Saturday, August 6, 2011

ஆடியில் ஓடிவரும் அழகு காவேரி

ஆடியில் ஓடிவரும் அழகு காவேரி
[perumaal+thaayar.jpg]


மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி.


காதலனுடன் நடக்கும் காதலியாய் கை வளைகள் கலகலக்க
சிரித்துப்பேசி ஒசிந்து நடக்கும் நாட்டியமாய் நடையழகு காட்டி நானிலம் செழிக்க
சீரார் சிலம்பொலித்து கங்கையிலும் புனிதமாய காவிரியாய் ஓடிவந்து காசியிலும் விசம் அதிகமான புனிதத் தலங்களை தன் கரையில் அருள்பாலிக்கச்செய்து வளமருளும் அன்னை.
ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று.
புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள். சுவாமி அவளிடம், காவிரியில் கலந்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளும்படி கூறினார். தனக்கு கங்கைக்கும் மேலான மகிமையை வழங்கியதால், ஆனந்தமடைந்த காவிரித்தாய், ஆரவாரத்துடன் காவிரிக்கரையில் பெருமாள் குடிகொண்டுள்ள தலங்களைத் தரிசிக்க பொங்கி வந்தாள். ஆதிரங்கமான ஸ்ரீரங்கப்பட்டினம் (கர்நாடகம்), மத்திய ரங்கமான சிவசமுத்திரம், அந்திரங்கமான ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களிலுள்ள ரங்கநாதப் பெருமானைத் தரிசித்தாள். இந்த நிகழ்வே, “ஆடிப்பெருக்கு’ விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த நதியில் நீராடினால், நம் பாவங்களையெல்லாம் அவள் தீர்த்து வைப்பதாக ஐதீகம்.
             வான்பொய்பினும் தான் பொய்யா காவேரி நதியால் பயன் பெறும் மக்களும் மற்றவர்களும் ஒவ்வொரு வருடமும் ஆடியில் காவேரி நதியை வழிபட்டு வருவது மரபு.

Aadi perukku
வருணனையும் தேவதைகளையும் வழி படும் நாள் என்றும்; நீருக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கருதப்படுகிறது.
[KAVERI+1.jpg]
உலகத்தில் எத்தனையோ புனித நதிகளும் தீர்த்தங்களும் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் இல்லாத தனிச்சிறப்பாக காவேரி நதிக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடிப்பெருக்கு' என்னும் விழாவானது தமிழகத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
காவேரி நதியின் இருகரைகளிலும் பதினெட்டு முக்கியமான இடங்கள் உண் டென்றும்; அங்கே பதினெட்டு யோகியர்களும் மகரிஷிகளும் சித்த புருஷர்களும் பூமியினடியில் பிருத்வி யோகம் பூண்டு தவம் செய்கிறார்கள் என்றும் கூறுவர். அவர்கள் ஆடிப் பதினெட்டு அன்று யோகத்திலிருந்து மீண்டு, காவேரி நதியில் நீராடி, தங்கள் தவப்பயனை காவேரி நதியில் கலக்கும்படிச் செய்கிறார்களாம்.
animated gif


சித்த புருஷர்களின் சக்தி பதினெட்டாம் பெருக்கு நாளில் காவேரியில் கலந்திருப்பதால், காவேரியானவள் அதிக சக்தி யையும் புனிதத்தை யும் பெறுகிறாள். ஆகவே, ஆடிப்பெருக்கு அன்று காவேரியில் நீராடி வழிபட்டால் புனிதம் பெறுவதுடன் நாம் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரங் கள் சொல்கின்றன.
[srirangamqn2.jpg]
இராவணனை வதைத்து சீதையை மீட்டுவந்த இராமபிரான் தன் குலகுருவான வசிஷ்டரைச் சந்தித்து,

