Saturday, July 16, 2011

குறைவிலாதருளும் குச்சனூர் பகவான்


அழகான செழிப்பான தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.

[Gal1]

இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இடம் குச்சனூர்தான்.
[kuchanur.jpg]


சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் துவங்கும் புதிய தொழில்கள் வளர்ச்சி அடையவும், வணிகங்கள் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாட்டிலிருந்தும் இந்துமத நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.

Sri Saneeswara Baghwan (Saturn) Temple – Kuchanur

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மனைவி மைத்ரேயா அங்கு எருமைக் கன்றுடன் கோவிலை 19 முறை வலம் வந்து, அதை தானமாக வழங்கினார். பின்னர், 19 வகையான விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்தார். பின், கோவிலில் நடந்த உச்சிகால பூஜையில் கலந்து கொண்டார். 

   General India news in detail

தல வரலாறு

இப்பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினமும் இறைவனிடம் வேண்டி வந்தான். இப்படி அவன் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும், அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான்.

இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளானான். மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

இவனது வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவர், "முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடிக்கிறது. அவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உன் தந்தையின் முற்பிறவி பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன." என்றார்.

சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

சனீஸ்வர பகவானும் அதற்கு ஒப்புக் கொண்டு ஏழரை நாழிகை காலத்திற்கு சந்திரவதனனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் "இந்த ஏழரை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்" என்று சொல்லி மறைந்தார். பின்பு அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்.

சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் தன்னுடைய வழிபாடு, சனி தோசம் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்,  அந்த செண்பகநல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான். இதன்பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று ஆகிவிட்டது.  "தினகரன் மான்மியம்" என்கிற பெயரில் வெளியான பழமையான நூலில் இந்த தலத்திற்கான வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
[sani.jpg]
வழிபாடுகளும் சிறப்புகளும்
சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.

[Gal1]
அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மஹத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.
[Gal1]

குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Sri Saneeswara Baghwan (Saturn) Temple – Kuchanur
  இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.
இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.


 தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் வளாகத்தில் வலது புறத்தில் சோணை கருப்பணசுவாமி காவல் தெய்வமாக உள்ளதால் அதற்கு ஒரு நாள் தனி திருவிழாவே நடத்தப்படுகிறது. கோயிலில் 8 அடி உயரத்தில் குதிரை மேல் கருப்பசாமி அரிவாளுடன் அமர்ந்திருக்கும் சிலை உள்ளது. இந்த சிலைக்கு கீழ் 5 அங்குல சுற்றளவுள்ள ஒரு ஓட்டை உள்ளது. பக்தர்கள் வழங்கும் மது இதில் ஊற்றப்படும். ஆண்டு தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலும் குறிப்பிட்ட அளவு (100 குவாட்டர்) மது வாங்கப்படும்.குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன்  துவங்கி பூலாநந்தபுரம் ராஜகம்பள மாறைய நாயக்கர் உறவின் முறையால் கொடிக்கம்பத்திற்கு நீர் ஊற்றப்பட்ட பின், காலை காக்கை சகுனம் பார்த்து கொடியேற்றத்துடன் விழா துவங்கி சனிக்கிழமைகளில் விழா நடக்கும். சிறப்பு பூஜை,  திருக்கல்யாணம்,  மூன்றாவது சனி வாரம் ஆடி பெருத்திருவிழா கொண்டாடப்படும்.  சிறப்பு பூஜை, சுவாமி புறப்பாடு,  லாட சித்தர் பீடத்தில் பூஜை, முளைப்பாரி, கரகம் கலக்குதல், மஞ்சள் நீராட்டம்,  சோனைக்கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்தல், கொடியிறக்கி பகவானுக்கு விசேஷ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கும்.


 சனிபகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீங்கினதாக வரலாறு பெற்ற தலம். சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுதல் மிகவும் சிறப்பு.
[Gal1][Gal1]


Sri Saneeswara Baghwan (Saturn) Temple – Kuchanur

Sri Saneeswara Baghwan (Saturn) Temple – Kuchanur

பயண வசதி

தேனி நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் குச்சனூர் ஊருக்கு தேனியிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி  இருக்கிறது. திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

24 comments:

 1. குச்சனூர் கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை.
  உங்கள் கட்டுரையை படித்தபின்னர் போகவேண்டும் போல
  ஒரு ஆசை மனதில் தோன்றிவிட்டது.
  புகைப்படங்களும் தளவரலாறும் இன்பச்சுவை ஊட்டுகிறது.

  நன்றி.

  ReplyDelete
 2. குச்சனூர் போகனும்னு ரொம்ப நாள் ஆசை. தல வரலாறு, புகைப்படங்கள் நன்றாக உள்ளன.

  ReplyDelete
 3. படங்களும் பதிவும் அருமை. இங்கெல்லாம் எப்போது போகப் போகிறேனோ...!

  ReplyDelete
 4. பதிவு அருமையாக உள்ளது

  ReplyDelete
 5. ஆஹா...சனிக்கிழமைக்கு மிகச் சரியாக
  குச்சனூர் சனீஸ்வரனைப் பதிவிட்டிருக்கிறீர்கள்
  படங்களும் ஸ்தல புராணத்தையும் மிக அழகாக
  விளக்கியிருக்கிறீர்கள்.நன்றி
  (பெரிய இலாகாவை வைத்துக்கொண்டு செயல்பட்டால்கூட
  உங்களைப்போல இத்தனை முறையாக தெளிவாக
  பதிவிட முடியாது என்பது நிச்சயம்
  அது எப்படி சாத்தியமாகிறது என ஒரு பதிவு போட்டால் உண்மையில்
  வாரம் ஒரு பதிவு போடவே திணரும் எங்களுக்கெல்லாம்
  நல்வழிகாட்டியதாக இருக்கும்)
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. புகைப்படங்களும் தளவரலாறும் இன்பச்சுவை ஊட்டுகிறது.

  ReplyDelete
 7. கர்மகாரகன் என அழைக்கப் பெறும்
  சனீஸ்வரன் எழுந்தருளியிருந்து
  அருள்பாலித்து வரும் குச்சனூர் கோவில்
  குறித்த தகவல்கள் பிரமாதம்.

  அந்த மன்னன் வரலாறும்,
  சந்திரவதனம் தியாகமும் சிலிர்க்க வைக்கிறது.

  பகிர்வுக்கு நன்றி.

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 8. சனிக்கிழமையும் அதுவுமா,சனி பகவான் தரிசனம்.பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 9. சனிக்கிழமைக்கு சனி பகவான் கோவிலா? பொருத்தமான நல்ல பதிவு!

  ReplyDelete
 10. குச்சனூர் பற்றிய அருமையான தகவல்கள்.திருநள்ளாறு பிரபலமான அளவு குச்சனூர் ஆகவில்லை என நினைக்கிறேன்.
  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 11. பதிவும் படங்களும் அருமை ...

  ReplyDelete
 12. குச்சனூர் பற்றி தல வரலாறும் படங்களும் மிகவும் அருமை. நான் குச்சனூர் பற்றி இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன்..நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..

  ReplyDelete
 13. புதிய தகவல்களுக்கு நன்றி!

  ReplyDelete
 14. அட.!.உங்களோட ஒவ்வொரு பதிவும் பதிவு செய்யப் படவேண்டியவை ஒவ்வொருவரின் ஹார்ட் டிஸ்கிலும்.. நிச்சயம் பயன்படும். நன்றி இந்த பதிவிற்கு

  ReplyDelete
 15. படங்களும் தகவல்களும் முழுமையாக இருக்கிறது.நன்று.

  ReplyDelete
 16. @@

  Super b content. expected for long time. I love this temple.

  Regards,

  D.ANANDHARAJ/

  நன்றி.

  ReplyDelete
 17. அருமையான பதிவு.
  நிறைய புதிய தகவல்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. நவக்கிரஹ ஸ்தலங்கள் அனைத்தும் போய் வந்துள்ளேன். அவற்றில் திருநள்ளாறும் உண்டு கஞ்சனூரும் உண்டு.

  தமிழ்நாட்டிலேயே சனிபகவானுக்கு என்று தனியாக ஒரு கோயில் குச்சனூரில் இருப்பதாக இப்போது தான் முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன்.

  கோயில், பின்னனியில் மரங்கள், குளம், மூலவர், உற்சவ மூர்த்தி,
  காவல் தெய்வமாய் குதிரை மேல் கருப்பண்ணஸ்வாமி, அவருக்கான நைவேத்யமான உற்சாக பான பாட்டில்கள் என அனைத்துத் தகவலுமே ’கிக்’ ஏற்படுத்துவதாக உள்ளன.

  தேனி, கம்பம், சுரபிநதி, சுருளி ஆறு அடடா ... எல்லாமே கேள்விப்பட்ட அழகான செழிப்பான இடங்கள் தான்.

  //"குறைவிலாதருளும் குச்சனூர் பகவான்"//

  தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் தலைவி என்றும் ’தங்கமே தங்கம்’ தான்.

  ஸ்தல புராண கதையில் குறிப்பிட்டுள்ளது போல, யாருக்கும் சனிபகவான் அதிகத்தொல்லைகள் தராமல் ஆளை விட்டால் சரிதான்.

  நல்ல பயனுள்ள பதிவு. நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

  ReplyDelete
 19. குச்சனூர் சனிஸ்வரர் ரொம்பவும் அமைதியானவர். நல்லது செய்வார். திரு நள்ளாறு சனிஸ்வரர் சில சமயம் சோதித்து விடுவார். மிக அருகில் இருக்கும் வீரபாண்டியை பார்த்தீர்களா? துள்ளி ஓடும் வெள்ளி நீர் அருமையாக இருக்கும்.

  ReplyDelete
 20. குச்சனூர் சனி பகவான் பொங்கு சனீஸ்வரர் என்பதும் சிறப்பு.

  ReplyDelete
 21. "ஆடிப் பெருந்திருவிழா" - இந்த வருடத்தின் முதல் ஆடி சனி 23/07/2011 (ஆடி 7)....(அப்படித்தானே மேடம்.....)
  தல வரலாறு,
  இதில் மறைமுகமாக ஒரு விசயம் நமக்கு உணர்த்துகிறது.... போன ஜென்மத்தில் பாவம் செய்தவரை இந்த ஜென்மத்தில் சனி பகவான் வாட்டிவதைத்து வருகிறார்.. அதனால் இந்த ஜென்மத்தில் பாவம் செய்யாமல் அடுத்த ஜென்மத்திலாவது எந்த துன்பமும் இல்லாமல் வாழ்வோம்

  நம்பிக்கை உள்ளவர் ஒரு முறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவோம்...

  ReplyDelete
 22. ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ள நீங்கள் எனது ஆன்மீக தளத்திற்கு வரவும் http://maayaulagam4u.blogspot.com

  ReplyDelete
 23. ராமாய ராமபத்ராய

  ராமசந்த்ராய வேதஸே!

  ரகுநாதாய நாதாய

  ஸீதாயா: பதயே நம:!!-4

  அக்ரத: ப்ருஷ்டதச்சைவ

  பார்ஸ்வதஸ்ய மஹாபலெள!

  ஆகர்ண பூர்ணதந்வாநெள

  ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணெள!!-5

  ஸந்நத்த: கவசீ கட்கீ

  சாபபாணதரோ யுவா!

  கச்சந் மமாக்ரதோ நித்யம்

  ராம: பாது ஸலக்ஷ்மண:!!-6

  ReplyDelete