Tuesday, February 28, 2012

ஆனந்தம் பொழியும் ஹயக்ரீவர்..ஞான ஆனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிக ஆக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே


வெண்தாமரை மீதமர்ந்து, வெண்கலைதனையே தரித்து வித்தைகள் யாவும் விரைந்தளிக்கும் கல்விக்கரசி கலைமகளின்  படைப்புக்கடவுளாம் பிரம்மனின் நாவினை இருப்பிடமாகப் பெற்ற சரஸ்வதிதேவியின் குருவாக ஞானகுருவான ஹயக்ரீவர் புராணங்களில் சிறப்பாக குறிபிடப்படுகிறார்...

அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக 
லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவர்! 

ஞானமும், கல்வியும் நமக்கு இரு கண்கள். 

சந்தோஷம் அழியக் கூடியது. இன்றிருக்கும், நாளை இருக்காது. ஆனந்தம் அழிவில்லாதது. அந்த அழிவற்ற ஆனந்தத்தைத் தரக் கூடியது, ஞானம் ஒன்று மட்டுமே. அத்தகைய ஆனந்தத்தைப் பெற ஹயக்ரீவரைத் தியானிக்க வேண்டும்.

அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் ஆகிய ஒளியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் ஞான ஆசாரியனாக ஹயக்ரீவர் அருள் புரிகின்றார். அலையாழி அறிதுயிலும் அந்த மாயவனின் ஒரு அவதாரம் ஹயக்ரீவர்...


நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர, பிரம்மா தனது சிருஷ்டியை நடத்திக் கொண்டிருக்கும்போது, மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப் பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்கவேண்டும் என்ற எண்ணத்தால், அந்த வேதங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர்..


வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த்தமே இழந்து உலகை இருள் சூழ்ந்தது. 
பிரம்மா செய்வதறியாது திகைத்தார். 

மஹாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார் பிரம்மா. 


மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தனரோ, அந்தக் குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார். 

குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி. சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களின் இமைகள். சங்கு, சக்ரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேதங்களை மீட்டு எடுக்கக் கிளம்பினார். 

"வசையில் நான்மறை கெடுத்த அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிலை பயந்தவனே! எனக்கருள் புரியே" 

என்று ஆழ்வார் அருளிச் செய்திருப்பது போலக் கிளம்பினார் ஹயக்ரீவர்.


அகம்பாவத்தின் வடிவான மது, கைடபர்களிடமிருந்து வேதங்களை மீட்டு வந்து பிரம்மதேவனிடம் ஒப்படைத்தார் ஹயக்ரீவர். 

அந்த ஞானானந்த சொரூபம்,ஸ்படிகமணி போன்ற திவ்ய மங்கள ரூபத்தின் அருள் பெற்று வாழ்வில் நலம் பெறுவோம்...

முத்தியால்பேட்டை, லக்ஷ்மி ஹயக்ரீவர், ஜெர்க்கான் பதித்த வெள்ளி கிரீடம்.

நல்லாத்தூர் லட்சுமிநாராயண வரதராஜப் பெருமாள் 

ஸ்ரீ ஹயக்ரீவர் ஆனி கருட சேவை


2 White Horses Gif

26 comments:

 1. அரிய தகவலகளைச் சுமந்து
  அருமையான திருவுருவப் படங்களுடன்
  பதிவு மிக மிக அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 2. ஆனந்தத்தினைப்பெற ஹயக்ரீவரைத் தியானிக்கிறேன். பிரம்மன் ஸ்ரீமஹா விஷ்ணுவிடம் வேண்டும் படம் அருமை.குதிரை முகம் மனித உடல் தோற்றமே வித்தியாசமாக உள்ளது.

  ReplyDelete
 3. Fine post as usual Rajeswari.
  I wounder how you are able to get the fentastic pictures.
  The horses pictures are very beautiful.
  The Haygrrver blessing Brahma......I never had seen such a picture.
  Your involvement is great dear.
  Thanks for the post. I enjoyed it.
  viji

  ReplyDelete
 4. எத்தனை எத்தனை புகைப்படங்கள்.... இதைத் தேட எத்தனை நேரம் எடுத்துக் கொள்வீங்க... :)

  ReplyDelete
 5. ஹயக்ரீவர் பற்றி ஒரு தகவல் கூட எனக்கு தெரியாது. இந்த பதிவின் மூலம் சில தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி

  ReplyDelete
 6. அருமை. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 7. //சந்தோஷம் அழியக்கூடியது.
  இன்றிருக்கும், நாளை இருக்காது.
  ஆனந்தம் அழிவில்லாதது.
  அந்த அழிவற்ற ஆனந்தத்தைத் தரக் கூடியது, ஞானம் ஒன்று மட்டுமே, அத்தகைய ஆனந்தத்தைப் பெற ஹயக்ரீவரைத் தியானிக்க வேண்டும்.//

  வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ;)

  ReplyDelete
 8. உலகத்தைக்காத்து ரக்ஷிக்கவும், வேதங்களை மீட்கவுமே, குதிரை முகம் + மனித உடல், கொண்டு சாக்ஷாத் மஹாவிஷ்ணுவே புறப்பட்டார்.

  வேதங்கள் இவ்விதமாகக் காக்கப்பட்ட
  நல்லதொரு புராணச்செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ள வழிவகை செய்துள்ளீர்கள். ;)

  ReplyDelete
 9. பரீட்சை நெருங்கும் நல்ல நேரத்தில் தான் வெளியிட்டு இருக்கிறீர்கள் .
  அனைத்தும் மிக அருமை.

  ReplyDelete
 10. அபூர்வமான படங்களை அழகாக சிரத்தையாகத் தேடி இணைத்துள்ளது பாராட்டுகுரியது.

  ReplyDelete
 11. சிறிய பதிவு.

  சிறப்பான தகவல்கள்.

  ’444’ தடையேதும் இல்லாமல்
  குதிரை வேகத்தில் தினமும்
  குதூகுலத் தகவல்கள்.

  பாராட்டுக்கள்.

  வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 12. வேதங்கள் பற்றிய பதிவு அருமை. குதிரை படங்களும் அருமை .பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 13. தேர்வு நேரத்தில் ஹயக்ரீவர் பற்றிய அருமையான,தேவையான பதிவு.

  ReplyDelete
 14. வித்தைக்கு அதிபதியான ஹயக்ரீவரைப் பற்றிய சிறப்பான பதிவு.படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 15. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 16. அருமையான பதிவு.
  அருமையான படங்கள். நல்ல தகவல்கள்.
  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஸ்ரீ ஹயக்ரீவருக்கு தனி சன்னதி இருக்கிறது. வியாழக்கிழமை தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நல்ல கூட்டம் இருக்கும்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. ஹயக்ரீவர் பற்றிய தொகுப்பு மிகவும் அருமை.

  ReplyDelete
 18. ஹயக்ரீவர் பற்றிய அருமையான அனைவருக்கம் புரியும்படியான எளிமையான தகவல்.

  ReplyDelete
 19. படங்க்ள் மிக அருமை. அந்த வெள்ளை குதிரை..சூப்பர்.
  எங்கிருந்து இத்தனை படங்கள் எடுக்கிறீர்கள்?

  ReplyDelete
 20. அப்போதைக்க‌ப்போது தேவையான‌ ப‌திவுக‌ளை த‌ரும் சீர்மை சிலாகிப்புக்குரிய‌து!

  ReplyDelete
 21. ஹயக்ரீவரைப் பற்றி அரிய செய்திகள்..

  பகிர்வுக்கு மிக்க நன்றி..

  http://anubhudhi.blogspot.in/

  ReplyDelete
 22. குரு சாட்சாத் பரப்பிரம்மா
  புண்ணியம் செய்யுங்கள்! தான தர்மம் செய்யுங்கள் ! எது புண்ணியம்!
  குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?! குருவை வணங்க கூசி
  நின்றேனோ!? மறுமுறை கண்ட வாசகத்தில் வள்ளல் பெருமான் உரைத்த
  நீதி இது! குருவை பெறவேண்டும்! அதுவே புண்ணியம்! நல்ல சற்குருவை
  பெற்று திருவடி உபதேசம் திருவடி தீட்சை பெற வேண்டும்! அவனே புண்ணியம் செய்தவன்!
  http://sagakalvi.blogspot.in/2012/02/blog-post_20.html

  ReplyDelete
 23. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

  ReplyDelete
 24. 30. வாமனப்புருகுராம கோவிந்தா

  ReplyDelete