Monday, January 23, 2012

ஸ்ரீராமஜயம்ஸ்ரீராமஜயம்    வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் ஹனுமனுக்கு உகந்த நாட்கள்.
சனிக்கிழமை, மூலா நக்ஷத்திரமும் விசேஷமாகும்.

தென்னிந்தியாவில் உளுந்துடன் மிளகு மட்டும் சேர்த்து ஹனுமனுக்கு வடை மாலை சாத்துவது வழக்கம்.   

இந்த உளுந்தினால் செய்த வடைமாலையை பாம்புபோல ஹனுமனுக்கு சாத்துவதால், நவக்கிரஹங்களில் பாம்பு வடிவத்தில் உள்ள ராகுவுக்கு, நவதான்யங்களில் ஒன்றான உளுந்தினால், ப்ரீதி ஏற்பட்டு ராகுவினால் ஏற்படும் தொல்லைகள் நம்மை நெருங்கவே நெருங்காமல் காக்கப்படுகிறோம்.

அதுபோலவே ஹனுமனை வழிபட்டால் நவக்கிரஹங்களில் மிகவும் நம்மை ஆட்டிப்படைக்கும் சனிபகவானின் தொல்லைகளும் விலகிவிடும்.

ஹனுமனுக்கு துளசி மாலை மிகவும் ஏற்றது. 

வெற்றி கிட்டிட வெற்றிலை மாலைகளும் சாத்துவதும் உண்டு. 

அது போல மனக்கிலேசங்கள் ஏற்பட்டால் சிறிதளவு வெண்ணெயை கொண்டுபோய் ஹனுமார் கோயிலில் ஹனுமனின் நெஞ்சினில் தடவச்சொல்லி கொடுத்துவிட்டால், அவர் நெஞ்சம் குளிர்ந்து போய் நம் மனதையும் குளிர்விக்கிறார். 

ஹனுமனுக்கு வாலில் தினமும் மடியாக சந்தனம் குங்குமம் இட்டு வழிபடுவதும் உண்டு. 

பூஜை அறையில் ஹனுமன் படத்துக்கு முன்னால் சுத்தமான பச்சரிசி மாவினால் சஞ்சீவி மலை போன்ற கோலமிட்டு வழிபடுபவர்களும் உண்டு. 


அதில் கீழ் வரிசையில் அரை வட்ட வடிவில் ஐந்தும், அதன் மேல் நாலும், அதன் மேல் மூன்றும், அதன் மேல் இரண்டும், உச்சியில் ஒன்றுமாக ஆக மொத்தம் பதினைந்து சிறுசிறு மலைகள் போல கோலமிடுவார்கள்.

ஒவ்வொரு சிறுசிறு மலைகளிலும் ராம ராம ராம ராம ராம என்று ஐந்து முறை கூறிக்கொண்டே ராம நாமத்தை எழுதுவார்கள். 


அது தவிர தனியாக ஒன்பது முறை ராம ராம ராம என்று வரிசைக்கு மூன்று வீதம் மூன்று வரிசை எழுதுவதுண்டு. ஆக மொத்தம் 15+9=24 முறை எழுதுகிறோம். 24*5=120 முறை வாயால் ஜபிக்கிறோம்.


இதை பூஜை அறையில் தினமும் செய்ய முடியாதவர்கள், தனியாக ஒரு நோட்டுப்போட்டு, தினமும் இவ்வாறு வரைந்து எழுதி ஜபித்து வந்தால் போதும். பழகிவிட்டால் தினமும் 5 முதல் 10 நிமிட நேரமே ஆகும்.  


இப்படி தினமும் செய்வதனால் நாம் நினைக்கும் சகல நல்ல கார்யங்களும் ஸித்தியாகும். புத்தி தெளியும். தைர்யம் பிறக்கும். மனது ஸாந்தமாகும். அனைத்து வெற்றிகளும், புகழும் நம்மை வந்தடையும்.

அனு​மனை வணங்​கிய மாத்​தி​ரத்​தில் நமக்கு தைரி​யம்,​ ஞானம் வள​ரும். புத்தி,​ பலம்,​ புகழ்,​ அஞ்​சா​நெஞ்​சம், ஆரோக்​யம் ஆகிய அனைத்​தும் வரும். ஆஞ்​ச​நே​யர் அடி பணி​வோம். அவர் கலி​யுக வர​தர்!​ கண் கண்ட தெய்​வம்!​ கரு​ணையே வடி​வான கற்​பக விருட்​சம்!​ 

"அஞ்​சனை மைந்​தன் இருக்க அஞ்​சு​வ​தேன்?​' 
என்ற தாஸர் கீர்த்​த​னத்​தின்​படி அனு​மனை அடி பணி​வோம்!​ அச்​ச​மின்றி ஆனந்​தப்​ப​டு​வோம்!​  வீர மாருதி!​ கம்​பீர மாருதி!​​


அஷ்ட சித்தி நவநிதி கே தாதா
அஸ் வர தீன் ஜானகி மாதா

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.”

