Sunday, July 31, 2011

ஆதரவளிக்கும் ஆம்ரவனேஸ்வரர்
படிமம்:Mandurai temple.jpg

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
காவல் தெய்வமான கருப்பண்ணசாமித் தலத்தில் உள்ள
 பெருமகுதிரைவீரன் சிலை


Deer.gif Animated Animals image by Keefers_
"
நீல மாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி ஆலி யாவரு காவிரி வடகரை மாந்துறை யமர்வானை மாலு நான்முகன் தேடியும் காண்கிலா மலரடி இணைநாளும் கோலம் ஏத்தி நின்றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே.:

வேங்கை, ஞாழல், செருந்தி, செண்பக மலர்களையும் ஆனைக் கொம்பையும், சந்தனமரம், மாதவி மலர், சுரபுன்னை மலர், குருந்து மலர் ஆகியவற்றையும் உந்திவரும் காவிரி வடகரையில் உள்ள மாந்துறையில் உறையும் எம்பிரானின் இமையோர் வணங்கும் திருவடிகளை ஏத்துவோம். 

-எனப்பல வகைகளாக உணர்ந்து தொழுது திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற ,திருச்சி பகுதியில் உள்ள பஞ்ச சிவாலயங்களில் மாந்துறையும் ஒன்று. 


ஆதிசங்கரர் ஆம்ரவனேஸ்வரரை பூஜை செய்து வணங்கியுள்ளார்.
இவர் கோஷ்டத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.

மிருகண்டு மகரிஷியும் சுவாமியை வணங்கியுள்ளார்.
 துர்க்கை சாந்த கோலத்தில் இருக்கிறாள்.
இவளது காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை.

பிரகாரத்தில்அருணகிரியார் திருப்புகழில் பாடிய சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 58வது தலம்

[Gal1]

மாமரங்கள் நிறைந்திருந்த தலம் என்பதாலும், மானுக்கு அருள் புரிந்த சிவதலம் என்பதாலும் இத்தலம் "மாந்துறை' என வழங்கப்படுகிறது.
 
 அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பால தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குணமாகும் என்பது நம்பிக்கை.

கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.
  .  
  சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சுவாமி மீது பரப்பி பூஜை செய்வது சிறப்பு.  
 தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக பேரழகு கொண்ட சமுக்யா தேவி பிறந்தாள்.  அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள்.

நாளுக்குநாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை.

ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள்.

அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.

தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள்.

அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள்.

(சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி).

பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள்.

விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை.

தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள்.

இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன், அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார்.

அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார்.

பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார்.

இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது.

அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது.

சதுர்த்தி பூஜை: மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அகங்கார சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம் தந்ததாக ஐதீகம்.

இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
  
தல வரலாறு:
 
இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். 

அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார்.
ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர்.
சிவனை வணங்கும் மான்
[Gal1]
இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது.

நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது.

சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். 

தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். 

சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. 

அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.
.[Gal1]
யானை சிலைகள்                          மாமரம்
[Gal1]
கோயில் பிரகாரம்

திருவண்ணாமலையில் சிவபெருமானின் முடி கண்டதாகப் பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றித் தனது பாவத்தைப் போக்கிக் கொண்டதாகவும் கூறுவர்

முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே "மா-உறை" இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் மாந்துறை என வழக்கில் மாறியது என்பர்.

தல வரலாற்றின்படி, மான்களாய்ப் பிறப்பெடுத்த அசுரர்களுக்கு முக்தி அளித்தமையால், மான்- உறை என்பதே மாந்துறையானது என்பதும் உண்டு. 

இந்தக் கோயிலின் தல மரம் மாமரமே என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணத்திற்கு அருகில் மாந்துறை என்றொரு ஊர் இருப்பதால், இது வடகரை மாந்துறை எனவும், கும்பகோணத்தில் அருகில் உள்ளது
தென்கரை மாந்துறை எனவும் வழங்குகின்றன.

இக்கிராமத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளமை இதன் தொன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளது
படிமம்:Ambraneswara.JPG
கோயிலின் மூலவர் ஆம்ரனேஸ்வரர் (ஆம்- என்பது வடமொழியில் மாங்காயைக் குறிப்பது).

மிருகண்டு முனிவர் இங்கு வந்து வழிபட்டமையால் இவருக்கு மிருகண்டீஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு.

அம்மனின் பெயர் வாலாம்பிகா (தமிழில் அழகம்மை; அழகு உயர்ந்த அம்மை என்று கூறுவதும் உண்டு). 
அருள்மிகு வாலாம்பிகாவின் திருவுரு
08:09, 6 சூலை 2010 -ல் இருந்த பதிப்பின் சிறு தோற்றம்
சூரியனார், சந்திரனார் மற்றும் இந்திரன் ஆகியோர் இங்கு வழிபட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.

லால்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆங்கரை போன்ற கிராமங்களில் வசித்தவர்களும், அவர்கள் மரபில் வந்து தற்போது உலகெங்கும் பரவியுள்ள பலரும், மாந்துறையில் உள்ள இக்கோயிலினை இன்றளவும் புண்ணியத்தலமாகவும், இந்த இறைவனை மாந்துறையான் என்ற வழக்குப் பெயருடன் குல தெய்வமாகவும் கொண்டுள்ளனர்.

இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது.

கிராமத்து வழக்கப்படி மூலவர் என சிலை ஏதும் இல்லாது, குதிரைகளும், வேல்களுமே காவல் தெய்வத்தின் உருவகமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.

இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது எனும் நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களுக்கு மிக அதிகம் உண்டு.
முருகன் அருள் பெற்று திருப்புகழ் பலவற்றினை வாய்மலர்ந்த அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்:

ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து 
ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறிஆர்ந்துள 

கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று 
கிடையோடேஊங்கிருமல் வந்து வீங்குகுடல் 

நொந்து ஓய்ந்துணர் வழிந்து உயிர்போமுன்ஓங்குமயில் 
வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே

வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த 
வேந்திழையி னின்ப மணவாளாவேண்டுமவர் 

தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த 

வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற 
மாந்துறை யமர்ந்த பெருமாளே.

மாந்துறை அஞ்சல்
லால்குடி S.O.
லால்குடி வட்டம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
PIN - 621703 [Image1]

Saturday, July 30, 2011

வற்றாத வரமருளும் வடதிருநள்ளாறுஅத்திமுகத்து இறைவன் -ஆனைமுகன் -சிவன்திருக்குமரன் விநாயகனும், ராமதூதன், சிவ அம்சமானவன் -சுந்தர ஐந்து முகங்களைக்கொண்டு இன்னல் களைபவன் -ஒன்றாய் இணைந்து அருளும் ஆலயம்......


பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை என்று வேடிக்கையாகக் குறிப்பிடும் பழக்கம் உண்டு.


வியாசபகவான் பாரதம் சொல்ல ஆனைமுகன் தன் கொம்பினை உடைத்து எழுத,பிள்ளையார் சுழியிட்டுத் தொடங்கி கிருஷ்ணபரமாத்மா தேரில் கொடியில் இருந்து அருள்பாலித்த பராக்கிரமசாலி அனுமன் கொடியிலிருந்து இறங்கியதோடு பாரதம் முடிவடையும் மிகப்பெரிய தத்துவத்தை உணர்த்தும் ஆழமான மொழி அது.


ஆதியும், அந்தமும் சேர்ந்து அருளும் தலம் மகத்துவம் மிக்கதாகத்தானே திகழும்!

ஸ்ரீ யக்ஞ விநாயகர், ஸ்ரீ நீலாம்பிகை ஸமேத சனீஸ்வர பகவான், ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆகியோர் ஒன்றாகக் குடி கொண்டு அருளாட்சி செய்யும் ஒரு அற்புதத் திருத்தலம்தான் சென்னை மேற்கு மாம்பலம், வெங்கடாசலம் தெருவில் கிழக்குப் பார்த்து அமைந்த அருமையான வட திருநள்ளாறு என்று சிறப்பிக்கப்படும் இடர்களையும் அற்புத ஆலயம்-
 “அருள்மிகு சனீஸ்வர-ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் ஆலயம்’ .