""குருவே, அரக்கர்களைக் கொன்றதால் மன தில் ஓர் உறுத்தல் உள்ளது. அதனைப் போக்க வழி சொல்லுங்கள்'' என்று வேண்டினார். அதற்கு வசிஷ்டர், ""ராமா! தக்ஷிண கங்கை என்று பெயர் பெற்ற காவேரி நதியானவள் தன்னிடம் அறுபத்தாறு தீர்த்தங்களைக் கொண்டு சக்தி மிக்கவளாகத் திகழ்கிறாள். சித்த புருஷர்களும் யோகிகளும் ஆடிப் பதினெட் டில் காவேரியில் நீராடுவர். அந்த சமயத்தில் நீ அந்த நதியில் நீராடினால் உன் பாவம் நீங்கும்; உன் மன உறுத்தல் விலகும்'' என்று ஆலோசனை சொன்னார். இராமபிரானும் ஆடியில் காவேரி நதியில் நீராடி புனிதம் பெற்றார்.

Thiruvavaduthurai Adheenam

வருணனையும் தேவதைகளையும் வழி படும் நாள் என்றும்; நீருக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இந்நாள் கருதப்படுகிறது.


,  ஆடிப் பெருக்கு புராண காலத்திலேயே போற்றப் பட்டிருக்கிறது.
ஆடியில் காவேரி அம்மன் பூப்பெய்தியதாக ஒரு ஐதீகம் உள்ளது. அன்று காவேரிக் கரைக்கோ அல்லது தங்கள் பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கோ சென்று காதோலை, கருகமணி, மலர், மஞ்சள், பழங்கள், வெல்லம் கலந்த புட்டு அரிசி படைத்து, வழிபாட்டில் மாங்கல்ய சரடையோ அல்லது மஞ்சள் தடவிய சரட்டி னையோ வைத்துப் பூஜித்து தங்கள் கழுத்தில் பெண்கள் அணிந்துகொள்வார்கள். ஆண்கள் வலது மணிக்கட்டில் சரடு கட்டிக் கொள்வார் கள். அன்று புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை மற்றும் பரிசுகள் கொடுத்து மரியாதை செய்வதும் உண்டு.
turmeric-and-kumkum
சில இடங்களில் காவேரித்தாய் மசக்கையாக இருக்கிறாள் என்ற அடிப்படை யில் சித்திரான்னங்களைப் படைப்பதுடன், புளிப்பான பழங்களையும் காவேரி நதிக்குப் படைப்பார்கள்.
இதற்கெல்லாம் சிகரம் வைத் ததுபோல் ஸ்ரீரங்கம் கோவிலின் தென்புறத்திலுள்ள அம்மா மண்டபத்தினையொட்டி ஓடும் காவேரி நதிக் கரையில், ஸ்ரீரங்கநாதர் ஆடிப்பெருக்கன்று எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர் வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன் னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும்.
பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். மங்கல வாத்தியங்களும் வேத கோஷங்களும் முழங்கும். இந்த அற்புத மான காட்சியை ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்!


34 comments:

 1. எவ்வாறு உங்களால் மட்டும் இப்பிடி பக்தி பதிவுகளை சிரத்தையாக போடமுடிகிறது? வாழ்க உங்கள் பணி!!!

  ReplyDelete
 2. kavitendral panneerselvam வணக்கம். வாழ்க வளமுடன்.

  Important mainly because of the people in the conversation.

  நீர் பாறைக் கற்களிடையே ஓடி வரும் அழகே வெகு அற்புதம் ! வழ்த்துக்கள் !/

  நன்றி.

  ReplyDelete
 3. ஓடிவரும் ஆறு ரொம்ப அழகா இருக்கு.. தலைக்காவிரியோட படமும் இருந்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.

  ReplyDelete
 4. ஓடி வரும் நதியும், அருவியும் அதனருகில் வானவில்லும் மனம் கொள்ளை கொள்கிறதே.

  ReplyDelete
 5. ஆறு நீர் பெருக்கெடுத்து ஓடும் அழகே அழகு , பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நேரம் போவதே தெரியல :-)

  ReplyDelete
 6. ஆடியில் ஓடிவரும் காவேரி
  படங்கள் வெகு அழகு

  ReplyDelete
 7. இந்த படங்கள் தேடுவதற்கே பெரிய முயற்சி தேவை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. முதல் படம் பெருமாள்+தாயார்;

  முறத்தில் மிதக்கும்
  மங்கலப்பொருட்கள்;

  ஆடி அசைந்து எழுச்சியுடன் துள்ளி ஓடி பாறைகளுக்கு முத்தமிட்டுவரும் காவிரி நதியின் அழகு (திருச்சி மாவட்ட சுற்றுலாத்தளமாகிய புளியஞ்சோலையை நினைவு கூர்ந்தது);

  அம்மாமண்டபத்திலிருந்து புறப்படும் யானை ஊர்வலம்;

  நம் இரு கண்கள் போல, கண் இமைக்கும், அந்த ”ஓம்” என்று சுழலும் ஓங்காரச் சக்கரங்கள்;

  வானவில்லே படித்துறையில் நதிக்கரையில் வந்து விழுந்துவிட்டதோ என நினைக்கவைக்கும் அருவிக்கரை

  என காட்டப்பட்டுள்ள அனைத்துப்படங்களும் அருமையோ அருமை.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்துடன் கூடிய காவிரி நதியும், அந்த இரண்டு தேர்களும் அழகுக்கு அழகூட்டுவதாக உள்ளன.

  திருச்சியிலேயே எனக்கு மிகவும் பிடித்த இடம் அந்த புதிய காவிரிப்பாலம் - அங்கிருந்து இங்கு பார்த்தால் அழகிய மலைக்கோட்டை, அங்கு பார்த்தால் இராஜகோபுரம்.

  ஆடிப்பதினெட்டு அன்று பேரனைப்பார்க்கப்போய் வெகுநேரம் அங்கேயே (ஆட்டோவுக்குள் டிராஃபிக் ஜாமில் இருந்தேன்). கூட்டமான கூட்டம்.

  ReplyDelete
 10. நாங்களும் நல்லூர் தேருக்காக காத்திருக்கேமுங்க..


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

  ReplyDelete
 11. இயற்கை அன்னை நமக்குக் கொடுத்த நதியினை தூய்மையாகப் பேண வேண்டும் .....

  ReplyDelete
 12. காவிரியின் அழகை சொல்ல வார்த்தைகள் போதுமா உங்கள் பதிவு அருமை தொடரட்டும் ஆன்மீக பயணம் இறைவனின் அருள் என்றும் உங்களுக்கு உண்டு

  ReplyDelete
 13. ஓடி வரும் காவேரி ஆற்று நீர் பெருக்கு சூப்பர்.

  ReplyDelete
 14. படங்கள் அருமையாக உள்ளது .

  நேரில் பார்ப்பது போலவே !

  நிறைய படங்கள் கலக்சன் வச்சிருக்கீங்களா ?

  ReplyDelete
 15. ஆஹா மிகவும் அற்புதமான பதிவு . ஒரு மிகப்பெரிய சுற்றுலாவே சென்று வந்த சந்தோசம் . பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 16. ஆன்மீக சுற்றுலா சென்றுவந்ததை போல் இருந்தது, உங்கள் வலைப்பூவிற்கு வந்துசென்றதும்.

  ReplyDelete
 17. காவிரி, ஆடிப் பெருக்கு பற்றிய விவரங்கள் மற்றும் நீர் வழிந்தோடும் படமும், தேரின் கீழ் சுற்றும் சக்கரமும் அருமை.

  ReplyDelete
 18. அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. நீரோட்டம் மிக மிக அழகா இருக்கு !

  ReplyDelete
 20. நிறைய விஷயங்களை அறிய முடிகிறது மணிராஜ் சார் உங்க பகிர்வில் இருந்து....

  அம்பாள் படங்கள் சித்தர்கள் பற்றிய விஷயங்கள் எல்லாம் அறியத்தந்தமைக்கு அன்பு நன்றிகள் சார்...

