Friday, December 2, 2011

அருணையில் கோபுரத்து உறைவோனே ...தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
அண்ணாமலை எம் அண்ணா போற்றி
கண்ணா ரமுதக் கடலே போற்றி
என்ற பாடல் அண்ணாமலையாரின் சிறப்பை விளக்குவதாகும்.
அறிவுடைத்தாரும் மற்றுடன் உனைப் பாடல் உற்று 
அருணையில் கோபுரத்து உறைவோனே ... 

அறிவு வாய்ந்த பெரியோர்களும் கூடி சந்தப் பாக்களால் முருகனைப் பாட திருவண்ணாமலையில் கோபுரத்தில் மகிழ்ச்சியுடன் வீற்றிருப்பவனே, 
என அருணகிரிநாதரால் பாடபெற்ற திருவண்ணாமலை அற்புதமான சூழ்நிலையையும் அழகான பின்னணியையும் அருமையான கருத்துக்களை வெளிப்படுத்தும் தல வரலாறுகளையும் கொண்டதாகத் திகழ்கிறது.

சிறந்த சிவத்தலங்களில் அதிலும் பஞ்ச பூதத் திருத்தலங்களில் அக்னித்தலமாக-ஒளி தரும் தலமாகக் திகழ்கிறது திருவண்ணாமலை.

அண்ணாந்து பார்க்கும் அளவு உயரம் கொண்ட மலையே அண்ணாமலை என்று சாதாரணமாகச் சொல்லப்படுவது அல்ல இந்த அண்ணாமலை. சிவனுக்கு அண்ணல் என்பது பெயர். அதுவே, அண்ணல் மலை-அண்ணாமலை என்றானது! 

செந்நிறமாகத் தகதக எனச் சிவந்து காலை உதிக்கும் கதிரவனின் நெருப்புக் கோளம் என அதாவது, அருணோதயக் காட்சி போலக் காணச் செய்த அருணமலை, அருணாசலம், அருணாசலேச்வரம் என்ற சிறப்பும் பெற்றது !

அக்னி க்ஷேத்திரம் ஆனதால் திருவண்ணாமலையின் கிழக்குப்புறம் அதாவது ஊரும் கோயிலும் உள்ள பகுதியில் புல்லும் சிறு புதர்களுமே வளர்ந்து மலை அந்தப் பகுதியில் மொட்டையாகக் காட்சி அளிக்க, மலையின் தெற்கு மேற்கு வடக்குப் பகுதிகளில் உயரமான மரங்கள் வளர்ந்து இருப்பதைப் பார்க்கலாம். இது ஓர் அதிசயமே. செவ்வாய்க் கிழமை பக்தர்கள் கிரி பிரதட்சணம் செல்வார்கள். மொத்தம் 9 மைல்.
பெரிய நந்திகேசுரருக்கு நேராக வல்லாள மகாராசா கோபுரம் உள்ளது.

அருணகிரிநாத பெருமான் இக்கிழக்கு ராஜ கோபுரத்திலிருந்து கோபுரத்தின் மீது ஏறி தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள கீழே விழுந்தபோது அவரை முருகபெருமான் தடுத்து ஆட்கொண்ட  இடம்தான் கம்பத்து இளையனார் கோயிலாகத் திகழ்கிறது .

திருக்கோயிலில் முருகபெருமான் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து தலத்திற்கு சிறப்பு செய்துள்ளார் .

அருணகிரிநாதரின் கவிபாடும் திறமையைக் கண்ட சம்பந்தாண்டன் என்ற புலவர், அவர் மீது பொறாமை கொண்டு அருணகிரிநாதருக்கும், சம்பந்தாண்டானுக்கும் யாருடைய பக்தி மேலானது என்ற விவாதம் எழுந்தது.

திருவண்ணாமலையை ஆட்சி செய்து மன்னர் பிரபுடதேவர் இப்போட்டிக்கு தலைமை வகித்தார்..
அருணகிரிநாதர் முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார்.

ஆனால், சம்பந்தாண்டான் முருகனின் காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்து தடுத்தான்.

சம்பந்தாண்டானின் சூழ்ச்சி நிறைவேறவில்லை.

முருகப்பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தின்
இடப்புறமுள்ள கம்பத்தில் காட்சி தந்தார்.