ஆதியில் இந்த இடம் “புலியூர் கிராமம்’ என்று வழங்கப்பட்டு, ஒரு ஜமீன் பராமரிப்பில் இருந்து வந்தது.   


கோயிலில் விநாயக சதுர்த்தி, ஹனுமத் ஜெயந்தி, சனிப்பெயர்ச்சி, ஸ்ரீராம நவமி ஆகிய நான்கு விசேஷங்களை ஒட்டி திருவிழா நடந்து வருகிறது. 


அந்த உத்ஸவங்களில் திரளான மக்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, தெய்வ அருளாசி பெறுகின்றனர்.
தேவாதி தேவ கணபதியே அழகிய திருமுடி கொண்டவரே
திறமிகு ரிஷிகள் கணபதியே யாகத்தலைவனை ஒத்தவரே
பிறவியழிக்கும் கணபதியே பத்ம சரீரமுடையவரே
வெல்க வெல்க கணபதியே வேண்டி உம்மை வணங்குகிறேன்யக்ஞ விநாயகர் என்று சிறப்புடன் அருட்காட்சி தந்து கற்பகவிநாயகராய் செல்வம்,கல்வி, திருமணம், மக்கட்செல்வம் அனைத்தும் அருளும் வரப்பிரசாதி. 


யக்ஞ விநாயகர் சிறப்பு :அரச மரத்தடியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ யக்ஞ விநாயகர்.எந்தச் சுப காரியம் என்றாலும் நாம் விநாயகரை துதிக்காமல் தொடங்குவது இல்லை. 


யாகத்தில் (யக்ஞம், வேள்வி) நாம் அக்னி தேவனையும், இதர தெய்வங்களையும் ஆராதனை செய்யும் முன்னர் விநாயகரை பூஜித்து, சுப காரியங்கள் தடங்கலின்றி நடந்தேறப் பிரார்த்திக்கின்றோம். 


அதை முன்னிட்டே இங்குள்ள பிள்ளையாருக்கு யக்ஞ விநாயகர்’ என்னும் திருநாமம் சூட்டப்பட்டது. யக்ஞ விநாயகர்’  சந்நிதியில் அநேக ஹோமங்கள் நடந்து வருகின்றன

சனீஸ்வரர்நவக்கிரஹ நாயகர் சனி பகவான், நவக்கிரஹ மண்டலத்தில் சூரியனுக்கு மேற்கே அசுர கிரகமாக விளங்குபவர். 


மானுடராய்ப் பிறந்த அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அற்புத சக்தி படைத்த இவர்,  அண்டினவர்க்கு அருள் புரியும் வள்ளல்! 


சூர்ய பகவானுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த சனி பகவானை “சனைச்சரன்’, “சனீஸ்வரன்’ என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். 


காசியில் சிவனை குறித்து கடும் தவம் இயற்றி, லிங்கப் பிரதிஷ்டை செய்து கிரஹ பதவி அடைந்து “சனீஸ்வரன்’ என்ற பெயரை இவர் பெற்றதாகச் சொல்கின்றனர்.


சனி பகவானை “ஆயுஷ்காரகன்’ என ஜோதிட நூல்கள் வர்ணிக்கின்றன. “சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழி. 


சனியின் பிடியில் சிக்கித் தவிக்காமல் வாழ, இவரை விசேஷமாக வழிபடுதல் அவசியம்.
பஞ்ச முக ஆஞ்சநேயர்

சனியின் பிடியிலிருந்து தப்பியவர்கள் ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ ஆஞ்சநேயரும் என்பது வழக்கு. 


அதிலும் பஞ்ச முக ஆஞ்சநேயரின் சிறப்பே தனி! 


தன் பக்தனைக் காக்க உடனே எழுந்தருளிய நரஸிம்ம மூர்த்தியின் அருள், 


விஷத்தை அடக்கி விரட்டும் கருட மூர்த்தியின் அருள், 


எதையும் புனருத்தாரணம் செய்து நிலை நிறுத்தும் சக்தி பெற்ற வராஹ மூர்த்தியின் அருள், 


பக்தர்களின் ஸர்வ மந்திர சுலோக முறையீடுகளையும் சித்தியாக்கும் ஹயக்ரீவ மூர்த்தியின் அருள், 


ராமநாம ஜெபம் செய்வோரைப் பாதுகாக்க உடன் தோன்றும், சகல சக்தி படைத்த ஆஞ்சநேய மூர்த்தியின் அருள் 


என இவ்வைந்து மஹா சக்திகளின் வடிவத்தை ஐந்து முகங்களாகக் கொண்டு ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேய மூர்த்தியாக அற்புதத் தோற்றத்துடன் திகழும் மூர்த்தத்தை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்! 
அவ்வளவு அழகு!

[anjaneya5a.jpg]
ஸ்ரீ சனிபகவானுடன், அரச மரத்தடியில் எழுந்தருளிய இந்தப் பஞ்ச முக ஆஞ்சநேயரையும் சேவிப்பதால் சனி தசை, சனி புக்தி, அஷ்டம சனி, ஏழரை நாட்டு சனி ஆகியவற்றால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கி ஆயுள் ஆரோக்கியம், மன நிம்மதி, காரிய சித்தி, வழக்குகளில் சாதகம், குடும்ப சுகம் ஆகியவை ஏற்படும்.காஞ்சி பரமாச்சரியார் சனிபகவனுக்கென்றே சிறப்பாக ஏற்படுத்தப்பட்டு, காகவாகனத்தில் நீலாம்பிகையுடன் இணந்து அருட்காட்ச்தரும் ஆலயத்தை  வட திருநள்ளாறு என்று அருளிய சிறப்புவாய்ந்த தலம்.

Friday, July 29, 2011

வைபவங்களை வழங்கும் வைபவலட்சுமி
புதிதாகத் திருமணமான மணமக்களை, "பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என வாழ்த்துகிறோம். 

அந்தப் பதினாறு பேறுகளோடு அஷ்டலட்சுமிகள் தரும் எட்டு ஐஸ்வரியங்களையும் சேர்த்து, தன்னை வணங்குபவர்களுக்கு அருள்பவள்தான் வைபவலட்சுமி.

வைகுண்டத்தில் செந்தாமரை மலர்மீது அமர்ந்திருந்த மகாலட்சுமியை கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் தங்கள் தீர்த்தத்தால் நீராட்டின. 

எட்டுத் திக்குகளிலுள்ள அஷ்ட கஜங்கள் (யானைகள்) தங்கள் துதிக்கையால் நீரை முகர்ந்து லட்சுமிக்கு திருமஞ்சனம் செய்தன. 

பாற்கடல் ஆண் உருவம் எடுத்து லட்சுமி தேவிக்கு தாமரை மாலைகளையும் திருவாபரணங்களையும் சமர்ப்பித்தது. 

கந்தவர்கள் பாட, அப்சரஸ்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.லட்சுமிதேவிக்கு நடக்கும் இந்த வைபவத்தைப் பார்த்து மகாவிஷ்ணு மகிழ்ந்து கொண்டிருந்தார். 

சூரியனின் மகனான ரேவந்தன் பாற்கடலில் தோன்றிய உச்சிஸ்ரவஸ் என்ற குதிரைமீது அமர்ந்து வைகுண்டம் வந்தான். 

அந்த அழகான குதிரையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மகாலட்சுமி. 

பெண் குதிரையாகப் பிறக்கும்படி லட்சுமியைச் சபித்தார்.அதன்படி காளந்தி, தமசா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பெண் குதிரையாகத் தோன்றி வாழ்ந்து வந்தாள் 

மகாலட்சுமி.தேவி இல்லாத வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவுக்கு மகிழ்ச்சியில்லை. அதனால் அவளை அழைத்துப் போக ஆண் குதிரை வடிவமெடுத்து வந்தார் விஷ்ணு, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
.
அக்குழந்தையை பிள்ளை வரம் வேண்டித் தவமிருக்கும் யயாதியின் மகன் துர்வசுவுக்கு தானமாகக் கொடுக்க விரும்பினார் மகாவிஷ்ணு. 

