Friday, August 31, 2012

ஸ்ரீ ஆனந்த ஆஞ்சநேயர்
கோவையில் ஈச்சனாரி கோவிலுக்கு அருகில் அமைந்திருக்கும்
பஜனைக்கோல அனுமன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம்..

திரு எம் . ஆர். சேட் அவர்கள் ஸ்ரீராம் சேவா ஆஸ்ரமம் என்கிற ட்ரஸ்ட் ஏற்படுத்தி தம் பெற்றோர்கள் ஒரு அனுமன் கோவில் கட்டவேண்டும் என்று கண்ட கனவை நிறைவேற்ற  சுமார் ஒரு ஏக்கர் அளவுள்ள பூமியில் சோலைவனமாக மரங்களும் , நந்தவனமும் , துளசி வனமும் சூழ அனுமனுக்கு அழகிய ஆலயம் அமைத்துள்ளார்..
   மிக மிகத்தூய்மையாக பரமரிக்கப்படும் ஆலயம்  ..

ஞாயிற்றுக்கிழமைகளில்   ஹனுமனின் புகழ் பாட அருமையான சத்சங்கம் அமைதிருக்கிறார்கள்..


இராம . அரங்கநாதன் அவர்கள் பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் அமைத்திருக்கும் பிரமிடு போலவே  இங்கும் தியானம் செய்வதற்கு பிரமிட் அமைத்திருக்கிறார்  பிரபஞ்ச காந்த அலைகள் பிரமிட் முனையில் குவிந்து மனம் ஒருமுகப்படுவதற்கு சிறப்பாக துணைபுரியும் அதிசயத்தை உணரமுடிகிறது...

பிரமிட்டின் உள்பகுதி

தானே வடிவமைத்து கட்டிய கோவிலில் ஜன்னல்களில் தாமரைப்பூ வடிவமும் ,கதவுகளில் சங்கு ,சக்கரம் , கதை , வில் , ஓம் வடிவங்களும் வருமாறு அமைத்ததை விளக்குகிறார்..https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=610c35685a&view=att&th=139913f3f5b26f53&attid=0.2&disp=inline&safe=1&zw&saduie=AG9B_P8zGJs0Rg0M_zZnphEiwVHC&sadet=1346763132359&sads=wuDIhdQRTNPYUL7gZ-84dCB5xew&sadssc=1
 சன்னதியில் ஸ்ரீ ராமர் , சிவன் , அனுமன் ஆகியோருக்கு பிரார்த்தனை செய்துகொண்டு காணிக்கை செலுத்த உண்டியல் உண்டு..
முன்பொரு முறை சென்றிருந்தபோது அபூர்வமான நரசிமரின் சாளக்கிரம வடிவம் ஒன்று சிவபார்வதி விகரகங்களுக்கு அருகில் பார்த்திருந்தோம்..
ஸ்ரீ ராமர் அங்கே அருகில் இருக்கும் போது அவரது அவதாரமான நரசிம்மர் சிலை அவர் அருகில் இருப்பதுதான் முறை என்று சொல்லி ஆராதித்து வந்தோம்..

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அனுமன் விக்ரகம் உயிர்த்துடிப்புடன் நம்மை ஈர்க்கிறது...
https://mail-attachment.googleusercontent.com/attachment/u/0/?ui=2&ik=610c35685a&view=att&th=139913f3f5b26f53&attid=0.4&disp=inline&safe=1&zw&saduie=AG9B_P8zGJs0Rg0M_zZnphEiwVHC&sadet=1346763223283&sads=JapabVwKptaL01n70dhk17fVQvo

Thursday, August 30, 2012

ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் !!


ஸ்ரீலக்ஷ்மி வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும், 
இந்திரனிடத்தில் சொர்க்க லக்ஷ்மியாகவும், 
மன்னர்களிடத்தில் ராஜலக்ஷ்மியாகவும், 
வீரர்களிடம் தைரிய லக்ஷ்மியாகவும், 
குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள். 

மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்..உப்பின் பிறப்பிடம் கடல்

வெள்ளிக்கிழமைகளில்  உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம்..


Gajalakshmi


மஹாலக்ஷ்மிமலரின் அழகு. அருள் பார்வையுடன் திகழும் செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.

திருப்பாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள்.  நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.

செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.

கஜலக்ஷ்மி  பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன.

பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும்.

யானைகளின் பிளிறலை லக்ஷ்மி விரும்பிக்கேட்கிறாள் என வேதமந்திரமான ஸ்ரீசூக்தம் கூறுகிறது.

கோலக்ஷ்மி என்று பசுக்களை அழைக்கின்றனர்.
கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுக்களை வீட்டிற்குள் அழைத்துச் செல்வதன் மூலம், லக்ஷ்மி தேவி முதலில் செல்கிறாள் என்பது ஐதீகமாக உள்ளது.

அஷ்ட லக்ஷ்மி,ஆதி லக்ஷ்மி, மகா லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தானிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஆகிய லக்ஷ்மியின் அம்சங்கள். .......        


16 விளக்குகள் நெய்யினால் ஏற்றி, மஹாலக்ஷ்மி அர்ச்சனைக்கு வில்வம் இலை, தாமரை பூ அல்லது வெள்ளி காசு , பூக்கள் குங்குமம், குபேரன் படம்  லஷ்மி படம், அர்ச்சனை செய்ய காசுகளை பயன்படுத்தி வெள்ளிக்கிழமைகளில் பூஜிப்பது விஷேசம்..


காயேன‌ வாசா ம‌ன‌சேந்திரியை வா புத்யாத்ம‌நா வா ப்ர‌க்ருதேஸ்வ‌பாவாத்
க‌ரோமி ய‌த்ய‌த்ச‌க‌ல‌ம் ப‌ர‌ஸ்மை நாராயணாயேதி ச‌ம‌ர்ப‌யாமி !!!
Wednesday, August 29, 2012

உத்தமத் திருநாள் திருவோணம்“ஓங்கி உலகளந்த உத்தமன்…’ என்று ஸ்ரீவில்லிபுத்தூரின் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளான ஆண்டாள், வாமனரைப் போற்றுகிறாள்
“உலகளந்த உம்பர் கோமானே…’அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி…’ என்றும் அவன் மூன்றடி நிலம் கேட்டதால், இவளும்  மொத்தமுள்ள 30 பாடல்களில்,மூன்று பத்தில் மூன்று அடிகளை வைத்து சிறப்பித்திருக்கிறாள்.
பெருமாளின் தசாவதாரத் திருக்கோலங்களில் எல்லா அவதாரங்களும் கத்தியும், ரத்தமும் கொண்டதாக இருக்க, வாமன அவதாரத்தில் மகாபலியை வதம் செய்யாமல், அவளை பாதாள லோகத்துக்கு அனுப்பி ஆட்கொண்டார். 

எந்த சப்தமும் இல்லாமல், தன் பணியை முடித்து விட்டார். 

அதனால், அவர் உத்தமன் என்கிறாள் ஆண்டாள்.

 வாமன அவதாரத்தில் உலகையே அளந்து, “இந்த உலகம் முழுவதும் என்னுடையது!’ என்றான். 
நரசிம்ம அவதாரத்தில் ஆணவம் கொண்டவன் கொல்லப்பட்டான். 
வாமன அவதாரத்தில் ஆணவம் கொண்டவன் ஆட்கொள்ளப் பட்டான்.
இந்த உலக உயிர்களும், “இந்த உலகம் தனக்குரியது!’ என நினைத்து, ஆணவம் கொண்டிருக்கிறது. 
அந்த ஆணவம் நீங்கி, உத்தமனாக வாழ திருவோணத் திருநாளில் அந்த உத்தமனை வணங்குவோம்..
ஆவணி மாதத்தில் திருவோணம் நட்சத்திர நாளில்  வரும் ஓணத்திருவிழா தான், பின்னால் வரும் மற்ற விழாக்களுக்கு எல்லாம் துவக்க விழா!
திரு ஓணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பெரியாழ்வார் திருமொழி!
எல்லா நிலங்களையும் தன்னிடத்தே அளந்த திருவுடைய மாயோன் மாவலியின் பொருட்டும், உலகின் பொருட்டும் மூன்றடி மண் இரந்து பெற்ற இறைவன், இந்தத் திருவோண விண்மீனில் தான் தோன்றினான்! 
இதே திருவோண  விண்மீனில் தான் அத்தனை உலகையும் உயிரையும் அளந்தான் உலகளந்த உத்தமன்! 

திருவடிகளால் அத்தனை படைப்புகளும் தோய்க்கப் பெற்ற நாளும் இதுவே!
மாயோனாம் திருமாலின் தோற்றங்கள் பலவும் இந்தத் திருவோண -பருந்து  -விண்-மீன் நாளிலே தான் நிகழ்வதாக ஐதீகம்...
இன்றும் ஆண்டுக்கொரு முறை மாவலி, தன் நாட்டினையும் மக்களையும், இதே ஓணத்தன்றே பார்க்க வருவதாக  நம்பிக்கை பொருட்டே மலையாள  நாட்டில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடபடுகிறது!
File:Onam Pookalam 2011 bangalore.jpgFile:പുക്കളം4.jpgFile:Athachamayam 3.JPG

Tuesday, August 28, 2012

ஒளி வீசும் ஓணத்திருநாள்
ஓணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் சிறப்பு யானைத் திருவிழாவாகும். 

10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து  வீதிகளில் ஊர்வலம் நடத்துவது கண்கொள்ளாக்காட்சி ! 
யானைகளுக்கு சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்


கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும்.
ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் கொண்டாடப்படுகிறது.  சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவது பிரமிக்கவைக்கும்...

ஓணம் பண்டிகை ஒரு பூத்திருவிழா ...

புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழும் ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ..

 கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமானதால்  ஓணத்திருநாளையும்  பூக்களின் திருவிழாவாகப் பூத்து மலரவைக்கிறது..

 அத்தப்பூ என்ற பூவை பறித்து பூக்கோலத்தில்  முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். 

 தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். 

முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். 
பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். 

தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்கள் வண்ணமயமாய் கோலத்தை அழகுபடுத்தும்..

 கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி பெண்கள் மகிழ்வோடு ஆடும் கைகொட்டுக்களி  நடனப் பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.
படிமம்:Kaikottukkali.jpgFestivals of Onam