Friday, January 6, 2012

தில்லை அம்பல நடராஜா



 Golden Bilva Leaves


குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில்பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும்காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே!’

திருநாவுக்கரசரின் திருப்பாட்டு நடராஜரைஅழகாக நெஞ்சினிக்கும் தமிழில் நிழற்படம் பிடித்து மகிழ்விக்கிறது.

தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா
தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா

பல வித நாடும் கலை ஏடும் பணிவுடன் உனையே துதி பாடும்
கலை அலங்கார பாண்டிய ராணி நேசா மலையின் வாசா
மங்கா மதியானவா
கோவில்’ என்று சொன்னாலே அந்தத் தமிழ்ப் பதம்-
அழகுப்பதம் தூக்கி ஆடும் சிதம்பரத்தையே குறிக்கும்.

பழைமையான கோயில்தான் சிதம்பரம்! ஆனால் என்றும்
புதுமையாக தகதகக்கும் தங்கப் பந்தலுடன் விளங்குகிறது.

‘கனக சபை மேவும் எனது குருநாதா’ எனத் திருப்புகழ் பாடுகிறது.

காலையில் கதிரவன் உதிப்பதைக் காண்கிறார் கம்பர்.

சூரியனின் வீரியக் கதிர்கள் சுற்றி விரிகின்றன.

நடராஜர் வடிவத்தை அதில் கண்டு ஆனந்திக்கிறார் கவியரசர் கம்பர்.

ஆன்மாவை லயிக்கச் செய்வதே ஆலயம்.

சிதம்பரம் கோவில் அத்தகைய அனுபவத்தைச் சுந்தரருக்குத் தந்தது என விவரிக்கிறது, ‘
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள’ என்ற பெரியபுராணப் பாடல்.

நடராஜப் பெருமானுக்கு வலப்பக்கத் திலேயே அருவமாக ஆராதிக்கப்படும் சிதம்பர ரகசியத் திருச்சந்நிதி அமைந்துள்ளது. பஞ்ச பூதத் தலங்களில் தில்லை ஆகாயத்தலமாகப் போற்றப் பெறுகிறது.

கண்ணுதல் வானவன் கனகச் சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம்’ என்கிறார். சிதம்பரம் ஆகாயத் தலம் என்பதால் நடராஜரை ‘வானவன்’ என பொருத்தமுறப்பெயரிட்டு அழைக்கிறார் கவிச்சக்கரவர்த்தி.

அம்பலத்தரசே! அருமருந்தே!ஆனந்தத் தேனே! அருள்விருந்தே!
எனக் கைத் தாளமிட்டுக் களிக்கிறார் வள்ளற் பெருமான்.

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகுமா?
இடதுபதம் தூக்கி ஆடும் நடராஜன் அடிபணிவையே!’

என இசைப்பாடல்கள் ஏற்றிப் போற்றும் சிதம்பர நாதனை சுந்தரமூர்த்தி சுவாமிகள் தரிசித்தார்

உலக இயக்கம் அம்பலக் கூத்தனின் ஆட்டத்தால்தானே தொடர்கிறது! ‘யாவையும் ஆடிடும் என் இறை ஆடவே’ என்பது திருமூலரின் திருமந்திரத்தில் ஒரு மந்திரம்.
எல்லையை மிதித்தாலே நம் தொல்லை வினைகளை இல்லை என்றாக்கும் தில்லை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜரைச் சிதம்பரத்தில் வழிபடுவோம்.

திருவாதிரை என்றால் சிதம்பரம்தான் சிறப்பு.



தில்லையில் மூல மூர்த்தியே உற்சவரும் ஆகிறார்! 
மக்களோடு மக்களாய் உலா வருகிறான் இறைவன்.

யானைப் படைகளின் உதவியுடன் சக்கரம் பூமியில் இறங்கியதேரை தள்ளினர் வீரர்கள்.
"சேந்தனே, தேர் நகரப் பல்லாண்டு பாடு" என்று ஒரு குரல் அசிரீரி..

சேந்தனுக்கு பா எழுந்தது!!

மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்! வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்செய் மண்டபத்து உள்ளே புகுந்து, புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாளுமை கோன், அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே!


