Friday, February 10, 2012

ஜெயம் அருளும் ஜெய வீர ஆஞ்சநேயா!


ஸ்ரீயத்ர யத்ர ரகுநாத -கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத - ஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்


எங்கெங்கெல்லாம் ஸ்ரீ ராமருடைய புகழ் பாடப்படுகின்றதோ அங்கங்கு சிரமேற் கூப்பிய கையுடனும் ஆனந்த பாஷ்பக் கண்ணுடனும் தோன்றுபவர், அரக்கர்களுக்கு யமனைப் போன்றவர் வாயு புத்திரர் , அஞ்சனா தேவியின் மைந்தர், ஜானகி தேவியின் துன்பத்தை துடைத்தவர், வானர தலைவர், அக்ஷய குமரனை மாய்த்தவர், வாயு வேகமும் மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர், புத்திமான்களிற் சிறந்தவர், ஸ்ரீ ராம து‘தர், அனுமன் என்றும், ஆஞ்சனேயர் என்றும் வழங்கப்படும் மாருதி, இவரே வைணவ சம்பிரதாயத்தில் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றார்.வேலூர் மாவட்டத்தில் உள்ள சிறுமூர் எனும் கிராமத்தில் வீர ஆஞ்சனேயர் ஆலயம்அமைந்துள்ளது. 


சுயம்புவாக உருவான 12 அடி உயரமுடையவராக கம்பீரமாகக் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நெல் வியாபாரி ஒருவர் ஆரணிக்குச் சென்று நெல் விற்று விட்டு காலிவண்டியுடன் தனது ஊரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில்திடீரென ஒரு குரல், "அடே வண்டிக்காரா' என்றது. சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படவில்லை. 


மீண்டும் அதேகுரல் ஒலித்தது. வண்டிக்காரருக்கோ பயம் வந்துவிட்டது. இருப்பினும் சற்றுநிதானித்து, குரல் வந்த திசையை நோக்கிச் சென்று பார்த்தபோது, அக்குரலானதுஒரு சிறு கல்லிலிருந்து வருவதை உணர்ந்தார். 


அந்தக் கல்லானது அவரிடம்,"என்னை உன் வண்டியில் ஏற்றிக்கொள். நான் எங்கே சொல்கிறேனோ அவ்விடத்தில்என்னை இறக்கி வைத்து விடு' என்று கூறியது. 


வண்டி காட்டுப் பாதையில் வந்துகொண்டி ருந்தபோது அக்கல்லானது, "வண்டிக்காரரே, என்னை இங்கே இறக்கிவிட்டுவிடு' என்றது. 


அதன்படியே அவரும் அக்கல்லைக் கீழே இறக்கி வைத்தார்.அதற்குப் பிரதிபலனாக அக்கல்லானது அவருக்கு சில தங்கக் காசுகளைக்கொடுத்தது. அவரும் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். 

வழக்கம்போல மறுநாள் அவர் நெல் வியாபாரத்திற்காக அவ்வழியாகச் செல்லும்போது,தான் இறக்கி வைத்த அக்கல்லை உற்று நோக்கினார். 


ஆச்சரியம்! அந்தஇடத்தில் கல்லிற்குப் பதிலாக அவர் கண்டதோ ஒரு ஜான் உயர வீர ஆஞ்சனேயர்சிலை! 


இவ்விஷயம் வண்டிக்காரர் மூலம் அக்கம்பக்கம் பரவத்  தொடங்கியது.சுற்றியிருந்த கிராம மக்கள் அந்த ஆஞ்சனேயரை வழிபடத் தொடங்கினர். அங்கு ஒருசிறு மண்டபமும் கட்டினர். 


சிறு கல்லால் உருவான ஆஞ்சனேயர் அமர்ந்தஇடத்திற்கு சிறுவூர் என்று பக்தர்கள் பெயர் சூட்டினர். நாளடைவில் சிறுவூர் சிறுமூர் என மருவியது.

இந்த சுயம்பு சிலை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே வளரத்தொடங்கியது. 


நாளடைவில் வளர்ச்சியின் காரணமாக அம்மண்டபத்தின் கூரையைஉடைத்துக் கொண்டு ஆஞ்சனேயர் சிலையானது வெளியே தெரியத் தொடங்கியது. இந்தஅபார வளர்ச்சியைக் கண்டு பக்தர்கள் அனைவரும் அதிசயித்தனர். உடனேமண்டபத்தின் கூரையை உயர்த்திக் கட்டினர். இருப்பினும் ஆஞ்சனேயர் சிலைவளரத் தொடங்கியது. இவ்வாறாக ஏழு முறை மண்டபத்தை உயர்த்திக் கட்டினர்.ஆயினும் ஆஞ்சனேயர் சிலை வளர்ந்து கொண்டு தான் இருந்தது. 

இந்த அசுரவளர்ச்சியைக் கண்ட பக்தர்கள் ஊர் பெரியவர்களின் 
ஆலோ சனைப்படி தங்க ஆணிஒன்றைச் செய்து, வளரும் ஆஞ்சனேயரின் தலையில் அடித்து அவரின் அசுரவளர்ச்சியைத் தடுத்து நிறுத்தினர். 


கம்பீரமாக வளர்ந்தோங்கி வந்ததால் ஆஞ்ச னேயருக்கு "வீர ஆஞ்சனேயர்' என்று பக்தர்கள் பெயர் சூட்டினர்.


பிறகு அதற்குச் சிறப்பாக ஆலயம் அமைத்தனர். இந்த ஆஞ்சனேயர்மீது ஆரணி ஜாகீர்தார் மிகவும் பக்தி கொண்டு அவரது இஷ்ட தெய்வமாக வழிபடத் தொடங்கினார். 
 அக்காலத்தில் இக்கோவிலில் பணிபுரிந்த பட்டர்களுக்கும் பணியாளர்களுக்கும் நிலங்களையும் மானியங்களையும் அளித்து கௌரவித்தார்.

 

இன்று அவர்களின் வழித்தோன்றல்கள் , பங்காளிகள் இணைந்து கோவிலைப் பராமரித்து, ஆண்டுதோறும் விழா நடத்திவருகின்றனர்.

 ""ஆரணியில் வசிக்கும் மாத்துவர்களுக்கு இவ்வாலயம் மிகவும் விசேஷமாகும். காலங்காலமாக வந்து வழிபட்டுச் செல்கின்றனர். குலதெய்வமாகக் கருதுகின்றனர். இதுதவிர பிழைப்புக்காக இங்கிருந்து வெளியூர் மற்றும்வெளிநாடுகளுக் குச் சென்ற மக்கள் ஆண்டுக்கொரு முறை இங்கு வந்து தவறாமல்வழி படுகின்றனர்'

,""ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டுசிறப்புப் பூஜைகள் நடைபெறும். 


.மாதந் தோறும் வரும் மூல நட்சத்திர நாளன்று விசேஷ பூஜைகள் நடைபெறும். வீர ஆஞ்சனேயருக்கு பழ வகைகளால் அலங்காரம்செய்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். பொதுவாகவே ஆஞ்சனேயருக்கு வடைமாலை சாற்றுவது வழக்கம். இருப்பினும் பழவகைகளை அலங்கரித்து வழிபடுவதையே பெரும்பாலான பக்தர் கள் விரும்புகின்றனர்'' 

ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வேதவல்லித் தாயாருடன் பெருமாள் காட்சி தந்து அருளுகிறார்.

""குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆஞ்சனேயரை வழிபட்டு வந்தால் குழந்தைபாக்கியம் கிட்டுவது உறுதி'' என்கின்ற னர் இங்கு வரும் பக்தர்கள்.அக்காலத்திலிருந்தே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து கொத்துமணிகட்டும் பழக்கம் இன்றளவும் உள்ளது. 
வேலூரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறுமூர்கிராமத்தில் அமைந் திருக்கும் இக்கோவிலுக்கு வேலூரிலிருந்து பஸ் வசதிஉள்ளது.

  PERANAMALLUR


[hanuman2.bmp]
VIZHU 2009 ~ PAZHAKKAPPUஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர், முத்தங்கி சேவை, குளித்தலை

சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் 


யோக நித்திரையில்  பத்ர ஹனுமான்- AURANGABAD DISTRICT, MAHARASHTRA, 

சந்தோஷ ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர், அஞ்சனி தாயாருடன்.


