Monday, August 22, 2011

காற்றில் வரும் கீதமே

காற்றில் வரும் கீதமே

சுகமுனிவரின் திருவாக்கிலிருந்து அமுதத் தாரையாகப் பெருகும் 
ஸ்ரீமத் பாகவதம் என்ற புராண மகா காவியத்தின் மைய அம்சமாகவும் உன்னதமான பக்தியின் சாரமாகவும் இலக்கணமாகவும் கோபிகைகளின் பாடல்கள் ‘கோபிகா கீதம்’ என்று படிப்பவர்களின் இதயத்தை லயப்படுத்தி ஹிருதய ரோகம் அணுகாத வகையில் அமைந்திருக்கின்றன.
மதுர சப்தங்களும் ஓசை நயமும் காதலும் பக்தியும் புலம்பலும் கலந்த கவித்துவமான இந்த கீதம் காலங்காலமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தூய இதயத்தின் ஆழத்திலிருந்து பெருகும் தூய அன்பின் வெளிப்பாடாக கோபிகைகள் கிருஷ்ணன் மீது கொண்ட பிரேம பக்தியானது இந்து பக்தி மரபில் போற்றிப் புகழப்பட்டு வந்திருக்கிறது.

”அனைத்திற்கும் அப்பாற்பட்ட தீவிர அன்பே பக்தி

என்று தொடங்கி பக்திக்கு இலக்கணம் வகுக்க ஆரம்பிக்கிறார் நாரத மகரிஷி.

யோக மரபில் பதஞ்சலியின் சூத்திரங்களுக்கு இணையாக, பக்தி மரபில் நாரத பக்தி சூத்திரங்கள் திகழ்கின்றன.

பக்தியின் பல்வேறு நிலைகளையும், தன்மைகளையும்
ஆழமாகக் குறிப்புணர்த்திச் சொல்பவை, இந்த அழகிய சூத்திரங்கள்.
பூஜை முதலான அன்புச் செயல்கள் (பக்தியின் இயல்புகள்) என்று சொல்கிறார் பராசரரின் புதல்வர் வியாசர்.

(பூஜை என்ற சொல்லுக்குப் பொருள் “மலர்தல்” என்பதாகும்.

இறை அன்பில் மலரும் இதயமே பூஜையின் அடிப்படை.

பூஜை என்பது ஒரு அன்புச் செயல். ஒரு வெளிப்பாடு, ஒரு expression.

பொதுவாக எண்ணப் படுவது போல ஒரு “சடங்கு” (ritual, ceremony) அல்ல)
தெய்வீக பக்தியானது காதலில், அன்பில் ஏங்கும் சாதாரண மானுட இதயத்திலும் கூட கோபிகையின் கீதம் எதிரொலிக்கும்.

திவ்யப் பிரபந்த பாசுரங்களை மட்டுமல்ல,
திரைப் பாடல்களையும் அது தீண்டும்.

யமுனையாற்றிலே ஈரக்காற்றிலே
கண்ணனோடு தான் ஆட..

என்று சிலிர்க்கும்,

கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா – நான்
கண்ணாடிப் பொருளில்லையா

என்று சிணுங்கும்,
[latest+Radh+Krishna+wallpaper.jpg]
காற்றில் வரும் கீதமே – என்
கண்ணனை அறிவாயா
அவன்வாய்க் குழலில் அழகாக
அமுதம் பொழியும் இசையாக..

என்று உருகும்,

கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்; காதல் சொன்னான்
காற்றில் குழலோசை பேசும் பூமேடை மேலே…

என்று களியாட்டம் போடும்

வணிகக் கலையின் வண்ணமயமான காதல் கீதங்களில் கூட நாம் கண்ணனுக்காக ஏங்கும் கோபிகையைத் தானே பார்க்கிறோம்!
நமது மரபில் கோபிகைகளின் அன்பு பரா-பக்தி (எல்லாவற்றுக்கும் அப்பாலான பக்தி), மாறுதலும், தவறுதலும், பிசிறும் இல்லாத பக்தி என்று மிக உயர்ந்த நிலையில் வைக்கப் பட்டுள்ளது. அது ஒரு மகோன்னத லட்சியம்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், ஆண்டாளின் அன்புப் பிரவாகத்தில், மீராவின் இதய கானத்தில், ஜெயதேவனின் சிருங்கார காவியத்தில், சூர்தாசரின் தெய்வீக இசையில், நமது நாட்டிய வடிவங்களின் அடவுகளில் கோபிகைகளின் நெஞ்சம் நம்மிடம் பேசுகிறது. நம் உயிரையும், உணர்வையும் தீண்டுகிறது.
Hare Krishna Maha Mega Photo Gallery

 • இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான் கண்ணன் நமக்கெல்லாம் ஆசி தருபவன்.. நாம் அவனை உறவினனாக பார்க்கலாம். ஆம்...தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய்,  நல்லாசிரியனாய், தெய்வமாய்,  சேவகனாய்...எப்படி  வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள்ளான். அவனது அவதார நன்னாளில்,  மகாகவி பாரதியார் பாடிய "கண்ணன் பிறப்பு' பாடலைப் பாடி மகிழ்வோம்..
 • கண்ணன் பிறந்தான்- எங்கள்
 • கண்ணன்பிறந்தான்- 
 • கவலைகள் மறந்ததம்மா-புதுக்
 • கவிதைகள் பிறந்ததம்மா!
 • கண்ணை விழிப்பீர்- இனி
 • ஏதும் குறைவில்லை; வேதம் துணையுண்டு.
Krishna Wallpapers
RADHA KRISHNA WALLPAPERS

Download the Free Radha Krishna Wallpaper
[Mother+Yasoda+seeing+the+Universal+Form+in+Baby+Krishna's+mouth.jpg]


[Krishna's+universal+Form+Phtos.jpg]

[Hare+Krishna+with+a+cow+at+Yamuna+River.jpg]

47 comments:

 1. உங்கள் பதிவில் நுழைந்தாலே என்னைப்போல் சுமாரான பக்தைகளையும் முழுபக்தியில் மூழ்கடித்து விடுவீர்கள் போலிருக்கிறதே.
  தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பணி

  ReplyDelete
 2. @FOOD said...
  சின்னக் கண்ணன் வருகிறான்.நன்றி சகோ.//
  படங்கள் அனைத்தும் மிக அருமை.//

  உணவு உலகத்தின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 3. //இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான் கண்ணன் நமக்கெல்லாம் ஆசி தருபவன்.. நாம் அவனை உறவினனாக பார்க்கலாம். ஆம்...தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய், சேவகனாய்...எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள்ளான். //

  காற்றினிலே வந்த கீதங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

  ReplyDelete
 4. @ goma said...
  உங்கள் பதிவில் நுழைந்தாலே என்னைப்போல் சுமாரான பக்தைகளையும் முழுபக்தியில் மூழ்கடித்து விடுவீர்கள் போலிருக்கிறதே.
  தொடரட்டும் உங்கள் தெய்வீகப் பணி/

  பக்தியில் மூழ்கிய திருமதிக்கு நன்றி.

  ReplyDelete
 5. @வை.கோபாலகிருஷ்ணன் said...
  //இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான் கண்ணன் நமக்கெல்லாம் ஆசி தருபவன்.. நாம் அவனை உறவினனாக பார்க்கலாம். ஆம்...தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய், சேவகனாய்...எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள்ளான். //

  காற்றினிலே வந்த கீதங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk


  அருமையான வாழ்த்துரைகளுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 6. கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா – நான்
  கண்ணாடிப் பொருளில்லையா/

  எனக்கு விருப்பமான் பாடல் ...
  நல்ல கடவுள் பக்தி...
  பதிவுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. காற்றில் வரும் கீதங்கள் அனைத்தும் அருமை...

  புகைப்படங்கள் கண்ணை கவரும் விதமாய்....

  ReplyDelete
 8. அருமையான படங்களுக்கும்
  அழகான பதிவுக்கும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 9. படங்கள் மனதை கொள்ளைகொள்ளுகிறது சகோதரி.

  ReplyDelete
 10. உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை அழகான ஸ்டில்கள் ஒவ்வொரு பதிவிலும் கிடைக்கிறது. பதிவும் படமும் அருமை..உங்கள் பதிவுகளின் ரசிகன் நான்.

  ReplyDelete
 11. //”அனைத்திற்கும் அப்பாற்பட்ட தீவிர அன்பே பக்தி”//
  இதற்குக் கோபியரும் ராதாவுமே சான்று!

  ReplyDelete
 12. அருமையான படங்கள்.
  அறியாத விஷயங்கள்..
  பாடாட்டுகள்..

  ReplyDelete
 13. கீதம் இனிக்கிறது...

  வாழ்த்துக்கள்..
  அனைத்துபடங்களையும் காபி செய்து கொண்டேன்..

  ReplyDelete
 14. அருமையான படங்கள்
  அழகான விளக்கங்கள்
  கோகுலாஷ்டமிக்கான
  சிறப்புப் பதிவு
  அருமையோ அருமை
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்து

  ReplyDelete
 15. மிக அழகிய படங்கள். குறிப்பாய் முதலிரண்டும்.

  ReplyDelete
 16. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள் - ஒன்றையொன்று மிஞ்சுகின்றன
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. படங்கள் அனைத்தும் மிக அருமை

  ReplyDelete
 18. @ vidivelli said...
  கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா – நான்
  கண்ணாடிப் பொருளில்லையா/

  எனக்கு விருப்பமான் பாடல் ...
  நல்ல கடவுள் பக்தி...
  பதிவுக்கு வாழ்த்துக்கள்...//

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 19. @ வெங்கட் நாகராஜ் said...
  காற்றில் வரும் கீதங்கள் அனைத்தும் அருமை...

  புகைப்படங்கள் கண்ணை கவரும் விதமாய்....//

  அருமையான கருத்துரைகளுக்கு நன்றி.

  ReplyDelete
 20. Chitra said...
  lovely and cute.//

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 21. @ Lakshmi said...
  அருமையான படங்களுக்கும்
  அழகான பதிவுக்கும் மகிழ்ச்சி.//

  மகிழ்ச்சியான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 22. @ மகேந்திரன் said...
  படங்கள் மனதை கொள்ளைகொள்ளுகிறது சகோதரி./

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 23. @ குணசேகரன்... said...
  உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை அழகான ஸ்டில்கள் ஒவ்வொரு பதிவிலும் கிடைக்கிறது. பதிவும் படமும் அருமை..உங்கள் பதிவுகளின் ரசிகன் நான்.//

  ரசிகத்திறனுள்ள் அருமையான கருத்துரைகளுக்கு நன்றி.

  ReplyDelete
 24. @ சென்னை பித்தன் said...
  //”அனைத்திற்கும் அப்பாற்பட்ட தீவிர அன்பே பக்தி”//
  இதற்குக் கோபியரும் ராதாவுமே சான்று!/

  பக்திக்கு இலக்கணம் வகுத்த்வர்கள் அல்லவா கோபியரும், ராதவும்.
  அருமையான கருத்துரைகளுக்கு நன்றி

  ReplyDelete
 25. @வேடந்தாங்கல் - கருன் *! said...
  அருமையான படங்கள்.
  அறியாத விஷயங்கள்..
  பாடாட்டுகள்.//

  பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 26. @middleclassmadhavi said...
  அருமை!//

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 27. # கவிதை வீதி # சௌந்தர் said...
  கீதம் இனிக்கிறது...

  வாழ்த்துக்கள்..
  அனைத்துபடங்களையும் காபி செய்து கொண்டேன்..//

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 28. Ramani said...
  அருமையான படங்கள்
  அழகான விளக்கங்கள்
  கோகுலாஷ்டமிக்கான
  சிறப்புப் பதிவு
  அருமையோ அருமை
  தொடர்ந்து வருகிறோம்
  தொடர வாழ்த்து

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 29. ஸ்ரீராம். said...
  மிக அழகிய படங்கள். குறிப்பாய் முதலிரண்டும்.

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 30. Rathnavel said...
  அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள் - ஒன்றையொன்று மிஞ்சுகின்றன
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 31. பிருந்தாவன் said...
  படங்கள் அனைத்தும் மிக அருமை

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 32. கண்ணன் வந்தான் இன்று கண்ணன் வந்தான்....

  ReplyDelete
 33. கண்ணனுக்கு சிறப்பான புகழ்மாலை.

  ReplyDelete
 34. படங்கள் அனைத்தும் மிக அருமை...

  ReplyDelete
 35. ஆஹா அருமை அருமை கண்ணுக்கு விருந்தாக கண்ணன் படங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 36. படங்கள் அனைத்தும் மிக அருமை...சகோ.. வாழ்த்துகள்
  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
 37. பார்த்து ரசித்தேன்.

  ReplyDelete
 38. வெகு நேர்த்தியான படைப்பு.புகைப் படங்கள் அருமை.

  ReplyDelete
 39. // பூஜை என்பது ஒரு அன்புச் செயல். ஒரு வெளிப்பாடு, ஒரு expression. பொதுவாக எண்ணப் படுவது போல ஒரு “சடங்கு” (ritual, ceremony) அல்ல)//
  அருமையான கருத்து.
  படங்கள் மிக அழகு.

  ReplyDelete
 40. கோபியர் கொஞ்சும் ரமணா...

  கோபாலக்ருஷ்ணா கோபியர் கொஞ்சும் ரமணா...

  கண்ணனின் படங்கள் எல்லாமே கண்ணில் இருந்து நெஞ்சில் போய் சுகமாக தங்கிவிட்டதுப்பா... உங்களுடைய அழகான விளக்கங்களும் படங்களும் அத்தனை அழகுப்பா..

  கண்ணனை நம்மில் ஒருத்தனாக நினைக்கலாம் பாடலாம் மனம் உருகி கண்ணீர் வழிய....

  அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி அருமையான பகிர்வுக்கு...

  ReplyDelete
 41. ;)
  புத்திர் பலம் யசோ தைர்யம்
  நிர்ப்பயத்வ - மரோகதா

  அஜாட்யம் வாக்படுத்வம்ச
  ஹனூமத் ஸ்மரணாத் பவேத்.

  ReplyDelete