Friday, December 9, 2011

ஷோடச தீபாராதனைத் தத்துவம்

ஸர்வமங்கல மாங்கல்யே ஸிவே ஸர்வார்த-ஸாதிகே ஸரண்யே
த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்து தே

ஓம் ஸர்வமங்களாயை ச வித்மஹே சந்த்ராத்மிகாயை ச தீமஹி
தந்நோ நித்யா ப்ரசோதயாத் (கற்பூர நீராஜன தீபம் தர்ஸயாமி

ஓம் ஏக தந்தாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி: ப்ரசோதயாத் (கற்பூர நீராஜன தீபம் தர்ஸயாமி)

இறைவனைப் பூஜிக்கும் முறைகளில் தீபாராதனை சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இறைவனே தீப வடிவில் விளங்குகிறார்.
நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது. கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது.

இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும்.
அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு. 
கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.

இறைவன் முருகனை அருணகிரிநாதர், 
"தீப மங்கள ஜோதி நமோ நம' என்று போற்றுகிறார். 


மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை "ஒளி வளர் விளக்கே' என்றும்; "சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே' என்றும் பலவாறு போற்றியுள்ளார். 


ஒளி வடிவமான இறைவனை தீபங்களால் ஆராதனை செய்வதே 
தீபாராதனை என வழங்கப்படுகிறது.

தீபாராதனை என்பது வெறும் சடங்காக மட்டுமின்றி, உலகின் தோற்றத்தையும் ஒடுக்கத்தையும் காட்டும் தத்துவ விளக்கமாகவும் அமைந்துள்ளது. 

கோவில்களில் நடைபெறும் தீபாராதனையின் வரிசையையும் 
அதன் தத்துவத்தையும் ஆகம நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.
கோவில்களில் அலங்கரிக்கப்பட்ட மூர்த்தங்களுக்கு முன்பு திரையிடப்பட்டிருக்கிறது.திரைக்கு உள்ளே இருந்து பூஜையில் மணியோசை கேட்கிறது. 

பூசைகளின்போது கோவில்களில் கடவுளரின் திருவுருவத்தின் முன் காட்டப்பெறும் பலவித அலங்கார தீபங்கள் அனைத்தும் ஆழமான பொருள் உடையன.  தத்துவம் உடையன.

எல்லையில்லா வெற்றிடத்தில் முதலில் ஒலியே பிறக்கிறது. 
ஒலியில் இருந்து ஒளி பிறப்பது ஒரு தீபத்தின் மூலம் காட்டப்படுகிறது.

ஒலியில் இருந்து இறைவன் அருளால் பல நிலைகளில் உள்ள 
ஜீவன் பிறப்பதை அடுக்கு ஆரத்தி உணர்த்துகிறது. 

இப்போது திரை நீக்கப்பட்டு அடுக்கு ஆரத்தியைப் பார்க்கிறோம். அண்டவெளியில் புலப்படாதிருந்த உலகம் திரையை விலக்கிக்கொண்டு நமக்குத் தெரிகிறது. 

இறைவன் உயிரில் கலந்து உருவமாகப் புலப்படுவதும் திரை விலகிய பிறகு இறை வடிவத்தைக் காண்பதும், அதன் முன்னே இருக்கும் அடுக்கு ஆரத்தியும் குறிப்பிடுகின்றன. 

அடுக்கு ஆரத்தியில் தீபங்கள் பல தட்டுகளில் இருந்தாலும், 
அவை உருவமற்ற ஒரே பரம்பொருளின் வடிவத்தைக் குறிப்பிடுகின்றன.
பிறகு ஐந்து தட்டுகள் காட்டப்படுகின்றன. இவை சிவபெருமானின் ஐந்து முகங்களையும், அதிலிருந்து பஞ்சபூதங்கள் படைக்கப்படுவதையும் உணர்த்துகின்றன. 
பிறகு ஐந்து பூதங்களும் சேர்ந்து பிரபஞ்ச வடிவமாக விளங்கும் கும்பாரத்தி காட்டப்படுகிறது. கும்பம் அண்டத்தையும், அதன் மீதுள்ள தீபம் அதை இயக்கும் இறைவனையும் குறிப்பிடுகிறது.

அதையடுத்து நாகதீபம், மயூரதீபம், குக்குட தீபம், ரிஷப தீபம், கஜதீபம், புருஷாமிருக தீபம், புருஷ தீபம், அஸ்திர தீபம் ஆகியவை காட்டப்படுகின்றன. 
The purushamriga or sphinx lamp is the third lamp in the order of the lamp ceremony.

இவை மூலம் முதலில் ஊர்வன, அடுத்து பறப்பன, அடுத்து மனிதனும் விலங்குமாகிய புருஷாமிருகம், அடுத்து மனிதன், இந்த வளர்ச்சிக்குப் பிறகு வாழ்வதற்கான ஆயுதம் ஆகியனவும் விஞ்ஞான முறையில் காட்டப்பட்டு வருகின்றன. 

இவை உருவத்தால் வேறுபட்டிருப்பினும் பஞ்சபூதங்களுக்கு உட்பட்டு இயங்குவன என்னும் பொருள்பட அவற்றின்மீது பிரபையும் அதில் ஐந்து தீபங்களும் அமைந்துள்ளன.

இவ்வாறு ஒரே பரம்பொருளிலிருந்து தோன்றிய ஜீவன் பல நிலைகளைக் கடந்து அறிவால் இறைவனை அறிந்து கொள்கிறது.

இந்த ஆன்மா ஒரே ஆரத்தியாகக் காட்டப்பட்டு அதன் பக்குவ நிலையை உணர்த்தும் பொருட்டு அதன்மீது விபூதி தெளிக்கப்படுகிறது.

அடுத்து ஏழு கிளைகளையுடைய கற்பூர ஆரத்தி காட்டப்படுகிறது. விபூதிகள் கைவரப்பெற்று உயிர் பத்துவித குணங்களைக் கொள்கிறது.

குணங்கள் கூடிக்கொண்டு வருவதை இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று என்று வரிசையாக தீபங்களாகக் காட்டப்படுகின்றன.

பக்குவம் அடைந்த ஜீவன் இறைவனின் சாரூப நிலையைப் பெறுவதால் இறை வடிவமாகப் போற்றப்படுகிறது. எனவே எட்டு திசைகளிலும் உள்ளவர்கள் போற்றுவதைக் குறிக்கும் வகையில் அஷ்டமங்கலம் காட்டப்படுகிறது. 

கிழக்குத் திசையான இந்திரன் திசையிலிருந்து குடையும்,
தென்கிழக்கான அக்னி திக்கில் இருந்து அடுக்கு தீபமும்,
தெற்கு திசையாகிய யம திக்கில் இருந்து சுவஸ்திகமும்,
தென்மேற்கு திசையாகிய நிருதி திக்கில் இருந்து சாமரமும்,
மேற்கு திசையான வருண திக்கில் இருந்து பூரண கும்பமும்,
வடமேற்கு திசையான வாயு திக்கில் இருந்து விசிறியும்,
வடக்கு திசையான குபேர திக்கில் இருந்து ஆலவட்டமும்,
வடகிழக்கு ஈசான்ய திக்கில் இருந்து கொடியும்
கொண்டு வரப்பட்டதாகக் கருதி அவை காட்டப்படுகின்றன.

கோவில்களுக்குச் செல்பவர்கள் ஏதோ தீபாராதனை விதவிதமாகக் காட்டப்படுகிறது என்று நினைத்து விடாமல்- இதன் மூலம் ஆன்மா எல்லையற்ற பரந்த வெளியில் நிறைந்திருக்கும் இறைவனிடமிருந்து முதலில் ஒலியாகவும், பின்னர் ஒளியாகவும், அதிலிருந்து படிப்படியாக உலகமாகவும், அதில் நிறைந்த உயிர்களாகவும் தோன்றுவதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

இப்படி மூலமான இறைவனிடம் தோன்றிய ஆன்மா உலகை அடைந்து இங்குள்ள உலக விவகாரங்களில் சிக்கிக் கொள்கிறது.

அதில் சிக்கிக் கொள்ளாத ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதைக் குறிக்கும் வகையில் வேதங்கள் முழங்கப்படுகின்றன. 

இறைவனின் வார்த்தைகளான வேதத்தின் வழி செல்லும்ஆன்மா தன்னை உணர்ந்து கொண்டு படிப்படியாக முன்னேறு கிறது.
இதையே ஒன்று முதல் பத்து வரையில் உள்ள தீபங்கள் குறிப்பிடு கின்றன. 

நற்குணங்களால் நிறையப் பெற்ற ஜீவனை எட்டு திசைகளில் உள்ளவர் களும் வாழ்த்துகிறார்கள் என்பதைக் குறிக்கும் வகையில் குடை, அடுக்கு தீபம், சாமரம் ஆகியவை காட்டப் பெறுகின்றன.
பின்னர் கற்பூர தீபம் காட்டப்படுகிறது. இதுவே பூரண நிலை எய்திய ஜீவனின் நிலையாகும். 

கற்பூரம் எரிந்து காற்றில் கலந்து விடுவதைப்போலவே, ஜீவனும் தன் பாசப் பிணைப்பை உதறிவிட்டு பகவானோடு ஐக்கியமாவதை இதனால் உணர்ந்துகொள்ள வேண்டும். 

பின்னர் விபூதி அளிக்கப்படுகிறது. இதுவரை நிகழ்ந்த உலகத்தின் தோற்றத்தையும் இறுதியில் அது ஒடுங்கி விட்டதையும் குறிக்கும் வகையில் நெருப்பின் மீதியான சாம்பல் பிரசாதமாக அளிக்கப்படுகிறது

“ஞான விளக்கை ஏற்றி வெளியாக உள்ள கடவுளை அறிந்து கொள்ள, 
ஞானமாகிய விளக்கினால் முன்பு இருந்த துன்பங்கள் நீங்கும். 

இவ்வாறு ஞானமாகிய விளக்கின் தன்மையை அறிந்து கொண்டவர்களே வாழ்க்கையில் விளக்கம் பெற்றவர், ஞான விளக்கில் விளங்கித் தோன்றும் விளக்காக மாறுவார்கள்’ என்ற பொருளில்;

   “விளக்கினை ஏற்றி வெளியை அறமின்
     விளக்கினின் முன்னை வேதனை மாறும்
     விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
     விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!”

என்று திருமூலர் பாடியுள்ளார். 

விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார். எனவே, கோவிலில் காட்டப்பெறும் அலங்கார தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

     ஆய பதிதான் அருட்சிவ லிங்கம்
     ஆய பசுவும் அடல்ஏறு எனநிற்கும்
     ஆய பலிபீடம் ஆகும்நல் பாசமாம்
     ஆய அரன் நிலைஆய்ந்து கொள்வார்கட்கே

என்பது திருமூலர் திருமந்திரப் பாடலாகும்.

மூலமூர்த்தியைப் பதியாகவும் வாகனத்தைப் பசுவாகவும், 
பலிபீடத்தைப் பாசமாகவும் கொள்ள வேண்டும்.

பூசைக் காலங்களில் முதலில் திரை போடப்பெறும், பின் அலங்காரதீபம் காட்டும் போது திரை நீக்கப்பெறும், தீபம் காட்டும் அர்ச்சகர் பலவித அலங்கார தீபங்களை முறையாகக் காட்டுவார். 

ஆன்மாவின் பிரதிநிதியாகிய வாகனம், மூலமூர்த்தியைக் காணமுடியாமல் ஒரு மறைப்பு. திரோதானம் உண்டாக்குகிறது; அது ஆணவ மலம் எனும் தடையாகும். ஆணவ மலம் எனும் தடை நீங்கினால் – திரைநீங்கினால் மூலமூர்த்தியைக் காணலாம். 

அதுவும் நன்றாக காணமுடியாது. அர்ச்சகர் தீபம் காட்டினால் நன்றாகக் காணமுடியும். 

அர்ச்சகர் ஞானாச்சாரியரைக் குறிக்கும். விளக்கு ஞானத்தைக் குறிக்கும். 
மலம் நீங்க-ஞானாச்சாரியர் ஞானத்தைக் கொடுக்க – இறைவனைக் காணலாம்.

உலகத்தில் வெளிச்சம் வருதலும் இருள் நீங்குதலும் ஒரே சமயத்தில் நடைபெறும். 

அதுபோல ஞானாச்சாரியரால் ஞானம் வருதலும் மலம் நீங்கலும் ஒரேசமயத்தில் நடைபெறும். 

கோவிலில் திரை நீங்குதலும் அர்ச்சகர் அலங்கார தீபம் காட்டுதலும் ஒரேசமயத்தில் நடைபெறும். எனவே, விளக்கு ஞானத்தின் அறிகுறியாகும்.

ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். 
ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். 

மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். 

ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

ஐந்து தட்டுக்களில் தீபம் ஏற்றி நான்கு திசைகளில் நான்கு, நடுவில் ஒன்று என்ற முறையில் அமைத்த – அவ்வமைப்புக்கு ஒற்றை விளக்குக் காட்டிப் பின் நடுத்தட்டு முதலாக ஐந்து தட்டுகளையும் தீபத்துடன் காட்டப் பெறும். 

ஐந்தும் இறைவனுடைய ஐந்து முகங்களைக் குறிக்கும். 
மந்திரங்களுள் பஞ்சப்பிரம மந்திரங்கள் சிறப்புடையன.

1. ஈசானம் 2. தத்புருடம் 3. அகோரம் 4. வாமதேவம் 5. சத்யோசாதம் என்ற ஐந்தும் பஞ்சப்பிரம மந்திரங்கள் எனப்படும். 


ஏனைய மந்திரங்களுக்கு முன்னே தோன்றியதாலும், ஏனைய மந்திரங்களுக்குக் காரணமாக இருப்பதாலும் பஞ்சப் பிரம மந்திரங்கள் சிறந்தன என்று சிவஞானசித்தியார் குறிப்பிடுகின்றது. 

அந்தந்த மந்திரங்களால் அந்தந்த முகத்தைத் தரிசிப்பது என்ற முறையில் ஐந்து தட்டுத் தீபங்கள் காண்பிக்கப்படுகின்றன. 

இறுதியாக கும்ப தீபம் காண்பிக்கப் பெறும்.

 கும்ப தீபம் சதாசிவ தத்துவத்தை குறிக்கும். அனைத்தும் சதாசிவத்துள் ஒடுங்கும் என்ற முறையில் அமைந்த்து. விரிவாகப் பலவாறாக இருக்கும் தீபங்கள் முதல் கும்பதீபம் இறுதியாகக் புருட தீபம், மிருக தீபம், பட்ச தீபம், வார தீபம், ருத்ர தீபம் முதலிய தீபங்களும் விரிவாகக் காட்டும்போது காட்டப் பெறுவதுண்டு. 

அந்தந்தத் தீபத்திற்குரியவர்கள் அந்தந்த உருவில் வந்து 
இறைவனை வழிபடுகிறார்கள் என்பது கருத்து.

தீபாராதனை செய்யும்போது மூன்று முறை காட்டவேண்டும். 

முதன் முறை காட்டுவது உலக நலங்கருதியது. 

இரண்டாம் முறை கோவில் உள்ள ஊர்மக்கள் நலங்கருதியது. 

மூன்றாம் முறை ஐம்பெரும் பூதங்களால் இடையூரின்றி 
நலம் பயக்க வேண்டும் என்பது கருதியது. 
காட்டும்போது இடப்பக்கத் திருவடியில் தொடங்கி இடை, மார்பு, கழுத்து, நெற்றி, உச்சி என்ற முறையில் உயர்த்தி வட்டமாக வலப்பக்கம் தோள், மார்பு, இடை, பாதம் என்ற அளவில் ‘ஓம்’ என்னும் பிரணவ வடிவில் காட்ட வேண்டும். 

மூர்த்தி பேதங்களுக்குக்கேற்பத் தீபாராதனை முறையில் வேறுபாடு உண்டு. தீபாராதனைக்குப்பின் கற்பூரம் காட்ட வேண்டும்.


தூய கற்பூரம் எரிந்தபின் எஞ்சியிருப்பது ஒன்றும் இல்லை. 

அதுபோல ஆன்மா-பாச ஞானம், பசு ஞானம் நீங்கி இறைவனின் 
திருவடியில் இரண்டறக் கலந்து இன்பம் துய்த்தல் வேண்டும்.

     “தீது அணையாக் கர்ப்பூரதீபம் என நான் கண்ட
     சோதியுடன் ஒன்றித் துரிசு அறுவது எந்நாளோ?

என்று தாயுமானவர் இதனையே பாடியுள்ளார். 

அறியாமை நீங்கி இறையருள் பெறுவதே விளக்கு வழிபாட்டின் அடிப்படையாகும்.

     “ஆதிப்பிரானே! என் அல்லல் இருள் அகலச்சோதிப்
     பிரகாசமாய்த் தோற்றுவித்தால் ஆகாதோ? 
     ஏதும் தெரியாது எனைமறைத்த வல்இருளை
     நாத! நீ நீக்கஒரு ஞானவிளக்கு இல்லையோ?” (தாயுமானவர்).
Diwali+lamp+animated
The temple priests waving large oil lamps during the Ganga Aarti
The temple priests waving large oil lamps during the Ganga Aarti


Diwali+lamp+animatedGhee lamps at 10000 buddhas

[lamp-waving.jpg][diya-circling.jpg]
Magic Kingdom Castle Lighting Ceremony

60 comments:

 1. ஷோடச தீபாராதனைத் தத்துவமறிந்து பிறகு தான் பின்னூட்டமிட வர வேண்டும். கண்டிப்பாக வருவேன். vgk

  ReplyDelete
 2. முதலில் காட்டியுள்ள மஹாலக்ஷ்மியும் அடுத்துள்ள மஹா விஷ்ணுவும் மன நிறைவாக உள்ளன.

  ReplyDelete
 3. ஓம் ஏகதந்தாய விதமஹே வக்ர துண்டாய தீமஹி தந்தோ தந்தி: ப்ரசோதயாத்

  பிள்ளையார் சதுர்த்தி பூஜையில் சங்கல்பம் முடிந்ததும், இதை 10 முறை சொல்லித்தான், களிமண்ணால் செய்யப்பட்ட தொந்திப்பிள்ளையாருக்கு ஒவ்வொரு உதரணியாக ஜலம் தலையில் ஊற்றி அபிஷேகம் (ஸ்நானம்) செய்து வைப்போம். பிறகு தான் அலங்காரம் பூஜை எல்லாமே தொடங்கும்.

  அழகான மந்திரம். ;)))))

  ReplyDelete
 4. படங்கள் மனதை கொள்ளை கொண்டது.

  ReplyDelete
 5. அழகிய விளக்குகளாலும், ஷோடசோபசார பொருட்களாலும் இந்தப்பதிவை நன்கு ஜொலிக்கச் செய்து விட்டீர்கள். அனைத்தும் அருமையாக உள்ளன.

  ஒவ்வொன்றாக இனி தான் உற்றுப் பார்க்க வேண்டும், ரஸிக்க வேண்டும்.

  ReplyDelete
 6. அடுக்கு ஹாரத்திப்படம் வெகு அருமையாக உள்ளது. அதைவிட அருமை அதைப்பற்றி தங்களின் தத்துவ விளக்கம்.

  ReplyDelete
 7. அடேங்கப்பா, எத்தனை எத்தனைப் பொருட்கள். அத்தனைக்கும் அருமையான விளக்கங்கள். எப்படித்தான் சேகரித்தீர்களோ? எப்படித்தான் பதிவாக்க கடும் உழைப்பு நல்கினீர்களோ! ஆனால் எல்லோரும் அவசியமாய்த் தெரிந்து கொள்ள அற்புதமான விஷயங்கள் தான்.


  இத்தகைய பித்தளை மற்றும் வெங்கலப் பொருட்களை கையாள்வதும், புளி போட்டுத் தேய்த்து பளபளப்பாக்குவதும், எண்ணெய்ப்பிசுக்கு போக சுத்தம் செய்வதும் மிகவும் கஷ்டமான வேலைகள் தான்.

  வீட்டில் ஓரிரு விளக்குகளை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ளவே மிகவும் பொறுமை தேவைப்படுகிறது.

  கோயில்களில் இதற்கென்றே பலரும் பகவத்சேவை செய்ய முன்வந்தால் தான் நல்லது.

  ReplyDelete
 8. தீபாராதனை,கற்பூரம்,ஆரத்தி தத்துவ விள்க்கங்கள் முழுமை.படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது.

  ReplyDelete
 9. கற்பூர தீபாராதனைக்குப் பிறகு அதில் பிரஸாதமாகக்கொடுக்க எதுவுமே மிஞ்சாது. அதனால் தான் அதை அவசர அவசரமாக தீபமாக எரியும் போதே நம்மிடம் காட்டி விடுகிறார்கள். நாம் அதன் ஒளியை நம் கைகளால் பாவனையாக எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு விடுகிறோம்.