20 comments:

 1. அருமையான பதிவு.
  எல்லா படங்களும் அற்புதம்.
  மிகவும் மனதை கவர்ந்தது.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. அழகான படங்களும் தகவல்களும் அருமை!!

  ReplyDelete
 3. கருப்பு நிறத்தில் ஒரே சீராக அடுக்கப்பட்டுள்ள கரும்புக்கழிகளின் முன்னே, தன் மணியுடன் கூடிய வாலைத் தூக்கி நின்றுள்ள ஹனுமன் இன்றைக்குத் தனிச்சிறப்பாக காட்சி தருகிறார்.அவரின் மஞ்சள் வண்ண வஸ்திரம் சிகப்பு பார்டரில் கருப்பு பேக்கிரவுண்டில் எடுப்பாக உள்ளது.

  ReplyDelete
 4. அழகு சுந்தரரான குழந்தை ஹனுமனுக்கு அவர் தாய் அஞ்சனை மம்மு ஊட்டும் படம் பளபளப்பாகவும் புதுமையாகவும் காணக்கிடைக்கச் செய்தது சிறப்பு.

  ReplyDelete
 5. மேலிருந்து முதல் படமும், கீழிருந்து 11 ஆவது படமும் ஏனோ திறக்கப்படவில்லை.

  ReplyDelete
 6. எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்றான மேலிருந்து மூன்றாவது படத்தை சனிக்கிழமை காலை தரிஸிக்கத்தந்ததற்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 7. யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் ....... ஸ்லோகத்துடன் சிறிய திருவடியைப்பற்றிய செய்திகள் அருமை.

  ReplyDelete
 8. சிறுவூர் அல்லது சிறுமூர் சுயம்புவாக உருவான ஆஞ்சநேயர் நாளுக்கு நாள் வளரத்தொடங்கி, தங்கத்தில் ஆணி செய்து அதை அவரின் தலையினில் தட்டி, அசுர வளர்ச்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்திய கதை கேட்க சுவாரஸ்யமானத் தகவலாக இருக்குது.

  ReplyDelete
 9. ஆரணியில் வசிக்கும் மாத்வர்களுக்கு இந்த வீர ஆஞ்சநேயர் குலதெய்வமாக இருந்து அருள் புரிவதும்; அவர்கள் ஒவ்வொரு மாத மூல நக்ஷத்திரத்தன்றும், மார்கழி ஹனுமத் ஜயந்தியன்றும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதும்; குழந்தை பாக்யம் இல்லாதவர்கள் சென்று வழிபட்டால் நல்லது என்பதும் இனிமையான நல்ல செய்திகள்.

  ReplyDelete
 10. அரிய தகவல்கள், அற்புதமான அலங்கார வகை படங்கள்! அதிலும் அந்த இரண்டாவதாக இருக்கும் பழங்களின் அலங்கார படம் வெகு அழகு!

  ReplyDelete
 11. படித்து ரசித்தேன்.

  ReplyDelete
 12. அழகான படங்களும் தகவல்களும் அருமை

  ReplyDelete
 13. Very nice post. The animation pictures i enjoyed well as usual. Thanks Rajeswari.
  viji

  ReplyDelete
 14. அனைத்து படங்களுமே அருமை.
  வெகுவாக கவர்ந்தது...அஞ்சனா தாயாருடன் அனுமன்......

  ReplyDelete
 15. ஒரு வேண்டுகோள்.
  ஸ்ரீ ராமானுஜரின் தம்பி கோவிந்தன் அவர்களுக்காக ஒரு ஸ்தலம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ளது. அந்த ஸ்தலம் கண் வியாதி தீர்ப்பதற்கான ஸ்தலம் என்று கேள்வி. அது பற்றிய விபரமும் அந்த ஸ்தோத்திரமும் தெரிந்தால் எனது Email id க்கு எழுதுங்கள்.
  rathnavel.natarajan@gmail.com
  மிக்க நன்றி.

  ReplyDelete
 16. படங்கள் கண் கொள்ளா காட்சி.
  தகவல்கள் அருமை.

  ReplyDelete
 17. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

  ReplyDelete