Thursday, August 23, 2012

சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர்

மானஸ ஸஞ்சரரே  - ப்ரஹ்மணி மானஸ ஸஞ்சரரே 

மனமே சஞ்சரிப்பாய்! - பிரம்மத்தில் மனமே சஞ்சரிப்பாய்! 
உன் பயணம் தொடங்கட்டும்.

மதசிகி பின்ச்சாலங்க்ருதசிகுரே மஹனீய கபோல விஜிதமுகுரே

மஞ்ஞையின் தோகை விளங்கிடும் திருமுடி 
பிஞ்ஞகன் கன்னமோ விளங்கிடும் ஒளிகூடி 

உன்னால் தியானிக்கப்பட்ட பிரம்மத்தின் சடாமுடி, மகிழ்ச்சி பொங்கும் மயில் தோகையால் அலங்கரிக்கப்படட்டும்.  
அனைத்தினும் உயர்ந்தவனுடைய கன்னங்கள்,
 கண்ணாடிகளிலும் அதிகமாகப் பிரகாசிக்கட்டும். 

ஸ்ரீரமணீ குச துர்க விஹாரே சேவக ஜன மந்திர மந்தாரே 
திருமகள் தனமெனும் மதிலுக்குள் அலைபவன்
 அடியவர் வேண்டுதல் தருவதில் தருவவன்

மஹாலக்ஷ்மியோடு கூடியவனாக அவன் விளங்குகிறான்.  
பக்தர்களுக்கு, முற்றத்தில் விளங்கும் கற்பகத் தருவாக நிற்கிறான். 

பரமஹம்ஸ முக ந்த்ரசகோரே பரிபூரித முரளீரவதாரே 

பரமஹம்சர் முகம் பருகிடும் பறவையன் 
உலகினில் பரவிடும் குழலினின் இசையவன் 

பரமஹம்சர்கள், அவன் முகமாகிய நிலவு சிந்தும் 
ஒளியைப் பருகும் சந்த்ர சகோரப் பறவையாக விளங்குகிறார்கள்.  

இந்தப் பேரண்டத்தைத் தன் புல்லாங்குழலின் இனிமையினால் நிறைக்கும் இந்த பிரம்மத்தினுள் மனமே!  உன் பயணம் தொடங்கட்டும்.   

தனிமையில் இயற்கைச் சூழலில் பாட்டின் ஒவ்வொரு சொல்லாகக் கவனித்துக் கேட்டால் ஒரு மாபெரும் தியானம் கைகூடுவதைக் காணலாம்.... சங்கராபரணம் படத்திலும் வரும்  மனம் கவர்ந்த அற்புதப் பாடல் இது...

எப்போதும் பிரம்மத் தியானத்திலேயே இருந்த அவதூதராக விளங்கிய சத்குரு சதாசிவ பிரம்மேந்திரர் 'மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாய்' என்று பிரம்மம் என்ற பொதுப்பெயராலேயே இறைவனை  குறித்தாலும் 
'மயிற்பீலி அணிந்தவன், திருமகள் கேள்வன், குழலை இசைப்பவன்'
என்று இறைவனின் அடையாளங்களைக் கூறிவிடுகிறார். 

அத்வைத மஹாஞானியான சதாசிவ பிரம்மேந்திரர் பிரம்மம் எனில் யார் என்பதை மிகத் தெளிவாக பாட்டில் கூறுகிறார்.

சதாசிவ பிரம்மேந்திரர்  இந்தக் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே பகவானை அடையும் வழி என்று வலியுறுத்தியதோடு அல்லாமல் அதற்கேற்ற கீர்த்தனைகளையும் இயற்றியவர்.

மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம்,  ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் சதாசிவ பிரம்மம் எழுதியிருக்கிறார்.

ப்ரம்மேந்திராள் இயற்றிய சாஸ்திரங்களும் கீர்த்தனங்களில் சர்வம் ப்ரம்ம மயம் என்று பாடுவார். 

ப்ரம்மேந்திரரின் சரித்திரத்தை கேட்டாலும் கீர்த்தனங்களை கேட்டு அதன் பொருள்படி நடந்தாலும் கட்டாயம் மெய்ப்பொருளை அடைந்துவிடலாம் என்பது நம்பிக்கை ! 

ஸ்ரீ சத்குரு சதா சிவப்பிரமேந்திராள் மஹா சந்நதி குடமுழுக்கு கண்டு புதுபொலிவுடன் காட்சி தருகிறது. 

காசி விஸ்வநாதர்  அருள்பாலிக்கும் கருவறையை சுற்றி வரும் பொழுது அதன் நேர் பின்பக்கம் அமைந்துள்ள  சதாசிவ பிரமேந்திரரர்  அவர்களின் ஜீவசமாதி தனிச்சிறப்புமிக்கது..

சதாசிவ பிரம்மம்  தனது சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா,மைசூர் மகாராஜா,, தஞ்சாவூர் மகாராஜா ஆகியோரை அழைத்து  குகையமைத்து தான் உட்கார்ந்ததும் சாமகிரியைகளால் மறைத்து விட்டு,."விபூதி,உப்பு,மஞ்சள் தூள்,செங்கற்பொடி போட்டு மூடிவிட்ட ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும் .
பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து சிவலிங்கம் வரும்.
அதை 12  அடிக்கு கிழபுரம் வைத்து கோயில் கட்டுங்கள் .
வளரும் வில்வ விருட்சத்திற்கு எந்த மறைப்பும் வேண்டாம் .
மேடை போட்டு விடுங்கள் "என்று அருளிபடியே செய்தனர். 
அவர் சொன்னபடி ஒன்பதாம் நாள் வில்வ மரம் தோன்றியது .
இன்றும் நாம் வழிபடும் வில்வ விருட்சம் ..
 பன்னிரெண்டாம் நாள் அவர் சொன்னபடி காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி ஒரு சிவலிங்கம் கொண்டு வந்தார் 
12  அடிக்கு கீழ்புறம் அதை வைத்து கோயில் கட்டினர்.
மகரிஷிகளின் சமாதி மீதே  கோயில் கட்டுவது வழக்கம் .நெரூரீல் மட்டுமே சமாதிக்கு 12  அடிக்கு கீழ்புறம் சிவலிங்கத்தை வைத்து கோயில் கட்டப்பட்டுள்ளது .
இங்கு துவாதசாந்த பெருவெளியில் சதாசிவ பிரம்மம் எழுந்தருளியிருக்கிறார்.
துவாதசம் எனில் 12  அங்குலம் .அங்குலத்தை அடியாக கொண்டு சிவலிங்கத்தை அமைத்துள்ளனர் .
ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் சதாசிவ பிரம்மேந்திரர், 1753-ம் ஆண்டில் சித்திரை மாதத்து தசமி திதி அன்று, கரூரை அடுத்த நெரூரில், ஜீவ சமாதி ஆனார்.
இறைவனின் சித்தம் நம் பெரும் பாகியம் .. காவிரி கரையோரம் வயல் வெளிகளுக்கு நடுவில் அமைந்து தொன்மையும் பெருஞ்சிறப்பும் பெற்று திகழ்கிறது..

நெரூரில் சமாதி அடைந்த அதே சமயத்தில் மானாமதுரை, கராச்சி போன்ற ஊர்களிலும் சமாதி அடைந்ததாய்ச் சொல்லப் படுகிறது.

ஒவ்வொரு வருஷமும் நெரூரில் வைகாசி சுத்தபஞ்சமி அன்று தொடங்கி
சுத்த தசமி வரை தொடர்ந்து வைதீக முறையில் உற்சவம், ஆராதனைகள் நடைபெறும்.

முக்கிய ஆராதனை அன்று நாமசங்கீர்த்தனம் தொடர்ந்து ஒலிக்க, பக்தர்களுக்கு அன்னதானமும், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்களின் அங்கப் பிரதக்ஷிணமும் நடைபெறும்.

நாம சங்கீர்த்தனம் என்றாலே சதாசிவ பிரம்மேந்திரர்தான் நினைவில் வருவார். அவர் இன்னமும் ஜீவசமாதியில் இருந்து கொண்டு நாமசங்கீர்த்தனம் செய்து வருவதாய்  அதிஷ்டானம் சென்று வந்தவர்கள் அதன் சாந்நித்தியத்தின் மூலம் உணர்கிறார்கள்..

http://jaghamani.blogspot.in/2011/05/blog-post_1007.html
மகான் சதாசிவ பிரம்மேந்திரர்

18 comments:

 1. மஹான் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திரருக்கு அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

  குருவருள் கிடைத்த பிறகு
  மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 2. இறைவனை அடைய சங்கீதம் எளிய வழி --இதை உண்ர்த்தியவ்ர் "சதாசிவ பிரம்மேந்திரர்"

  ReplyDelete
 3. இந்த தலத்தை தரிசிக்கும் பாக்கியம் என் நண்பர் ஒருவரினால் கிடைத்தது. கரூரிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

  ReplyDelete
 4. வழக்கம் போல் அருமையான பதிவு! படங்கள் அருமை!

  ReplyDelete
 5. மஹான் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திரா பணிந்து வணங்கி நிற்கின்றோம்.

  ReplyDelete
 6. மகான் ஸ்த்குரு சதாசிவம் அவர்கள் நினைத்தால் எங்கும் சாமாதி ஆகலாம்.நெரூரில். மானாமதுரை, கராச்சி ஆகிய் இடங்களிலும் சமாதி இருக்கலாம். அப்பேர்பட்ட மகான் அவர்.
  நாமசங்கீர்த்தனம் தான் இறைவனை எளிதாக அடையும் வழி என்று அவர் சொன்னது இந்த கலியுகத்தில் மிகவும் உண்மை என்று மக்கள் உணர்கிறார்கள்.

  பகிர்வுக்கும் படங்களுக்கும் மிகவும் நன்றி.

  ReplyDelete
 7. கரூரில் வசித்த நாட்களில் நெரூர் சென்றது நினைவு வருகிறது.

  ReplyDelete
 8. மிக அருமையான பகிர்வு.. நன்றி..

  ReplyDelete
 9. உலகத்து மக்களிடையே இறை பால் மனதைத் திருப்பும் வகையில்
  நாத வழியே பிரும்மத்தின்பால் மனதை நிறுத்தும் வகையில்
  சத்குரு சதாசிவ ப்ரம்மேந்திரர் வாழ்வும் இசையும் அமைந்திருந்தது வெள்ளிடை மலை.
  மானஸ சஞ்சரரே என்னும் பாடலை சாமா ராகத்தில் பாடிப் பாடி உருகி உருகி மெய் மறந்து
  நிற்கும் சதாசிவ ப்ரமேந்திரர் பக்தர்கள் பரவசமாகும் வலைத் தளமாக இன்று தங்கள்
  இடுகை அமைந்ததே நம் எல்லோருடைய பாக்யமே.

  நானும் 1992 ல் ஒரு தடவை எங்கள் கரூர் கிளைக்குச் சென்றபொழுது சத்குருவின் நினைவகக்கோவிலுக்குச் சென்றது
  இன்னும் நினைவில் உள்ளது.

  இந்தப் பாடலின் மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. அதே ராகத்தில் அதே மெட்டில்
  மிகவும் நன்றாக இருக்கிறது.

  நானும் பாடி மகிழ்வேன்.

  சத்குரு சதாசிவ ப்ரம்மேந்திர மஹாராஜ் கி ஜெய்.

  சுப்பு ரத்தினம்.
  http://pureaanmeekam.blogspot.com

  ReplyDelete
 10. மனம் நிறைந்தது.

  ஸ்ரீ சத்குரு சதாசிவ ப்ரம்மேந்திராளின் நெகிழ வைக்கும் கீர்த்தனை. எத்தனை தடவை பாடிப் பாடி மகிழ்ந்தாலும் இன்னும் இன்னும் என்று நெக்குருகி பாடி நெகிழ வைக்கும் கீர்த்தனை.

  முதலில் ஸ்ரீ சத்குருவின் நாத கான காந்த வரிகள்....

