Sunday, September 27, 2015

மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி - Here is the 'Happy Street' in Coimbatore | Tamil Nadu | News7 Tamil



மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் நடத்த அனைத்து நகராட்சி நிர்வாகமும் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்....








Thursday, September 17, 2015

கருணை தெய்வம் கணபதி





“ஸுக்லாம் பரதரம் விஷ்னும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே’

.. விநாயகர் சித்தி மந்திரம்..

“ஓம், ஸ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே
வரவரத ஸர்வ ஜனம்மே, வஸமாயை ஸ்வாஹா’
.. கணபதி மூல மந்திரம்..

நான்கு வேதங்களும், 18 புராணங்களும், இதிகாசங்களும் தேவர்களும் வணங்கும் தெய்வ விநாயகரைப் போற்றுகின்றன.
ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி விநாயகரின் அவதார தினமாகும்.



 துன்பங்களுக்கெல்லாம் காரணமான வினைப் பயனைத் தீர்ப்பவர் மகாகணபதி.  18 கணங்களுக்கும் அதிபதியான கணபதியை  மனதால் நினைக்க, வாக்கினால் பாட, உடம்பால் வணங்க வினைகள் யாவும் தீரும்.

கணபதி ஞானத்தின் உருவம். வேதங்களில் உள்ளதுபோல
யோக அடிப்படையில் வேதாந்த பூர்வமாக உள்ளவர். மூலாதாரமானவர்.

கருணை புரிவதில்  இணையற்றவர். மிகவும் எளிமையானவர்.

அதிக செலவும் அதிக சிரமமுமின்றி எளிமையாக வணங்கி மிகுந்த பலனடையலாம்.


Saturday, September 5, 2015

மலர்களாய். வசீகரிக்கும் இலைகள்.......!

   
                
               
 
                           


அழகிய மலர்கள் ஆனந்தம் தர மலர்ந்து மனம் வசீகரிப்பவை..







மலர்களுக்குப் போட்டியாக பல வண்ணங்களில் தோன்றி வியப்பளிக்கும் இலைகளும் உண்டு..
மேப்பிள் மரத்தின் இலைகள் ஒவ்வொரு பருவகாலங்களிலும் வெவ்வேறு வண்ணங்களை வாரி இறைத்து மனம் கவரும்..



இலைகளே மலர்களாக வர்ணஜாலம் காட்டும் போயின்சேட்டியா' எனப்படும், அரிய இலைகள் மலர்களா ?? இலைகளா ?? என வியப்பூட்டும் வண்ணம் மலர்களாய் மனதை வசீகரிக்கின்றன.




poinsettia - SEED.


நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெளிநாட்டு மலர்கள், மரங்கள் அதிகளவில் உள்ளன.

 'போயின்சேட்டியா' என அழைக்கப்படும் 
போன்சாய் மரங்கள், அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டவை. 

இந்த மரத்தின் இலைகள், மலரை போன்று சிகப்பு நிறத்தில் காணப்படுகின்றன.


குன்னுார் -- மேட்டுப்பாளையம் சாலை, சிம்ஸ்பூங்கா உட்பட பல பகுதிகளில் அதிகளவில் வளர்ந்துள்ள இதனை சுற்றுலா பயணிகள் ரசித்து, 'போட்டோ' எடுத்துசெல்கின்றனர்.

சிவப்பு மட்டுமின்றி, வெள்ளை, பச்சை, கிரீம், பிங்க் போன்ற வண்ணங்களிலும் போயின்சேட்டியா இலைகள் காணப்படுகின்றன.


 போயின்சேட்டியா நாற்றுகள் குன்னுார் சிம்ஸ்பூங்கா நர்சரியில்,விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன