Wednesday, July 6, 2011

தீர்க்கமாய் அருளும் திண்டல்மலை முருகன்

[Image1]
எந்தாயும் எனக்கருள் தந்தையுமாய் குன்றுதோராடும் குமரன் குடிகொண்டு குறைவிலாதருளும் கொங்குநாட்டுத்திருத்தலம் திண்டல்மலை.

ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து
ரம்யமாய் காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.

 இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
[Gal1]

இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பக் குமரனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய வேண்டிக் கொண்டனர். வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்ற வரலாறு உண்டு. இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.


கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
தீபஸ்தம்பம்
[Gal1]

இதில் கார்த்திகை தீபத்தன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு நடத்தி வருகின்றனர். தீபஸ்தம்பத்தின் நான்கு புறத்திலும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

திருவிழா : மாதம்தோறும் கிருத்திகை, அமாவாசை, சஷ்டி ஆகிய நாட்களில் உற்சவம் நடக்கிறது. ஆண்டு முழுவதும் முறைப்படி பற்பல உற்சவங்கள் நடக்கிறது. தமிழ்ப்புத்தாண்டு விழாவின் போது மிகவும் சிறப்பான உற்சவமாக கொண்டாடுகின்றனர். சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், தலை ஆடி, ஆடி 18, ஆவணி அவிட்டம், ஆடிவெள்ளிகள், விநாயகசதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் நடக்கிறது
சிறப்பு : கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
[Gal1]
முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

பிரார்த்தனை :  செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய எண்ணங்களை எண்ணியபடியே வேலாயுதசாமி நிறைவேற்றுகிறார்.

புதிய வாகனங்கள் வாங்குவோர் திண்டல் மலைக்கு சென்று வேலாயுதசாமி கோயிலில் சிறப்பு பூஜை செய்கின்றனர்.
மயில் வாகனம்

நேர்த்திக்கடன் : பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

தல சிறப்பு : நெடுஞ்சாலையின் தொடக்கத்தில் அழகிய நுழைவாயிலும், ஓங்கி உயர்ந்த வளைவின் முகப்பில் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை, மயில்வாகனம், சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் பக்தர்களை வரவேற்கின்றனர். முதலில் காணப்படும் அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்துள்ளார். மெய்யறிவிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட்டு செல்லும் பக்தர்களின் குறைகள் தீர்கிறது.

அடுத்ததாக இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முன்மண்டப முகப்பில் வேலாயுதசாமி சிலை அமையப்பெற்றுள்ளது. அங்கிருந்து தொடங்கும் படிகளை கடந்தால் இடும்பன் கோயிலை அடையலாம். 

காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் வேலாயுதசாமி கருவறையில் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை போக்குகிறார்.
 மூலவர் வேலாயுத சுவாமி
[Gal1]
மலைமகள் மகனாக, மாற்றார் கூற்றாக வேல் தாங்கி வேலாயுதசாமி உள்ளார். தீராவினை தீர்க்கும் வேலுடன் காட்சி தரும் திண்டல்மலை முருகனை வழிபடுவோர் எல்லாம் தெளிவடைகின்றனர்.கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்று தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இதில் சமய பெரியார்களான சன்னியாசிகள் வாழ்ந்த சிறப்பு பெற்றது. இந்த தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச்சுனையில் வற்றா நீரூற்று ஆண்டவனின் அபிஷேகத்திற்கும், பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.
கோயில் தீர்த்தம்
[Gal1]
இத்தலத்திற்கு அருகில் கருப்பணசாமி கோயில்கள் ஐந்து உள்ளது. கருப்பணசாமி வைணவத் தாக்கம் உள்ள தெய்வ வழிபாடாகும். மாரியம்மன் கோயில்கள் மூன்று இங்குள்ளது. அவை சக்தி வழிபாட்டின் பெருமையை விளக்குவதாக உள்ளது.

ஈரோடு நகரின் வளத்திறகும், செழிப்பிற்கும் தீர்க்கமாய் திண்டல் முருகன் அருட் கண்பார்வையில் இந்நகரம் அமைந்திருப்பதே என்று இந்நகரமக்களின் சிறப்பான எண்ணம் ஆகும்.
மங்களகரமான மஞ்சள் உற்பத்தியிலும், ஜமுக்காள நெசவிலும் தன்னைகரில்லாத புகழ் பெற்றது.. ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது.
படிமம்:Turmeric-powder.jpg

திண்டல்மலையில் முருகப்பெருமானுக்குத் தங்கரதம்


ஒரு நாளைக்கு மூன்றுகால பூஜைகள் நடக்கிறது. காலை 7 மணிக்கு காலை சந்தி பூஜையும், 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடக்கிறது. காலை 6 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணியளவில் அபிஷேக ஆராதனை நடக்கிறது.

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில் ,
திண்டல்மலை - 638 009
ஈரோடு மாவட்டம்

42 comments:

 1. @FOOD said...
  முருகா, முருகா, முருகா! அருமையா இருந்ததுங்க.//

  கருத்துரைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 2. @ from kavitendral panneerselvam//

  தீர்க்கமாய் அருளும் திண்டல்மலை முருகன் உங்களுக்கும் நிறைய அருளுவார் !//

  அருளுரைக்கு நன்றி.

  ReplyDelete
 3. பலமுறை சென்று தரிசித்திருந்தாலும்,
  இன்று
  தங்களது ஆக்கத்தை கண்டபிறகு
  விரைவில் சென்று தரிசிக்க வேண்டும்
  என்னும் ஆவலைத் தந்திருக்கிறது.

  வாழ்த்துக்கள்..

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 4. திண்டல்மலை முருகன்.... நல்ல தரிசனம் செய்து வைக்கும் உங்களுக்கு முருகன் அருள் கிடைக்கட்டும்....

  ReplyDelete
 5. முருகா முருகா முருகா!

  அனைத்துப்படங்களும் செய்திகளும் வழக்கம் போல அருமையோ அருமை.

  திண்டல்மலையில் முருகப்பெருமானுக்குத் தங்கரதம்
  வெகு அழகாக காட்டப்பட்டுள்ளது.

  வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

  அந்தத்தங்க ரதம் போன்றே உங்களின் அனைத்துப்பதிவுகளும் ரிச்சோ ரிச்.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி. vgk

  ReplyDelete
 6. Aha!
  Enna alagu enna alagu antha thanga radham!!!!!!!!
  Today is sashti and i justnow i finished my prayer to Muruga and opening the computer, here is also Muruga with Thangaradham...
  Felt very happy Rajeswari.
  Very nice post.
  Thanks.
  viji

  ReplyDelete
 7. திருத்தலங்களை தரிசிக்க விருப்பம் கொண்டால் பயண ஏற்பாடு எதுவும் செய்யத் தேவை இல்லை. இணியத்தைத் திறந்து “இராஜராஜேஸ்வரி”யின் வலைப்பூவை ஒரு வலம் வந்தால் போதும்.

  அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்து தெய்வங்களின் அருளும், தரிசனமும் கிடைக்கப்பெறலாம்.

  சிறப்பான தலம். சிறப்பான பதிவு.

  ReplyDelete
 8. அப்பனே முருகா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே

  ReplyDelete
 9. முருகா
  முத்துக் குமரா என்பேன்
  இதயம் திறத்து
  இறைவனை பாடும்
  எந்த மொழியும்
  மந்திரம் என்பேன்
  தலைவனை அழைக்க
  தடையேதும் உண்டோ
  திண்டல்மலை முருகா
  அருள்க என்பேன்

  ReplyDelete
 10. Your blog is very interestering. Best wishes. - Venkat. Visit www.hellovenki.blogspot.com and sent your comments

  ReplyDelete
 11. திண்டல்மலை முருகனின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 12. அருமையான பதிவு.
  நல்ல படத்தொகுப்பு.
  நிறைய புதிய செய்திகள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. வழக்கம்போல் அருமை...
  திண்டல்மலை முருகனின் அருளைப் பெற்றேன்..

  ReplyDelete
 14. திண்டல்மலை முருகனிள் அருள் கிடைத்தது.

  ReplyDelete
 15. என்னுடைய டூர் லிஸ்டில் இதுவும் சேர்ந்துவிட்டது. சேர மண்டலத்து கோவில்கள் ரொம்பவும் பார்த்ததில்லை. நன்றி.

  ReplyDelete
 16. முருகனின் பெருமைகளை சொல்லியதுக்கு நன்றி ..


  வலைசரத்தில் இன்று

  வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க

  ReplyDelete
 17. முருக தரிசனம் அருமை!தெய்வீக அனுபவம்!

  ReplyDelete
 18. எங்கள் வீட்டில் எதற்குமே முருகனை அழைத்தே வழக்கம். முன்பெல்லாம் லெட்டர் எழுதும் காலத்தில் கடிதங்களில் பிள்ளையார் சுழி போட்டதும் 'முருகன் துணை' தான் அடுத்து போடப் படும்!

  ReplyDelete
 19. @ சிவ.சி.மா. ஜானகிராமன் s//

  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. @ !* வேடந்தாங்கல் - கருன் *! s//

  நன்றி.

  ReplyDelete
 21. @ வெங்கட் நாகராஜ் said...
  திண்டல்மலை முருகன்.... நல்ல தரிசனம் செய்து வைக்கும் உங்களுக்கு முருகன் அருள் கிடைக்கட்டும்....//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 22. @வை.கோபாலகிருஷ்ணன் sa//

  பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 23. @ viji said...//

  சஷ்டியன்று கிடைத்த தங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 24. @ சத்ரியன் said...

  சிற்ப்பான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 25. @ கவி அழகன் said...
  அப்பனே முருகா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே//

  முருகா..முருகா..!

  ReplyDelete
 26. @ A.R.ராஜகோபாலன் said...//

  முருகன் அருள்.

  ReplyDelete
 27. @கோவை2தில்லி said...
  திண்டல்மலை முருகனின் தரிசனம் கிடைக்கப் பெற்றோம். பகிர்வுக்கு நன்றிங்க.//

  கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 28. @thnavel said...
  அருமையான பதிவு.
  நல்ல படத்தொகுப்பு.
  நிறைய புதிய செய்திகள்.
  வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 29. @# கவிதை வீதி # சௌந்தர் said...
  வழக்கம்போல் அருமை...
  திண்டல்மலை முருகனின் அருளைப் பெற்றேன்.//

  நன்றி.

  ReplyDelete
 30. @மாதேவி said...
  திண்டல்மலை முருகனிள் அருள் கிடைத்தது.//

  நன்றி.

  ReplyDelete
 31. @ சாகம்பரி said...
  என்னுடைய டூர் லிஸ்டில் இதுவும் சேர்ந்துவிட்டது. சேர மண்டலத்து கோவில்கள் ரொம்பவும் பார்த்ததில்லை. நன்றி.//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 32. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...
  முருகனின் பெருமைகளை சொல்லியதுக்கு நன்றி ..//
  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 33. @சென்னை பித்தன் said...
  முருக தரிசனம் அருமை!தெய்வீக அனுபவம்!//

  கருத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 34. @ middleclassmadhavi said...
  thanks!//

  நன்றி.

  ReplyDelete
 35. @ஸ்ரீராம். said...
  எங்கள் வீட்டில் எதற்குமே முருகனை அழைத்தே வழக்கம். முன்பெல்லாம் லெட்டர் எழுதும் காலத்தில் கடிதங்களில் பிள்ளையார் சுழி போட்டதும் 'முருகன் துணை' தான் அடுத்து போடப் படும்!//

  முருகன் துணை. நன்றி. நன்றி..

  ReplyDelete
 36. தீண்டல் மலை முருகன் கோவில்படி தீண்டும் நாள் என்னாளோ என ஏக்கத்தை வரவழைத்து விட்டீர்கள்.

  ReplyDelete
 37. I have added the details to wiki, if possible you can also contribute.

  ReplyDelete
 38. ஸ்ரீ ராம ஸ்தோத்ரம்
  ==================
  ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!

  லோகாபிராமம் ஸ்ரீராமம்
  பூயோ பூயோ நமாம்யஹம்!!-1

  ஆர்த்தானாமார்த்திஹந்தாரம்
  பீதானாம் பீதி நாசனம்!

  த்விஷதாம் காலதண்டம்தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்!!-2

  நம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருதசராய ச!

  கண்டிதாகிலதைத்யாய ராமாயாபந்நிவாரிணே!!-3

  ReplyDelete