பக்த ஆஞ்சநேயர், வஜ்ர கவசம், உடுப்பி


20 comments:

 1. ஜெய் ஸ்ரீராம்....

  என் அம்மா தினமும் பூஜையறையில் இந்தக் கோலம் போடுவார்கள்....

  ReplyDelete
 2. என்ன சொல்றதுனு தெரியல,எங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ள கோவிலின் அஞ்சநேயரின் நினைவுகள் வந்துவிட்டது.நல்ல தரிசனம்,எனக்கு அந்த வடை மேலும் ஆசை வந்துவிட்டது.நாளைக்கு செய்து பார்க்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 3. புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன்.அனுமன் அருள்.

  ReplyDelete
 4. நானும் இந்தக்கோலம் போடுவேன்.

  இங்கே செவ்வாய்க்கிழமை ஆஞ்சிநேயருக்கு விசேஷம். வடமாலை, வெற்றிலைமாலை எல்லாம் நடக்கும்.

  நிறைய்ய டிப்ஸ் கொடுத்திருக்கீங்க நன்றி

  ReplyDelete
 5. நல்லோதோர் ஆக்கம் சகோதரி...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. ஆஞ்ச்னேயர் தரிசனம் கிடைக்கப்பெற்றோம். நன்றி

  ReplyDelete
 7. அஞ்சனை பெற்றெடுத்த சுந்தரனே!

  வாயுபுத்ரா!

  ஆஞ்சநேயா!

  ராமதூதா!

  ராமபக்தா!

  உன்னை கண்குளிர அடிக்கடி தரிஸிக்கவும்,

  உன் புகழ்பற்றி உலகமே அறியவும்,

  உன் அருளைச் சுலபமாகப் பெறவும்,

  இந்தப்பதிவர் ஒருவர் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றது எங்களின் பாக்யமே!

  அவர்களையும்,

  அவர்கள் குடும்பத்தாரையும்,

  அவர்கள் தேன் அமுதாகத் தினமும் தந்து வரும் இதுபோன்ற இனிய பதிவுகளை பார்த்துப்படித்துப் பயன்பெறும் எங்கள் அனைவரையும்

  நீயே என்றும் காத்தருள வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன்!


  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!
  ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்!

  -ooooooooooooOoooooooooooo-

  ReplyDelete
 8. எனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு படங்களையும், முதலிலேயே [ஆரம்பத்திலேயே] காட்டி பிரமிக்கச்செய்து விட்டீர்கள்.
  மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம்.

  அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  மற்ற அனைத்துப்படங்களுமே மிகச் சிறப்பாகவே கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

  தங்களின் விடாமுயற்சியும், மிகுந்த ஆர்வமும், அதற்கான கடும் உழைப்பும், பதிவினில் நன்கு பளிச்சிடுகிறது.

  தொடர்ந்து இதுபோல உற்சாகத்துடன் செயல்பட அந்த மாருதி தங்களுக்கு அருள் புரியட்டும்.

  உங்கள் பதிவுக்குள் நுழைந்தாலே ஒரு கோயிலுக்குள் நுழைவது போல, பயபக்தியும், பரவஸமும் ஏற்படுவதை என்னல் நன்கு உணர முடிகிறது.

  தங்களால் காட்டப்படும் அனைத்துப் படங்களும் என்னுடன் நேரில் “பேசும் தெய்வங்கள்” தான். அந்த என் சுகானுபவங்களை என்னால் எழுத்தில் எழுதிப்புரிய வைக்க இயலாமல் உள்ளது.

  மொத்தத்தில் அவைகள் என் சந்தோஷத்தின் எல்லைகள்! ;)))))

  என் துயரைத் துடைப்பவை. என் மனதுக்கு எப்போதும் ஆறுதல் அளிப்பவை.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.
  அன்பான வாழ்த்துகள்.
  இதயம் கனிந்த நன்றிகள்.

  ReplyDelete
 9. ஆஞ்சனேயரின் வித விதமான படங்கள் அற்புதம்.
  வரம் தந்தார் வரதர்.

  என் பெண் பூஜை அறையில் சஞ்சீவி மலை கோலம் போடுவாள்.

  ReplyDelete
 10. கோலம் வரைந்து காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது தெளிவாக புரிகிறது.

  ஆஞ்சநேயரின் விதவித அலங்கார தரிசனத்தை பகிர்ந்தமைக்கு நன்றி :-)

  ஜெய் சீதா ராம்
  ஜெய் ஹனுமான்

  ReplyDelete
 11. ராம் ராம் ராம் ராம் ராம் ராம்.......

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 12. அனுமனின தரிசனம் அருளியமைக்கு நன்றி
  வழக்கம்போல் திரு உருவப் படங்களும்
  விளக்கங்களும் மிக மிக அருமை
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அருமையான படங்களுடன் பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 14. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

  ReplyDelete
 15. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான தகவல்களுடன் சிறப்பான பதிவு

  ReplyDelete
 16. ஜெய் ஸ்ரீ ராம்

  ReplyDelete