Friday, December 23, 2011

விஸ்வரூபஆஞ்சநேயர்




http://balhanuman.files.wordpress.com/2010/10/hanuman_vadai_maalai_2.jpg?w=300&h=400




"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி 
தன்னோ அனுமன் பிரசோதயாத்

என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். 
கடையநல்லூர் அனுமன் ஜெயந்தி டிச.19ல் ஆரம்பம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ
 
என்று
மாருதியை ஸ்தோத்திரம் செய்து வழிபட நல்ல புத்தி, பலம், புகழ், தைரியம், மனத்திடம், பயமின்மை, நோயின்மை, சுறுசுறுப்பு, சொல் வன்மை, எல்லாம் சித்திக்கும். தூய உள்ளத்தோடு நம் கோரிக்கைகளை இவரிடம் வேண்டிக்கொ காண்டு வடை மாலை, வெண்னை சாற்றுதல், வெற்றிலை மாலை ஆகியவை கொண்டு வழிபட்டால், சூரியனைக் கண்ட பனி போலே நம்முடைய துன்பம் எல்லாம் விலகி விடும்.

மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த அனுமன்  பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு.

வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் திகழ்கிறார் அனுமன்..

யத்ர யத்ர ஸ்ரீ ரகுநாத -கீர்த்தனம் தத்ர தத்ர க்ருத - ஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

எங்கெங்கெல்லாம் ஸ்ரீ ராமருடைய புகழ் பாடப்படுகின்றதோ அங்கங்கு சிரமேற் கூப்பிய கையுடனும் ஆனந்த பாஷ்பக் கண்ணுடனும் தோன்றுபவர், அரக்கர்களுக்கு யமனைப் போன்றவர் வாயு புத்திரர் , அஞ்சனா தேவியின் மைந்தர், ஜானகி தேவியின் துன்பத்தை துடைத்தவர், வானர தலைவர், அக்ஷய குமரனை மாய்த்தவர், வாயு வேகமும் மனோ வேகமும் படைத்தவர், இந்திரியங்களை வென்றவர், புத்திமான்களிற் சிறந்தவர்,

 ஸ்ரீ ராம தூதர், அனுமன் என்றும், ஆஞ்சனேயர் என்றும் வழங்கப்படும் மாருதி,  வைணவ சம்பிரதாயத்தில் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றார்.

எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்பது நம்பிக்கை  

ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். 
எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார்.
இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. 
இவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு, பரம்பொருள் அறிவித்த ஊர், மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும். இந்த ஊரில் தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார். 
தமிழ்நாட்டில் திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல், மேற்கு தொடர்ச்சி மலை தொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம் வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள் அதிகம். 
பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும், சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். 

ஆஞ்சநேயர் வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். 

ஆஞ்சநேயர் சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.
பாரதப்புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம். 
ஆஞ்சநேயர் பெரியவராக வளர்ந்த பிறகு பெரிய கடலை தாண்டினார்  குழந்தையாக இருந்த போது பூமியிலிருந்து ஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,.
 எனவே இவர் தனது பக்தர்களுக்கு அனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார்.  சிவனும் விஷ்ணுவும் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், பொதுவாக ஆஞ்சநேயருக்கு மிகப்பெரிய உருவம் உடைய கோயில்கள் அதிகம் உள்ளது
ராம பக்த அனுமன், விஸ்வரூப தரிசனம் தரும் தலங்களில் சின்னாளப்பட்டி சுசீந்திரம், நாமக்கல், சென்னை- நங்கநல்லூர், தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரம், லங்காவில் உள்ள நுவரேலியா ஆகியவை பிரசித்தி பெற்றவை..
[hanumath+Jayanthi.JPG]
பஞ்ச முக விஸ்வரூப ஆஞ்சனேயர்
[anjaneya5.jpg]
அருள்மிகு ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில்
  சென்னை தாம்பரம் அருகே உள்ள கௌரிவாக்கம். அருளாட்சி செய்யும் ஐந்து திருமுகங்களும் ஒரே வரிசையில் அமைந்திருக்கும் அபூர்வ அமைப்பில்
 பக்தரைப் பார்க்கும் அஞ்சுமுக அனுமன்