மக்கள் எல்லாரும் இப்போது தேரை இழுக்க, தேர் மீண்டும் வலம் வந்தது.
மந்திரங்களுக்கு கட்டுப்படாத இறைவன், மனத்துக்குக் கட்டுப்பட்டான்!
அபிஷேகத்தால் குளிராத இறைவன், அன்புக்குக் குளிர்ந்து போனான்!

சேந்தன் வீட்டுக் களியை நடராசன் உண்டான். அடியவர்கள் எல்லாம் திருவாதிரைக் களி என்று அன்புடன் உண்கின்றனர்!


ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார்.  ""சிதம்பரத்தில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது, நடராஜர் அந்தணர்களிடம், ""நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுகிறேன்,'' என வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை "ரத்னசபாபதி' என்கின்றனர். ரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.





34 comments:

  1. ஆருத்ரா தரிசனத்துக்குச் சிதம்பரம் போக முடியாத குறையைத் தீர்த்து விட்டீர்கள்.

    ReplyDelete
  2. திருவாதிரை:-
    ஆருத்ரா நட்சத்திரத்தை ஆதிரை என்றுகூறுவ்ர். திருவை இணைத்து திருவாதிரை ஆனது. "ஆருத்ரா" என்றால் "ஈரமான" எனப் பொருள். அதாவது ஈரமான கனிந்த மனம் படைத்த நட்சத்திரம் இது. இரக்கமனம் கொண்ட ருத்திரன் இதன் தேவதை. ருத்ரன் என்றால் துயர்துடைப்பவன் எனப் பொருள்.'திருவாதிரையுடன் இணைந்த ருத்ரன் எங்களைக் காக்க வேண்டும்', எங்களுக்கு பாவமன்னிப்பு அளிப்பதுடன் எங்கள் எதிரிகளையும் அழித்து, எங்களுக்கு அருள வேண்டும் என்பதே ஆருத்ரா தரிசனத்தின் கோட்பாடாகும்.

    ReplyDelete
  3. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்பது போல இன்று பதினாறு படங்களை அளித்து, வழக்கம்போல பல நல்ல விளக்கங்களும் அளித்துள்ளீர்கள்.

    ”தில்லை அம்பல நடராஜா”
    நல்லதோர் அழகிய தலைப்பு.

    ReplyDelete
  4. படம் 1
    வட்ட வடிவச்சிலை அழகு

    ReplyDelete
  5. படம்: 2
    இரண்டு புறமும் ஓம் அழகு
    சிலை அழகு, கலை அழகு
    ஏழு தங்க வில்வங்கள் அழகு.

    ReplyDelete
  6. படம் 3, 8, 11 & 15

    சிவகாமசுந்தரி என்ற அம்பாளின் திருநாமம் அழகு.

    இறைவனும் இறைவியும் சேர்ந்து காட்சியளிக்கும் கோலம் அழகு.

    ReplyDelete
  7. படம்: 4
    நடன முத்திரைகள் நல்ல அழகு.
    இடது பாத தனி தரிஸனம் அழகு.

    ReplyDelete
  8. படம்: 5
    நால்வருடன் நால்வரான நமச்சிவாயம் குடும்பமே அழகு.

    [அதிலும் நம் தொந்திப் பிள்ளையார் தனியழகு]

    ReplyDelete
  9. படம்: 6
    ருத்ரதாண்டவக் கோலம் அழகு.

    ReplyDelete
  10. படம்: 7
    தில்லை கோபுரம் அழகு!

    ReplyDelete
  11. படம்: 9
    கோயில் கோபுரத்துடன் காட்டப்பட்டுள்ள குளம் அழகு!

    ReplyDelete
  12. படம்: 10
    களிப்பைத்தரும் களி அழகு, அதன் மேல் உள்ள ஒரு ஜோடி முந்திரிகளும் அழகு!

    ReplyDelete
  13. படம்: 12
    சிவகாம சுந்தரி அம்மன் அழகோ அழகு!

    அவள் கட்டியிருக்கும் புடவைக்கட்டும், புடவை நிறமும் நிறைவைத்தரும் முகமும், அலங்காரப்புறப்பாடும் நல்ல அழகோ அழகு!

    ReplyDelete
  14. படம்: 13, 14 & 16
    ரத யாத்திரைகளில் ஸ்வாமி புறப்பாடும்,
    மக்கள் ஒன்றுகூடி இழுக்கும் கடைசித் தேரும், அழகு.

    ReplyDelete
  15. மொத்தத்தில் அனைத்துமே அழகு! ;))))

    [அழகு......
    அழகு......
    நீ நடந்தால் நடை அழகு......
    நீ சிரித்தால் சிரிப்பழகு ....... என்ற பாடல் வரிகளை என் வாய் ஏனோ இப்போது முணுமுணுக்கிறது]

    மிகவும் அழகான பதிவை இன்றும் கொடுத்து எங்களை அசத்தி விட்டீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    நல்லதொரு அழகான பகிர்வுக்கு நன்றிகள். vgk

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் said...
    படம்: 13, 14 & 16
    ரத யாத்திரைகளில் ஸ்வாமி புறப்பாடும்,
    மக்கள் ஒன்றுகூடி இழுக்கும் கடைசித் தேரும், அழகு./

    அனைத்துப் படங்களையும் விவரித்து அளித்த கருத்துரைகள் பதிவைப் பெருமைப்படுத்தி ஜொலிக்கவைத்தன.. மனம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  17. சென்னை பித்தன் said...
    ஆருத்ரா தரிசனத்துக்குச் சிதம்பரம் போக முடியாத குறையைத் தீர்த்து விட்டீர்கள்.

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  18. சந்திர வம்சம் said...
    திருவாதிரை:-
    ஆருத்ரா நட்சத்திரத்தை ஆதிரை என்றுகூறுவ்ர். திருவை இணைத்து திருவாதிரை ஆனது. "ஆருத்ரா" என்றால் "ஈரமான" எனப் பொருள். அதாவது ஈரமான கனிந்த மனம் படைத்த நட்சத்திரம் இது. இரக்கமனம் கொண்ட ருத்திரன் இதன் தேவதை. ருத்ரன் என்றால் துயர்துடைப்பவன் எனப் பொருள்.'திருவாதிரையுடன் இணைந்த ருத்ரன் எங்களைக் காக்க வேண்டும்', எங்களுக்கு பாவமன்னிப்பு அளிப்பதுடன் எங்கள் எதிரிகளையும் அழித்து, எங்களுக்கு அருள வேண்டும் என்பதே ஆருத்ரா தரிசனத்தின் கோட்பாடாகும்./

    அருமையான விளக்கத்திற்கும் கருத்துரைக்கும்
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  19. திருவாதிரைக்கு அட்வான்ஸ் பதிவா? அருமை.

    ReplyDelete
  20. சிவனின் அருள் பெற்றேன்

    ReplyDelete
  21. ஏதோ தினமா இண்ணைக்கு.இங்க வந்தா கடவுளை ஒரு விநாடியாவது நினைக்க வருது.நன்றி !

    ReplyDelete
  22. நாளை திருவாதிரை - பதிவோ முன்னரே ! வழக்கம் போல அருமையான பதிவும் படமும் விளக்கமும்... நல்வாழ்த்துகள் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ - நட்புடன் சீனா

    ReplyDelete
  23. அழகிய ஆருத்ரா தரிசனம் கண்டு
    குடும்பத்தோடு மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  24. ஆருத்ரா தரிசனத்துக்குச் சிதம்பரம் போக முடியாத குறையைத் தீர்த்து விட்டீர்கள். நன்றி

    ReplyDelete
  25. நடராசரின் அருமையான தரிசனம் பெற்றேன். நன்றிகள்

    ReplyDelete
  26. நடராசரின் அருமையான தரிசனம் பெற்றேன். நன்றிகள்

    ReplyDelete
  27. திருச்சிற்றம்பலம்
    தில்லையம்பலம்.
    மெய்சிலிர்க்க வைத்த பதிவு.

    அருட்கவி வலைத்தளத்தில் அரங்கனுக்குப் பாமாலை சூட்டியிருக்கிறேன். தங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  28. அருமையான பதிவு.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. Yesterday i felt very sad because I cannot open this page.
    I am not able to view pictures.
    Guess how i would feel.
    But luckly today I am able to see all pictures.
    I felt very happy on this aspisious Thirvathirai day I am able to view this Darshan.
    Thankyou Rajeswari.
    vviji

    ReplyDelete
  30. திவ்ய தரிசனம்.....ஆச்சு.
    நன்றி....

    ReplyDelete
  31. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

    ReplyDelete
  32. 1932+14+1=1947 ;)

    ஜொலிக்க வைத்ததாகச் சொன்ன ஒரு பதிலுக்கு நன்றிகள்.

    அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete