Friday, July 1, 2011

குங்குமம் காப்பாள் குங்குமவல்லி


தாயார் குங்குமவல்லி

[diwali-lamps.bmp]


 மங்கல மங்கையர் அணியும் குங்குமம், வளையல் ஆகியவை சௌபாக்கிய சின்னங்களாகும்.

திருச்சி, உறையூர், சாலைரோட்டில் ஸ்ரீ குங்குமவல்லலி அம்பிகை சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. 

கர்ப்பிணி பெண்கள் துயர்நீக்க தாயுமானவர் தானாக வந்த காரணத்தினால் தான்தோன்றீஸ்வரர் என இக்கோவில் பெயர் பெற்றது. 

இக்கோவிலில் வீற்றிருக்கும் வளைகாப்பு நாயகி என போற்றப்படும் குங்குமவல்லி அம்பிகைக்கு ஆண்டு தோறும் தை மாதம் "வளையல்காப்பு' உற்சவம் நடைபெறும்.



 அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

பொதுவாக ஆலயங்களில் நவகிரகங்கள் தனியாகவோ, தம்பதியராகவோ அல்லது வாகனத்துடனோ காணப்படுவது வழக்கம். ஆனால் இங்கு நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதராய் வாகனங்களில் எழுந்தருளியிருப்பது கோயிலின் தனி சிறப்பாகும். ஆதலால் இக்கோயில் சிறந்த கிரக பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

தெற்கு பிராகரத்தில் கம்பீரமாக காட்சி தரும் தில்லைகாளிக்கு பவுர்ணமியன்று சிறப்பான பூஜையும், யாகமும் நடைபெறுகிறது. இருபத்தேழு வகையான அபூர்வ மூலிகைகளுடன் சிறிதளவு மிளகாய் வற்றலும் இந்த யாகத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்வதால் எப்பேர்ப்பட்ட மனக்கஷ்டமும் நீங்கும். கை, கால் வலி உள்ளவர்கள் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுகின்றனர்.
[Image1]
அருள்பாலிக்கும் குங்குமவல்லி அம்பிக்கைக்கு வருடந்தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வளைகாப்பு உற்சவ விழாவில் கர்ப்பிணிகளும், குழந்தை பாக்கியம், மணப்பேறு வேண்டுபவர்களும் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். 
 அம்மனை ஆயிரக்கணக்கான வளையல்களைக் கொண்டு அலங்காரம் செய்யும் வளையல்களை  பெண்களை அம்மனாக பாவித்து அவர்களுக்கும் அணிவிப்பர். 

வெள்ளிக்கிழமையன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவிப்பதால், அவர்கள் சுகப் பிரசவத்தில் குழந்தை பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. சனிக்கிழமையன்று குழந்தை இல்லாத பெண்களுக்கு வளையல் அணிவிக்க, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும். 

ஞாயிறன்று மணமாகாத பெண்கள் வளையல் அணிந்து கொள்ள, அவர்களுக்கு விரைவாக திருமணம் நடந்தேறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.
080130-IndianBangles_thumb.jpg
செல்வவளம் தரும் மகாலட்சுமி சன்னதிக்கு நேராக வில்வதளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மகாலட்சுமியின் அம்சமே வில்வம் என்பதால், இத்தகைய அமைப்பு இயற்கையாகவே ஏற்பட்டுள்ள  மிகவும் விசேஷமான அமைப்பு.
அனுமான்
[Gal1]
 பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் பூஜை செய்தால் தரித்திர நாசம் ஏற்படும். 
தானாக தோன்றிய சிவன்  "தான் தோன்றீஸ்வரர்' 
பார்வதிதேவி, பெண்களுக்கு தாயாய் இருந்து . குங்குமம் காப்பாள். அவளுக்கு "குங்குமவல்லி' என்ற திருநாமம் ....
தான்தோன்றீஸ்வரர்-குங்குமவல்லி
[Gal1]
கர்ப்பமடைந்த பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக, இங்கிருந்து வளையல் பிரசாதம் பெற்று அணிந்து கொள்கின்றனர்.
நிறை மாத கர்ப்பிணிகளுக்கு வீட்டிலிருந்து யாராவது வந்து வளையல் வாங்கிச் சென்று வீட்டிலேயே அணிவிக்கலாம்.
ஏற்கனவே வளைகாப்பு முடிந்திருந்தாலும், இவ்வளையலை கூடுதலாக அணிந்து கொள்ளலாம். இந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகிறது. கர்ப்பிணிகளுக்கு ஸ்பெஷல் பிரசாதமாக வளையல் தரும் கோயில்.
குழந்தை பிறந்த பிறகு 41 நாட்கள் கழித்து, மீண்டும் கோயிலுக்கு வந்து அம்பிகைக்கு நம்மால் ஆன அளவு எண்ணிக்கையில் வளையல் பூட்ட வேண்டும். வளையல் மாலையும் அணிவிக்கிறார்கள்.
.