இதற்கு மகாலட்சுமி ஒப்புக்கொள்ளவில்லை. 
அப்போது விஷ்ணு, ""தேவி! நீ இந்த ஆண் குழந்தையை துர்வசுவுக்குக் கொடுத்தால் உனக்கு எல்லா வைபவங்களையும் வழங்கும் ஆற்றல் கிடைக்கும். 

அதைக் கொண்டு பூலோகத்தில் வாழும் மக்களுக்கு வேண்டிய எல்லா வரங்களையும் வழங்கலாம். 

அதனால் உன்னை வைபவலட்சுமி என்று போற்றித் துதிப்பார்கள். 

நான் உன்னைத் தேடி வந்ததுபோல் உன்னை வணங்கும் பெண்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும்; இணைபிரியாமல் கணவனோடு சேர்ந்து வாழும் மகிழ்வையும் நீ கொடுக்கலாம். 

வைபவலட்சுமியாகிய உன் பெருமை உலகெங்கும் தெரியும்'' என்றார்.

 ""நான் உன்னோடு கூடியிருந்து பக்தர்கள் வேண்டும் எல்லா வரங்களையும் கொடுப்பேன்'' என்றும் உறுதி கூறி, லட்சுமியை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார். 

அப்போது, ""நான் அருளிய இந்த சுலோகத்தை தினமும் திருவிளக்குமுன் அமர்ந்து ஒன்பது முறை சொல்லும் பக்தைகளின் இல்லத்தில் அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்வதோடு, மாங்கல்ய பலம் பெற்று புத்திரப் பேறுகளுடன் ஆரோக்கியமாக வாழ்வார்கள்'' என்ற் லட்சுமிதேவி அருளிய அந்த சுலோகம்:"
மங்களே மங்களதாரே

மாங்கல்ய மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேஹி
மாங்கல்யம் தேஹிமே ஸதா.'

இத்துடன் ஸ்ரீசூக்தம் மற்றும் விருப்பப்பட்ட லட்சுமி சம்பந்தப்பட்ட சுலோகங்களையும் சொல்லி பிரார்த்தனை செய்யலாம்.

Thursday, July 28, 2011

சிங்காரச் சிறுவை முருகன்

[Image1]
நித்யானந்தமாகி நிஷ்களச் சொரூபமாகி ஆதியாய் அநாதியாய் நின்ற ஜோதிப்பிழம்பு-..!
பஞ்சாட்சர சிவப்பரம்பொருளின் திருக்குமரன் ஷடாட்சரன்சரவணபவ குகன். 

உலகம் உய்ய ஆங்கே வ்ந்துதித்த அன்புக்குமரன் சிங்காரமாய் சொகுசாய் வாழ சொந்தவீடு அமைய அருள்பலிக்கிறான்.

பச்சை மயில் வாகனன் இச்சைகள் அனைத்தும் நிறைவேற்றவே காத்திருக்கிறான் சிறுவாபுரியில்.

மாமன் பெயரால் ஊர்ப்பெயர் அமைய அழகிய
மருமகன் பெயரால் புண்ணியக்ஷேத்திரம் ஆயிற்று சிறுவாபுரி என்னும் சிற்றூர்.

சிறுவாபுரி தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. 

இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை.

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
மகாமண்டபம்
[Gal1]
மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். 

மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 

அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி முகமண்டபத்தில் அருணகிரிநாதர் சிறுவை வள்ளலான பாலசுப்பிரம்ணியப் பெருமானைக் கண்ட பெருமிதத்துடன் திருப்புகழ் பாடும் கோலவடிவம் தரிசிக்கலாம்.  
அருணகிரிநாதர்
[Gal1]
முருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகாலத்தில் இம்முருகனும் மரகதக்கல்லாலேயே வடிக்கப்பட்டிருந்தார் எனவும், பிற்காலத்தில் வேறு சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.

முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது.
 
சிறுவாபுரி வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.

திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.
தல வரலாறு:
ராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்கு பிறகு, கர்ப்பிணியான மனைவி சீதை மீது ஊரார் பழிபோட்டதால், காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு லவனும், குசனும் பிறந்தனர்.

இதன் பிறகு அவர் அஸ்வமேதயாகம் செய்தார்.

மனைவியின்றி யாகம் செய்வது யாகம் செய்வது விதிக்கு புறம்பானது என்பதால், அவர் பல நாடுகளுக்கும் அனுப்பிய யாக குதிரையை லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர்.

குதிரை திரும்பி வராமல் போகவே, அதை மீட்டு வர லட்சுமணனை அனுப்பினார் ராமர். லட்சுமணனால் குதிரையை மீட்க முடியவில்லை.

இதனால் ராமரே, நேரில் சென்று குதிரையை மீட்டு சென்றார் என்பது ராமாயண கால செய்தியாகும். 
இந்த வரலாற்று செய்தியை, "சிறுவராகி இருவர் கரிபதாதி கொடுஞ்சொல் சிலை ராமன் உடன் எதிர்த்து ஜெயமதானநகர்' என்ற திருப்புகழ் பாடல் மூலம் அறிய முடிகிறது.

ராமனிடம் லவனும் குசனும் சண்டை போட்டதாகவும், அந்த இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என்றும் இத்தல வரலாறு கூறுகிறது.சிறுவர்+அம்பு+எடு என்பது சின்னம்பேடு ஆனது. பேடு என்பது அம்பு வைக்கும் கூடு ஆகும்.

கை கொடுத்த கை: இத்தலத்தில் வாழ்ந்த முருகம்மையார் என்ற முருகபக்தை எப்போதும் முருகனின் சிந்தனையில் இருந்தார். அவரது கற்பின் மீது சந்தேகம் கொண்ட கணவர், அவரது கையை துண்டித்தார். அப்போதும் இவர் முருகன் சிந்தனையில் இருந்ததை அறிந்த முருகன், அம்மையாருக்கு காட்சி கொடுத்துஅருள் புரிந்தார்.
இதனால் இவரது கை ஒன்று சேர்ந்து பழைய நிலைக்கு திரும்பியது.  

சென்னைக்கு மிக அருகிலேயே சிறுவாபுரி இருக்கிறது.
சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையிலிருந்து 33வது கி.மீட்டரில் இடது பக்கம் பிரியும் சாலையில் சிறுவாபுரி, பாலசுப்பிரமணிய ஸ்வாமியின் திருக்கோயில் தோரணவாயில் நமக்கு வழி காட்டுகிறது.

ஆலயம் நோக்கிச் செல்லும்பொழுது இருபுறமும் பசுமை படர்ந்த வயல்களும், வாழைத் தோட்டங்களும் குளுமையாகக் காட்சி தருகின்றன.
அருணகிரிநாதபெருமான் தமது திருப்புகழில் ஆடகம் பயில் கோபுரம் மாமதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான தென் சிறுவாபுரி என்று போற்றியுள்ளார்
சென்னை, திருவள்ளூர், பொன்னேரி, ரெட்ஹில்ஸ் என்று பல இடங்களிலிருந்தும் நகரப் பேருந்துகள் கோயில் வாசம் வரையிலும் வருகின்றன.
பெரியபாளையம் கோயில் அருகில் இருப்பதால் அம்மாவைப் பார்க்க வரும் பக்தர்கள், பிள்ளையையும் பார்க்க வருகிறார்கள்.
கொடிமரம்
[Gal1]

உயரமான கொடிமரம், கொடி மரம் தாண்டி சதுரமான கூண்டில் மயிலுமாடிநீயுமாடி வர வேணும் என்பது போல் மரகதப் பச்சை மயில் சிலா ரூபமாக கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது.

முருகப் பெருமானை முதுகில் சுமந்து ஆடி வரும் பெருமிதமான கர்வம் அதற்கு இருக்காதா என்ன? 

இத்தகைய மரகதப் பச்சை மயில் வாகனத்தை உலகில் வேற எங்கம் காண முடியாது.
அதனால்தானோ என்னவோ இதைப் பாதுகாப்பாக கம்பிகூண்டுக்குள் வைத்துள்ளார்கள்.

கூண்டுக்கு முன்னால் முருகனைப் பார்த்தபடி சாதாரண கல்லினாலான மயில் ஒன்றும் இருக்கிறத.

மரகதப் பச்சை மயிலை ரசித்தபடி கோயிலை வலம் வந்தால் கோயிலின் தென்மேற்குப் மூலையில் சூரியனார் ஒளிபடும் வண்ணம் கிழக்குநோக்கி மரகத கணபதி என்று பெயர் கொண்ட இந்த மரகத விநாயகர், வேண்டுவனவெல்லாம் தருவேன் என்பது போல் அருள் பாலிக்கிறார்.
[Gal1]
அடுத்து ஆதிமூலவர் சன்னதி,
இவர் முன்னால் இருப்பது பாலசுப்ரமணிய சுவாமி விக்கிரகமாகும். 

இவருக்கு சிறப்பான பூஜைகள் உண்டு.

சிறுவாபுரி முருகனை தரிசித்தால் புது வீடு கட்டும் பாக்கியம் கிடைக்கும் என்று பக்தர்கள் நடுவே பரவி வருகிறது.

இதன் காரணமாகத்தான் பின் சுவரில் சின்னச் சின்னக் கற்களை வீடுகள் போல் அடுக்கி வைக்கிறார்கள்.

சில சிறுவர்கள் சின்னக் கற்களை வைத்து வியாபாரம் செய்கிறார்கள்.
        ஆதிமுருகன்

அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலம் சிறுவாபுரி. இத்தலத்தைப் போற்றி நான்கு திருப்புகழ்கள் பாடியுள்ளார். இதில் அர்ச்சனைத் திருப்புகழ் மிகவும் விசேஷம். இந்த நான்கு திருப்புகழ்களும் சுவரில் பதிக்கப்பட்டுள்ளன.

அண்டர்பதி குடியேற என்ற திருப்புகழ் வேண்டுவன தரும் திருப்புகழ்.

சீதன வாரிஜ பாதர நமோ நம என்பது அர்ச்சனைத் திருப்புகழ். அருணகிரிநாத பெருமான், ஆறுதலங்களுக்கு அர்ச்சனைத் திருப்புகழ் பாடியுள்ளார். அதில் சிறுவாபுரி தலமும் ஒன்று. 

அடுத்த தீயவை நீக்கும் திருப்புகழாக வேல் இரண்டெனும் என்ற திருப்புகழைப் பாடியுள்ளார். 

பிறவியான சடமிரங்கி என்ற வரம் தரும் திருப்புகழ் நான்காவது.
கார்த்திகை தினத்தன்று ஒவ்வொரு மாதமும் நகரத்தார் விடுதியில் அன்னதானம் சிறப்பாக நடப்பதாக பிராசாரத்தில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. பைரவர் சன்னிதியும் இருக்கிறது. இங்குள்ள நவகிரகங்கள் ஒன்பதும் வாகனத்துடன் இருப்பதுதான் விசேஷம். இங்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
பலிபீடத்தின் அடியில் உப்பு, மிளகு போட்டு, பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

[Siruvapuri+(1+of+1)-2.jpg]

மூலவர் பாலசுப்ரமணியரை தரிசனம் கண் கொள்ளாக்காட்சி. பச்சை மயில் வாகனனே சிவபாலசுப்ரமணியனே என்று பாடினாலும் மூலவர் முருகனுக்கு இங்கே மயில் வாகனம் இல்லை.
தேவர்கள் சேனாபதியான முருகனின் முன் வலக்கரம் அடியார்களுக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜெப மாலையை ஏந்தி இருக்க, முன் இடக்கரம் இடுப்பினும் பின் இடக்கரம் கமண்டலம் ஏந்தி பிரம்மசாஸ்தா கோலத்திலும் காட்சி அளிக்கிறார்.
[sirvpri1.jpg]
முருகப் பெருமானுக்குத் தெற்கே அண்ணாமலையார் மரகதப் பச்சை வைரமாகக் காட்சித் தருகிறார். இத்தனை பெரிய மரகத ஜோதிலிங்கம் வேறு எங்கும் இல்லை. அபிதகுஜாம்பாள் என்னும் உண்ணாமலை அம்மையும் மரகதப் பச்சையான வடிவில் காட்சி அளிக்கிறார்.
அம்மன் உண்ணாமுலை

அருணகிரிநதர் திருவண்ணாமலைக்கு மயிலுமாடி நீயுமாடி வரவேணும் என்று ஆடியதற்கு இணையாக சிறுவையில் மைந்துமயில் உடனாடி வரவேணும் எனப் பாடியுள்ளதால் அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மையும் இங்கு எழுந்தருளி மைந்தனின் திருமணக் கோலம் காணும் பெருமிதப் பெற்றோர்களாய் அருளுகிறார்கள். 


அண்ணாமலை - .உண்ணாமலையம்மை திருமுன் வள்ளியம்மையார் நாணம் மேலிட அரைக்கண் பார்வையால் அழகன் முருகனைப் பார்த்துக் கொண்டிருக்கும் திருமண வைபவ கோலத்தைக் காண ஆயிரம் கண்கள் போதாது.

[Gal1]

இக்கோவில் விக்கிரகங்களில் ஆதி மூலவர், பாலசுப்ரமணிய ஸ்வாமி, நவ கிரகங்கள் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக் கல்லில் செய்யப்பட்டவை. எல்லா விக்கிரகங்களும் மரகதப் பச்சைக் கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோயிலிலும் கிடையாது.
அத்தனை வியப்புக்குரிய இத்தலத்து வள்ளி மணவாளப் பெருமானை வணங்கினால் வேண்டும் வரங்களைப் பெறலாம்.
சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேகம் மிக விஷேஷமானது.


அண்டர்பதி குடியேற என்ற திருப்புகழ் வேண்டுவன தரும் திருப்புகழ். சொந்த வீடு வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் இதைப் பாடுகிறார்கள். வீடு, தொழில், திருமணம், செல்வம், மோட்சம் என்று அனைத்தையம் தரும் திருப்புகழ் இது.
 வாழ்வு செழிக்க குடும்பம் சிறக்க கலியுகத்தில் உத்தரவு தந்து தானே உத்திரவாதமாகவும் இருந்து அருளுகிறான் சிறுவைச் சிறுவன் சிங்காரவேலவன்.

சொந்த வீடு கட்ட,வாங்க இந்த கோவிலில் மனமுருகி பாடும் இனிய தமிழ் திருப்புகழ் பாடல்.. 

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா

சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. 

ஆறு வாரம் , ஒரே கிழமை சென்று வழிபட்டால் நல்லது என்றார்கள்..
தேவர்கள் இருந்து அமுதுண்ட இடம்.
தேவேந்திர பட்டணம் கிடைக்கபபட்டது
அர்ச்சனைத்திருப்புகழ் பாடல் பெற்ற இடம்
இந்திரனுக்கு இந்திரபதவி கிடைத்தது
இலவகுசர்கள் இராமரின் அசுவத்தைக் கட்டிய இடம்
இராமனுடன் பொரிட அதிகாரம் பெற்ற இடம
இராமனுடன் சிறுவர்கள் போரிட்டு வென்று ஜெயநகராக்கிய இடம்
ஒரேதிருப்புகழ்மூலம் ஐந்து பலன்களைத்த் தரும் தலம்
மரகதப்பச்சைக்கல்லில் ஜொலிக்கும் அற்புதத்தெயவத் திருவுருவங்கள் கொண்ட திருத்தலம்
கலியுகத்தில் பேசும் த்மிழ்க்கடவுளாகத்திகழும் சிறுவாபுரி முருகன் கோவில் அமைந்த பெருமை
முருகம்மையார் கைதழைக்கச் செய்தது
என எடுத்தியம்ப முடியாத எண்ணிகையில் பெருமைகள் கொண்டதலமாகும். 
 

[Siruvapuri+(1+of+1)-3.jpg][Siruvapuri+(1+of+1)-4.jpg]


Siruvapuri murgan Temple