கம்பத்தில் காட்சி தந்ததால், "கம்பத்து இளையனார்' என்று பெயர் பெற்றார். இதனை திருப்புகழில் ""அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா'' என்று அருணகிரியார் குறிப்பிடுகிறார்.
பிரம்மதீர்த்தக்கரையிலிருந்து மேற்கே திரும்பி வந்தால் அதன் இருபக்கங்களிலும் காணப்படும் சந்நிதிகளில் தெற்கே யானை திறை கொண்ட விநாயகரும், வடக்கே சுப்பிரமணியரும் காணப்படுகின்றனர்.

இந்த விநாயகர் கனவில் வந்து மிரட்டி யானையைக் கப்பமாய்க் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். 
இந்தப் பகுதியில் ஆட்சி புரிந்த கொடுங்கோல் மன்னன் ஒருவனின் கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் துன்பப் பட்டுக்கொண்டிருந்தனர்.

இந்தக் கோயில் விநாயகரிடம் முறையிட்டு அழ,
விநாயகர் மன்னன் கனவில் வந்து அவனை மிரட்டினாராம். 
பயந்து போன மன்னன் மறுநாளே இந்தச் சந்நிதிக்கு வந்து தன் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு யானைகளை வாங்கிக் காணிக்கை செலுத்தினானாம்.

யானைகளைக் கப்பமாய்ப் பெற்றுக்கொண்ட்தால் 
யானை திறையாகக் கொண்ட விநாயகர் என்ற பெயர் இவருக்கு. 

இங்கே தான் சுப்பிரமணியர் கம்பத்து இளையனார்
என்ற பெயரோடு விளங்குகிறார்.


[SOMASKANDAR_cute-pictures.blogspot.com.JPG]
 இந்தக் கோயிலில் பெரியவர் அண்ணாமலையாரே. 

அவர் பெரு நெருப்பு. 

அந்தப் பெரு நெருப்பிலிருந்து தோன்றிய சின்னஞ்சிறு நெருப்பான முருகனை இங்கே அவர் குழந்தை என்பதாலும், அப்பாவை விடச் சின்னவர் என்பதாலும் இளையனார் என்றே அழைக்கின்றனர். 

அக்கினிக்குஞ்சு! அந்த அக்னிக்குஞ்சினை நம் மனப் பொந்திடைத் தியானத்தில் இருத்தி நம் முன்வினைகள் மிச்சமிலாமல் வெந்து தணிந்திட அந்த தணிகை மலைத் தீரனைப் பிரார்த்திப்போம்..

முக்கண்ணனின் நெற்றிக்கண்ணில் தோன்றியவன்...
நக்கீரரை அக்கண்ணாலேயே எரித்துச்சாம்பலாக்கியவன்!
தன் சின்னச்சிரிப்பாலேயே முப்புரம் எரிசெய்த அச்சிவன் 
பெருமிதமாய் தந்த சிறுவன் சுப்பிரமணியன்!
தீப்பொறியாய் கங்கையில் காங்கேயனாய் ஆறு தாமரைகளில் தோன்றி நெருப்பு நட்சத்திரங்களாம் கார்த்திகைபெண்களால் சீராட்டி வளர்க்கப் பெற்று அன்னை உமையவள் சேர்த்தணைத்ததால் ஆறுமுகம் நீயானாய் முருகா !
ஆலயச்சுடரின் ஒளியானாய் வேலவா!
அருணகிரியார் இங்கே கிளி வடிவில் ஞானம் பெற்று அந்த வடிவிலேயே இன்னமும் அந்தக் கோபுரத்தின் மீது வீற்றிருந்து அருள் புரிவதாய் ஐதீகம். 

அம்பிகையில் தோள்களில் காணப்படும் 
கிளியும் அருணகிரியாரே எனவும் கூறப்படுகிறது. 

ஞானக்கிளியான அருணகிரியைத் தம்மிடமிருந்து 
அன்னைக்கு முருகன் கொடுத்ததாயும் ஐதீகம். 
அண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோதன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்றும் இறைவன் பலவாறாகச் சிறப்பித்து அழைக்கப்படுகிறார். 

திருத்தல இறைவி உண்ணாமுலையம்மை உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்றும் அறிய முடிகிறது.

