Friday, August 17, 2012

நலமனைத்தும் அருளும் நாமகிரித்தாயார் !


http://www.harshan.in/images_Temples/Lord%20Narasimha_Namakkal.jpg
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து 
இங்கில்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கே அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் 

சிங்கபிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே

ஆழ்வார்கள் ஆராதித்துக் கொண்டாடிய அவதாரம் நரசிம்ம மூர்த்தியை  புகழ்கிறது திருவாய்மொழி பாசுரம் ...
இராம- இராவண யுத்தத்தில், பிரம்மாஸ்திரத்தால் லட்சுமணன் உள்ளிட்டோர் மூர்ச்சித்துக் கிடக்க, சாகாவரம் பெற்ற ஜாம்பவான் அனுமனிடம், "மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தால் அனைவரும் உயிர் பிழைப்பர்' என்று கூற, அனுமன்   சஞ்சீவி மலையை எடுத்து வந்து போர்க்களத்தில் வைக்க, அனைவரும் மயக்கம் தெளிந்து, முழு வலிமை பெற்று மறுபடியும் போருக்கு ஆயத்தமாயினர்.

அனுமன் மறுபடியும் சஞ்சீவி மலையை முன்பிருந்த அதே இடத்தில் கொண்டு போய் வைத்துவிட்டுத் திரும்பும்போது, நேபாளத்தில் ஓடும் புனித நதியாகிய கண்டகி நதியில் ஒரு சாளக்கிராமக் குன்றினைக் கண்டார். (சாளக்கிராமம் என்னும் புனிதமான கற்கள் பூஜையில் வைத்து வழிபடத்தக்கவை. நாம் என்ன மூர்த்தத்தை நினைத்து இடையறாமல் வழிபடுகிறோமோ, அந்த தெய்வ உருவம் நாளடைவில் அதில் தோன்றும் என்றும்; சுபிட்சத்தை அளிக்கும் என்பதும் அறிஞர்களின் கருத்து.) 


 சாளக் கிராம குன்றினைக் கண்ட ஸ்ரீ அனுமன், அதை உற்றுப் பார்த்த போது ஸ்ரீநரசிம்மரின் திருவுருவம் அதில் ஆவிர்பவித்திருப்பதைக் கண்டு, அதனை அப்படியே தூக்கிக் கொண்டு தென்னாடு நோக்கி வந்தார்.


(இரணியனைக் கொன்ற நரசிம்மர் கோபம் தணியாமல் உக்கிரமாக இருக்கவே, மகாலட்சுமியாகிய ஸ்ரீதேவி அவரை நெருங்க பயந்து பிரிய நேரிட்டது. 

திருமாலை திரும்பவும் அடைய வேண்டி ஸ்ரீசைல க்ஷேத்ரமமான நாமக்கல்லில் கமலாலயம்  குளத்தை ஏற்படுத்தி ,கரையில் திருமாலை நோக்கித் தவமிருந்து அவரை அடைந்தார் 
நரசிம்மரின் சாளக்கிராம குன்றைத் தூக்கி வந்த அனுமன், மாலைப் பொழுதானதால் நாமக்கல் கமலாலயம் அருகில் வைத்துவிட்டு, அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு மீண்டும் சாளக்கிராமக் குன்றினை எடுக்க முயல, அது முடியாமல் போனது. 
 http://images.wikia.com/analytical/images/7/7f/Namakkal.jpg
 அப்போது அசரீரியாக, "இராமாவதாரப் பணிகளை முடித்துவிட்டு நாமக்கல்லுக்கு வந்து என்னை சேவிப்பாய்' என நரசிம்மர் அருளினபடியே இராமபிரானுக்கு பட்டாபிஷேகம் முடிந்த பின்னர்  நாமக்கல்லில் ஆஞ்சனேயர் ஸ்தாபிதமானார்...
http://files.namakkaltemple.webnode.com/200000007-7026d7120d/namakkal-anjaneyar-gold.jpg

http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a6/Namakkal_Anjaneyar.jpg http://3.bp.blogspot.com/-PM158VidF4A/Tlklk8QWbLI/AAAAAAAAjrc/QmAgRTrrKkQ/s640/namakkal+vennai+saraboji.jpg
http://www.hindu.com/2009/11/22/images/2009112252380601.jpg
பதினெட்டு அடி உயரம் உள்ளவராக- கூப்பிய கரங்களுடன் சேவை சாதிக்கும் ஆஞ்சனேயர் மிகவும் வரப்பிரசாதி ....

நவகிரகங்களில் கடுமையான விளைவுகளைக் கொடுக்கும் சனியும் ராகுவும் ஒருமுறை அனுமனிடம் தோற்றுப் போனார்கள். 


இதனால் ராகு, சனியால் இடையூறு ஏற்படும் பக்தர்கள் நாமக்கல் ஆஞ்சனேயருக்கு நல்லெண்ணெயில் சுட்ட உளுந்து வடை மாலை சாற்றி வழிபட்டு தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள்.
http://1.bp.blogspot.com/-U5Db7QVNp8w/T1n0U9YlvYI/AAAAAAAAGNA/bjJOmOVyycs/s1600/Nm111211+002.JPG
 ஆஞ்சனேயரின் சந்நிதிக்கு நேர் எதிராக, சுமார் 200 அடிக்கு அப்பால் குடைவரைக் கோவிலில் நரசிங்கப் பெருமாள் வலது காலை தரையில் ஊன்றி, இடது காலை மடிமீது வைத்து இரணியனைக் கிடத்தி, தனது கூரான நகங்களால் கீறிப் பிளப்பதைப் பார்க்கவே அச்சமாக இருக்கும். அற்புதமான வடிவமைப்பு. 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPdIxgQqbw1pudu_X_4kc-R3nYSYL-eg8gDIDpzsUNpAaGLQSNiVoR5OPHdEDno2QdpbUNe1IeBeuRxNci7vNlbpqojpkOyxHcoKUlif03ozorwhKaRnuED2pJeFRMXTzHeFj2dmAN-411/s1600/narasim.jpg
 குடைவரையில் நரசிம்மரைச் சுற்றி பூஜக முனிவர்களான சநக, சநந்தனர்கள், சூரிய, சந்திரர் சுவரி வீச, வலப்புறம் ஈஸ்வரனும் இடதுபுறம் பிரம்மாவும் வழிபடுகிறார்கள். 

கூர்மையான நகங்களில் ரத்தக்கறையுடன் உக்கிரமாகக் காட்சியளிக்கிறார். குடைவரையில் வலது பக்கத்தில் வாமனாவதாரமும், இடதுபுறத்தில் வைகுண்ட நாராயணனும் செதுக்கப்பட் டுள்ளனர்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVOHx134VmRwCxrZxHt56slSMsgW6bC-UAyKjuJZJGpp3JlTi5dzRIRFYlAJH88gSvV-VT235kZwnUNcTe_xRiY49laxev-YE5ruzm9Y4l74XLKVA4qe0dageYWMe5TQca6YLQbn6q62g/s1600/Namakkal_NarasimhaTemple+%25282%2529.JPG
பில்லி, சூன்யம், ஏவல் போன்றவை இத்தலத்திற்கு வந்தாலே விலகிப் போய்விடுகிறது 
கமலாலயக் கரையில் தவம் செய்து திருமாலை அடைந்த நாமகிரி லட்சுமித் தாயாரின் அமைப்பும் தெய்வீக முகப் பொலிவும்  பரவசப்படுத்தி நெகிழ வைக்கிறது....
 தாயாரின் சந்நிதியில் வந்து நேர்ந்து கொண்டவர்களின் கனவில் தோன்றி, நேர்ந்து கொண்டவை அனைத்தையும் நிறைவேற்றி அருள்பாலிக்கிறார் என்று கூறுகிறார்கள்.

"கணித மேதை இராமானுஜத்தின் கனவில் தோன்றி கடினமான கணக்குகளைத்  தெளிவு படுத்தியவர் நாமகிரித் தாயார்'

மார்கழி அமாவாசை யன்று ஆஞ்சனேய ஜெயந்தி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பௌர்ணமியன்று நாமக்கல் குன்ற கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது...
 http://www.behindindia.com/india-news-stories/nov-09-02/images/namakkal-12-11-09.jpg
 http://www.namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/l3.jpg
 http://s3.amazonaws.com/readers/2010/12/03/namakkal-2_1.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhcEpuI87CbXav8kZUGV0mdQXtqWYQeMkwfvt93sSIDiC7b1dY4VexAKWGNLT5-PM1ewzlh5Dj-NyZt5nLouWuCLxpdyYH96cKxpGcTsprvoUZ42yJU-zkLwu84Vdu6TPPoetEniyGiVRkq/s1600/Namakkal+-+Narasimha+Swamy+Temple+(10).jpg
 http://www.ghumakkar.com/wp-content/uploads/2010/10/DSC00630-500x375.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDvQ7rq-WyJk53CViupltt1EYI-L5diNYkN1Tr0FAP9TOka0Qo5FgNc48qGBX5p9PSTe0VKE1HcZs3nhe8MW8-vnROW4y48-sI65HlqOsv4k2JnhznDSh-ItfxxT9y1EiKp56jDhqFleY/s320/Namakkal.gif

20 comments:

  1. ஆஹா! நாமக்கல்லா?

    எனக்கு மிகவும் பிடித்தவர்கள் படித்த கல்வி மாவட்டச் செய்திகள் அல்லவோ!

    வருவேன் மீண்டும்.......

    எப்போது ? I don't know !!

    ReplyDelete
  2. "நலமனைத்தும் அருளும் நாமகிரித்தாயார் !"

    தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் தங்கத் தலைவியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ;)))))

    ReplyDelete

  3. நாமகிரித்தாயாருடன் இலவச இணைப்பாக நரசிம்ஹ பெருமாள் + ஹனுமார் !
    அடடா ....

    ஆடி முடிந்து இன்று ஆவணி பிறந்தும் .... ஆடித்தள்ளுபடி போல தொடர்ந்து நிறைய விஷயங்கள அள்ளித்தந்து எங்களை ஆடிப்போக வைக்கிறீர்கள் !!

    வெள்ளிக்கிழமை + நிறைந்த அமாவாஸை நாளில் அற்புதமான தரிஸனங்கள்.

    ReplyDelete
  4. //நரசிம்மரின் சாளக்கிராம குன்றைத் தூக்கி வந்த அனுமன், மாலைப் பொழுதானதால் நாமக்கல் கமலாலயம் அருகில் வைத்துவிட்டு, அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு மீண்டும் சாளக்கிராமக் குன்றினை எடுக்க முயல, அது முடியாமல் போனது.//

    அடடா! ஹனுமனாலேயே முடியாமல் போனது என்றால் அது தெய்வ சங்கல்ப்பம் தான்.

    ஸ்ரீரங்கம் பெருமாளை விபீஷணன் தூக்கிக்கொண்டு இலங்கைக்குப் போகும் வழியில், எங்கள் திருச்சி உச்சிப்பிள்ளையார் பிரும்மச்சாரி வடிவத்துடன், விபீஷணன் முன்பு தோன்றி, விபீஷணருக்கு சரீர உபாதைகளை ஏற்படுத்தி, காவிரி நதியில் குளிக்கச்செய்து, விபீஷணர் வந்து அந்த பெருமாள் விக்ரஹத்தை வாங்கிக்கொள்வதற்குள் அதை அப்படியே கீழே வைத்து விட்டுச் சென்றதால், இன்றுள்ள ஸ்ரீரங்கம் பெருமாள் இங்கு திருச்சி காவிரிக் கரையிலேயே தங்கும்படியாகி விட்டது என்பார்கள்.

    அதே கதை போல உள்ளது இந்தக் கதையும். ;)

    ReplyDelete
  5. நாமக்கல் ஆஞ்சநேயரை பலமுறை நேரில் சென்று தரிஸித்தும், தங்களின் படங்களில் பார்த்து மகிழும் போது ஏற்படும் பரவஸம் .... அதை எனக்குச் சொல்லத்தெரியவில்லை.

    எனக்கே வால் முளைத்து நானே ஹனுமனாக மாறி விட்டது போல ஓர் குஷி ஏற்பட்டு தாவித்தாவி மகிழணும் போல ஓர் ஆவல் ஏற்படுகிறது.

    [குரங்கிலிருந்து பிறந்தவன் .... மனிதன் ........

    என்று பாடலே உள்ளதே, இதில் என்ன வியப்பு என்கிறீர்களா?

    என்ன இருந்தாலும் அவர்கள் நம் முன்னோர்கள். நாம் அவர்களின் வழித்தோன்றல்கள் அல்லவா! அதனால் தானோ என்னவோ? ;)]

    ReplyDelete
  6. //"கணித மேதை இராமானுஜத்தின் கனவில் தோன்றி கடினமான கணக்குகளைத் தெளிவு படுத்தியவர் நாமகிரித் தாயார்'//

    ;)))))

    தகவல் களஞ்சியம் வாழ்க வாழ்கவே!

    கணிதமேதை இராமானுஜம், கணிதம் போலவே எனக்கு மிகவும் பிடித்தவர்.

    ReplyDelete
  7. //கமலாலயக் கரையில் தவம் செய்து திருமாலை அடைந்த நாமகிரி லட்சுமித் தாயாரின் அமைப்பும் தெய்வீக முகப் பொலிவும் பரவசப்படுத்தி நெகிழ வைக்கிறது....//

    இந்தத்தங்களின் தெய்வீகப் பதிவிலும், அதே முகப்பொலிவு பளிச்செனத் தெரிகிறது. எங்களையும் பரவசப்படுத்தி நெகிழவும் + மகிழவும் வைக்கிறது.

    ஜோர் ஜோர் தான். ;)))))

    ReplyDelete
  8. மிக அருமையான படங்கள் மற்றும் தகவல்...நன்றி....

    ReplyDelete
  9. //தனது கூரான நகங்களால் கீறிப் பிளப்பதைப் பார்க்கவே அச்சமாக இருக்கும். //

    ஆண்கள் அவசரக்குடுக்கைகள் + கோபிஷ்டர்கள் + பிறரை வதைப்பவர்கள் என்பதைக் காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது ஏனோ இந்த நரசிம்ஹ அவதாரம் மட்டும்.

    பகவானாகிய அவர் மட்டும் ஒரு க்ஷணம் நினைத்து அனுக்கிரஹம் செய்திருந்தால், பக்தப் பிரகலாதனாகிய சிறுவனின் த்ந்தையை அவன் கண்முன்னாலேயே இதுபோல கோரமாகக் கொலை செய்திருக்க வேண்டாமே எனத்தோன்றும் .... எனக்கு.

    பெண் வடிவமாகிய தாயார் எப்போதும் சாந்த ஸ்வரூபியாக உள்ளார்கள். தாங்கள் காட்டியுள்ள படங்களிலும் அதுபோலவே.

    தாயாரின் தனிப்படங்கள் எல்லாமே சூப்பர் !

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    வாழ்த்துகள். நன்றிகள்.

    அப்பாடா..... இன்று எப்படியோ குறுக்கீடு ஏதும் அதிகம் இல்லாமல் அடுத்தடுத்து பின்னூட்டம் இடமுடிந்ததே!

    அதுவே அந்த நாமகிரித்தாயாரின் கருணையோடு கூடிய அருள் தான்.

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  10. ஒரு தெய்வீகத்த‌ள‌மாக் திக‌ழ்கிற‌து
    உங்க‌ளின் வ‌லைத்த‌ள‌ம்.
    அரிய‌ ப‌ட‌ங்க‌ளும், புதிய‌ செய்திக‌ளும்
    நிறைவாய் இருக்கிற‌து.

    வைகோ சார், ருத்திர‌ காளியின் த‌ரிச‌ன‌ம் க‌ண்டிருக்கிறீர்க‌ளா?

    ReplyDelete
  11. வழக்கம் போல் பதிவு அருமை சகோதரி...

    உங்கள் பதிவு dashboard -ல் உடனே வந்தாலும் திரு. VGK ஐயா அவர்களின் கருத்துரை பிறகு, படிக்க எனக்கு விருப்பம்... அவர் ரசிப்பதை, தகவல்களை சொல்வதை, எழுத்து நடையை என... பலவற்றை நான் தெரிந்து கொள்வேன்... (சில சமயம் மின்சாரம் போய் விட்டால் கருத்து சொல்லி விட்டு, பிறகு வந்து பார்ப்பேன்...)

    ReplyDelete
  12. //vasan said...

    வைகோ சார், ருத்திர‌ காளியின் த‌ரிச‌ன‌ம் க‌ண்டிருக்கிறீர்க‌ளா?//

    யாரிடமிருந்தாவது இதுபோல ஓர் கேள்வி வரும் என நான் மிகவும் எதிர்பார்த்திருந்தேன்.

    எப்படியோ என் ஆருயிர் நண்பராகிய தங்களிடமிருந்தே கேள்வி பிறந்து விட்டது. மிக்க மகிழ்ச்சி, சார்.

    ருத்திர காளியுடன் எனக்கு எப்போதுமே மிகவும் பரிச்சயம் உண்டு, வாசன் சார்.

    சாந்த ஸ்வரூபியான அம்பாள்கள் எப்போது வேண்டுமானாலும் ருத்ர காளியாக மாறி விடுவார்கள் தான்.

    அதைப்பற்றி உங்களுக்கு மட்டும் வழக்கம்போல மெயில் மூலம் பிறகு சொல்வேன்.

    நவராத்திரி சமயம் கடைசி நாளன்று மஹிஷாசுரமர்த்தினி என்று ஓர் அலங்காரம் நடக்கும்.

    அதுவும் இதுபோலவே தான்.

    நமது அன்றாட வாழ்வியலைப் பிரதிபலிப்பதே இதன் தத்துவமாக இருக்கும்.

    பிறகு ஒரு நாள் இதைப்பற்றி நாம் மெயில் மூலமோ / சாட் மூலமோ பேசுவோம்.

    இப்போது எஸ்கேப்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  13. திண்டுக்கல் தனபாலன் said...

    //உங்கள் பதிவு dashboard -ல் உடனே வந்தாலும் திரு. VGK ஐயா அவர்களின் கருத்துரை பிறகு, படிக்க எனக்கு விருப்பம்... அவர் ரசிப்பதை, தகவல்களை சொல்வதை, எழுத்து நடையை என... பலவற்றை நான் தெரிந்து கொள்வேன்... (சில சமயம் மின்சாரம் போய் விட்டால் கருத்து சொல்லி விட்டு, பிறகு வந்து பார்ப்பேன்...)//

    அடடா, தாங்களும் கூடவா இப்படி நண்பரே!

    ஏற்கனவே ஓர் ஏழெட்டு பேர்கள் இந்தப்பட்டியலில் உள்ளனர்.

    உங்கள் அனைவரையுமே திருப்திப் படுத்த வேண்டிய கூடுதல் பொறுப்பினில் அல்லவா, நான் இப்போது உள்ளேன்!!!!

    Anyhow .... மகிழ்ச்சி, நன்றி !

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  14. ஆஞ்சநேயரை நேரில் பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் படத்தைப் பார்த்தபோதும்,பதிவைப் படித்தபோதும்.

    ReplyDelete
  15. நாமக்கல் ஆஞ்ச நேயர் தரிசனம் அடிக்கடி கிடைக்கப்பெற்றுள்ளேன். விளக்கம் இன்று தெரிந்து கொண்டேன் நனறி

    ReplyDelete
  16. பல தகவல்கள் பெற்றுக்கொண்டேன்ன்.. ஆச்சரியமாக இருக்கு.

    ReplyDelete
  17. நிறைய தகவல்கள்! தவறாமல் அனைவரும் கண்டு மெய்சிலிர்க்க வேண்டிய தளம்!

    ReplyDelete
  18. மிகவும் சிறப்புமிக்க ஆலயங்கள் வரிசையில் உள்ள இரு ஆலயத் தகவல்களினை அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி! எமது வாழ்வில் மாபெரும் மாற்றங்களை நல்கிய எம்பெருமானின் சிறப்புக்களை அளவிட இயலாது! அவ்வாறான ஆலயங்களில், இத்தலத்து நரசிம்மர் ஆலய தரிசனம் , எம் தாண்டவராயரான அனுமனை தரிசித்து, யாம் பெற்ற மாற்றங்கள் பலப்பல. நேரம் கிடைக்கும் தருணத்தில், இவ்வாலயங்கள் பற்றிய தகவலையும் எமது பதிவில் வெளியிடுகின்றேன்.

    கண் முன்னே, மீண்டும் தரிசித்த நினைவுகள் கொண்டுவந்தன அழகிய படங்களும், பதிவில் உள்ள உண்மைகளும்! சிறப்பான பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. நாமக்கல் சென்று பல முறை ஆஞ்சநேயரை அகமகிழ தரிசனம் செய்துள்ளேன். இவ்வளவு விரிவான ஒரு கதை அவர் அங்கு எழுந்தருளியதன் பின்னணியில் இருப்பது இப்போதுதான் தெரியும் ஆஞ்சநேயரும், நரசிம்மரும் நேரில் அருள் பாலிப்பதைப்‌ போன்ற ஒரு உணர்வைத் தந்தன நீங்கள் வைத்திருக்கும் புகைப்படங்கள். வெகு ஜோர்!

    ReplyDelete
  20. 3986+10+1=3997

    திரு. வாசன் சார் + திரு திண்டுக்கல் சார் இருவரும் ஏதேதோ சொல்லியுள்ளனர். ஆனால் சொல்ல வேண்டியவர்கள் கம்ம்ம்முனு ;(

    ReplyDelete