  அடுத்து கவிதை வடிவில் உங்களின் அழகான வரிக் கோலங்கள்..

  அதற்கடுத்து அற்புத மொழிபெயர்ப்பாய்
  வசன வரிகள்..

  முழுப் பாடலுக்கும் இப்படியான மொழியாக்கம் இல்லை என்கிற குறை
  இது வரை இருந்திருந்தது. தங்களின்
  ஆழ்ந்து தோய்ந்த உணர்வால் அதுவும் நீங்கியது.

  எனது 'பார்வை' தொடரில் ஸ்ரீ ப்ரமேந்திராளின் இந்த சொக்க வைக்கும் கான வரிகள் வரும் இடம்
  நினைவில் தட்டுப்பட்டு மனம் மருகி நின்றது. அடுத்த கணமே ஒரு நிறைவு.

  ரொம்ப ரொம்ப நன்றி, ராஜி மேடம்.

  ReplyDelete
 11. //மானஸ ஸஞ்சரரே; ப்ரஹ்மணி மானஸ ஸஞ்சரரே //

  அருமையான பாடலுடன் கூடிய துவக்கம் .... சூப்பர்.

  //சங்கராபரணம் படத்திலும் வரும் மனம் கவர்ந்த அற்புதப் பாடல் இது...//

  சங்கராபரணம் எவ்வளவு ஓர் அழகான படம். தெலுங்கு தெரியாத எந்த மொழி பேசுபவர்களுக்கும் நன்கு புரியும் படியாக எடுக்கப்பட்ட அற்புதமானதோர் படமல்லவா!

  இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது. படத்தினில் வரும் ஒரேயொரு சிறிய காதல் காட்சியைக்கூட கொஞ்சமும் விரசமில்லாமல் வெகு அழகாக விளக்கியிருப்பார்கள்.

  கோயில் மணியொன்று நாதத்துடன் படிக்கட்டுக்களில் உருண்டு விழுவது போன்ற அந்தக்காட்சியே பலவிஷயங்களைப் புரிய வைக்கும்.

  நான் மிகவும் ரஸித்துப்பார்த்து வியந்து போன படம் அது.

  நினைவூட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.

  ReplyDelete
 12. //முக்கிய ஆராதனை அன்று நாமசங்கீர்த்தனம் தொடர்ந்து ஒலிக்க, பக்தர்களுக்கு அன்னதானமும், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்களின் அங்கப் பிரதக்ஷிணமும் நடைபெறும்.//

  ஆம் ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக இதுபோல இப்போதும் நடைபெற்று வருகிறது.

  ReplyDelete
 13. அழகான் படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு.

  சென்ற ஆண்டு வெளியிடப் பட்ட பதிவினை மீண்டும் படித்துப்பார்த்தேன்.

  சந்தோஷமாக இருந்தது.

  ReplyDelete
 14. படங்களும் பதிவும் வழக்கம்போல் அருமை.

  இந்த மஹானைப்பற்றி பல மிகவும் சுவாரஸ்யமான செய்திகள் சொல்லுகிறார்கள்.

  மிகப்பெரிய தெய்வீக சக்திகள் கொண்டுள்ளவராகவே இருந்துள்ளார்.

  பல்வேறு அற்புதங்களும் [Miracles] இவர் வாழ்க்கையில் நடந்துள்ளன.

  பாராட்டுககள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

  ReplyDelete
 15. அறியாத தகவல் அற்புத புதையல் ........
  கைகொல்கிறேன் நான் ....நன்றி தோழி

  ReplyDelete
 16. சிறப்பான பகிர்வு அம்மா...

  பல தகவல்கள் அறியாதவை...

  அனைத்தும் (கருத்துக்களையும்) அறிந்து கொண்டேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

  என் தளத்தில் : கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!

  ReplyDelete
 17. சிறப்பான பகிர்வு! இவ்வாலயத்திற்கு மூன்றுமுறை சென்று வந்துள்ளேன்! சிறப்பாக பராமரிக்கப்படுகிறது! நன்றி!

  இன்று என் தளத்தில்
  அஷ்டமி நாயகன் பைரவர்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

  ReplyDelete