சின்னஞ்சிறு பெண் போல சித்தாடை இடை உடுத்திக் காணப்பட்டாள் உண்ணாமுலை அம்மன்.

பார்க்கப் பார்க்க்க் கண்கொள்ளாக் காட்சி அம்மனின் அலங்காரம்.

கையில் அள்ளிக்கொள்ளலாம் போல சிறு உடல்.
கண்ணெதிரே ஒரு வாலைக்குமரியாய் நின்று அருள்புரிகிறாள்..
பகவான் ரமண மகரிஷிகளும், சேஷாத்திரி சுவாமிகளும்
வாழ்ந்து அருள் பரப்பி நிறைந்த அருட்தலம்.


[SENTHIL_cute-pictures.blogspot.com.JPG]

43 comments:

 1. அருணையில் கோபுரத்து உறைவோனே தலைப்பே அருமையாகப் புதுமையாக உள்ளது. முழுதும் படித்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
 2. அனுமன் தன் நெஞ்சினில் ஸ்ரீராமரை வைத்திருந்து பிளந்து காட்டிய போல இந்த நந்தியார் தன் நெஞ்சினில் சிவன் இருப்பது போலக் காட்டுகிறாரோ?

  ReplyDelete
 3. முழு நிலவொளியை மிஞ்சும் மின்னொளி அலங்காரத்தில் கோபுரம் அழகாக மின்னுகின்றது. ;)))

  நம் தொந்திப்பிள்ளையாருக்கு “யானை திறையாகக் கொண்ட விநாயகர் என்ற பெயரா! மகிழ்ச்சி.

  ReplyDelete
 4. வெள்ளி யானை வாகனமும் அதில் ஸ்வாமி + அம்பாள் புறப்பாடும் நல்ல கம்பீரமாக அழகாகக் காட்டியுள்ளீர்கள்.
  மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ;))))

  ReplyDelete
 5. ஆஹா எனக்கு மிகவும் பிடித்த ஆறு லோட்டஸ். அதில் செல்லக் கைக்குழந்தையையும் சேர்த்து ஆறு குழந்தைகள். பார்க்கவே பரவஸமாக அதுவும் பரமசிவன் பார்வையின் திருஷ்டி பட்டு. சூப்பரோ சூப்பர் தான். மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான். ;)))))

  ReplyDelete
 6. நான் என் நெஞ்சினில் அம்பாளாகவே நினைத்து வரும் இராஜராஜேஸ்வரி அம்பாள் கோயிலையும் காட்டி விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
  வாழ்க விளம்பரப்பலகை உதவி செய்துள்ள பஞ்சாப் நேஷனல் பேங்க் காரர்கள்.

  கிளி யாராக இருந்தாலும், யாரிடமிருந்து அந்தக்கிளி யாருக்குப்போய் இருந்தாலும் கிளி கிளி தான், அதுவும் அழகோ அழகு தான், அதுபோல கிளி கொடுத்துள்ள இந்தக்கிளி கொஞ்சும் பதிவும் அழகு தான்.

  ReplyDelete
 7. சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை இடை உடுத்தி ...... பாடலுக்குத் தகுந்தபடி படமும் அழகாகவே அமைந்துள்ளது. வாலைக்குமரியாய் ... ;)))) தங்களின் சொல்லாடலே அள்ளிக்கொள்ளலாம் போலவே உள்ளது.

  ReplyDelete
 8. அழகான கருத்துரைகள் அளித்து
  அருணையின் கோபுரத்தில் உறையும்
  அருமைமுருகனை துதித்த கருத்துரைகள்
  அனைத்துகும் மனம் நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
 9. அமைதியான அந்த ரமணாஸ்ரம் சென்று வந்துள்ளேன். ஒரு சில புது அனுபவங்களை உணர்ந்து வந்தேன்.

  கடைசியில் காட்டப்பட்டுள்ள கோபுரம் இன்று மேலும் ஒரு கோடி புண்ணியத்தை அள்ளித்தருவதாக உள்ளது.

  கடின உழைப்புக்கும் 351 ஆவது வெற்றிகரமான பதிவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்,
  நன்றிகள்

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 10. அருணகிரி நாதனை பற்றி மிக அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. உங்களது படைப்புகள் அனைத்துமே கோவில்களைப்பற்றியும், பக்திமார்க்கத்திற்கும் நல்லதொரு கலைக்களஞ்சியம். நன்றி.