  காவிரி பெருக்கோட்டம் மிக அருமை....

  ReplyDelete
 21. நல்லதே நடக்கும்

  ReplyDelete
 22. இது போன்ற பதிவை VGK சாரிடம் எதிர்பார்த்தேன். ஆடிபெருக்கு ஒரு அழகிய விழா. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவினை நினைவுபடுத்தும். Beautiful Report.

  ReplyDelete
 23. இந்த அளவுக்கு பாந்தமாக எடுத்துரைத்த உங்களுக்கு என் நன்றிகள்

  ReplyDelete
 24. அற்புதமான பதிவுங்க. மூன்றரையாண்டு காலம் திருச்சி மாநகரில் வசித்து,காவிரியின் வனப்பைக் கண்டு மெய்மறந்த காலமெலாம் என் கண்முன்னே !

  ReplyDelete
 25. அப்பாடா ஒவ்வொரு பதிவும் படங்களும், வர்ணனைகளும் கண்ணை
  விட்டு அகலவே மறுக்கிரது.ரொம்ப நல்லா இருக்கு. நேரிலேயே போய் வந்த அனுபவம்

  ReplyDelete
 26. ஆடி தரிசனம் அனைத்தும் அருமை

  ReplyDelete
 27. படங்களும் காவேரியா இல்லை பொது இணையப் படங்களா? பிரமாதம்.

  ReplyDelete
 28. பதினெட்டாம் பெருக்கு என்ற பெயரில் வகை வகையாகச் சாப்பிட்டது நினைவிருக்கிறது.

  ReplyDelete
 29. சாகம்பரி said...
  //இது போன்ற பதிவை VGK சாரிடம் எதிர்பார்த்தேன். ஆடிபெருக்கு ஒரு அழகிய விழா. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவினை நினைவுபடுத்தும். Beautiful Report.//

  தங்கள் எதிர்பார்ப்புக்கும், என் மீது கொண்டுள்ள அன்புக்கும், நம்பிக்கைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நாம் எல்லோரும் இப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவே ஆகிவிட்டோம்.

  நம் திருச்சியில் பாய்ந்தோடும் காவிரி நதியின் அழகை “ஆடியில் ஓடிவரும் அழகு காவேரி” என்ற தலைப்பில் நம் தோழி எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்கள் பாருங்கள்!

  இதுபோன்ற தலைப்பில் வெகு அழகான படங்களுடனும், விளக்கங்களுடனும் எழுத, தகவல் களஞ்சியமான நம் அன்புத் தலைவி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களை விட்டால், வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக எழுத முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

  அவர்களின் அன்றாட, கடும் உழைப்பை மேலும் மேலும் புகழ்ந்து உற்சாகப்படுத்தி, மேலும் பல நல்ல படைப்புக்களை, அவர்கள் திருக்கரங்களால் பெற்று பயனடைய முயல்வோம். அது ஒன்றே என்னால் முடியும் என்று நினைக்கிறேன்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 30. எப்படிங்க இவ்வளவு அருமையா
  படம் போடரிங்க
  கண்ணெதிரே காவேரி ஓடி
  வருது.
  உண்மை யாகவே உங்களைப்
  பாராட்ட வார்த்தை இல்லைங்க!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 31. காவேரி பெருக்கெடுத்து ஓடிய காலம் வந்து விட்டது உங்கள் நீர் நிலை படங்களைப் பார்த்து அருமை.

  ஆடி ஓடி வரும் காவேரி அழகு.

  ReplyDelete
 32. ;)
  சர்வ மங்கள மாங்கல்யே
  சிவே சர்வார்த்த சாதிகே !
  சரண்யே த்ரயம்பிகே கெளரி
  நாராயணீ நமோஸ்துதே !!

  ReplyDelete
 33. 862+4+1=867 ;)))))

  [திருமதி சாகம்பரி அவர்களையும் நினைத்துக்கொண்டேன்.]

  ReplyDelete