Wednesday, February 29, 2012

பரி வடிவில் பரிபாலிக்கும் அவதாரம்.



ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்
வண்ணங்களில்  களங்கமற்ற வெண்மை நிறத்தில் கோடி சந்திரன் சேர்ந்த குளுமையான பிரகாசத்தில் ஞானம்அருளும் அவதாரமாகத் திகழ்கிறது அஞ்ஞான இருளில் மூழ்கிய உலகை ஞான ஜோதியால் விளங்கச்செய்த பெருமை ஒளிரும் அவதாரம் ஹயக்ரீவ அவதாரம் 
Parakala Mutt dolai Dolai Tour USA 2011 at Parakala Mutt  Concludes
மஹாவிஷ்ணுவின் குரு வடிவம் ஹயக்ரீவ மூர்த்தி! 
அயவதனப் பெருமாள்! பரிமுகச் செல்வன்!சரஸ்வதி தேவியின் ஆதி குருவாகவும் அகத்தியருக்கு ஆசானாகவும் திகழ்ந்தவர்..
சகல வித்தைகளுக்கும் ஆதாரம் ..
பரி வடிவில் வந்து பரிபாலிக்கும் அவதாரம்..
"முன்னிவ்வுலகேழும் இருள் மண்டியுண்ண
முனிவரோடு தானவர்கள் திகைப்ப வந்து
பன்னுகலை நூல் வேதப் பொருளை யெல்லாம்
பரிமுக மாயருளிய வெம்பரமன் காண்மின்''
-திருமொழி
மத்வாச்சாரியார் ஏற்படுத்திய எட்டு மடங்களில் ஒன்றான ஸ்ரீசோட் மடத்தின் அதிபதியாக இருந்த வாதிராஜர் தினமும் தொழும் தெய்வம் ஸ்ரீஹயக்ரீவர்...

சிற்பி ஒருவர் விநாயகர் விக்ரகம் பஞ்சலோகத்தில் செய்ய முற்பட்டு
அச்சில் வார்த்து எடுத்து பார்த்த பொழுது அந்த சிலை குதிரை முகமும்,நான்கு கைகளில் ஒரு கையில் புத்தகம்,ஒரு கையில் ஜபமாலை, ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன் அமைந்தது.

அதை எத்தனை முறை அழித்து செய்தாலும் விநாயகருக்கு பதில் ஹயக்ரீவ விக்ரகம் தான் வந்தது

அவர் இந்த விக்ரகத்தை என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கையில் அன்றிரவு இந்த விக்ரகத்தை ஸ்ரீவாதிராஜரிடம் ஒப்படைக்கச் சொல்லி கனவு வந்தது. 

வாதிராஜர் ஹயக்கீரவருக்கு கடலைப்பருப்பில் வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும் ஹயக்ரீவ மட்டி எனும் பிரசாதம் செய்து நிவேதனம்செய்வார். 

பூஜை முடிந்ததும் கதவுகளை மூடிக்கொண்டு பிரசாத பாத்திரத்தை தன் தலையில் வைத்துக்கொள்வார். 

ஸ்ரீ ஹயக்ரீவர் வெள்ளைக் குதிரை உரு கொண்டு வந்து தனது முன்னங்கல்களை வாதிராஜர் தோளில் வைத்து கொஞ்சம் பிரசாதமாக வைத்துவிட்டு மிச்சத்தை சாப்பிட்டு போகும் அதிசயம் நடந்தது.


கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் அஞ்ஞானத்தில் ஏற்பட்ட பொறாமையால் நைவேத்தியத்தில் நஞ்சைக்கலந்துவிட வாதிராஜரின் தோள்களில் தன் கால்  பதித்து நைவேத்தியத்தை உண்ட் ஹயக்ரீவரின் குளம்புகளிலும் கால்களும் நீல நிறம் பரவி இறைவனின் திருமேனி முழுவதும் நீல நிறமானது....

பாத்திரத்தைத் தாழ்த்திய போது அதில் வழக்கம்போல் மீதம் நைவேத்தியம் இல்லாமல் வாதிராஜர் பெருந்துயரத்தில் ஆழ்ந்தார். 

நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தேன். 
என் கையாலேயே பகவானுக்கு விஷம் கலந்த நைவேத்தியத்தைப் படைத்தேன், ஆனால் பகவான் தன் எல்லையற்ற கருணையினால் ஒரு துளிகூட மிச்சமில்லாமல் உட்கொண்டாரே !!! ” என வருந்தினார். 

இவரை அறியாமல் இக்குற்றம் நடந்தாலும் விஷத்தின் அறிகுறி பகவானின் திருவுருவில் தோன்றியது. 

தாமே விஷத்தை உட்கொண்டிருந்தாலும் இவ்வளவு துன்பப் பட்டிருக்கமாட்டார் வாதிராஜர்.

பொழுது புலரும் வேளை, அர்ச்சகர்கள் கண்ணயர்ந்திருக்குக் சமயம், வாதிராஜரின் கனவில் கடவுள் தோன்றி, விதைகள் உள்ள ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, ” மட்டி ” என்ற ஊரில் இவ்விதைகளை விதையிடு. இவை காய்க்கும். காய்ந்த காய்களிலிருந்து 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படை.  விஷத்திற்கு இது முறிவாக இருக்கும் ” என்று அருளிச்செய்தார்.

விழித்தவுடன் வாதிராஜர் ‘ மட்டி ‘ என்ற ஊருக்குச் சென்று அந்த விதைகளை விதைத்தார். 

ந்தச் செடியினில் காய்ந்த காய்களைக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படைத்தார். 

இவ்வாறு நைவேத்தியம் செய்யச் செய்ய, திருவுருவினின்று நீல நிறம் சிறிது சிறிதாக இறங்கிற்று. 

48 நாட்களுக்குப் பிறகு சிறு நீல நிறக் கீறல் ஒன்றே நெஞ்சில் இருந்தது.
Shree Adbhut Hayagreeva Bhimeswaradeva Shaligram
Lakshmi Hayagreeva


கத்தரிக்காய்க்கு தெய்வ அம்சமும், நச்சுத்தன்மையை ( விஷம் ) முறிக்கும் சக்தியும் உண்டு.. அம்மை நோயை குணப்படுத்தவும் சிறந்த ஔஷதம் . 

சமீப ஆராய்ச்சிகளில் இது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபணமாகியும் உள்ளது. இத்தகைய கத்தரிக்காயில் பல வகைகள் உள்ளது, அதில் சிறந்த வகைகளில் ஒன்றே ” மட்டிக்குள்ளா கத்தரிக்காய் ”



கடலைப் பருப்பை சிறிது வறுத்து விட்டு குக்கரில் குழைவாக வேகவைத்து, மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சி, வெல்லம், தேங்காய்ப் பால், மசித்த கடலைப் பருப்பு, பாதி நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும்.
கலவை இறுகி அல்வா பதம் வந்ததும் மேலும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
மீதி நெய்யில் ஒடித்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பொரித்துச் சேர்க்கவும்.ஹயக்ரீவபிரசாதம் தயார்.
 ஒரு கப் கடலைப் பருப்பிற்கு ஒன்றிலிருந்து ஒன்னேகால் கப் சர்க்கரை என்ற அளவில் சர்க்கரையிலும் செய்யலாம்.
hayagreeva
ஒவ்வொரு மாதமும் வரும ச்ரவண(திருவோண) நட்சத்திரத்தன்றும் ஸ்ரீஹயக்கீரீவருக்கு ஹயக்ரீவ ப்ராசதம் செய்து, மஞ்சள் நிறப்பூக்களால் அர்ச்சித்து, பூஜை செய்யலாம்.

ஹயக்ரீவ ஜெயந்தி ஆவணிமாத திருவோண நட்சத்தித்தன்று
கொண்டாடப்படுகிறது. 

நவராத்திரியில் மஹாநவமி (சரஸ்வதி ஆவாஹனம்)
அன்றும் ஹயக்ரீவருக்கு ஆராதனைகள் நடைபெறுகிறது.

Tenali Rama and the Brinjal, Folktales for kids: 74_1.gif

S4010491
eggplant animationBrinjal2 Coloring Pages
white eggplant

Tuesday, February 28, 2012

ஆனந்தம் பொழியும் ஹயக்ரீவர்..



ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே


வெண்தாமரை மீதமர்ந்து, வெண்கலைதனையே தரித்து வித்தைகள் யாவும் விரைந்தளிக்கும் கல்விக்கரசி கலைமகளின்  படைப்புக்கடவுளாம் பிரம்மனின் நாவினை இருப்பிடமாகப் பெற்ற சரஸ்வதிதேவியின் குருவாக ஞானகுருவான ஹயக்ரீவர் புராணங்களில் சிறப்பாக குறிபிடப்படுகிறார்...

அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக 
லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவர்! 

ஞானமும், கல்வியும் நமக்கு இரு கண்கள். 

சந்தோஷம் அழியக் கூடியது. இன்றிருக்கும், நாளை இருக்காது. ஆனந்தம் அழிவில்லாதது. அந்த அழிவற்ற ஆனந்தத்தைத் தரக் கூடியது, ஞானம் ஒன்று மட்டுமே. அத்தகைய ஆனந்தத்தைப் பெற ஹயக்ரீவரைத் தியானிக்க வேண்டும்.

அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் ஆகிய ஒளியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஞான ஆசாரியனாக ஹயக்ரீவர் அருள் புரிகின்றார். அலையாழி அறிதுயிலும் அந்த மாயவனின் ஒரு அவதாரம் ஹயக்ரீவர்...


நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர, பிரம்மா தனது சிருஷ்டியை நடத்திக் கொண்டிருக்கும்போது, மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப் பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்கவேண்டும் என்ற எண்ணத்தால், அந்த வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர்..


வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே இழந்து உலகை இருள் சூழ்ந்தது. 
பிரம்மா செய்வதறியாது திகைத்தார். 

மஹாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார் பிரம்மா. 


மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தனரோ, அந்தக் குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார். 

குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி. சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள். சங்கு, சக்ரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுக்கக் கிளம்பினார். 

"வசையில் நான்மறை கெடுத்த அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிலை பயந்தவனே! எனக்கருள் புரியே" 

என்று ஆழ்வார் அருளிச் செய்திருப்பது போலக் கிளம்பினார் ஹயக்ரீவர்.


அகம்பாவத்தின் வடிவான மது, கைடபர்களிடமிருந்து வேதங்களை மீட்டு வந்து பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார் ஹயக்ரீவர். 

அந்த ஞானானந்த சொரூபம்,ஸ்படிகமணி போன்ற திவ்ய மங்கள ரூபத்தின் அருள் பெற்று வாழ்வில் நலம் பெறுவோம்...

முத்தியால்பேட்டை, லக்ஷ்மி ஹயக்ரீவர், ஜெர்க்கான் பதித்த வெள்ளி கிரீடம்.

நல்லாத்தூர் லட்சுமிநாராயண வரதராஜப் பெருமாள் 

ஸ்ரீ ஹயக்ரீவர் ஆனி கருட சேவை






2 White Horses Gif

Monday, February 27, 2012

குருவருளும் திருவருளும் கூடி அருளும்..





"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாமத் ததுல்யம் ராம நாம வராணனே

என்று மூன்று முறை ராம நாமத்தை மனதாரச் சொன்னால், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமத்தையே பாராயணம் செய்த பலன் கிடைக்கும்' என்று பரமசிவன் பார்வதி தேவிக்குக் கூறியுள்ளார். 

அதனால் ஏதோ முடியாத காரணத்தால் விஷ்ணு சஹஸ்ர நாமம் முழுவதும் சொல்ல முடியவில்லையே என்பதற்கு ஒரு மாற்றாக ராம நாம ஜபம் குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர, விஷ்ணு சஹஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்வதைத் தவிர்க்கக் கூடாது. 

 "நாராயண' நாமத்திலிருந்து "ரா'வும் "நமசிவாய' நாமத்திலிருந்து "ம'வும் சேர்ந்து அமைந்ததே "ராம' என்னும் திருநாமம். இப்படி எழுத்துகள் சேர்ந்து ராம நாமம் அமைந்ததுபோல், சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் பகுதியில், ஜி.எஸ்.டி. சாலையில் ஸ்ரீராமாஞ்சனேயர் திருக்கோவிலும் ஸ்ரீவைத்யநாத சுவாமி திருக்கோவிலும் அமைந்துள்ளது.. 

 ஸ்ரீராமாஞ்ச னேயர் டிரஸ்ட் அமைப்பு பல சமுதாயப் பணிகளையும் ஆன்மிக சேவைகளையும் அருமையாகச் செய்து வருகிறது.