  ReplyDelete
 12. அன்பின் இராஜைரஜேஸ்வரி

  அண்ணாமலையாரைப் பற்றிய இடுகை அருமை. பெரு நெருப்பும் சிறு நெருப்புமாக, யானையினைக் கப்பமாகப் பெற்ற விநாயகருமாக், வாலைக்குமரியாய் உண்ணாமுலை அம்மனுமாக - காட்சி கொடுக்கும் திருத்தலத்தினைப் பற்றிய பதிவு - பட்ங்கள் - அத்தனையும் அருமை. ஆன்மீகத்தொண்டினை அனுதினமும் அழகுறச்செய்து வரும் இராஜ இராஜேஸ்வரி - வாழ்க வளமுடன். நட்புடன்சீனா

  ReplyDelete
 13. அருமை நண்பர் வை.கோவின் மறுமொழிகள் - அனுபவித்து எழுதுகிறார். வாழ்க அவரது பணி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. எனக்கு மிகவும் பிடித்த கோவில்....

  நல்ல பகிர்வு...

  ReplyDelete
 15. அருமையான பதிவுகள் தந்து புகழ் அடைந்தவர் தாங்கள் என்றால், மறுமொழி தருவதில் புகழ் பெறுகிறார் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள். வாழ்க!

  ReplyDelete
 16. சம்பாந்தாண்டன் சூழ்ச்சி நிறைவேறாமல் அருணகிரிநாதரின் பக்தி வெற்றி பெற்று முருகன் தோன்றி இளைய கம்பனாராக காட்சி தந்த செய்தி மனதை திருப்தி படுத்துகிறது ..

  ReplyDelete
 17. சிவன் பெருமிதமாய் தந்த சிறுவன் சுப்ரமணியன்... சிவனை வணங்கினால் சுப்ரமணியனை வணங்கியது போல தான்.. அது போல் சுப்ரமணியனை வணங்கினால் அது சிவனை வணங்கியது போல... தெந்நாட்டுடைய சிவனே போற்றி.

  ReplyDelete
 18. கோபுரத்தின் உச்சியில் உள்ள கிளியும், அம்பிகையின் தோளில் உள்ள கிளியும் அருணகிரியார் என்ற செய்தி தெரிந்துகொள்ளமுடிந்தது... அருமையான ஆன்மீக பகிர்வுக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 19. சிவன் மற்றும் முருகனின் அருமையான தரிசனம்.

  ReplyDelete
 20. N.H.பிரசாத் said...
  அருணகிரி நாதனை பற்றி மிக அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.

  அழகான கருத்துரைக்கு நன்றி...

  ReplyDelete
 21. விச்சு said...
  உங்களது படைப்புகள் அனைத்துமே கோவில்களைப்பற்றியும், பக்திமார்க்கத்திற்கும் நல்லதொரு கலைக்களஞ்சியம். நன்றி.


  கலைக்களஞ்சியம் !!
  கருத்துரைக்கு நன்றி..

  ReplyDelete
 22. cheena (சீனா) said...
  அன்பின் இராஜைரஜேஸ்வரி

  அண்ணாமலையாரைப் பற்றிய இடுகை அருமை. பெரு நெருப்பும் சிறு நெருப்புமாக, யானையினைக் கப்பமாகப் பெற்ற விநாயகருமாக், வாலைக்குமரியாய் உண்ணாமுலை அம்மனுமாக - காட்சி கொடுக்கும் திருத்தலத்தினைப் பற்றிய பதிவு - பட்ங்கள் - அத்தனையும் அருமை. ஆன்மீகத்தொண்டினை அனுதினமும் அழகுறச்செய்து வரும் இராஜ இராஜேஸ்வரி - வாழ்க வளமுடன். நட்புடன்சீனா /

  அழகுற அளித்த கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்..
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 23. வெங்கட் நாகராஜ் said...
  எனக்கு மிகவும் பிடித்த கோவில்....

  நல்ல பகிர்வு.../

  கருத்துரைக்கு நன்றி..