  நல்லதொரு விஷயம் நயம் படச் சொல்லியுள்ளீர்கள். ஆனால் இப்போதெல்லாம் கற்பூர ஹாரத்தியையே நிறுத்தி விட்டார்களே! தீபம் மட்டுமே காட்டப்படுகிறது.

  ReplyDelete
 10. இரண்டாவது படத்தில் அழகான கோதண்டராமரைக் காட்டியுள்ளீர்கள்.நான் ஏதோ அவசரத்தில் மஹாவிஷ்ணு என எழுதிவிட்டேன். ஸ்ரீ இராமரும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அவதாரம் தானே! என்று நீங்கள் சொல்லவருவது எனக்கும் தெரிகிறது.

  விபூதி கடைசியில் பிரஸாதமாக அளிக்கப்படும் தத்துவம் அருமை.

  மொத்தப்பதிவும் மிக அருமையாகவே உள்ளன. மங்களகரமான விளக்கொளிகள் அக்ஞானத்தை விட்டொழித்து, ஞானத்தை ஊட்டுவதாக மிகச்சிறப்பாக உள்ளன.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
  பகிர்வுக்கு நன்றிகள்.

  தீபத்திருநாள் வாழ்த்துக்களுடன்,
  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 11. தீப வழிபாட்டைப்பற்றி தாயுமானவர் பாடியுள்ள பாடலுக்குக்கீழே காட்டியுள்ள இரண்டு படங்களும் அருமையோ அருமை.

  பார்க்கப்பார்க்க மனதுக்குப் பரவஸம் தருவதாக உள்ளன. அதாவது அந்த விளக்கொளியுடன் கூடிய கோபுரமும்,
  குட்டிக்குட்டியான நொங்கு போன்ற தோற்றத்தில் அழகழகாக எரியும் அகல் விளக்குகளும், நேற்றே பார்த்தாலும் இன்றும் அலுக்கவில்லை.

  அற்புதமாக காட்டப்பட்டுள்ள காட்சி அது. தனிப்பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. வை.கோபாலகிருஷ்ணன் said...
  முதலில் காட்டியுள்ள மஹாலக்ஷ்மியும் அடுத்துள்ள மஹா விஷ்ணுவும் மன நிறைவாக உள்ளன/

  மன நிறைவான கருத்துரைக்கு
  மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 13. வை.கோபாலகிருஷ்ணன் said...
  ஓம் ஏகதந்தாய விதமஹே வக்ர துண்டாய தீமஹி தந்தோ தந்தி: ப்ரசோதயாத்

  பிள்ளையார் சதுர்த்தி பூஜையில் சங்கல்பம் முடிந்ததும், இதை 10 முறை சொல்லித்தான், களிமண்ணால் செய்யப்பட்ட தொந்திப்பிள்ளையாருக்கு ஒவ்வொரு உதரணியாக ஜலம் தலையில் ஊற்றி அபிஷேகம் (ஸ்நானம்) செய்து வைப்போம். பிறகு தான் அலங்காரம் பூஜை எல்லாமே தொடங்கும்.

  அழகான மந்திரம். ;)))))/

  அழகான மந்திரத்தின் பொருளுணர்த்திய அருமையான கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 14. shanmugavel said...
  தீபாராதனை,கற்பூரம்,ஆரத்தி தத்துவ விள்க்கங்கள் முழுமை.படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது./

  நிறைவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 15. வை.கோபாலகிருஷ்ணன் said...
  கற்பூர தீபாராதனைக்குப் பிறகு அதில் பிரஸாதமாகக்கொடுக்க எதுவுமே மிஞ்சாது. அதனால் தான் அதை அவசர அவசரமாக தீபமாக எரியும் போதே நம்மிடம் காட்டி விடுகிறார்கள். நாம் அதன் ஒளியை நம் கைகளால் பாவனையாக எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு விடுகிறோம்.

  நல்லதொரு விஷயம் நயம் படச் சொல்லியுள்ளீர்கள். ஆனால் இப்போதெல்லாம் கற்பூர ஹாரத்தியையே நிறுத்தி விட்டார்களே! தீபம் மட்டுமே காட்டப்படுகிறது./

  கற்பூரத்தில் நாப்தலின் என்னும் வேதிப்பொருளைச் சேர்ப்பதால் கர்ப்பக்கிரஹங்கள் கரி படிவதாலும், காற்று வசதியற்ற கர்பக்கிஹங்களில் அர்ச்சக சுவாமிகள் அதிகநேரம் வேதிப்பொருள் கலந்த கற்பூர புகையைச் சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டதாலும், நெய்தீபம் மட்டுமே காட்டபடுகிறது..

  ReplyDelete
 16. வை.கோபாலகிருஷ்ணன் said...
  தீப வழிபாட்டைப்பற்றி தாயுமானவர் பாடியுள்ள பாடலுக்குக்கீழே காட்டியுள்ள இரண்டு படங்களும் அருமையோ அருமை.

  பார்க்கப்பார்க்க மனதுக்குப் பரவஸம் தருவதாக உள்ளன. அதாவது அந்த விளக்கொளியுடன் கூடிய கோபுரமும்,
  குட்டிக்குட்டியான நொங்கு போன்ற தோற்றத்தில் அழகழகாக எரியும் அகல் விளக்குகளும், நேற்றே பார்த்தாலும் இன்றும் அலுக்கவில்லை.

  அற்புதமாக காட்டப்பட்டுள்ள காட்சி அது. தனிப்பாராட்டுக்கள்/

  தனிப் பாராட்டுகளுக்கும்,
  தீபத்திருநாள் வாழ்த்துகளுக்கும், பதிவினை சிறக்கச்செய்த அருமையான கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 17. ஓ! எவ்வளவு விளக்கங்கள்! அருமை...அருமை! ஒவ்வோரு தீபங்களுக்கும் அர்த்தம் உண்டு என்பது அறிவேன். அதை அறியத் தந்ததற்கு நன்றி. வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 18. தமிழ் உதயம் said...
  படங்கள் மனதை கொள்ளை கொண்டது./

  அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 19. kavithai (kovaikkavi) said...
  ஓ! எவ்வளவு விளக்கங்கள்! அருமை...அருமை! ஒவ்வோரு தீபங்களுக்கும் அர்த்தம் உண்டு என்பது அறிவேன். அதை அறியத் தந்ததற்கு நன்றி. வாழ்த்துகள் சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com/

  அருமையான கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 20. மலைத்துப்போனேன் சகோதரி..
  எத்தனை எத்தனை தீபங்கள்..
  அதற்கான விளக்கமும்.. தீபம் காட்டும் முறையும்
  நிறைய தெரிந்துகொண்டது போல இருந்தது.
  பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 21. தீபாராதனைகளின் தத்துவத்தை உண்மையில் இப்போது தான் புரிந்து கொண்டேன்.

  மிக்க நன்றி

  ReplyDelete
 22. அருமை அழகான படங்கள்

  ReplyDelete
 23. தீப, கற்பூர ஆரத்திகளின் தத்துவங்களை நன்றாக விளக்கியுள்ளீர்கள். படித்து இன்புற்றேன்.

  ReplyDelete
 24. அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ

  அருமையான பதிவு - பலப்பலப் படங்கள் - ஒவ்வொன்றுக்கும் அழகான விளக்கம் - அதற்கேற்ற மந்திரங்கள் - அத்தீபங்கள் ஏன் காட்டப்படுகின்றன என்ற விளக்கம் - அததனையும் படித்து செய்திகளைத் தெரிந்து கொண்டேன். பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 25. கார்த்திகைத் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் அன்பு உறவுகளே!....

  ReplyDelete
 26. எப்படித்தான் இவ்வளவு அழகான படங்களைத் தேடிப்பிடிக்கிறியளோ. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. கோவிலில் செய்யப்படும் கற்பூர தீபாராதனை,மற்ற விளக்குகளுக்கான தத்துவங்கள் மிக அருமையாக தொகுத்துக்கொடுத்துள்ளீர்கள் மேடம்.படங்கள் மிக அற்புதம்.கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. இன்று நம்ம ஊரிலும் பெரிய சொக்கப்பையன் கட்டியிருக்கிறங்க...

  அதுக்கு முதல் இங்கே நல்ல தரிசனம் கிடைத்திருக்கிறதே..

  ReplyDelete
 29. அருமையான பதிவு.
  அருமையான விளக்கங்கள்.
  அற்புதமான படங்கள்.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete
 30. தீபாராதனை,கற்பூரம்,ஆரத்தி தத்துவ விள்க்கங்கள் முழுமை.படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது.

  ReplyDelete
 31. பல அபூர்வமான விளக்குகளைப் பார்த்த மகிழ்ச்சி. உங்கள் பதிவுகளை வாசித்தால் இனம் புரியாத ஒரு நிம்மதியும் அமைதியும்.

  ReplyDelete
 32. ஆரத்தியில் இத்தனை விதங்கள் இருப்பதன் பின்னணி இப்பொழுது தான் புரிந்தது. 'தன்னையழித்துக் கொண்டு ஒளி தரும் தீபம்..' 'தீபம் எரிந்து காற்றினில் கலப்பது போல'.. 'எரிந்தபின் எஞ்சியிருப்பது எதுவுமில்லை'..யோசிக்க வைத்தது. 'வெளியை அறிமின்' என்றிருக்க வேண்டுமோ?

  வை.கோவின் கமெந்ட்கள் அருமை. கற்பூர மரம் is an environmental hazard. குறுகிய அறைக்குள் (கோவில், கர்ப்பகிருகம், வீட்டு பூஜையறை) கற்பூரத்தை மூச்சில் இழுப்பது பல வகை உபாதைகள் (நரம்புத் தளர்ச்சி முதல் சித்தக்கலக்கம் வரை) உருவாகக் காரணம் என்கிறார்கள்... எதிர் தரப்பில் கற்பூரத்தின் அளவுச்சேர்க்கையினால் உண்டாகும் பலன்களையும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.. ஐம்பது வருடங்களுக்கு மேலான சர்ச்சை. கற்பூர மரங்கள் environmental hazard என்று நம்புகிறேன். மத வழிபாடுகளில் கற்பூரம் தோன்றியது விபத்தாக இருக்கலாம். (ஒரு வேளை அந்த நாளில் கற்பூர மரத்தை எரித்து ஆரத்தி எடுத்திருப்பார்களோ?) வழிபடுவோருக்கு வழிபாடு தானே முக்கியம், கற்பூர ஆரத்தியா என்றும் கேட்கத் தோன்றுகிறது.

  ReplyDelete
 33. ரிஷபனுக்கு அழகாகச் சொல்லத் தெரிகிறது. உங்கள் பதிவுகள் ஒருவித அமைதி சாதனம்.

  ReplyDelete
 34. முதல் படத்தில் அந்த தனலக்ஷ்மியின் வலது உள்ளங்கையிலிருந்தும், இடது கை கலசத்திலிருந்தும் பொற்காசுகள் கொட்டுவது போலக் காட்டியுள்ளது அருமையாக உள்ளது.

  அது போலவே மேலே இரண்டும் கீழே இரண்டுமாக தீபங்கள் எரிவது போலத் தோன்றுவதும் அழகு தான்.

  கோதண்டராமரின் மின்னும் காதணிகளும், மார்பிலுள்ள மூன்று மணிகளும், வலது கை கவசமும், பின்புற திருவாசியும் அழகாக அற்புதமாக மின்னுகிறதே! ;))))

  நேற்றைய அவசரத்தில் நான் இவற்றைக் குறிப்பிடவில்லையோ அல்லது நேற்று அவற்றை அவசரத்தில் நான் கவனிக்க வில்லையோ எனக்கு சரியாகத் தெரியவில்லை.

  இப்போது தான் மீண்டும் பார்த்தேன். ரஸித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ;))))

  ReplyDelete
 35. அதே போல தனலக்ஷ்மியின் இரு காதணிகள் (ஜிமிக்கிகள்), நெஞ்சினில் உள்ள மாலையின் பதக்கம், தலை கிரீடத்தில் உள்ள ஒரு மணி அழகாக மின்னுகின்றது. மகிழ்ச்சி.

  ReplyDelete
 36. அதே போல தனலக்ஷ்மியின் இரு காதணிகள் (ஜிமிக்கிகள்), நெஞ்சினில் உள்ள மாலையின் பதக்கம், தலை கிரீடத்தில் உள்ள ஒரு மணி அழகாக மின்னுகின்றது. மகிழ்ச்சி.

  ReplyDelete
 37. அப்பாதுரை said...//

  //வழிபடுவோருக்கு வழிபாடு தானே முக்கியம், கற்பூர ஆரத்தியா என்றும் கேட்கத் தோன்றுகிறது.//

  ஞானிகளுக்கும், மேதைகளுக்கும் வேண்டுமானால் உருவ வழிபாடுகளும், பண்டிகை கொண்டாட்டங்களும், தீபாராதனைகளும் தேவைப்படாமல் ஜோதிமயமாய் இறைவனைத் தரிசிக்க முடியலாம்...

  பக்தியின் முதல் படியில் ஏற முயற்சிக்கும் சாதாரண ஆன்மாக்களுக்கு தீபாராதனை நடக்கும் அந்த க்ஷணத்திலாவது ஜோதி ஸ்வரூபமான இறைவனைத் தரிசிக்கும் பாவனை அதனைக் கூடினால் காலப்போக்கில் படிநிலையில் முன்னேற்றம் காண வாய்ப்பு வரலாம் என்று நம் ஞானம் வாய்ந்த பெரியோர்கள் ஷோடச தீபாராதனைத் த்த்துவங்களை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம் எனக் கருதுகிறேன்...

  கற்பூர மரம் பற்றிய கருத்து சிற்ப்பான பகிர்வு...

  அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 38. மகேந்திரன் said...
  மலைத்துப்போனேன் சகோதரி..
  எத்தனை எத்தனை தீபங்கள்..
  அதற்கான விளக்கமும்.. தீபம் காட்டும் முறையும்
  நிறைய தெரிந்துகொண்டது போல இருந்தது.
  பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.//

  கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 39. சிவகுமாரன் said...
  தீபாராதனைகளின் தத்துவத்தை உண்மையில் இப்போது தான் புரிந்து கொண்டேன்.

  மிக்க நன்றி//  கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 40. K.s.s.Rajh said...
  அருமை அழகான படங்கள்/

  அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்

  ReplyDelete
 41. DrPKandaswamyPhD said...
  தீப, கற்பூர ஆரத்திகளின் தத்துவங்களை நன்றாக விளக்கியுள்ளீர்கள். படித்து இன்புற்றேன்./

  அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 42. cheena (சீனா) said...
  அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ

  அருமையான பதிவு - பலப்பலப் படங்கள் - ஒவ்வொன்றுக்கும் அழகான விளக்கம் - அதற்கேற்ற மந்திரங்கள் - அத்தீபங்கள் ஏன் காட்டப்படுகின்றன என்ற விளக்கம் - அததனையும் படித்து செய்திகளைத் தெரிந்து கொண்டேன். பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  நல்வாழ்த்துகள் - நட்புடன் நல்கிய அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 43. அம்பாளடியாள் said...
  கார்த்திகைத் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் அன்பு உறவுகளே!..../

  வருகைக்கும் கார்த்திகைத் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள் ந்ல்கியத்ற்கும் மனம் நிறைந்த நன்றிகள்

  ReplyDelete
 44. அம்பலத்தார் said...
  எப்படித்தான் இவ்வளவு அழகான படங்களைத் தேடிப்பிடிக்கிறியளோ. வாழ்த்துக்கள்.

  வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 45. RAMVI said...
  கோவிலில் செய்யப்படும் கற்பூர தீபாராதனை,மற்ற விளக்குகளுக்கான தத்துவங்கள் மிக அருமையாக தொகுத்துக்கொடுத்துள்ளீர்கள் மேடம்.படங்கள் மிக அற்புதம்.கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்./

  அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 46. ♔ம.தி.சுதா♔ said...
  இன்று நம்ம ஊரிலும் பெரிய சொக்கப்பையன் கட்டியிருக்கிறங்க...

  அதுக்கு முதல் இங்கே நல்ல தரிசனம் கிடைத்திருக்கிறதே..//

  அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 47. Rathnavel said...
  அருமையான பதிவு.
  அருமையான விளக்கங்கள்.
  அற்புதமான படங்கள்.
  மனப்பூர்வ வாழ்த்துகள்./

  அருமையான கருத்துரைகளுக்கும், மன்ப்பூர்வ வாழ்த்துகளுக்கும்
  மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 48. Lakshmi said...
  தீபாராதனை,கற்பூரம்,ஆரத்தி தத்துவ விள்க்கங்கள் முழுமை.படங்கள் மனதை கொள்ளை கொள்கிறது./

  அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா..

  ReplyDelete
 49. ரிஷபன் said...
  பல அபூர்வமான விளக்குகளைப் பார்த்த மகிழ்ச்சி. உங்கள் பதிவுகளை வாசித்தால் இனம் புரியாத ஒரு நிம்மதியும் அமைதியும்./

  மகிழ்ச்சி ததும்பும் இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 50. அப்பாதுரை said...
  ரிஷபனுக்கு அழகாகச் சொல்லத் தெரிகிறது. உங்கள் பதிவுகள் ஒருவித அமைதி சாதனம்./

  அழகான கருத்துரைக்கு
  இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 51. வை.கோபாலகிருஷ்ணன் said...
  முதல் படத்தில் அந்த தனலக்ஷ்மியின் வலது உள்ளங்கையிலிருந்தும், இடது கை கலசத்திலிருந்தும் பொற்காசுகள் கொட்டுவது போலக் காட்டியுள்ளது அருமையாக உள்ளது.

  அது போலவே மேலே இரண்டும் கீழே இரண்டுமாக தீபங்கள் எரிவது போலத் தோன்றுவதும் அழகு தான்.

  கோதண்டராமரின் மின்னும் காதணிகளும், மார்பிலுள்ள மூன்று மணிகளும், வலது கை கவசமும், பின்புற திருவாசியும் அழகாக அற்புதமாக மின்னுகிறதே! ;))))

  நேற்றைய அவசரத்தில் நான் இவற்றைக் குறிப்பிடவில்லையோ அல்லது நேற்று அவற்றை அவசரத்தில் நான் கவனிக்க வில்லையோ எனக்கு சரியாகத் தெரியவில்லை.

  இப்போது தான் மீண்டும் பார்த்தேன். ரஸித்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ;))))//

  மீண்டும் பார்த்து ரஸித்து கருத்துரை தந்தபிறகே அனைவருக்குமே அதன் அழகு விகசித்துப் பிரகாசிப்பதாய்
  அறிய முடிகிறது..

  மனம் நிறைந்த நன்றிகள் ஐயா...

  ReplyDelete
 52. வை.கோபாலகிருஷ்ணன் said...
  அதே போல தனலக்ஷ்மியின் இரு காதணிகள் (ஜிமிக்கிகள்), நெஞ்சினில் உள்ள மாலையின் பதக்கம், தலை கிரீடத்தில் உள்ள ஒரு மணி அழகாக மின்னுகின்றது. மகிழ்ச்சி./

  அழ்காய் மின்னிடும் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 53. சென்னை பித்தன் said...
  அருமையான விளக்கம்.

  அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 54. ஷோடச தீபாராதனை பதிவிற்கு நன்றி.விளக்கங்கள் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்றன.
  அறியாமை இருள் நீக்கிய பதிவு.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 55. raji said...
  ஷோடச தீபாராதனை பதிவிற்கு நன்றி.விளக்கங்கள் தெளிவாக சொல்லப் பட்டிருக்கின்றன.
  அறியாமை இருள் நீக்கிய பதிவு.பகிர்விற்கு நன்றி/

  பதிவின் மூல காரணமே தாங்கள் தானே தோழி!
  தங்கள்
  கேள்வியே தேடலின்
  வேள்வியை ஆரம்பித்து வைத்தது..
  இன்னும் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வழிவகுத்துத் தந்தது..

  தரமுடிந்தது இவ்வளவுதான்..
  உணர்நதது மிக அதிகம்..
  கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 56. Aha!!!!!!
  Fine post Rajeswari.
  The kurma deepam and Chakarathi are very new to me. I am seeing it here at first time.
  Very nice. I enjoyed all pictures and post dear.
  viji

  ReplyDelete
 57. //அப்பாதுரை said...

  வை.கோ.வின் கமெண்ட்கள் அருமை.

  //

  Thank you very much, Sir.

  vgk

  ReplyDelete
 58. 1537+14+1=1552 ;)))))

  என் பின்னூட்டங்கள் + அன்பின் திரு. சீன ஐயா + திரு. அப்பாதுரை சார் பின்னூட்டங்களை பார்த்து அசந்து போனேன்.

  அதைவிட சிக்ஸர் அடித்தது போல ..... ஹைய்யோ உங்களின் ஆறு பதில்கள் ...... எ ன க் கே எ ன க் கா க !

  ஆச்சர்யமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி, நன்றியோ நன்றிகள்.

  ReplyDelete