Saturday, February 25, 2012

காவல் தெய்வத்தின் கவின்மிகு திருவிழா



கோவையின் காவல் தெய்வமாகக் கருதப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா,கோவை நகரின் தலை சிறந்த விழாவாகும். 

கோவன்புத்தூரை ஆட்சி செய்த கோவனுக்கு குலதெய்வம் கோனியம்மன் என்பது வரலாறு. 
[Image1]
கோனியம்மன் கோவில் தோற்றுவிக்கப்பட்டு, 900 ஆண்டுகள் இருக்கும் என்று சொல்கின்றன சில சரித்திரச் சான்றுகள்.

அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள், பின் பகுதியில் ஆதி கோனியம்மன், பஞ்ச முக விநாயகர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.


உற்சவர் கோனியம்மன்

தேர் திருவிழாவின் தொடக்கமாக தேர் முகூர்த்தக்கால் , பூச்சாட்டு  நடைபெறும்..
கிராம சாந்தி, அடுத்தநாள் அக்னிசாட்டு, பல வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக இருக்கும்..



திருக்கல்யாண உற்சவம், பூதவாகனம், மஹிஷாசுர வதம் திருத்தேர் தேரோட்டம் நடைபெறும் அம்மன் திருத்தேரில் எழுந்தருளுதல், மாலையில் திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம் சிறப்பாக நடைபெறும்..
p_0004
பரிவேட்டைக்காக குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு,
கவின் மிகு காட்சியாகும்.. 
p_0008
தமிழில் லட்சார்ச்சனை, தெப்பத் திருவிழா, அடுத்த நாளில் கொடியிறக்கமும், வசந்த விழாவும் வெகு சிறபான நிகழ்ச்சிகளாகும்...
festival
மிகப்பெரிய ஏழுநிலை ராஜகோபுரத் திருப்பணி வேலைகள் 
ஸ்ரீ கோனியம்மனுக்காக தயாராகி வருகிறது.
koni amman


காணக்கிடைக்காத அற்புதம் திருக்கோவில் வளாகத்தில் பஞ்சமுக விநாயகர் சன்னதி




ஸ்ரீ கோனியம் திருக்கோவில் பின்புறமுள்ள ஸ்தலமரம் நாகலிங்கமரம் அழகாய் பூத்துக் குலுங்கும் எழிற்கோலம்.மனம் நிறைகிறது...





சிறுவாச்சூர் "ஸ்ரீ மதுரகாளியம்மன்" 


25 comments:

  1. நேற்று கேட்டேன் கோனியம்மான் திருவிழாவை .

    இன்று காவல் தெய்வத்தின் கவின்மிகு திருவிழாவை காணும் பாக்கியத்தை கொடுத்து விட்டீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
  2. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - கோவையின் கோனியம்மன் கோவில் திருவிழாக் காட்சிகளும் - விளக்கங்களும் - படங்களும் அருமை. தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் - எங்குமே கண்டதில்லை. மிகமிக நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள். நான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஊரென்றாலும் இந்தக் கோவிலின் இவ்வளவு விவரங்களைக் கவனித்ததில்லை.

    ReplyDelete
  4. Aha Aha
    I was missing it
    Daily I am phone to my Brothers daughter and asking about the vahanam perday and my soul is there only.
    Since i visited to Coimbatore recently i cannot accept my brothers welcome to Coimbatore now andI am feeling bad for not coming to the ther this year..
    Your post made tears in my eyes.
    I think my longing to see my Amman made you write about HER and made me see the ther by sitting here.

    Thanks thanks a lot Rajeswari.
    viji

    ReplyDelete
  5. ”காவல் தெய்வத்தின்
    கவின்மிகு திருவிழா”

    என்ற தலைப்பே கவிதை
    கொஞ்சுவதாக உள்ளது!

    ReplyDelete
  6. ’கோன்’ என்றால் அரசன் என்றும் ’கோனி’ என்றால் ராணி [அரசி] என்றும் பொருள் என தாங்கள் முன்பு கோனியம்மன் பற்றி எழுதிய பதிவில் படித்த ஞாபகம் வந்தது.

    கோயில் தற்போது புதிப்பிக்கப்படுவது போலவே, சென்ற பதிவை விட இதில் பல்வேறு புதுப்புது தகவல்கள் புதுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete
  7. காமதேனு வாகனத்திலுள்ள அம்பாள் படமும்,கீழிருந்து நாலாவதாகக் காட்டியுள்ள தேர் திருவிழாப்படமும்
    இன்றைக்கு ’பளிச்சோ பளிச்’. என் கண்களைக் கவர்வதாக அமைந்து தனிச் சிறப்பைப் பெறுகின்றன.

    ReplyDelete
  8. கோவைக் ‘காவல் தெய்வத்தின்
    கவின்மிகு திருவிழாவை’ கோவைக்காரர்கள் மட்டுமின்றி உலகின் பலபகுதிகளில் வாழும் கோடிக்கணக்கானோர் பார்த்து தெரிந்து கொள்ளும் வண்ணம் பதிவு செய்து வெளியிட்டுள்ளதற்கு பாராட்டுகள்.
    வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. ஸ்தல விருட்சத்தை இதுவரை கவனித்ததில்லை அங்கு! கண்டுகொண்டேன் இன்று! மிக்க நன்றி!

    ReplyDelete
  10. கோணியம்மன் பற்றி நிறைய தகவல்கள்...படங்கள்.

    நன்றிங்க.

    ReplyDelete
  11. வியக்க வைக்கும் படங்கள் பாராட்டுகள் தொடர்க

    ReplyDelete
  12. நவக்கிரகங்கள் தம்பதி சமேதரர்களாக அருள்பாலிப்பது சிறப்பானது. திரு நெல்வேலி-திருச்செந்தூர் கருங்குளம் என்ற ஸ்தலத்திலும் இதுபோல் உள்ளது.

    ReplyDelete
  13. நேற்று தண்டு மாரியம்மன்;இன்று கோனியம்மன் புதிய தகவல்கள்,படங்கள்.நன்றி.

    ReplyDelete
  14. கோனியம்மனை தரிசித்தேன். உங்கள் தளம் மூலமாகத்தான் நிறைய கோவில்களின் தரிசனம் கிடைத்துள்ளது.

    ReplyDelete
  15. அழகான காட்சிகள்
    பக்திச் சுவை கொண்ட கருத்துக்கள்.

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு,தரிசனம்

    ReplyDelete
  17. ரமேஷ் வெங்கடபதி said...
    ஸ்தல விருட்சத்தை இதுவரை கவனித்ததில்லை அங்கு! கண்டுகொண்டேன் இன்று! மிக்க நன்றி!

    மகிழமரமும் மனம் மகிழ்விக்கும் அங்கு!

    ReplyDelete
  18. கோனியம்மன் திருவிழா காட்சிகள் அற்புதம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  19. தம்பதி நவ க்ரஹம் + தேரோட்டம் எனச் சிறப்பாய் இருந்தது பதிவு .

    ReplyDelete
  20. அருமையான பதிவு.
    அற்புதமான படங்கள்.
    நாகலிங்கப்பூ படம் பார்த்தேன்.
    மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  22. 27. மத்ஸ்ய கூர்மா கோவிந்தா

    ReplyDelete