  ReplyDelete
 24. சந்திர வம்சம் said...
  அருமையான பதிவுகள் தந்து புகழ் அடைந்தவர் தாங்கள் என்றால், மறுமொழி தருவதில் புகழ் பெறுகிறார் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள். வாழ்க!/

  திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தரும் உற்சாகமும் ஊக்கமும் அள்விடற்கரியது..

  வாழ்த்துகளுக்கு நன்றி....

  ReplyDelete
 25. ஆன்மீக உலகம் said...
  கோபுரத்தின் உச்சியில் உள்ள கிளியும், அம்பிகையின் தோளில் உள்ள கிளியும் அருணகிரியார் என்ற செய்தி தெரிந்துகொள்ளமுடிந்தது... அருமையான ஆன்மீக பகிர்வுக்கு நன்றி சகோ!/

  பகிர்ந்து கொண்ட முத்தான அருமையான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்...

  ReplyDelete
 26. பாலா said...
  சிவன் மற்றும் முருகனின் அருமையான தரிசனம்./

  கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி..

  ReplyDelete
 27. அருமையான பகிர்வு

  ReplyDelete
 28. படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு.

  ReplyDelete
 29. ஒவ்வொரு சன்னிதிக்கும் உரிய விளக்கம் தந்து அதற்குத் தகுந்த படங்களுடன் கூடிய அருமையான பகிர்வு.
  அக்கினிக் குஞ்சின் விளக்கம் அருமை.பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
 30. தனித்தனி விளக்கங்களும், படங்களும் அசத்தல் சகோ..

  ReplyDelete
 31. ஒவ்வொரு விளங்களும், அதற்கான படங்களும் மிக அருமை... சகோ..

  ReplyDelete
 32. அந்தக் கம்பீரமான நந்தியைப் பார்த்து பக்திபரவசமாகிவிட்டேன்!நன்றி.

  ReplyDelete
 33. நேரில் போய் வந்தாலும் இவ்வளவு அருமையான தகவல்களும் தரிசனமும் கிடைக்குமோ என்னவோ!

  ReplyDelete
 34. நல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம்
  பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி
  சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .

  ReplyDelete
 35. பொருத்தமான நிழற்படங்களை போட்டு அருணாச்சல தீபத்தை நேரிலே காட்டி விட்டீர்கள்...நெருப்புதான் மனித வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்ற தத்துவத்தை மனித இனத்திற்கு உணர்த்தியது அருணாச்சல கோவில். உங்கள் எழுத்தும் உணர்த்திவிட்டது.

  http://jayarajanpr.blogspot.com/2011/12/28.html

  ReplyDelete
 36. படங்களில் திருவண்ணாமலையை சுற்றிக் காட்டி விட்டீர்கள்.ரமணாஸ்ரமத்தில் அமைதியாக உட்கார்ந்து ஒரு நாவலையே படித்தேன்.நன்று.

  ReplyDelete
 37. அருமையான பதிவு.
  அற்புதமான படங்கள்.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  ReplyDelete
 38. //cheena (சீனா) said...
  அருமை நண்பர் வை.கோவின் மறுமொழிகள் - அனுபவித்து எழுதுகிறார். வாழ்க அவரது பணி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

  அன்பின் ஐயா, வணக்கம்.

  என் பணி, பூவோடு சேர்ந்த நார் என்பார்களே அதுபோலத்தான்.

  இந்த கும்மென்று எப்போதும் மணக்கும் பூப்போன்ற பதிவருடன் சேர்ந்து நானும் நார் போல என்னை இணைத்துக் கொண்டு விட்டதால், தங்களால் புகழப்படுகிறேன்.

  மற்றபடி பூ பூதான். நார் நார் தான்.

  அடிக்கடி இதுபோல தாங்கள் என்னையும் உற்சாகப்படுத்துவதற்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  ReplyDelete
 39. //சந்திர வம்சம் said...
  அருமையான பதிவுகள் தந்து புகழ் அடைந்தவர் தாங்கள் என்றால், மறுமொழி தருவதில் புகழ் பெறுகிறார் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள். வாழ்க!//

  ஏதோ நல்ல மனமும் மணமும் உள்ள அருமையானதோர் பூவோடு சேர்ந்து, நாராக என்னையும் பின்னிப்பிணைந்து கொண்டு, ஏதோ கொஞ்சம் பகவத் கைங்கர்யம் [அடியாருக்கு அடியாராக] செய்யும் பாக்யம் கிடைத்துள்ளதில் மகிழ்ந்து வருகிறேன். தங்களின் தனித் தன்மையுடன் கூடிய பாராட்டுக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன் vgk

  //இராஜராஜேஸ்வரி said...
  சந்திர வம்சம் said...
  அருமையான பதிவுகள் தந்து புகழ் அடைந்தவர் தாங்கள் என்றால், மறுமொழி தருவதில் புகழ் பெறுகிறார் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள். வாழ்க!/

  திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தரும் உற்சாகமும் ஊக்கமும் அள்விடற்கரியது..//

  ஆஹா, இது ஒன்றே போதுமே!
  உற்சாகமும், ஊக்கமும் கப்பல் கப்பலாக அனுப்பி வைக்கப்படுமே!
  அம்பாளின் அருள் வாக்கு போல இதைக் கேட்க மிகுந்த சந்தோஷமாக உள்ளது. ;))))) vgk

  ReplyDelete
 40. ;) ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ஜய ராம்!

  ReplyDelete
 41. 1464+11+1=1476 ;)))))))

  தங்களின் பதில், சீனா ஐயாவின் கருத்துக்கள், சந்திரவம்சம் அவர்களின் கருத்துக்கள், குறிப்பாகத் தாங்கள் சந்திரவம்சம் அவர்களுக்குக் கொடுத்துள்ள பதில்கள் எல்லாமே மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். நீங்களும் அவற்றைப் பொறுமையாக மீண்டும் படித்துப் பாருங்கோ, ப்ளீஸ்.

  நாளை 06.10.2013 ஞாயிறு மாலை அன்பின் திரு சீனா ஐயாவையும் அவர் துணைவியாரையும் நேரில் சந்திக்க இருக்கிறேன்.

  உங்களைத்தான் நான் இன்னும் சந்திக்கவே முடியவில்லை. ;(

  ReplyDelete
 42. அன்பின் வை.கோ

  நாளை சந்திக்கலாம்

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா) has left a new comment on the post "அருணையில் கோபுரத்து உறைவோனே ...":

   //அன்பின் வை.கோ, நாளை சந்திக்கலாம், நல்வாழ்த்துகள்
   நட்புடன் சீனா //

   அன்பின் ஐயா, வணக்கம் ஐயா, நிச்சயமாக நாளை சந்திக்கலாம் ஐயா. நாளையப்பொழுது எப்போது விடியும் என, தீபாவளிக்கு முதல்நாள் குழந்தைபோல [அதாவது நாம் குழந்தைகளாக இருந்தபோது பற்றிச்சொல்லியுள்ளேன்] ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.

   ஐயா, ஒரு சின்ன சந்தேகம் ஐயா. இவர்களின் பதிவினில் இதைச் சொல்லியுள்ளீர்களே ! உங்களுடன் இவர்களும் ஒருவேளை திருச்சிக்கு வர இருக்கிறார்களா ஐயா?

   அப்படியிருந்தால் சொல்லுங்கள் ஐயா, நான் இப்போதே புறப்பட்டுப்போய். அங்கு பலவித முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது ஐயா.

   அதாவது [1] ஒரு கோயில் யானையிடம் மாலையைக்கொடுத்து, மாலை போட்டு வரவேற்கச்சொல்லணும் [2] 10000 வாலா பட்டாசுகள் 10 கட்டுகள் வாங்கி கொளுத்தனும் [3] ஆங்காங்கே வரவேற்புக்காக மிகப்பெரிய கட்-அவுட் ஃப்ளக்ஸி போர்டுகள் ஏற்பாடு செய்யணும். தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா.

   இன்னும் பலவித விருந்துபசாரங்கள், பரிசுப்பொருட்கள் என நான் இப்போதே முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் ஐயா.

   ஏற்கனவே எனக்கு இன்று இரவு தூக்கம் வரப்போவது இல்லை.

   இந்த இவர்களின் வருகையும் இருக்குமோ என இப்போது ஓர் புதிய சந்தேகத்தைக் கிளப்பியுள்ளீர்களே !

   நான் என்ன செய்வேன் ? ;))))))

   அன்புடன் VGK

   Delete