19 comments:

  1. Good post.thanks

    ReplyDelete
  2. வளையோசை போன்ற மங்கலகரமான பதிவு.

    தான்தோன்றீஸ்வரர் குங்குமவல்லித்தாயார் அழகான பெயர்கள்.

    உள்ளூரிலேயே இருந்தும் இதுவரை போய் பார்க்காத இந்தக் கோயிலை தங்கள் பதிவின் மூலம் தரிஸிக்கும் பாக்யம் பெற்றேன்.

    செட்டிப்பெண்ணுக்கு பிரஸவம் பார்க்க வந்த தாயும் ஆனவர் (தாயுமானவர்) கதை தான் தெரியும்.

    காந்திமதி பற்றிய கதை இன்று உங்கள் மூலமே அறிந்து கொண்டேன்.

    நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அம்மா தாயே இந்த அடியேனை காப்பாற்று

    ReplyDelete
  4. kavitendral panneerselvam to me

    அன்பு சகோதரிக்கு ! தங்களின் குங்குமம் காப்பாள் குங்குமவல்லி
    உங்களையும் ,என்னையும் காப்பாள்.//

    நன்றி. கருத்துக்கு..

    ReplyDelete
  5. நான் உறையூர்தான். மிகவும் சிறிய கோவிலாக இருந்தது பிரசித்தி பெற்ற கோவிலாகி விட்டது. எந்த அம்மன் கோவிலுக்கு சென்றாலும் வளையல் வாங்கிஸ் செல்லும் பழக்கம் வந்துவிட்டது. இதேபோல வளைகாப்பு விசேசம் நெல்லை காந்திமதியம்மனுக்கும் நடைபெறுகிறது.

    ReplyDelete
  6. மங்களம் அருளும்
    தங்கமான பதிவு
    குங்கும வல்லியின்
    சிங்காரப் பதிவு

    ReplyDelete
  7. மங்களகரமான மனம் கவரும்,பக்தி மணம் கமழும் பதிவு!

    ReplyDelete
  8. கர்ப்பிணியின் துயர் களைய கடவுள் இறங்கி வந்த இடம். அருமையான பகிர்வு.

    ReplyDelete
  9. ஓ....வெள்ளிக் கிழமை...மங்களகரமான பதிவு.

    ReplyDelete
  10. நல்ல பதிவு.
    ஒவ்வொரு பதிவிலும் புது புது தகவல்கள்.
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  11. குங்கும வல்லித்தாயார் தர்சனம் கிடைத்தது.

    ReplyDelete
  12. ’குங்குமவல்லி’-யின் அறிமுகமும், ஸ்தல புராணமும் சிறப்பு.

    வாழ்வின் அழகியலை ரசிக்க அறிந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  13. தகவல்களும்,படங்களும் அற்புதம்

    ReplyDelete
  14. குங்குமமாய் சிவந்து
    சிறந்த
    அற்புத ஆன்மீகப் பதிவு
    நன்றி மேடம்

    ReplyDelete
  15. இராஜராஜெஸ்வரித் தாயே என்னமோ தெரியவில்லை
    இங்கு வரும்போதெல்லாம் வெறுங்கையோடு வந்து
    போவதுபோல் ஒரு உணர்வு.அதுக்குக் காரணம் நான்
    சொல்லவே தேவை இல்லை.இருந்தாலும் சொல்கின்றேன்
    அம்பாளுடைய தரிசனத்தை நேரில்க்கண்டு தரிசித்ததுபோல் உள்
    உணர்வுகளைக் கொடுக்கின்றது தங்களின் புகைப்படத் தொகுப்பும்
    விளக்கங்களும் அருமையிலும் அருமை!.... வாழ்த்துக்கள்
    சகோதரி. மிக்க நன்றி பகிர்வுக்கு...

    ReplyDelete
  16. ஸ்ரீ ராம ஸ்தோத்ரம்
    ==================
    ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!

    லோகாபிராமம் ஸ்ரீராமம்
    பூயோ பூயோ நமாம்யஹம்!!-1

    ஆர்த்தானாமார்த்திஹந்தாரம்
    பீதானாம் பீதி நாசனம்!

    த்விஷதாம் காலதண்டம்தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்!!-2

    நம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருதசராய ச!

    கண்டிதாகிலதைத்யாய ராமாயாபந்நிவாரிணே!!-3

    ReplyDelete
  17. நல்ல தகவல் . நன்றி சகோதரி

    ReplyDelete
  18. நல்ல தகவல் . நன்றி சகோதரி

    ReplyDelete