Friday, January 20, 2012

சகல செல்வங்களும் அருளும் "லட்சுமிபதி'




அஷ்ட ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும்,பெயர் புகழும் பெற் 
லட்சுமி குபேர மந்திரங்கள்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள
சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ!
2.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச
குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய
ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!
4.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!
5.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!
6.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!
7.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!
8.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!
9.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!
10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!
11.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!
12.ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!
13.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!
14.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!
15.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!
16.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!
ஓம் நமோ நாராயணாய


குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பொதிகை மலைக்கு வந்தான். ஜீவநதியான தாமிரபரணி நதிக்கரையில் பெருமாளைப் பூஜிக்க நினைத்தான். அவரது வராக அவதார சிலையை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டான். காலப்போக்கில் அந்த இடம் மறைந்துவிட்டது. 

[Image1]
ஒருசமயம் பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய பெருமாள், நதிக்கரையில் புதைந்து கிடப்பதாகக் கூறினார். அவர் அரசனிடம் அதுபற்றி கூறவே, அவன் சிலையைக் கண்டுபிடித்து கோயில் எழுப்பினான்.


கல்யாண வரம்: ஆதிவராகர், பத்மபீடத்தில் மடியில் பூமாதேவியை அமர்த்தி காட்சியளிக்கிறார். எப்போதும் தாயாருடன் சேர்ந்திருப்பதால் இவர், "நித்ய கல்யாணப்பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்திற்கு "கல்யாணபுரி' என்றும் பெயருண்டு. 

திருமணமாகாதவர்கள் உற்சவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்து வழிபடுகிறார்கள். 

உற்சவருக்கு "லட்சுமிபதி' என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. புதுமணத்தம்பதிகள் இங்கு சென்று வந்து வாழ்வைத் துவங்கலாம். 

திருமண நாளைக் கொண்டாடுவோர் இவரை வணங்குவதன் 
தீர்க்காயுளும், சகல செல்வங்களும் பெறுவர்.
பூதேவி

[Gal1]
ஸ்ரீதேவி
பூமாதேவியை மீட்க, சுவாமி வராக அவதாரம் எடுத்தார் என்பதால், பூமாதேவிக்கு தனி சன்னதி உள்ளது. 

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சுவாமி தீட்சிதர், இந்த சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடியுள்ளார். 

பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற கருட சேவை செய்து வழிபடுகிறார்கள். 

ஒரு ஆண்டில் பலநாட்கள் இங்கு கருடசேவை நடக்கும். 

நிலம் தொடர்பான பிரச்னைகள் நீங்கவும், 
செல்வம் பெருகவும் இங்கு வழிபடுகிறார்கள்.

கருட வாகனம்

திருமணநாளைக் கொண்டாடும் தம்பதியர், திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாளை தரிசித்தால், தீர்க்காயுளும், சகல செல்வங்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.
[Gal1]
இரண்டு தரிசனம்: பெருமாள் வராக மூர்த்தியாக, பூமாதேவியை மடியில் அமர்த்தியபடி பத்ம பீடத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.
மூலவர் ஆதிவராகர்
[Gal1]
இவருக்குதாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே திருமஞ்சனம் செய்யப்படுகிறது.இதற்காக தினமும் காலையில் சுவாமிக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்குச் சென்று, தீர்த்தம் எடுத்து வருகிறார். 
மூலவர் விமானம்
சுவாமி சன்னதி விமானத்தில் சயனப்பெருமாள் இருக்கிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மா, பிருகு, மார்க்கண்டேய மகரிஷிகளும் இருக்கின்றனர். 

தினமும் காலையில் இவருக்கு பூஜை நடக்கும். அவ்வேளையில் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். 
விமான சன்னதியில் சயனப்பெருமாள்
[Gal1]
கோயில் மேல் சுவரில் மூல கருடாழ்வார் இருக்கிறார். 

ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ திருமஞ்சனத்துடன்,
 பூ ஆடை அணிவித்து பூஜை நடக்கும். 
கோயிலின் மேல்பகுதியில் கருடாழ்வார்
பிரகாரத்தில் லட்சுமி நாராயணர், விஷ்வக்ஸேனர், ஆழ்வார்கள் சன்னதி இருக்கிறது. 

பெருமாளின் தசாவதார வடிவங்கள், சுவாமி சன்னதி பின்புறம் இருக்கிறது. யானை, குதிரை வாகனங்களுடன் பீட வடிவில் சாஸ்தா இருக்கிறார்.
உற்சவர் லட்சுமிபதி

[Gal1]
திருவிழா: சித்திரையில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூர ஊஞ்சல் உற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் வழியில் 35 கி.மீ.. பழைய பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7- 10.30 மணி, மாலை 5.30- இரவு 7.30 மணி.




http://mahalakshmi.com/MahaLakshmi_1.jpg
விருதுநகர் ராமர் கோயில் ஆஞ்சநேயர், 
நாணயங்கள், ரூபாய் நோட்டு அலங்காரம்.

22 comments:

  1. சொல்லவேண்டிய ஸ்லோகங்களுடன் படங்களும் உபயோகமான பகிர்வு, நன்றி

    ReplyDelete
  2. இன்று தை வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற மிகப்பொருத்தமான பதிவு. மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. "திருமண தினத்தன்று திருநெல்வேலி
    கல்லிடைக்குறிச்சி கடவுள்
    ஆதிவராகப் பெருமாளை
    தரிசித்தால் தீர்க்காயுளை
    சகல செல்வங்களுடன் பெறுவர்
    என்பது நம்பிக்கை"

    லட்சுமியின் பதி என்பதால் இணையர்கள் தம்பதி சமேதரராக தொடர்ந்து நலமுடன் வாழ இந்தக் கோவிலில் நல்லாசி கிடைக்கின்றது.
    நல்ல தகவல். படங்கள் மனதிற்கு சாந்தி தருகின்றன.

    தங்கள் பதிவுகளை இந்து சமயப் பதிவுகளை வரவேற்கும் தளமான
    http://hindusamayam.forumta.net/ என்பதிலும் தங்கள் பதிவிடலாம்.

    ReplyDelete
  4. கல்யாண வரம்.

    நித்ய கல்யாணப்பெருமாள்.

    கல்யாணபுரி.

    இவற்றின் விளக்கங்கள் காதுக்குக் கேட்க இனிமையாக உள்ளன.

    //புதுமணத்தம்பதிகள் இங்கு சென்று வந்து வாழ்வைத் துவங்கலாம். தீர்காயுளும், சகல் செல்வங்களும் பெறுவர்//

    மிகவும் நல்ல மகிழ்ச்சிதரும் செய்தி. ;))))

    ReplyDelete
  5. கல்லிடைக்குறிச்சியில் ஆதிவராகப்பெருமாள் கோவிலில் வாழைப்பழம் சூறைவிடுதல் (தூக்கி எறிதல்) முக்கிய நேர்த்திக்கடன்.

    18 அக்ரஹாரம் இருக்கும் சில ஊர்களில் கல்லிடைக்குறிச்சியும் ஒன்று.

    அந்த ஊரில் அதிகமானோருக்கு வராகன் என்ற பெயர்தான்.

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. /தாமிரபரணி தீர்த்தத்தால் மட்டுமே பெருமாளுக்குத் திருமஞ்சனம். தினமும் மேள தாளத்துடன் தீர்த்தம் எடுத்து வருதல்./

    தாமிரபரணி நீர் போன்ற சுவையான தகவல்.

    ReplyDelete
  7. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...!

    ReplyDelete
  8. மூல விமானத்துடன் காட்டப்பட்டுள்ள மிகப்பழைமை வாய்ந்த கோயில் பார்க்கவே அருமையாக உள்ளது.

    அனந்த சயனப்பெருமாள், அழகான பாம்புப்படுக்கையின் மீது தேவியர்களுடன் சேவை சாதிப்பது மிகவும் பிடித்துள்ளது.

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு

    ReplyDelete
  11. பஞ்ச உலோகத்தில் செய்ததாகத் தெரியும் கருடவாகனம் மிகச்சிறப்பாக தனித்துக்காட்டப்பட்டுள்ளதும் மிகவும் அருமையாக உள்ளது.

    லக்ஷ்மிகுபேர மந்திரங்கள் கொடுத்து அஷ்ட ஐஸ்வர்யமும், லக்ஷ்மி கடாக்ஷமும், பெயரும், புகழும் கிடைக்கச் செய்துள்ளீகள். ;)))))

    ஸ்ரீலக்ஷ்மியையும், ஸ்ரீலக்ஷ்மிபதியான எம்பெருமானையும் ஆங்காங்கே பலமுறை காட்டி, இன்றைய முதல் தை வெள்ளிக்கிழமையன்று, எங்களுக்கும் தரிஸித்து மகிழ்வதால் ஏதோ கொஞ்சம் புண்ணியம் சேர்த்துள்ள தங்களுக்கு மிகவும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. ஸ்லோகங்கள் மிகவும் பயனுள்ளவை, மனனம் செய்ய வசதியாக பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  13. கல்லிடைக்குறிச்சி ஆதிவராக பெருமாள் தரிசனம் அருமை.
    படங்கள் சிறப்பாக இருக்கு.நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  14. மனங்கவர் பதிவு.

    ReplyDelete
  15. ஆஹா, எங்க ஊருக்கு பக்கத்து ஊரு கோவில். சுவைபடக் கூறியிருக்கீங்க. நன்றி.

    ReplyDelete
  16. நீங்கள் கொடுத்த கல்லிடைக்குறிச்சி விவரங்களுக்கு ஒரு படி மேலே போயிருக்கிறார் கடம்பவன குயில்.

    ReplyDelete
  17. இது தங்களின் வெற்றிகரமான 400 ஆவது பதிவு. அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. சகல செல்வங்களும் தரும் லட்சுமிபதி தரிசனம் செய்தோம். நன்றி.

    ReplyDelete
  19. Very very fantastic. Thanks for sharing such a wonderful posting

    ReplyDelete
  20. தேவியின் முகம் நெஞ்சில் நிறைந்தது. கோடி நன்றி.

    ReplyDelete
  21. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete