஸ்தோத்திர‌ங்க‌ளை ப‌டிக்க‌ச் செய்த‌ என‌து த‌ந்தையையும், எழுதிக்கொள்ள‌ த‌ன் குறிப்பேடு த‌ந்த‌ குருக்க‌ள் ம‌னைவியையும் நினைக்க‌த் த‌வ‌றுவ‌தில்லை நான்.

    ReplyDelete
  27. திருமீயச்சூர் செல்ல வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு விட்டது.

    அவள் திருவுளப்படி ...

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete