Tuesday, August 9, 2011

கலாசாரத்துக்கு ஒரு "கடம்பவனம்"!

[valaiyalvitraleelai.jpg]

[baananukkuangamvettiyaleelai.jpg]
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட ஈசனின் திருவிளையாடல்
[puttukku-mann-sumandha-leelai.jpg]

Meenakshi Temple
தமிழர் பண்பாடும், கலாசாரமும் உலகம் போற்றும் உன்னதம் கொண்டவை. எனினும் இதன் பெருமை பற்றிய விழிப்புணர்வும் நம்மிடையே மெச்சும்படியாக இல்லை. 

அதேசமயம், வெளிநாட்டவர் நம் வரலாற்றுப் பாரம்பரியத்தையும், கலாசார அடையாளங்களையும் காண்பதற்காக தமிழகத்துக்கு ஆர்வத்துடன் வருவது அதிகரித்து வருகிறது.
இப்பாரம்பரிய பெருமையெல்லாம் நம் தலைமுறையுடன் முடிந்துவிடாமல் அவற்றைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கவும், அடுத்துவரும் தலைமுறையினரிடத்தில் எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டும் "கடம்பவனம்" எனும் பெயரில் "தமிழ்ப் பண்பாட்டுத் திருத்தலத்தை" ஏற்படுத்தி வெளிநாட்டவரிடம் தமிழ் மரபு, கலைகளைப் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரையைச் சேர்ந்த கட்டடக் கலைஞரான கணபதியும், நாட்டியக் கலைஞரான அவரது மனைவி சித்ராவும். 
Traditional Function
மதுரை நகரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்லும் சாலையில் உள்ள வேம்பரளியில் அமைந்துள்ளது இந்தக் கடம்பவனம். 

மறைமலை அடிகளின் கொள்ளுப் பேத்தியான சித்ரா, இந்தக் கடம்பவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். 

"தமிழர்களின் பாரம்பரியமும், கலாசாரமும் சில நூற்றாண்டுகளில் முடிவுற்ற ஒரு நிகழ்வல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த ஒரு பொக்கிஷம்". 

குறிப்பாக, மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமைக்குரியது. 

சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ந்த ஸ்தலம். 

மதுரைக்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் பலரும் அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், திருமலை நாயக்கர் மகால் என்று ஒரு சில இடங்களை மட்டும் சில மணி நேரங்களில் பொழுதுபோக்காகப் பார்த்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். 
[thirumalai-naicker-mahal.jpg]
நமது வரலாற்றுச் சின்னங்களும், பாரம்பரிய விஷயங்களும் சில மணி நேரங்களில் பார்த்து அறிந்துகொள்ளும் விஷயமா என்ன? 

அவற்றின் ஒவ்வொரு வடிவமைப்பிலும் பல தகவல்கள், நுணுக்கங்கள் பொதிந்துள்ளன. 

அவற்றை நாம் மட்டும் உய்த்து உணராமல் வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தக் கடம்பவனம்.

2009ம் ஆண்டில் சுமார் 8 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடம்பவனத்தில் 4 ஏக்கரில் பண்பாட்டு மையம் அமைந்துள்ளது. 

இந்த மையத்தில் 500 பேர் அமரக்கூடிய கோயில் வளாகம், சைவ உணவகத்துடன் கூடிய உணவுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

 புலால், மதுவுக்கு அனுமதியில்லை.

மாலை வேளையில் பரமபதம், பாண்டி, சொட்டாங்கல், பல்லாங்குழி போன்ற தமிழர்களுக்கு உரித்தான பாரம்பரிய விளையாட்டுகளில் சிறுவர்களை பங்கேற்கச் செய்து அதைச் சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

கட்டம் போட்டு நொண்டியடித்து விளையாடும் விளையாட்டைப் பார்க்கும் வெளிநாட்டினர், வெளிநாடுகளில் "ஹாப் - ஸ்காட்ச்" எனும் பெயரில் இதே போன்று விளையாடப்படுவதாகக் கூறுகின்றனர்
முக்கிய விழா நாள்களில் வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், பொங்கல் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. 

இதேபோன்று, கைரேகை ஜோதிடம், கிளி ஜோதிடம் பார்க்கவும், பாவைக் கூத்து ஆகியவற்றுக்காகவும் தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது. 

பிரத்யேக கோயில் வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. 

லைக்கூட அரங்கில் கர்நாடக சங்கீதம், பரதம் மற்றும் கும்மியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம், தேவராட்டம் போன்ற கிராமியக் கலைகளை திறம் வாய்ந்த கலைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்படுகிறது. 

இதற்காக மதுரையைச் சுற்றியுள்ள கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.. கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு உணவுக் கூடத்தில் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளான
 - அப்பம்
- வரகு
- தினைப் புட்டு
- இடியாப்பம்
- சாமை அடை
- கேழ்வரகுப் புட்டு
- கறிவேப்பிலை சாதம்
- முருங்கை சூப்
- கூட்டாஞ்சாறு

- சுக்குமல்லி காபி 


ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதுடன், அவற்றை உண்பதால் உடல் நலத்துக்கு எந்த வகையில் அவை உதவுகின்றன என்பதையும் எடுத்துரைக்கப்படுகிறது.

மாலை முதல் இரவு வரை நடைபெறும் இந்தச் சுற்றுலா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக உள்ளூர்வாசிகளுக்குக் கட்டணமாக (இரவு உணவுடன் சேர்த்து) நபருக்கு ரூ.325ம், வெளிநாட்டினருக்கு நபருக்கு ரூ.800ம் வசூலிக்கப்படுகிறது. 
இதுதவிர, சுற்றுலா கிராமம் எனும் பெயரில் 4 ஏக்கரில் தங்கும் வசதிகளுடன்கூடிய குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

விரும்பும் நாள்களுக்குத் தங்கியிருந்து மதுரை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு நேரில் சென்று பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. 
Jallikattu
நம்மிடம் உள்ள பாரம்பரிய, கலாசாரச் சின்னங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. 

ஆனால், அவை பற்றிய தகவல்கள் உரிய முறையில் பிற நாடுகளை இன்னும் சென்றடையவில்லை. அதற்கான சிறு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஏற்கெனவே, ஜெர்மன், லண்டனில் நடைபெற்ற சுற்றுலாக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளார்கள். 

தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்று கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

தற்போது எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கடம்பவனத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

 மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பள்ளி மாணவர்களை அழைத்து வந்து கடம்பவனம் பண்பாட்டு மையத்தில் வாழ்வியல் முகாம்களை நடத்தி வருகிறார்கள்.இதில், மாணவர்களுக்குத்

- தமிழர்களின் பாரம்பரியம்
- ஒழுக்கம் சார்ந்த வாழ்வியல் முறை
- விளையாட்டுகள்
- தமிழ்மொழிப் பயிற்சி
- நன்னெறிக் கதைகள்  

ஆகியவற்றைக் கற்றுத் தருகிறார்கள்.


உள்ளூர் வரலாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வினாடி - வினா போட்டிகளும் நடத்தப்படுகின்றன. 

விரும்பும் பள்ளிகள் அணுகினால் 

http://www.kadambavanam.in/ index.html )  இதுபோன்ற பயிற்சிகளை அளிக்கத் தேவையான உதவிகளைச் செய்கிறார்கள்.

51 comments:

 1. நல்ல விஷயம் செய்து வருகிறார்கள் . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. சுவாமியின் படம் (முதல் படம்)க்ளோஸ் அப்பில் நன்றாக முகம் தெரியுமளவு தெளிவாக இருக்கிறது.

  கோவிலையும் குளத்தையும் பார்த்த உடனே ஆ...நம் மதுரைக் கோவில் குளமா என்று பார்த்தேன்...ஆமாம்! நாயக்கர் மஹால் படமும் அருமை.

  அருமையான தகவல்கள், மற்றும் படங்கள்.

  ReplyDelete
 3. @எல் கே said...
  நல்ல விஷயம் செய்து வருகிறார்கள் . பகிர்வுக்கு நன்றி//

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 4. @ஸ்ரீராம். said...
  சுவாமியின் படம் (முதல் படம்)க்ளோஸ் அப்பில் நன்றாக முகம் தெரியுமளவு தெளிவாக இருக்கிறது.

  கோவிலையும் குளத்தையும் பார்த்த உடனே ஆ...நம் மதுரைக் கோவில் குளமா என்று பார்த்தேன்...ஆமாம்! நாயக்கர் மஹால் படமும் அருமை.

  அருமையான தகவல்கள், மற்றும் படங்கள்.//


  அருமையான கருத்துரைகளுக்கு நன்றி.

  ReplyDelete
 5. உங்கள் தகவல்களை வைத்து ஒரு ஆன்மீக புத்தகம் போடலாம் ...

  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 6. கலை நிகழ்ச்சிகளுக்குப் பிறகு உணவுக் கூடத்தில் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளான
  - அப்பம்
  - வரகு
  - தினைப் புட்டு
  - இடியாப்பம்
  - சாமை அடை
  - கேழ்வரகுப் புட்டு
  - கறிவேப்பிலை சாதம்
  - முருங்கை சூப்
  - கூட்டாஞ்சாறு- சுக்குமல்லி காபி


  ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதுடன், அவற்றை உண்பதால் உடல் நலத்துக்கு எந்த வகையில் அவை உதவுகின்றன என்பதையும் எடுத்துரைக்கப்படுகிறது.


  ....Super!!!!

  ReplyDelete
 7. இந்த பதிவில் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டோம். தொடர்ந்து அசத்துங்க...

  ReplyDelete
 8. தமிழர் பாரம்பரியத்தை காக்கும் சேவை சிறக்கட்டும் ...

  ReplyDelete
 9. பதிவு நல்லாருக்கு.ஆனா,இன்றைக்கு உங்க பதிவில் ஃபாண்ட் நார்மலா இல்லையே!

  ReplyDelete
 10. "கடம்பவனம்"! பற்றிய கலை, கலாச்சார, பாரம்பரிய பெருமைகளை அனைவருக்கும் எடுத்துச்சொல்லி உள்ள உங்கள் தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது.

  வழக்கம்போல் அழகிய படங்களும், அற்புதமான விளக்கங்களும் கொடுத்துள்ளீர்கள்.

  நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 11. எங்கள் ஊரிலிருக்கிறது என்று பேரு
  எல்லாம் நீங்கசொல்லித்தான்
  தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது
  இந்த மாதததிற்குள் போய் வர
  எண்ணியுள்ளேன்
  வழக்கம் போல படங்களும் பதிவும்
  மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. அட... அப்படியா? உண்மையிலேயே பயனுள்ள தகவல்கள்.

  ReplyDelete
 13. எழில் கொஞ்சும்
  பாரம்பரியம் மிக்க கடம்பவனம்
  அழகு

  ReplyDelete
 14. பக்தி பரவசடையும் பதிவு...

  அசத்தலான படங்கள்...

  ReplyDelete
 15. அருமையான பதிவு.
  நமது பதிவு மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. ஆன்மீக புத்தகம்-வழிமொழிகிறேன்

  ReplyDelete
 17. இவ்வளவு அழகான படங்கள் சேகரிப்பதும்,அழகான வார்த்தைகளில் தொகுப்பதும் இக கடினம் உங்களுக்கு சிறப்பாக வருகிறது

  ReplyDelete
 18. உங்களின் கலைவண்ணம் கணைகளுக்கு நல்ல விருந்தளிகிறது இதன் கமுக்கம் என்ன தெரிய வில்லை
  படங்கள்தான் சிறப்பு பாராட்டுகள்

  ReplyDelete
 19. தேர் வரும் பாதையும் பின்னால் மலையும் ஆஹா அசத்தல்... இது போன்ற தெளிவுடன் எளிதில் புரியும் வண்ணம் ஆன்மீக பதிவிடுவதில் தங்களுக்கு நிகர் தங்களே என நிருபித்துக்கொண்டே வருகிறீர்கள்... நன்றியுடன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. அருமையான தகவல்கள். நன்றி.