வாயு புதரன், அஞ்சனையின் அருந்தவ புதல்வன் அனுமன். சீதா மாதாவினால் சிரஞ்சிவி பட்டம் பெற்றவன், நித்திய பிரம்மச்சாரி மாருதி. தேரில் அருள் பாலிக்கும் அனுமன்
[DSC02468a.JPG]
யோக ஆஞ்சநேயர், திருப்போரூர், THIRUPORUR, TN, INDIA.
PERANAMALLUR, VADAIMAALAI ALANKARAM,




[DSC02473a.JPG]

54 comments:

  1. ஆஹா! விஸ்வரூப ஆஞ்சநேயரா!

    தரிஸித்துவிட்டு வர சற்றே தாமதம் ஆகுமே! அதனால் என்ன? கட்டாயம் வருவேன்.

    ReplyDelete
  2. அஞ்சிலே ஒன்று பெற்றான் பற்றிய அருமையான பகிர்வு!

    ReplyDelete
  3. ஆஹா, இரண்டாவது படத்தில் தன் நெஞ்சைப்பிளந்து காட்டிடும் ஹனுமனுக்கு ஸ்ரீராமபிரான் தன் திருக்கரங்களால் அன்பையும், அருளையும், பாசத்தையும், நேசத்தையும் ஒன்றாகக் கலந்து பாலாகப் பீய்ச்சுவது போலக் காட்டியுள்ளீர்களே! அது சூப்பர்! ;))))

    ReplyDelete
  4. அனுமன் காயத்ரியும், மாருதி ஸ்லோகமும் சொன்னால் என்னென்ன பலன்கள் கைமேல் கிடைக்கும் என்பதை வெகு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    சூர்யனைக்கண்ட பனிபோல துன்பங்கள் விலகிடும். ஆறுதல் அளிக்கிறது. ;))))

    ReplyDelete
  5. வழமை போலவே பதிவு கலக்கல். ஆஞ்சனேயரின் அருள் பெற்றேன்.

    ReplyDelete
  6. யத்ர யத்ர ஸ்ரீ ரகுநாத கீர்த்தனம்
    தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
    மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்.

    ஸ்ரீராம் புகழ் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ, எங்கெல்லாம் பஜனை கீர்த்தனைகளாகப் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேய ஸ்வாமி நம்முடனே அமர்ந்திருப்பார். வேறென்ன வேண்டும்? அனுமன் நம் அருகே இருக்கும்போது. ராம நாம வலிமை சொல்லி மாளாதது அல்லவா! ;))))

    ReplyDelete
  7. வைஷ்ணவர்களால் சிறிய திருவடி எனப்போற்றப்படும் ஸ்ரீராமதூதன், ஸ்ரீராமபக்தன், ஸ்ரீ ஆஞ்சநேயன், ஸ்ரீஹனுமன் சாதாராணமானவரா?

    பக்திமான், பராக்ரமசாலி, வேதங்களையும் அனைத்து சாஸ்திரங்களையும் கரைத்துக்குடித்தவர், புத்திமான், பலவான், எல்லாவற்றிற்கும் மேல் மிகவும் பெளவ்யமானவர். அவரை வழிபட்டால் நல்ல புத்தி, நல்ல அறிவு, தைர்யம் முதலியன நம்மை வந்து சேர்ந்து நிச்சயம் காக்கும் தான்!

    ReplyDelete
  8. குடத்தைக்கையில் தூக்கி, ஸ்ரீராமருக்கு பாதபூஜை செய்யும் படம் நல்லாயிருக்குது.

    சனிதோஷம் விலக, சனி நம்மைப் பிடிக்காமல் இருக்க நாம் ஆஞ்சநேயரை பிடித்தால் போதுமே!

    நட்சத்திர தோஷத்தையும் நீக்க வல்லவராயிற்றே!

    சரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி, ஹயக்கிரீவர் போல இந்த ஹனுமனையும் வணங்கினால் போதுமே, இந்தப்பதிவர் போல நாமும் அதி புத்திசாலியாகப் பிரகாசிக்க முடியுமே! ;))))

    ReplyDelete
  9. மதுரைக்கு அருகே உள்ள திருவாதவூரின் பெருமையை அறிந்து கொண்டோம்.

    ஸ்ரீ ஹனுமனின் அவதாரச் செய்தியினை, தந்தை வாயுபகவானுக்கு பரம்பொருளே அறிவித்த இடமா!
    ஆஹா நல்ல புதிய தகவல் அல்லவா இது எனக்கு! ; ))))

    கேரளா முதல் மஹாராஷ்ட்ரா வரை எங்கும் ஒரே ஹனுமன் கோயில்கள்!
    கேட்கவே சந்தோஷம். வட இந்தியர்களுக்கு ராமபக்தியும், ஹனுமான பக்தியும் அதிகமாகவே உள்ளன தான்.

    ReplyDelete
  10. நம் பாரத புண்ணிய பூமியில், தொண்டரே தெய்வமாகப் போற்றப்படும் மேன்மை ஆஞ்சநேயர் வரலாற்றில்.

    மிக நன்றாகவே சொல்லிவிட்டீர்கள். அது உண்மை தான்.

    ஆஞ்சநேயர் வழிபாட்டில் பக்தி தரும் ராமநாம பஜனை, வீரம் தரும் செந்தூரம், வெற்றிதரும் வெற்றிலை, நோய் நொடி நீக்கும் துளசிதளம் ஆஹா அனைத்தும் அருமையான தகவல்களே!

    வெண்ணெயும் வடைமாலையும் பின்னால் வருமோ? பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. நம் பாரத புண்ணிய பூமியில், தொண்டரே தெய்வமாகப் போற்றப்படும் மேன்மை ஆஞ்சநேயர் வரலாற்றில்.

    மிக நன்றாகவே சொல்லிவிட்டீர்கள். அது உண்மை தான்.

    ஆஞ்சநேயர் வழிபாட்டில் பக்தி தரும் ராமநாம பஜனை, வீரம் தரும் செந்தூரம், வெற்றிதரும் வெற்றிலை, நோய் நொடி நீக்கும் துளசிதளம் ஆஹா அனைத்தும் அருமையான தகவல்களே!

    வெண்ணெயும் வடைமாலையும் பின்னால் வருமோ? பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. ஸீதா லக்ஷ்மண ஹநூமத் ஸமேத ஸ்ரீகோதண்டராமர் படம் வெகு அழகாகக் காட்டியுள்ளீர்கள். ;))))

    ReplyDelete
  13. அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ - வழக்கம் போல படங்கள் அத்தனையும் அருமையான அட்டகாசமான படங்கள் - விளக்கங்களோ அவற்றிற்கு ஏற்றவாறு இருந்தன. தரிசித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. குட்டிக்குழந்தையாய் இருந்தபோதே சிவந்த பழம் என நினைத்து ஒரே தாவலில் சூரியனையே எட்டிப்பிடித்தவர், பிறகு பெரியவரானதும் கடலைத் தாண்டியது அதிசயமாகத் தோன்றவில்லை தான். இவரால் முடியாத ஒரு காரியமும் உண்டோ.

    ஹனுமன் ஸ்லோகம் சொல்லிச் சென்றால் நாம் செல்லும் எந்தக் கார்யமும் நல்லபடியாகவே, வெற்றிகரமாகவே முடிந்து விடுகிறதே!
    ராமதூதன் நம்முடன் கூடவே வந்தல்லவா வெற்றி கிட்டிடச் செய்கிறார். முழு நம்பிக்கை மட்டும் வைத்தால் போதும். மீதியெல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்.

    ஹனுமனுக்கு நெஞ்சில் வெண்ணெய் சாத்தினால் போதுமே, நம் மனத்துயரமெல்லாம் நீங்கி, மனதுக்கு அந்த வெண்ணெய் தடவி விட்டது போலல்லவா மனம் குளிர்ந்து போகும்!

    ReplyDelete
  15. ராம பக்த அனுமனின் விஸ்வரூப தரிஸனம் நன்கு படத்தில் காட்டி விட்டீர்கள்.

