Thursday, November 10, 2011

திருவருள் குருவருள்


 Shiva Shankar Kaal Chakar

இன்று 10.11.2011 சிவாலயங்களில் சிறப்பான அன்னாபிஷேகம் திருநாள்...
ஐப்பசி பௌர்ணமி முழு நிலவு நாள்..
http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_08.html
ஐப்பசியில் ஐயனுக்கு அன்னாபிஷேகம்.

நாராயணன் தன்னெடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணவொன் னுனிடம்
ஆரணங் கொண்டு பூசுரர்கள் வந்தடி தொழச்
சீரணங்கும்புகழ்த் தென்குடித் திட்டையே

தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரிக்குத் தென்கரையில் தென்குடித்திட்டை 15 வது ..
திருஞானசம்பந்தர் பதிகம் பெற்றது.

முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

27 சுயம்பு ஸ்தலங்களில் இது 22 வது ஸ்தலமாகும்..


நயத்தக்க நகரத்தார் பணி'யால் திட்டை கோவிலும், திட்டை கோயிலுக்குச் சற்று எதிரே உள்ள சூல தீர்த்தமும் நல்ல படித்துறைகளுடன், அதன் கட்டுமான அழகும் மிளிர ஒளிர்கிறது.
இறைவன்:வசிஸ்டேஸ்வரர்,பசுபதிநாதர்.
மூலவர் சுயம்பு லிங்கமாக ஸ்ரீ வசிஸ்டேஸ்வரர் சன்னதி கிழக்கு நோக்கியது.  சதுர ஆவுடையார் மீது உள்ள சிவலிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன. 
[vashis.jpg]
 கருவறையின் உச்சியில் பிரம்மரந்திர வாயிலாக அஷ்ட கோணத்தில் மத்தியில் சதுரத்தில் சந்திரகாந்தகல், சூரிய ஒளியை தாமிர கலசத்தின் வழியாக சூரியனுடைய வெப்பத்தை கிரகித்து ஒவ்வொரு 25 நிமிட நேரத்திற்கு (ஒரு நாழிகை) ஒருமுறை ஒரு சொட்டு வீதம் இறைவனுடைய லிங்கத்தின் மீது ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். 
காமதேனு,திருமால், வசிட்டர், கெளதமர், ஆதிசேடன் முதலியோர் பூசித்த தலம்
பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர். 

கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். 
சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.

கோவில் அமைப்பு: ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது.  கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். 

உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. 
[t11.jpg]

மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது. 
தலச்சிறப்பு:

தென்குடித் திட்டையில் பிரகஸ்பதியார் ஸ்ரீ ராஜகுருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன்   சிறபுற அமைந்த தனிச்சன்னதியில் பக்தர்களுக்கு அருள் புரிவதால்  சிறந்த குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. 

   
இறைவி:உலகநாயகி,ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை

தலவிருட்சம்:செண்பக மரம்,செருத்திபூ,மாதவி(முல்லை)
தலமும் இருப்பிடமும்:இத்தலம் கும்பகோணத்திலிருந்து மெலட்டூர் வழியாக தஞ்சை செல்லும் சாலையில் இருபது கி.மீ தூரத்தில் இருக்கிறது.

காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. 

புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். 



இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும்
சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.

சூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.

குரு ஸ்தலம்: ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான். 

குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். 

இனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.
Archakas performing the Laksharchana to the Guru Bhagawan at 
Sri Vasishteswaraswamy temple in Thittai 



18 comments:

  1. வழக்கம்போல அழகான படங்கள்... அருமையான விளக்கங்கள்...

    ReplyDelete
  2. பிரளயத்தைத்தான் இந்தக் காலத்தில் சுனாமி என்று சொல்லுகிறோமோ? சுனாமி படங்கள் மிகப் பொருத்தம்.

    ReplyDelete
  3. நல்ல அருமையான பதிவு.

    எங்கள் ஊரில் ஒரு சில கோயில்களில் நேற்று 9.11.2011 அன்றே அன்னாபிஷேகம் நடந்து விட்டது.

    பஞ்சாங்கப்படி இன்று 10.11.2011 அன்று தான் பல கோயில்களில் நடைபெறுவதாக உள்ளது.

    கேட்டதற்கு ஏதோ நக்ஷத்திரக் கணக்கு என்றும் நேற்று இரவே பெள்ர்ணமி தொடங்குவதாகவும், இன்று இரவு பெளர்ணமி அதிகமாக இல்லை என்றும் சொல்லிவிட்டனர்.

    வழக்கம்போல படங்களும் விளக்கங்களும் அருமையாக உள்ளன.

    குருவருள் நமக்கும் கிட்டி, எப்போதும் போலவே நம் ஆத்மார்த்தமான நட்பு, தொடர நேற்று முன் தினம் பிரதோஷத்திலும், நேற்று அன்னாபிஷேகத்திலும், மனமுருக வேண்டிக்கொண்டு வந்துள்ளேன்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  4. தென்குடித்திட்டை நேரில் பார்த்ததுபோன்று இருந்தது.

    ReplyDelete
  5. ஐப்பசி அன்னாபிஷேக தகவல்- நன்றி.படங்கள் கலெக்‌ஷன் அருமையா இருக்கு.

    ReplyDelete
  6. வழக்கம் போல அழகான படங்கள் அருமையான தகவல்

    ReplyDelete
  7. அன்னாபிஷேகத் தகவல் சிறப்பாக இருந்தது
    வழக்கம்போல் படங்களுடன் பதிவு
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. ஐப்பசி பௌர்ணமி அழகிய தகவல் ஆழகான படங்களுடன் ,நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  9. தென்குடித்திட்டை நான் இரண்டு வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறேன். நல்ல தகவல்கள் - என் நினைவுகளை மீட்டுத் தந்தது....

    ReplyDelete
  10. இன்றைய வலைச்சரத்தில் மீண்டும் அடையாளம் காட்டப்பட்டுள்ளதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  11. சந்திரக்காந்தகல் அமைப்பும், 20நிமிடத்திற்கு ஒரு முறை ஒருசொட்டு நீர் சிவலிங்கத்தின் மீது விழுவதை அங்குள்ள அர்ச்சகர் அருமையாக விளக்கினார். அருமையான பதிவு.

    ReplyDelete
  12. வழக்கம் போல அசத்தல் படங்களுடன் ஒரு பதிவு..

    நன்றி சகோ..

    ReplyDelete
  13. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. குரு தரிசனம் கிடைத்தது .
    மகிழ்ச்சி நன்றி.

    ReplyDelete
  15. ;) ஓம் விகடாய நம:

    ;) ஓம் விக்ந ராஜாய நம:

    ;) ஓம் விநாயகாய நம:

    ;) ஓம் தூமகேதவே நம:

    ;) ஓம் கணாத்யக்ஷாய நம:

    ReplyDelete