Thursday, January 19, 2012

அருளும் "குருவின் குருதஞ்சை பிரகதீஸ்வரர் பாணத்தை விட உயரமான பாணத்தையுடைய லிங்கம் 
சென்னை கந்தாஸ்ரமம்தலத்தில் அருள் பாலிக்கிறது..

ஆயிரம் லிங்கங்களை உள்ளடக்கிய சகஸ்ரலிங்கமாக அமையும். தஞ்சாவூர் லிங்கத்தின் பாணம் (ஆவுடையாருக்கு மேலுள்ள பகுதி) 7 அடி 6 அங்குலம் உயரமுள்ளது.

இந்த சகஸ்ரலிங்கத்தின் பாணம் 8 அடி 1 அங்குலமாக இருக்கும்.

இதன் எதிரே 6 அடி உயர நந்தி உள்ளது.

இந்த அஷ்ட சகஸ்ரலிங்கத்தில் வரிசைக்கு 53 என்ற கணக்கில் 19 வரிசைகளில் 1007 சிறு லிங்கங்கள் இருக்கும்.

பிரமாண்ட லிங்கத்துடன் சேர்த்து 1008 லிங்கங்கள்
என கணக்கில் கொள்ளப்படும். இதன் எடை 20 டன்.
சன்னதியைச் சுற்றி தட்சிணாமூர்த்தி, அலமேலு தாயார்-
வெங்கடாசலபதி, பிரம்மா அருள்வழங்குகின்றனர்
 
  பஞ்சமுக ஹேரம்ப கணபதி
கணபதியின் 32 அம்சங்களில் ஒருவரான பஞ்சமுக ஹேரம்ப கணபதி, சென்னை கந்தாஸ்ரமத்தில் அருளுகிறார்.

12 அடி உயரம், ஐந்து முகம், பத்து கரம், சிங்க வாகனத்துடன் கன்னி மூலையில் இருக்கிறார். அபயம், வரம், பாசம், தந்தம், ருத்ராட்ச மாலை, மாவட்டி, பரசு, உலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை தாங்கியுள்ளார்.

சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி நாட்களில் விசேஷ அபிஷேக ஆராதனை உண்டு. இவரது சன்னதி கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) பால 
[Gal1]
சுவாமிநாத சுவாமி
முருகன் "சுவாமிநாத சுவாமி' என்ற திருநாமத்துடன் 12 அடி உயரத்தில் அருளுகிறார்.

பழநியைப்போன்று இங்கும் முருகப்பெருமான் மேற்கு பார்த்துள்ளார்.

வலது கையில் தண்டம் பிடித்து, இடது கையை இடுப்பில் வைத்து, வேலை வலது கை மேல் சாத்திய நிலையில் கேட்ட வரம் தரும் வள்ளலாக விளங்குகிறார்.

மேற்கு பார்த்த முருகனை வணங்கினால் ஞானம்,
செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
சூரனை வதம் செய்வதற்காக தாயை வணங்கி, வேல் பெற்றதை நினைவு படுத்தும் வகையில் தாய் புவனேஸ்வரியின் எதிரில், பணிவுடன் நிற்கிறார். தந்தைக்கே பாடம் சொல்லிக்கொடுத்தால் ஏற்பட்ட "சுவாமிநாதன்' என்ற திருநாமத்துடன் "குருவின் குருவாக' அருள்பாலிக்கிறார். குருபெயர்ச்சி நாளில் இவரை வணங்குவது சிறப்பு.
கந்தசஷ்டி விரதத்தை ஒட்டி ஆறு நாட்களும் இவருக்கு விதவிதமான அலங்காரம் செய்யப்படும்.

கிருத்திகை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உண்டு.

 பாலமுருகன், கதிர்காம முருகன், அறுபடை வீடு முருகன் மற்றும் ஒன்பது வகையான முருக வடிவங்கள் உள்ளன.

பஞ்சமுக ஆஞ்சநேயர்
கோயிலின் வாயு மூலையில் இருக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு, கிழக்கே வானர முகம், தெற்கே நரசிம்ம முகம், மேற்கே கருட முகம், வடக்கே வராஹ முகம், மேல் நோக்கி குதிரை முகம் ஆகியவை உள்ளன.

12 அடி உயரமுடையவர்.

கத்தி, சூலம், மரம், மலை, பாசம், அங்குசம், சின்முத்திரை, பிண்டிபாலம், கட்வாங்கம், குண்டிகை ஆகியவற்றுடன் காட்சிதரும் இவருக்கு அமாவாசை, அனுமன் ஜெயந்தி, மூல நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வணங்குகின்றனர்.  பக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர் உள்ளனர்.
[Gal1]
சரபேஸ்வரர்
10 அடி உயரத்தில் வீற்றிருக்கும் சரபேஸ்வரரின் கையில் மான், மழு, சர்ப்பம், நெருப்பு ஆகியன உள்ளன.

விசேஷ காலங்களில் இவருக்கும், எதிரே உள்ள லிங்கத்திற்கும் அபிஷேகம் நடக்கிறது.

பிரதோஷம் மற்றும் ஞாயிறு ராகு காலத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படும்.

எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட வருகின்றனர். கோஷ்டத்தில் அஷ்ட பைரவர்கள், சுவர்ணஹர்ஷண பைரவர் அருளுகின்றனர்.

பிரத்யங்கிரா தேவி
சரபேஸ்வரருக்கு எதிரில் இவள் அருளுகிறாள்.

இவள் சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். இவளது உதவியுடன் தான் சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தை தணித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

10 அடி உயரத்தில் சிங்கமுகத்துடன் கூடிய இவளது கையில் சூலம், கபாலம், பாசம், டமருகம் உள்ளன.

சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் இவளுக்கு அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.

இங்குள்ள யாக சாலையில், தினமும் காலை 9.15 முதல் 11.15 மணி வரை பிரத்யங்கிரா கோடி ஹோமம் நடக்கிறது.

தேவதைகளின் அனுக்கிரஹ சக்தி அதிகரிக்கவும், தெய்வ பலம் ஏற்படவும், கோயில் நிறுவனர் சாந்தானந்தசுவாமிகள் கூறியபடி இதற்கான மூல மந்திரங்களை ஒரு கோடி தடவை ஜபித்து, ஹோமங்கள் நடந்து வருகின்றன.

சுதர்சன மூர்த்தி
சுமார் 19 அடி உயரம் உள்ள, பஞ்சலோகத்திலான பிரமாண்ட சுதர்சன மூர்த்தி கிழக்கு நோக்கியும் அவருக்கு பின்னால் மேற்கு நோக்கி லட்சுமி நரசிம்மரும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
[Gal1]
பொதுவாக சுதர்சன கரத்தின் பின்புறம் யோக நரசிம்மர் இருப்பார்.

ஆனால், இங்கு லட்சுமி நரசிம்மர் இருப்பது சிறப்பு.

சுதர்சனரின் அருகே பிரகலாதனும், எதிரே 5 அடி உயரத்தில் சுதையால்
ஆன வெங்கடாசலபதி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த லிங்கம் அமையும் சன்னதியைச் சுற்றி தெட்சிணாமூர்த்தி, அலமேலு தாயார்- வெங்கடாசலபதி, பிரம்மா சிலைகள் உள்ளது.

தத்தாத்ரேயர்
பிரம்மா, விஷ்ணு, சிவனின் அம்சமான இவர், அத்ரி மகரிஷிக்கும் அனுசூயாவுக்கும் அவதரித்தவர். சுமார் 12 அடி உயரத்தில் அமைந்துள்ள இவருக்கு பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

சனி பகவான்
பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு எதிரில் 12 அடி உயரத்தில் சனிபகவான் அருளு கிறார். வலதுகாலை காக வாகனத்தில் ஊன்றியபடி நிற்கும் இவரை வணங்கி னால் சனி தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. கோஷ்டத்தில் மூன்று கோலங்களில் சனிபகவான் காட்சி தருகிறார். மாதத்தின் முதல் சனியன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும்.

ஸ்ரீசக்ர பூஜை
கோயிலின் நடுவே ஐந்தடி உயரத்தில் பஞ்சலோகத்தில் மகாமேரு அமைந்து உள்ளது. 
இதற்கு அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி திதிகளில், நவாவர்ண பூஜை (மாலையில்) நடக்கிறது.
இதில் ஆட்சிசெய்யும் திரிபுரசுந்தரியை வழிபட்டால் நவக்கிரக தோஷம் விலகும் என்கின்றனர்.
 நாள்தோறும் மாலை 4.30 - 5.30 மணிக்கு ஸ்ரீதுர்கா ஸப்தசதி பாராயணமும், அஷ்டலட்சுமியின் அருள் வேண்டி தினமும் காலை 7 மணிக்கு கோபூஜையும் நடக்கிறது.

தல வரலாறு:
சாந்தானந்த சுவாமி புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர் ஸ்வயம்பிரகாசர். இவரது சீடர் சாந்தானந்த சுவாமி. 1921ல் அவதரித்த இவரது இயற்பெயர் சுப்ரமண்யம்.

இந்த பெயர் காரணமாகத்தான், இவரால் ஸ்தாபிக்கப்பட்ட தலங்கள் "கந்தாஸ்ரமம்' என பெயர் பெற்றன.
சேலம் கந்தாஸ்ரமத்தை அமைத்தவரும் இவரே. 

தினமும் மதியம் அன்னதானம் நடக்கிறது.

அன்னதான மண்டபத்தில் அன்னபூரணி தனி பீடத்தில் அருளுகிறாள்.
 கோபுரங்கள் ஒரிசா மாநில பாணியில் அமைக்கப்பட்டுள்ளன.
அமைதியான முறையில் தியானம் செய்ய மண்டபம் உள்ளது.
[Image1]
பஞ்சலோகத்தில் ஆன பிரமாண்டமான ஐயப்பன் சிலை வேறு எங்கும் இல்லை.
அஷ்டா தசபுஜ மகாலட்சுமி, துர்கா தேவி அருள்செய்கின்றனர்.

   பிரார்த்தனை
   
  ஞானம், செல்வம் பெருக மேற்கு பார்த்த முருகனையும், எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரபேஸ்வரரையும் பிரார்த்தனை செய்கின்றனர்.

18 comments:

 1. இங்கு இருக்கும் கந்தாசிரமம் இன்னும் பார்க்கவில்லை.அதைப்பற்றிய விரிவான பக்தி பூர்வமான பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 2. இன்று குருவாரம் (வியாழக்கிழமை) அதற்கேற்ற தலைப்பு! அருமை.

  ReplyDelete
 3. This temple is some what near my house.
  I used to visit often.
  But seeing it at your blog it is very nice.
  Thanks for the post.
  viji

  ReplyDelete
 4. இரண்டாவது படத்தில் சிவலிங்கத்திற்கு தொடர்ந்து நடக்கும் பால் அபிஷேகம் ஜோராக உள்ளது.

  மூன்றாவது படத்தில் அந்த 20 டன் எடைகொண்ட பிரும்மாண்ட சஹஸ்ரலிங்கம் தலையில் வெள்ளி நாகருடன் வெகு அழகான தரிஸனம் தான்.

  ஐந்தடி உயரத்தில் அமைந்துள்ள பஞ்சலோகத்தினால் ஆன மகாமேருவும், ஒரிஸா பாணியில் அமைக்கப்பட்டுள்ள த்யான மண்டபமும் அழகாகப் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

  கடைசி படத்தில் குட்டிப்பிள்ளையார் ஒய்யாரமாக தன் தந்தை மடியில் படித்திருப்பதும் பிடித்துள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  பகிர்வுக்கு நன்றிகள். vgk

  ReplyDelete
 5. பல தெரியாத தகவல்கள்.படங்கள் நன்று.

  ReplyDelete
 6. வை.கோ சார் சொன்னதைப் போல
  குருவாரத்திற்கான சிறப்புப் பதிவாக அமைந்த பதிவு
  படங்களுடன் மிக மிக அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அரிய தகவல்களுடன் அற்புத பதிவு, கூடிய விரைவில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிய பதிவு. அருமை.

  ReplyDelete
 8. தகவல்கள் + படங்கள் = மிக நன்று
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. பல தெரியாத தகவல்கள்.படங்கள் நன்று.

  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 10. நல்ல அருமையான கோவில். தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 11. கந்தாசிரமம் சென்னையில் , சேலத்தில் பார்த்து இருக்கிறேன்.

  இந்த கந்தாசிரமம் சென்னையில் எங்கு உள்ளது?

  படங்கள் எல்லாம் வழக்கம் போல் அழகு.

  நன்றி.

  ReplyDelete
 12. After we moved out of chennai I was missing my visits to this temple. The moorthis fo the deities are so big and decorated nicely (especially the eyes). The best moment I cherish more is the navrathi alangaram of the Devi. During my first visit I spent more time having the darshan of the Shivalingam. I am getting more and more nostalgic reading your post. Thank you.

  ReplyDelete
 13. கந்தாஸ்ரமத்தை பற்றிய நல்லதொரு பகிர்வு. படங்களும் அழகு.

  ReplyDelete
 14. உங்கள் பதிவின் படங்கள் பரவசமடையச் செய்கின்றன. கோடி நன்றி....

  ReplyDelete
 15. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

  ReplyDelete