    நீங்கள் சொன்ன ஊர்களில் நாமக்கல் + சென்னை நங்கநல்லூர் மட்டும் தரிஸித்துள்ளேன். குண்டக்கல்லிலும் இது போல மிகப்பெரியதோர் ஆஞ்சநேயர் பார்த்து வந்த நினைவு உள்ளது.

    ReplyDelete
  16. ஆஹா, கேரள கதக்களி நடனமாடுவோர் போல காட்டியுள்ள அலங்கார ஆஞ்சநேயர்கள் ஐவரும் அற்புதம். கலர் கலராக ஜொலிக்கக்கண்டேன். ;))))\\

    அடுத்தவர் பழமாலைகளால் அடடா!;)

    ப்ளாக் அண்ட் ஒயிட் கலரில் மாறிமாறி சிரசிலிருந்து பாதம் வரை மிகச்சிறப்பாகக்ல் காட்டப்பட்டுள்ளவர் ரொம்ப ஜோர் காம்பினேஷன் கலரில் டாப்பாக காட்டப்பட்டுள்ளது

    ReplyDelete
  17. பஞ்சமுக ஆஞ்சநேயரும் படு ஜோர்.

    அருள்மிகு ஜயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில், பிரகாஸமாய் வெகு அழகாகப் படத்தில் ஜொலிக்கக்கண்டேன்.

    பக்தரைப்பார்க்கும் அஞ்சுமுக ஹனுமான்: இவரிடம் தான் எனக்குப் பிடித்தமான் வடை மாலை முதன் முதலாகக் காட்டப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அப்போ இவர் நம்மாளு! ;))))

    ReplyDelete
  18. கடைசிபடமான துறையூர் ஆஞ்சநேயர் சிரித்த முகத்துடன் உள்ளார். அதில் நம் தொந்திப்பிள்ளையார்கள் இருவர், ஜடாயு, ஸ்ரீராமர் பாதுகைகள் முதலியன வெள்ளியில் ஜொலிக்கின்றன. மலர் மாலைகளும் ஆபரணங்களும் வெகு ஜோர். பிரிம்மச்சாரியான அவருக்கு பஞ்சக்கச்சம் வேறு கட்டி அழகு பார்த்துள்ளனரே - கல்யாண கோலத்தில் காண வேண்டும் என்ற ஆசையோ!

    ReplyDelete
  19. Last but one படத்தில் ஹனுமன் தலை மட்டும் தெரிய ஒரே பழங்களும், புஷ்பங்களுமாக ஆஹா ஜோர் ஜோர்!

    ReplyDelete
  20. கீழிருந்து 3, 4, 5 + 6 சூப்பர் படங்கள்.
    அதுவும் 3 வது படத்தில், தட்டை போன்று செய்யப்பட்ட நல்ல முறுகலான, எண்ணெய் குடிக்காமல் இருக்க, தண்ணீர் விடாமல் அரைத்த, வடை மாவில் செய்துள்ளர்கள். நாலு நாட்கள் ஆனாலும் ருசித்தால் நன்றாகவே இருக்கும் அந்தப் பிரஸாத வடை. ஈரப்பசையே இல்லாமல் இருப்பதால் சட்னு ஊசாது. அந்தப்படம் அழகாக உள்ளது.

    ReplyDelete
  21. நீங்கள் முன்பு ஒரு ஆஞ்சநேயர் ஏராளமான வடைகளுடன் அடிக்கடி காட்டுவீர்கள். முகம் தவிர உடம்பு பூராவும் அடர்த்தியாக வடை மாலை காட்டப்பட்டிருக்கும். வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும். நாளைய ஹனுமத் ஜயந்தியை உத்தேசித்து அதையும் காட்டியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும். பரவாயில்லை நாளைய பதிவில் எப்படியும் அதை முதலில் காட்டி விடுங்கள். குறையில்லாமல் நிறைவாக அமைந்துவிடும்.

    நாளைக்கு சனிக்கிழமை, அமாவாசை, காலை 9.40 க்கு மேல் மூலா நக்ஷத்திரம், ஹனுமத் ஜயந்தி, காலையில் எழுந்ததும் தரிஸிக்க ஏதுவாக இன்றே இந்த வெளியீடு கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    இவ்வளவு படங்கள், இவ்வளவு விளக்கங்கள், எல்லாமே வெகு அருமை. கடும் உழைப்பைக் காண்கிறேன். மிகவும் வியப்படைகிறேன். பிள்ளையாரில் ஆரம்பித்து ஹனுமார் வரை அனைத்து தெய்வங்களின் அருளும் தங்களுக்கு இதற்கான சக்தியைத்தருகிறது. தொடர்ந்து இதுபோல பதிவுகள் தந்துகொண்டே இருங்கள்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  22. நாளைக்கு சனிக்கிழமை, அமாவாசை, காலை அனுமத்ஜயந்தி இங்கே கோவிலில். இன்றே அசத்திவிட்டீர்கள். நன்றீ.

    ReplyDelete
  23. My present house is away from city. I was much worrying that i cannot go and see my regular Anjaneyas and felt sleepless.
    What a surprise!!!!!!!
    Instead of one i had seen many pictures of HIM without goingout.
    Thanks Rajeswari.
    Thanks a lot.
    viji

    ReplyDelete
  24. வை.கோபாலகிருஷ்ணன் said...
    நீங்கள் முன்பு ஒரு ஆஞ்சநேயர் ஏராளமான வடைகளுடன் அடிக்கடி காட்டுவீர்கள். முகம் தவிர உடம்பு பூராவும் அடர்த்தியாக வடை மாலை காட்டப்பட்டிருக்கும். வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கத்தோன்றும். நாளைய ஹனுமத் ஜயந்தியை உத்தேசித்து அதையும் காட்டியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும். பரவாயில்லை நாளைய பதிவில் எப்படியும் அதை முதலில் காட்டி விடுங்கள். குறையில்லாமல் நிறைவாக அமைந்துவிடும்.

    நாளைக்கு சனிக்கிழமை, அமாவாசை, காலை 9.40 க்கு மேல் மூலா நக்ஷத்திரம், ஹனுமத் ஜயந்தி, காலையில் எழுந்ததும் தரிஸிக்க ஏதுவாக இன்றே இந்த வெளியீடு கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    இவ்வளவு படங்கள், இவ்வளவு விளக்கங்கள், எல்லாமே வெகு அருமை. கடும் உழைப்பைக் காண்கிறேன். மிகவும் வியப்படைகிறேன். பிள்ளையாரில் ஆரம்பித்து ஹனுமார் வரை அனைத்து தெய்வங்களின் அருளும் தங்களுக்கு இதற்கான சக்தியைத்தருகிறது. தொடர்ந்து இதுபோல பதிவுகள் தந்துகொண்டே இருங்கள்.

    பிரியமுள்ள vgk

    விஸ்வரூபமாய் அருமையாய் கருத்துரைகள் வழங்கி
    பதிவினைப் பெருமைப்படுத்தி சிறப்பித்தமைக்கு இதயம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  25. சென்னை பித்தன் said...
    அஞ்சிலே ஒன்று பெற்றான் பற்றிய அருமையான பகிர்வு!

    அருமையான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  26. ராஜி said...
    வழமை போலவே பதிவு கலக்கல். ஆஞ்சனேயரின் அருள் பெற்றேன்.//

    கலக்கல் கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  27. cheena (சீனா) said...
    அன்பின் இராஜ இராஜேஸ்வரி மற்றும் வை.கோ - வழக்கம் போல படங்கள் அத்தனையும் அருமையான அட்டகாசமான படங்கள் - விளக்கங்களோ அவற்றிற்கு ஏற்றவாறு இருந்தன. தரிசித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா/

    நட்புடன் நல்வாழ்த்துகள்
    நல்கி பதிவினைச் சிறப்பித்தமைக்கு இதயம் நிறைந்த இனிய
    நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  28. Manakkal said...
    நாளைக்கு சனிக்கிழமை, அமாவாசை, காலை அனுமத்ஜயந்தி இங்கே கோவிலில். இன்றே அசத்திவிட்டீர்கள். நன்றீ./