  ReplyDelete
 21. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  உங்கள் தகவல்களை வைத்து ஒரு ஆன்மீக புத்தகம் போடலாம் ...

  பகிர்வுக்கு நன்றி..//

  கருத்துரைக்கு நன்றி.
  புத்தகம் போட முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 22. @ Chitra said...//

  வாங்க சித்ரா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 23. @ koodal bala said...
  தமிழர் பாரம்பரியத்தை காக்கும் சேவை சிறக்கட்டும் ...//

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 24. @ FOOD said...
  பதிவு நல்லாருக்கு.ஆனா,இன்றைக்கு உங்க பதிவில் ஃபாண்ட் நார்மலா இல்லையே!//

  பயனுள்ளகருத்துரைக்கு நன்றி.

  நார்மலாக்கி விட்டேன்.

  ReplyDelete
 25. @ வை.கோபாலகிருஷ்ணன் said...
  "கடம்பவனம்"! பற்றிய கலை, கலாச்சார, பாரம்பரிய பெருமைகளை அனைவருக்கும் எடுத்துச்சொல்லி உள்ள உங்கள் தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது.

  வழக்கம்போல் அழகிய படங்களும், அற்புதமான விளக்கங்களும் கொடுத்துள்ளீர்கள்.

  நன்றி, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். vgk//
  அற்புதமான கருத்துரைகளுக்கும்,பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்ளுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 26. Ramani said...
  எங்கள் ஊரிலிருக்கிறது என்று பேரு
  எல்லாம் நீங்கசொல்லித்தான்
  தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது
  இந்த மாதததிற்குள் போய் வர
  எண்ணியுள்ளேன்
  வழக்கம் போல படங்களும் பதிவும்
  மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்//

  நன்றி ஐயா. சென்றுவந்து கவிதையாகப் பொழியுங்கள். காத்திருப்பொம்.

  ReplyDelete
 27. @!சாதாரணமானவள் said...
  அட... அப்படியா? உண்மையிலேயே பயனுள்ள தகவல்கள்.//

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 28. @ மகேந்திரன் said...
  எழில் கொஞ்சும்
  பாரம்பரியம் மிக்க கடம்பவனம்
  அழகு//
  அழகான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 29. @ # கவிதை வீதி # சௌந்தர் said...
  பக்தி பரவசடையும் பதிவு...

  அசத்தலான படங்கள்...//

  அசத்தலான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 30. @ ஆர்.கே.சதீஷ்குமார் said...
  இவ்வளவு அழகான படங்கள் சேகரிப்பதும்,அழகான வார்த்தைகளில் தொகுப்பதும் இக கடினம் உங்களுக்கு சிறப்பாக வருகிறது//

  சிறப்பான கருத்துரைக்கும், புத்தக வழிமொழிதலுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. @போளூர் தயாநிதி said...
  உங்களின் கலைவண்ணம் கணைகளுக்கு நல்ல விருந்தளிகிறது இதன் கமுக்கம் என்ன தெரிய வில்லை
  படங்கள்தான் சிறப்பு பாராட்டுகள்//

  அடுத்ததலைமுறைகளுக்கும், வெளிநாட்டுக்காரர்களுகும் நம் பாரம்பரிய உணவு, கலை கலச்சாரங்களை அறியப்படுத்துவதும் இதன் நோக்கம்.

  ReplyDelete
 32. @ மாய உலகம் said...
  தேர் வரும் பாதையும் பின்னால் மலையும் ஆஹா அசத்தல்... இது போன்ற தெளிவுடன் எளிதில் புரியும் வண்ணம் ஆன்மீக பதிவிடுவதில் தங்களுக்கு நிகர் தங்களே என நிருபித்துக்கொண்டே வருகிறீர்கள்... நன்றியுடன் வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 33. @DrPKandaswamyPhD said...
  அருமையான தகவல்கள். நன்றி.//

  அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 34. இராஜராஜேஸ்வரி...

  உங்கள் படைப்புகளுக்கு பதிப்புரிமை பெற்றுவிடுங்கள் இப்போதே...
  அத்தனையும் அருமை...

  ReplyDelete
 35. கடம்பவனத்தை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது,நன்று.

  ReplyDelete
 36. கடம்பவனம் நிச்சயம் கானவேண்டிட வனம்.உங்கள் புத்தகத்தை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 37. தவறாது போடும் பதிவு
  தங்கமென பொலியும் படம்
  எப்படி..எப்படி..?

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 38. படங்களும் பதிவும் அருமை

  அதிலும் முதல் படமே அருமையான தரிசனம் .

  தங்கள் தளம் வந்தாலே கோவில் சுற்றுலா செல்வது போல் உள்ளது நன்றி மேடம்

  ReplyDelete
 39. ராஜேஸ்வரி தினமும் உங்கள் பதிவுகளை பார்த்தாலே போதும் மனம் சோர்ந்து தளர்ந்து இனி வாழவே இஷ்டமில்லை என்று வெறுத்து இருக்கும் நிலை மாறி இறைத்தொண்டாய் தொடரும் உங்கள் பதிவுகளை படிக்கும்போதே மனம் லயித்துவிடுகிறது உங்கள் பகிர்வில் மனம் ஒன்றிவிடுகிறது இறைவனிடத்தில்...

  பிட்டுக்கு மண் சுமக்கும் ஈசனின் முகத்தில் மெல்லியக்கோடாய் புன்னகை மிக துல்லியமாக காண முடிகிறதுப்பா நீங்கள் பதித்த படத்தில்....

  இறைவன் என்றும் கேட்பதே இல்லை உன் பக்தி எனக்கு தேவையா என்று நான் யோசிக்கிறேன்....

  மனம் உடல் இரண்டும் முடியாமல் தவிக்கும்போது இறைவன் ஏளனம் செய்வதில்லை நன்றாய் உண்டு நன்றாய் மகிழ்ந்து தானே கிடக்கிறாய் என்ன கேடு உனக்கென்று....

  மனதின் அழுகையின் வேதனைகள் மனிதர்களின் காதுகளுக்கு எட்டவில்லை என்றாலும் இறைவனின் மனம் வரை சென்றடைவது உறுதி...

  திருமலை நாயக்கர் மஹால் படத்தில் துல்லியம் சிறப்பாய் தெரிகிறது....

  வெளிநாட்டவர் வந்தால் தங்கவும் உள்நாட்டினர் வந்தால் தங்கவும் சுற்றுலாவிற்கென வருவோருக்கு இருக்கவும் சுற்றி பார்க்கவும் கலைநிகழ்ச்சிகள் ரசிக்கவும் உணவும் தரும் விஷயங்கள் இன்னும் நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது..

  தமிழ் கலாச்சாராத்தை வெளிநாட்டினரும் அறியும்படி செய்கிறது சிறப்பு..

  அன்பு நன்றிகள் சகோதரி தங்களின் பதிவினை தவறாமல் படிக்கிறேன்பா...

  ReplyDelete
 40. படமும் பதிவும் ரொம்பவே கவர்ந்தது. நான் எழுதிக் கொண்டு இருக்கும் தொடரில் இந்த ஆன்மீகம் குறித்து, குழந்தைகள் வரும் போது நாம் அவர்களுக்குச் சொல்லித் தரும் ஆன்மிக கருத்துக்களைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

  ReplyDelete
 41. இது போன்ற செய்திகளை எங்களுக்கு அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுகி றீர்கள்! என்று நேரில் பார்க்கக் கிடைக் குமோ?திருமலைநாயக்கர்மஹால் படம் அருமை!

  ReplyDelete
 42. படங்கள் கொள்ளை அழகு,,,,,,,இந்த மாதிரி படங்களெல்லாம் கிடைக்கிறது சகோ.........

  ReplyDelete
 43. கடம்பவனம் நானும் சென்று மகிழ்ந்தேன் .அற்புதம் .தமிழர்கள் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் .நல்ல பதிவு பாராட்டுக்கள்

  ReplyDelete
 44. கடம்பவனம் நானும் சென்று மகிழ்ந்தேன் .அற்புதம் .தமிழர்கள் அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம் .நல்ல பதிவு பாராட்டுக்கள்

  ReplyDelete