சென்னை நுழைவு பாகத்தில் அமைந்து பஸ்ஸிலும் காரிலும் பல வாகனங்களிலும் செல்பவர்கள் இவ்விடத்தை நெருங்கும்போதே திருக்கோவில்களின் கோபுரத் தைத் தரிசித்தே செல்கின்றனர். 
சிவன் கோவிலும் விஷ்ணு கோவிலும் அருகருகே அமைந்து பல் விசேஷங்களைத் தன்னகத்தே கொண்ட திருக்கோவில் ...

ஆழ்வார்களில் பூதத்தாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் போற்றிப் பாடிய திவ்ய தேசமான திருநீர்மலைக்குத் தென்கிழக்கே சுமார் ஆறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பச்சைமலை என்ற மலையடிவாரத்தில் இத்திருக்கோவில்கள் அமைந்துள்ளன. 

இராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை இலங்கை நோக்கி எடுத்துச் செல்கையில் இங்குள்ள பச்சை மலையைக் கடந்து சென்றதாக ஐதீகம். அதனால் இன்றும் இம்மலையிலிருந்து வீசும் காற்றாலும் கிடைக்கும் பச்சிலைகளாலும் பலரின் தீராநோய்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

அதனால்தான் இக்கோவிலின் அருகிலேயே காசநோய் மருத்துவமனையை அரசு நடத்தி வருவதும், அதன்மூலம் பலர் நன்மை பெறுவதையும் அறிய முடிகிறது. 

 இங்கு முதன் முதலில் கோவில் கொண்டவரும் ஆஞ்சனேயர் தான். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.  பரமாச்சாரியார் ஆக்ஞைப்படி அமைக்கப்பட்டதால், இத்திருக்கோவிலில் ஆஞ்சனேயருக்காக ராமபிரான் எழுந்தருளியுள்ளார். 
நோய் தீர்க்கும் இடமாக ஆலயம் அமைந்திருந்ததால் வைத்யநாத சுவாமியும் இங்கு கோவில் கொண்டு விட்டார். அடியார்களின் தீரா நோய்களைத் தீர்க்க வைத்தியநாத சுவாமியும் பிறவிப் பிணி தீர்க்க ராமபிரானும் ஒருங்கே அமைய, குருவருளும் திருவருளும் கூடி அருள்கிறது..

வரம் தருவதில் வல்லவரான ஆஞ்சனேயர் சந்நிதியில் மட்டைத் தேங்காய் கட்டிப் பிரார்த்தனை செய்துகொண்டால் நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றித் தருகிறார்..
லக்ஷ்மி கடாட்சம் அருளும் மஹாலக்ஷ்மி சந்நிதியும், சகல காரிய சித்திக்காக சுதர்சன நரசிம்மருக்கும் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன..
"மனத்துக்கினியானை' என்று ராமரைப் பாடிய 
ஆண்டாளுக்கும் தனிச் சந்நிதி உள்ளது. 

புனர்வஸு நட்சத் திரத்தில் ராமனுக்கும், மூல நட்சத்திரத்தில் அனுமனுக்கும், உத்திர நட்சத்திரம், வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மிக்கும், சித்திரை, ஸ்வாதி நட்சத்திரத்தில் சுதர்ஸன நரசிம்ம மூர்த்திக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. 

நித்தமும் யாராவது ஒரு பக்தர் மூலம் நித்ய உற்சவம் நடந்து வருகிறது. ஸ்ரீராம நவமி, அனுமத் ஜெயந்தி உற்சவங்கள் மிக விமரிசையாய் நடந்து வருகிறது.

 ஸ்ரீவைத்யநாத சுவாமியைத் தரிசிப்பவர்களுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படுவது போன்றே மருந்து பிரசாதம் அளிப்பதால், அதையுண்டு நோய்கள் தீரப் பெற்றவர்கள் பலர். வைத்தீஸ்வரன் கோவிலுக்கே சென்று வந்த நிறைவு பெறுகிறார்கள்..
வைத்யநாத சுவாமி சந்நிதியில் சசிமங்கள கணபதி, வள்ளி தேவசேனாவுடன் முருகன், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நடராஜர் சந்நிதிகளுடன் நவகிரகங்களும் அருள் பாலிக்கிறார்கள்.

இந்த சந்நிதியில் அங்காரகனும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சென்னையில் வைத்தீஸ்வரன் கோவில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது..

அனுமத் ஜெயந்தியன்று அகண்ட நாம ஸங்கீர்த்தனம் நடக்கும். தியாகராஜ கீர்த்தனைகள் பாடப் பெறும். மட்டைத் தேங்காய் கட்டும் பிரார்த்தனைகளும், வடை மாலைகள் சமர்பிக்கப்படுவதும் அன்பர்களால் நடைபெறும்.




Sunday, February 26, 2012

உல்லாச உலகம்...









வல்லரசு நாடாக பிரகடன்ப்படுத்தும் அமெரிக்கர்களையே ஆச்சர்யத்துடன் வியந்து நோக்கச் செய்திருக்கிறார்கள் சீனர்கள்...


பணியில் இருந்து ஓய்வு பெற்ற ரஷ்ய கடற்படையில் பல ஆண்டுகளாக சேவை புரிந்த கியேவ் என்ற விமானத்தாங்கி போர்க்கப்பல் சும்மா மியாவ் கியாவ் என்று பேசிக்கொண்டிராமல் பொட்டல் காட்டையும், பொன் விளையும் பூமியாக்கும் வல்லமை படைத்த சீனர்களால் பல கோடி ரூபாய் செலவில் காட்சி பொருளாக மாற்றாமல் உருப்படியான 
ஆடம்பர ஓட்டலாக மாற்றம் செய்யப்படுவிட்டது நாமெல்லாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்...

கப்பலின் பல பகுதிகள் போரில் ஈடுபடுத்த முடியாத அளவுக்கு பழுதடைந்து விட்டதால் சீனாவை சேர்ந்த வர்த்தக நிறுவனத்துக்கு விலைக்கு விற்றுவிட்டது ரஷ்யா... 
கப்பலின் கீழ் தளங்களில் வெடி மருந்துகள், துப்பாக்கிகள், ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை வைத்திருந்த அறைகள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் தங்கும் ஆடம்பர அறைகளாக மாற்றப்பட்டன. 
 கப்பலில் மொத்தம் 148 அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விலை உயர்ந்த மரங்களை இழைத்து நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடியவையாக ஒவ்வொரு அறையும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் அறைகள் பல கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப் பட்டுள்ளன. 
Chinese Kiev Aircraft Carrier Luxury Hotel
சிறுவர்கள் விளையாடுவதற்கு வசதியாக ஏற்கனவே பயன்படுத்தப் பட்ட சில போர் விமானங்கள், பீரங்கிகள், கப்பலின் மேல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
Chinese Kiev Aircraft Carrier Luxury Hotel
Chinese Kiev Aircraft Carrier Luxury Hotel
சீனாவின் தியான்ஜின் நகர கடற்கரைக்கு சிறிது தூரத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்த கப்பல்.
கடற்கரை அழகை காண வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வழக்கமான ஓட்டல்களில் தங்குவதை விட கடலுக்குள் வண்ண விளக்குகளுடன் மிதந்து கொண்டிருக்கும் இந்த கப்பல் ஓட்டலில் தங்குவதை பெரிதும் விரும்புகின்றனர்.

இந்த கப்பலில் ஒரு சில நாட்கள் தங்குவதற்கு மட்டும் சில 
லட்சங்கள் கட்டணமாக பெறப்படுகிறது.

நம் நாட்டில் இதுபோன்ற கப்பல்களை விலைக்கு வாங்கி,  கப்பலின் ஒவ்வொரு பகுதியையும், துண்டு துண்டாக உடைப்பதற்காகவே, சில இடங்களில் துறைமுகங்கள் செயல்பட்டு வருகின்றன. 


உடைத்த பகுதிகளைக் கிடைக்கும் விலைக்கு விற்று விடுகின்றனர்.


இது சுற்றுசூழலை மாசுபடுத்தும் ஆபத்தான பணியாகும்..


சீனர்களின் சிந்தனைக்கும், நம் சிந்தனைக்கும் எத்தனை வித்தியாசம் !


சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளானலும் இன்னும் வளரும் நாடாகவே வளர்ந்துகொண்டே....இருக்கிறோம்.. 

நமக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற நாடுகளெல்லாம் கூட தகுதியான தலைமையைத் தேர்ந்தெடுத்து தம்மை அடிமைப்படுத்திய நாடுகளின் முன் தலைநிமிர்ந்து நடைபோடுகின்றன்..

The first aircraft-carrying cruiser Kiev,