    அசத்தலான கருத்துரைக்கு
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  29. இந்த 2011 ஆம் ஆண்டின் 372 ஆவது பதிவினை வெற்றிகரமாக வெற்றியின் தெய்வமாகிய ஹநூமத் ஜயந்தியை ஒட்டிக் கொடுத்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

    http://jaghamani.blogspot.com/2011/10/blog-post.html இதில் உள்ள கீழிருந்து மூன்றாவது படம் “ஆஞ்சநேயர் Fruits & Vegetables அலங்காரம்

    http://jaghamani.blogspot.com/2011/07/blog-post_25.html இதில் உள்ள முதல் படம் [பூரண வடை மாலை]

    இந்த மேற்படி இரண்டு படங்களை மட்டும் தனியாக கொடுத்து, ஒரு தனிபதிவாக நாளை காலை 9 மணி சுமாருக்கு வெளியிடுங்கோ Please.

    அது இந்த வருடத்தின் 373 ஆவது பதிவாக இருக்கட்டும்.

    “ஹநூமத் ஜயந்தி ஸ்பெஷல் 24.12.2011” என்று வேண்டுமானாலும் தலைப்பு கொடுங்கோ!

    வேறொன்றும் அதிக விளக்கங்கள் கூட வேண்டாம். அல்லது நாளைய இரவு பதிவினில் இவை இரண்டையும் முதலில் காட்டிவிட்டு, பிறகு உங்களுடைய Routine பதிவை வெளியிடுங்கள்.

    இவை இரண்டும் எனக்கு மிகவும் பிடித்தமான அற்புதப்படங்களாகும்.

    ஒவ்வொரு வியாழன் + சனி அன்று தாங்கள் இவற்றில் ஒன்றை ஆரம்பத்திலோ கடைசியிலோ காட்டினால் கூட மிக அழகாக இருக்கும்.

    எல்லாப்படங்களும் படமாகாது. இவை மிகவும் கலையம்சத்துடன் அழகாக உள்ள படங்கள். அனைவரையும் சுண்டி இழுக்கக்கூடிய அருமையான படங்கள்.

    vgk

    ReplyDelete
  30. viji said...
    My present house is away from city. I was much worrying that i cannot go and see my regular Anjaneyas and felt sleepless.
    What a surprise!!!!!!!
    Instead of one i had seen many pictures of HIM without goingout.
    Thanks Rajeswari.
    Thanks a lot.
    viji/

    ஆத்மார்த்தமான
    அருமையான கருத்துரைகள் தந்து பதிவினைப் பெருமைப்படுத்தியமைக்கு இதயம் நிறைந்த இனிய நன்றிகள்...

    ReplyDelete
  31. அடியேனின் வேண்டுகோளை ஏற்று எனக்கு மிகவும் பிடித்தமான படங்களான இரண்டையும், உடனடியாக முன்னனியில் கொண்டுவந்து சேர்த்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போ இந்தப்பதிவு எவ்ளோ அழகாக உள்ளது பாருங்கள்.

    அழகுக்கு அழகு சேர்த்துள்ள தங்களின் பொற்கரங்களுக்கு என் அன்பான பணிவான வணக்கங்கள். vgk

    ReplyDelete
  32. ஆஹா! கடைசியில் நான்கு படங்களை புதிதாகச் சேர்த்து விட்டீர்களே, இப்போது. வெண்ணெய் சாத்தப்பட்ட ஆஞ்சநேயர் நாமக்கல் ஆஞ்சநேயர் என ஒரே அமர்க்களப்படுத்தி வருகிறீர்களே!

    கடைசிபடம் வடைப்பந்தல் வெகு ஜோர்.
    வாழைப்பந்தல் போல வடைப்பந்தல். இன்றும் நள்ளிரவில் பசியைக் கிளறி விட்டு விட்டீர்கள். சுடச்சுட உப்பலாக உளுந்து வடை மிளகு+கருவேப்பிலை போட்டு, முறுகலாக இப்போ எனக்கு உடனடியாக வேணுமே! போங்க! உங்களிடம் சொல்லிப்பயனில்லை.

    கேட்டால் எல்லாம் எங்க அம்மா தான் செய்வாங்க! நான் பரிமாறுவதோடு சரி என்பீர்கள். ;((((

    ReplyDelete
  33. புதிய படங்கள் இணைப்புக்குப்பிறகு கீழிருந்து நாலாவது படம் மிகவும் அழகாக ஜொலிப்புடன் திகழ்கிறது.

    மிகவும் சூப்பராகவே உள்ளது.

    ReplyDelete
  34. வெண்ணெய்க்காப்புடன் உள்ள ஆஞ்சநேயருக்குப் பின்புறம் கட்டுக்கட்டாக காடுபோல கருப்புக் கரும்புகளைக்காட்டியுள்ளது:

    என்னப்பொருத்தம் ...
    ஆஹா என்னப் பொருத்தம் ...
    நமக்குள் இந்தப் பொருத்தம் என்று
    கருப்புக் கரும்பும், வெள்ளை நிற வெண்ணெயும் பாட்டுப்பாடுவது போல கலர் காம்பினேஷன் வெகு அருமை.

    ReplyDelete
  35. ஆஞ்சநேயா எல்லோருக்கும் அருள் கொடப்பா

    ReplyDelete
  36. அனுமனைப் பற்றி படங்களும் செய்திகளும் அருமை.

    ReplyDelete
  37. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு
    தாங்கள் கொடுத்துள்ள பலவகையான
    அனுமனின் திருவுருவம் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்
    மிக்க நன்றிதொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. மனோதிடத்திற்கு ஆஞ்சனேயர் வழிபாடு உதவும். பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  39. அஞ்சனை மைந்தனின் புகழையும்,
    பல்வேறு தளங்களையும் அறிந்துகொண்டோம்
    சகோதரி.
    எங்க ஊர் பக்கம் (தூத்துக்குடி-திருநெல்வேலி) தெய்வச்செயல் புரம் என்ற
    ஊரில் சுந்தர ஆஞ்சநேயர் இருக்கிறார்.. நல்ல உயரமான வடிவத்துடன்.

    ReplyDelete
  40. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  41. ஆஹா! ஆஹா!

    subbu rathinam
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  42. இப்போது புதிதாக இணைத்துள்ள முதல் படமான “பழமாலை ஆஞ்சநேயர்” க்கு மீண்டும் மீண்டு வருவோம்.

    தலைப்பகுதியின் இருபுறமும் சாமரம் வீசுவது போன்ற செவ்வாழைத்தார்கள்.

    மேல் தோரணமாக அன்னாசிப்பழங்கள்.

    ராயல் ஆப்பிள்களும். சாத்துக்குடிகளும் மாத்தி மாத்தி நல்ல கலர் காம்பினேஷன்

    [என் ”ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்” லவ் ஸ்டோரியை நினைவு படுத்தியது]

    கருப்பு திராக்ஷைக்கொத்துக்கள் இருபுறமும் தலைப்பகுதியில் டாப்!;)))

    மாதுளைப்பழம், கமலாரஞ்சு முதலிய பல்வேறு பழங்கள் அழகழகாகவே, மிக நேர்த்தியாகவே கோர்க்கப்பட்டுள்ளது.

    மீண்டும் கீழே அரைவட்டமாக அன்னாசிப்பழங்கள் அருமையோ அருமை.

    கட்டடத்திற்கு அஸ்திவாரம் போல இருபுறமும் இரண்டு முரட்டு பன்ருட்டி பலாப்பழங்கள் அடியில் காட்டியுள்ளது தனிச்சிறப்பு.

    பழங்களை இவ்வாறு பொறுமையாக மிகுந்த கலா ரசனையுடன் மாலையாக கோர்த்துக்கட்டி அழகுக்கு அழகூட்டிய அந்தக் கலைஞர்களை அப்படியே கட்டியணைத்து முத்தமிட வேண்டும் போல எனக்கொரு ஆசை எழுகிறதே!

