Monday, August 13, 2012

கோவிந்தனின் கோசாலை !


கோவிந்தன் குழல்கொடு ஊதின போது பறவையின் 
கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் 
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக 
கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே 
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி 


மனமகிழ்ச்சியை ஏற்படுத்தி கேட்டவர்க்கு கேட்ட வரம் அள்ளித்தரும் பாண்டுரங்கனுக்கு  பண்டரிபுரம் போன்ற பிரம்மாண்ட தோற்றத்துடன் கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

பலகோடி ரூபாய் செலவிலும், பகவான் நாமத்தின் மகிமையாலும்  கோவிந்தபுரத்தில் உருவான பாண்டுரங்கன் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் உள்ள மேடையில், ருக்மணி சமேத பாண்டுரங்கன்அருள் பொழிகிறார்..

பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையை சுற்றி வந்து வழிபட்டோம்...

 வட மாநில கட்டட வேலைப்பாடுடன் கட்டப்பட்டு உள்ளது.

ஜெயத்தை குறிக்கும் 18 என்னும் எண்ணை வெளிப்படுத்தும் வகையில் கோயில் விமானத்தின் மீது வைப்பதற்காக 18 அடி உயரத்திற்கு செப்புக்கலசம் செய்யப்பட்டு,சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது. 

27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் நுழைவாயிலில் 27 படிக்கட்டுகள் உள்ளன. 

தெய்வங்கள், மகான்கள், யானை சிற்பங்கள் செய்யப்பட்டு கதவுகளில் பொருத்தப்பட்டுள்ளது. 
http://www.freewebs.com/temptown/IMG0411A.jpg
ஸ்ரீ விட்டல் ருக்மிணி மந்திரிலிருந்து சற்று தொலைவில் 
ஸ்ரீ பகவன் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம். பிருந்தாவனத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். சுற்றி வலம் வரலாம். 


தீர்த்தக்குளம்  திருப்பணியை மராட்டிய, தமிழக ஸ்தபதிகள் இணைந்து செய்துள்ளனர்.

தீர்த்தக்குளத்தை ஒட்டிய அரசமரத்தில் இரண்டு யானைகளின் உருவம் அழகுற அமைந்து மரத்தின் கீழ் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் என்கிற பாண்டுரங்க ஆஸ்ரமத்தில் கோமாதாவாகிய பசுக்கள் அருமையாக நவீன சொகுசு வசதிகளுடன் தரமான உணவுகள் வழங்கப்பட்டு போஷிக்கப்படுகின்றன..

 பாண்டுரங்கனான கிருஷ்ணபகவான் கோகுலத்தில்  பசுக்களை மேய்த்ததன் அடையாளமாக துவாரகை, பிருந்தாவன், மதுரா ஆகிய பகுதிகளிலிருந்து பசுக்கள் கொண்டுவரப்பட்டு ஆஸ்ரமத்தில் வளர்க்கப்படுகிறது. பிருந்தாவனத்தில் கண்ணன் மேய்த்த் பசுக்களின் வழித்தோன்றல்களாம்..
http://www.freewebs.com/temptown/IMG0441A.jpg
பால் பொது மக்களுக்கும், ஆஸ்ரம பயன்பாட்டிற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.வெளி நபர்களுக்கு விற்கப்படுவதில்லை.


ஆஸ்ரமத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை குறிப்பிட்ட அளவை பசுக்களின் சாணத்தை கொண்டு தாங்களாகவே தயாரித்து கொள்ளுகிறார்கள் !!

துவாரகை பசுக்களின்  காதுகள் மிகப் பெரிய அளவில் அமைந்திருக்கிறது. பகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்டு அதன் காதுகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளதாம்..
File:Govindapuram23.jpg


South Side Elevation of Sri Vittal Sri Rukmini Mandir, Govindapuram
The View of the Sri Gokulam Gosala at the Sri Vittal Rukmini Samsthan in Govindapuram at the Kumbakonam in Thanjavur on Monday. Photo: M. Srinath

http://mw2.google.com/mw-panoramio/photos/medium/5495325.jpg

21 comments:

 1. ஆஹா! கோவிந்தனின் கோசாலையா?

  காசோலை ஏதும் செலவு இன்றி கோவிந்தனின் கோசலையை தரிஸித்து விட்டு வழக்கம் போல இரவினில் வந்து மேலும் கருத்தளிப்பேன்.

  ReplyDelete
 2. பாரதத்தில் தலைசிறந்த புண்ணியத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள் கோவிந்தபுரம் ஒரு மிகச் சிறப்பான ஆலயம் என்றால் மிகையாகாது. எண்ணற்ற மாற்றங்களைத் தரும் அற்புத புண்ணிய ஷேத்ரம் இதுவாகும். சிங்கப்பெருமாள் ஆலயம் சென்று கடன் பிரச்னை தீர பரிகாரம் முடித்து வந்தவர், பின்னாளில் இவ்வாலய இறைவனை தரிசிக்க வாழ்வில் ஏற்றம் பெறுவார்! இது அனுபவப் பூர்வ உண்மையாகும்! எம் பெருமானின் புகழ் பரவச்செய்யும் எம் சகோதரியும் நன் முயற்சிக்கு எமது வணக்கங்களும் நன்றியும்! கிருஷ்ணா! கிருஷ்ணா!

  ReplyDelete
 3. மிகவும் சிறப்பான ஆலயத்தை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி சகோதரி...

  தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. //பாண்டுரங்கனுக்கு பண்டரிபுரம் போன்ற பிரம்மாண்ட தோற்றத்துடன் கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது.//

  வடக்கேயுள்ள பண்டரிபுரமும் சென்று நேரில் ஸ்ரீ பாண்டுரங்களை தரிஸித்து வரும் பாக்யம் பெற்றுள்ளேன். .

  இந்த தக்ஷிண பண்டரிபுரமான கோவிந்தபுரமும் சென்று தரிஸித்து வரும் பாக்யமும் பெற்றுள்ளேன்.

  இந்த கோயிலின் கணக்கு வழக்குகளை கவனிக்கும் கூடுதல் பொறுப்பினையும் ஏற்கும் பாக்யம் அந்தப்பாண்டுரங்கனால் எனக்கு ஓர் நான்கு ஆண்டுகளுக்கு 2004-2007 அளிக்கப்பட்டது.

  இப்போதும் கூட என்னை கோவிந்தபுரத்திற்கே வந்து நிரந்தரமாகத் தங்கிவிடும்படியாக கேட்டுக்கொள்கிறார்கள். நிர்பந்தம் செய்கிறார்கள். தங்குவதற்கு வீடு முதலிய அனைத்து வசதிகளும் செய்து தருவதாகச் சொல்கிறார்கள்.

  நான் தான், சில சொந்த காரணங்களாலும், திருச்சியின் மேல் நான் கொண்டுள்ள மோகத்தாலும், அந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளவில்லை.

  மேலும் அவர்களின் அழைப்பினை நிர்பந்தம் காரணமாக ஏற்றுக்கொண்டு நான் பாண்டுரங்கனே கதியென [பக்த துக்காராம் போல] ஆகிவிட்டால், தங்களின் அன்றாடப் பதிவுகளைப் படிக்க நேரம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை வேறு, எனக்கு ஏற்பட்டு விட்டது.

  இது விஷயத்தில் ஸ்ரீ பாண்டுரங்கன் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 5. //ஸ்ரீ பகவன் நாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம். பிருந்தாவனத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். சுற்றி வலம் வரலாம். //

  இங்கும் சென்றுள்ளேன். தியானம் செய்துள்ளேன். சுற்றி வலம் வந்துள்ளேன்.

  மிகவும் அருமையான நிம்மதியானதோர் இடமல்லவா! ;)

  ReplyDelete
 6. //விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் என்கிற பாண்டுரங்க ஆஸ்ரமத்தில் கோமாதாவாகிய பசுக்கள் அருமையாக நவீன சொகுசு வசதிகளுடன் தரமான உணவுகள் வழங்கப்பட்டு போஷிக்கப்படுகின்றன..//

  ஆம். மிகச்சிறப்பாகவே பராமரிக்கப்படுகின்றன.

  பாராட்டப்பட வேண்டும்.

  அவர்களின் கோரக்ஷண நிதிக்கு ஆயுட்கால உறுப்பினராக நான் சேர்ந்துள்ள் பாக்யமும் எனக்குக் கிடைத்துள்ளது.

  ReplyDelete
 7. //பாண்டுரங்கனான கிருஷ்ணபகவான் கோகுலத்தில் பசுக்களை மேய்த்ததன் அடையாளமாக துவாரகை, பிருந்தாவன், மதுரா ஆகிய பகுதிகளிலிருந்து பசுக்கள் கொண்டுவரப்பட்டு ஆஸ்ரமத்தில் வளர்க்கப்படுகிறது.

  பிருந்தாவனத்தில் கண்ணன் மேய்த்த் பசுக்களின் வழித்தோன்றல்களாம்.//

  ஆம் அத்தனையும் உண்மை தான்.

  துவாரகையிலிருந்து அவற்றைக் கொண்டுவரும்போது ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களையும்,
  அரசாங்க கெடுபிடிகளையும், பசுக்களை வேறு ஏதோ நோக்கத்தில் கடத்துகிறார்களோ என சந்தேகத்தின் பேரில் அனைவரையும் போலீஸ் பிடித்து சிறைச்சாலைக்கு அழைத்துச்சென்றதையும்,

  பிறகு சட்டச்சிக்கல்களை ஒவ்வ்வொன்றாக உடைத்து,

  அவற்றை பத்திரமாக அழைத்து வந்த கதையையும்,

  விட்டல்தாஸ் மஹராஜ் [ஸ்ரீ ஜயகிருஷ்ண தீக்ஷிதர்] அவர்களின் திருவாயால் நானே நேரடியாகக் கேட்டு மகிழ்ந்துள்ளேன்.

  ReplyDelete
 8. காட்டியுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  மீண்டும் நேரில் போய் பார்த்தது போன்ற மகிழ்ச்சியினைத் தருகிறது.

  //துவாரகை பசுக்களின் காதுகள் மிகப் பெரிய அளவில் அமைந்திருக்கிறது.

  பகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்டு அதன் காதுகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளதாம்.//

  நல்லதொரு நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

  பதிவின் படங்களைப் பார்த்ததும், புத்தம்புதிதாக நுரை பொங்க கறந்த பசும் பாலைப் பார்த்தது போன்றதோர் மகிழ்ச்சி, எனக்கு ஏற்பட்டது.

  தங்களின் அழகான விளக்கங்களைப் படித்ததும் .......

  அந்தப் பசும்பாலை சுண்டக்காய்ச்சி, குங்குமப்பூ, பாதாம் பருப்பு முதலியனவற்றைக் கலந்து லேசாக பனங்கற்கண்டும், மஞ்சள்தூளும் தூவி அருந்தியது போன்ற ஓர் சந்தோஷத்தைத்தந்தது.

  மனமார்ந்த
  வாழ்த்துகள் + பாராட்டுக்கள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பிரியமுள்ள,
  கோ பா ல கி ரு ஷ் ண ன்.

  ReplyDelete
 9. வை.கோபாலகிருஷ்ணன் said...

  மிக விரிவான அனுபவப்பகிர்வுகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

  நாங்கள் பாகவதம் -நாராயணீயம் குழுவினருடன் சென்று அங்கே விஷ்ணு சகஸ்ர நாமம் வாசிக்கும் பேறு பெற்றோம்..

  நாம ஜப லிகித ஏடுகள் நிறைய வாங்கிவந்து அனைவரும் எழுதி சமர்ப்பித்தோம்...

  ReplyDelete
 10. இதுவரை அறியாத கோவில்
  மிக அழகிய படங்களுடன்
  விரிவான விளக்கங்களும்
  வழக்கம்போல் அருமையிலும் அருமை
  மன்ம் நிறைவித்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. இராஜராஜேஸ்வரி said...
  வை.கோபாலகிருஷ்ணன் said...

  //மிக விரிவான அனுபவப்பகிர்வுகளுக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..//

  ஆஹா, Thanks for your feedback.

  //நாங்கள் பாகவதம் -நாராயணீயம் குழுவினருடன் சென்று அங்கே விஷ்ணு சகஸ்ர நாமம் வாசிக்கும் பேறு பெற்றோம்..//

  இதைக் கேட்கவே, பாகவத சப்தாஹமும், நாராயணீயமும் தங்களின் திருவாயால் கேட்டது போன்று, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  //நாம ஜப லிகித ஏடுகள் நிறைய வாங்கிவந்து அனைவரும் எழுதி சமர்ப்பித்தோம்...//

  கொடுத்து வைத்த புண்யாத்மாக்கள்! ;))))) ரொம்பவும் சந்தோஷமே!!

  ReplyDelete
 12. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. நன்றி வாழ்த்துகள்

  ReplyDelete
 13. I am also lucky enough to visit here and sing bajans along with our group.
  On seeing the post i recollect my pleasent memories.
  Nice post dear.
  viji

  ReplyDelete
 14. நான் இரண்டாவது படத்தைப்பார்த்தவுடன், ஏதோ வட இந்திய கோவில் என்றுதான் நினைத்தேன். படித்தபின் அறிந்துகொண்டேன்.நல்ல தகவல்.

  ReplyDelete
 15. கோவிந்தனின் கோசாலையையும் படம் பிடித்துக் காட்டியிருக்கலாமே!

  நாங்களும் அந்த கோமாதாக்களைக் கொஞ்சம் தரிஸனம் செய்திருப்போமே!!

  ////துவாரகை பசுக்களின் காதுகள் மிகப் பெரிய அளவில் அமைந்திருக்கிறது.

  பகவான் கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசையை கேட்டு அதன் காதுகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்துள்ளதாம்.//

  காதுகள் மிகப்பெரிய அளவில் இருந்ததால் போட்டோவில் கவரேஜ் ஆகவில்லையோ !!!

  காதுகளை மட்டுமாவது தனியாகப் படம் பிடித்துக்காட்டியிருக்கலாமே!

  எதுசொன்னாலும் நீங்கள் காதில் போட்டுக் கொண்டால் தானே!!

  [இந்தப்பெண்கள் எல்லோருமே இப்படித்தான்.

  எதையுமே காதில் போட்டுக்கொள்ள மாட்டார்கள் ....

  ஜிமிக்கி, வைரத்தோடு முதலியன தவிர ! ;))))) ]

  ReplyDelete
 16. நேரில் வந்து தரிசித்த மாதிரி விளக்கமான பதிவு! நன்றி!

  ReplyDelete
 17. கோ மாதாக்களை கொஞ்சமாக தரிஸிக்க வைத்துள்ளதற்கு மிக்க நன்றிகள்.

  அகஸ்மாத்தாக இங்கு இப்போது வந்ததில் தரிஸனம் கிடைத்தது.

  சந்தோஷமாக உள்ளது.

  ReplyDelete
 18. இந்த இந்தியப் பயணத்தில் பத்து நாள் போல் கோவிந்தபுரம் போயிருந்தேன். என் அம்மா வீடு தான் எனக்கு பாண்டுரங்கன் கோவிலெல்லாம்.

  படங்கள் நன்று.
  இவ்வளவு கட்டியிருக்கிறார்களா! மூன்று வருடங்களுக்கு முன்பு எதுவுமே இல்லை.

  ReplyDelete
 19. கோவிந்தனின் கோசாலை
  கோஷமிட்டு சென்றுவந்த நினைவுகளைப்பகிர்ந்ததற்கு பாராட்டுக்கள்..

  ஜெய் ஜெய் விட்டலா!!
  ஜெய் பாண்டுரங்கா!!

  ஜெய் பண்டரிநாதா..!!1

  ReplyDelete
 20. 3941+9+1=3951 ;)

  பின்னூட்டங்களை மீண்டும் படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. தங்களின் ஓர் பதிலும் கூட. ;)))))

  ReplyDelete