    அந்தப்படத்தில் ஹனுமனின் செந்தூர நிற வாயைக்கவனித்தீர்களா? அடடா அழகோ அழகு ;))))))

    அபய ஹஸ்தம் வெள்ளிக்கவசத்தில்!

    இடது கையில் Ghaதை அதுவும் வெள்ளியில் ....

    எரியும் தீபத்துடன் திவ்ய தரிஸனம்.

    பொதுவான அந்தப்படத்தின் அமைப்பு:

    “யாம் இருக்க பயமேன்!” என்று தாங்கள் சொல்வது போலவே எனக்கு மனதுக்கு மிகுந்த ஆறுதல் கொடுப்பதாக உள்ளது.

    மன மகிழ்ச்சியுடன் தங்கள் vgk

    ReplyDelete
  43. அனுமத் ஜெயந்தி ஆஞ்சநேயர் தரிசனம் அருமை சகோ.

    ReplyDelete
  44. அனுமன் காயத்ரி சொல்லி அவர் அருள் பெறுவோம்... பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  45. மார்கழி மாதம் அமாவாசை அன்று அவதரித்த அனுமனை - அமாவாசையான இன்று பதிவில் தெரிந்து அனுமனை நினைவக படுத்தியமைக்கு பாராட்டுக்களுடன் நன்றி சகோ!

    ReplyDelete
  46. சைவத்தில் சிவனின் அம்சமா?.. புதிய அரிய செய்தியை தெரிந்து கொள்ள முடிந்தது...

    ReplyDelete
  47. சனிபகவானையே கலங்க செய்தவரா?.. அந்த செய்தியையும் ஒரு பதிவில் பகிர்ந்தால் தெரிந்துகொள்வோம்...

    ReplyDelete
  48. ஹனுமனுக்கு தனது சக்தி மறந்துவிடுமாம்... யாராவது தூண்டி விட்டால் அவர் விஸ்வரூபம் எடுப்பாராம்... அந்த செய்தி.. நமக்கு ஒரு ஊக்க சக்தி தேவை என்பதை மறைமுகமாக ஹனுமன் கடவுளின் குணாதிசயம் பயனுள்ள விசயமாக கேள்வி பட்டிருக்கிறேன்... அனுமனின் வெவ்வேறு அற்புத படங்களுடன் அருமையானதொரு ஆன்மீக பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
  49. படங்கள்தான் உச்சம் எப்பவும்போல தோழி.அதுவும் அனுமனுக்கு 5 தலை இருக்கிறது என்பதும்,ஒரு கால் விலகி இருப்பதுபோல உள்ள படமும் வியப்பாயிருக்கிறது.படங்களைக் கூர்ந்து கவனித்தால் அலங்காரத்தைப் புகழ்ந்துகொண்டே இருக்கலாம் !

    ReplyDelete
  50. "இனிமையான பிறந்த நாள் வாழ்த்துகள் ஹனுமான்ஜி....எல்லா நாளும் இந்த நாள் போல இனிமையாக மலர அருள் தாருங்கள் ஹனுமான்ஜி..."

    ReplyDelete
  51. எங்கள் வீட்டிலே ஹனுமன் வந்து ஆசீர்வதித்தது போல் உணர்ந்தேன். நன்றி என்ற சொல்லால் முடித்து விட முடியாது.....அருமையான பணி.

    ReplyDelete
  52. அனுமத் ஜெயந்தியன்று அருமையான ஆஞ்சநேய தரிசனம்....

    தில்லியில் கரோல் பாக்கில் உள்ள பிரமாண்டமான ஆஞ்சநேயரும் அவர் காலடியில் இருக்கும் அரக்கனின் வாயினுள் புகுந்து செல்லும் கோவிலும் அழகு.

    ReplyDelete
  53. ;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!

    ReplyDelete
  54. 1709+25+1=1735 ;)

    மொத்தமுள்ள 53ல், 25 [ஏறக்குறைய 50%] என்னுடைய கமெண்ட்ஸ்களே.

    தங்களின் ஒரேயொரு பதிலுக்கும், அன்பின் சீனா ஐயா அவர்களின் பாராட்டுக்களுக்கும் என் மனம் நினைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete