Tuesday, December 6, 2011

தீபங்கள் ஒளிவீசும் திருக்கார்த்திகை

திருக் கார்த்திகை விளக்கு 
கந்தன் வேலன் கடம்பனுக்கு
நெஞ்சில் கருணைகொண்டு ஏற்றிவைக்கும்
கார்த்திகை விளக்கு..
தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதமல்லவா இது???

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் 
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே 
அது கால காலமாய் கவிதைகள் பாடுமே 
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு 

நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வான விளக்கு 
கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே 
வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம் 
கார்த்திகை மாத முழுநிலாவில் கொண்டாடும் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளி..
மழைபொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது. 

"மதிநிறைந்து அறுமீன் சோரும் அகல் இருள் நடுநாள்" என்றது, கார்த்திகை மாத முழுநிலா நாளைக் (பெளர்ணமி) குறிப்பதாகும். 

முருகனைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்ததால் அவர்கள் வரம் வேண்டியபடி வானில் ஆறு விண்மீன்களாயினர் என்பது புராணச் செய்தி.

 முருகனோடு தொடர்புடைய கார்த்திகை நாள் ஒவ்வொரு மாதத்தில் வந்தாலும் அது கார்த்திகை மாத முழு நிலவோடு கூடி நிற்கும்போது சிறப்புக்குரியது

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். 


பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. 

திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர். 


சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. 

ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன.

விளக்கில் சுடர் எரிவது நமக்கு நன்றாக தெரியும் புறத்தோற்றமாகும். 

ஆனால் அந்தச்சுடர் எண்ணெயை மெல்ல கிரகித்து எரிகின்றது என்பது நாம் உணர வேண்டிய அகத்தோற்றமாகும்.

வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான, நுட்பமான அகத்தோற்றத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தீப வழிபாடு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. 

திருவிளக்கால் அறியத்தக்க மறைபொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெருகும்.
கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரதகனம் நடத்தினார்.

திரிபுரதகனத்தின் போது,  சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது.

தீய சக்திகளுக்கு அக்னி பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின் அந்த பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்படுகின்றது 
தீபம் என்பது லட்சுமி தேவியின் வடித்தையும், 
சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும், 
பார்வதியின் சக்தியையும் ஒன்றாக சேர்த்திருப்பது.   


எனவே மூன்று தேவிகளின் வடிவமான தீபத்தைக் காணும் எந்த ஓர் மனிதனும், புழு, பூச்சி, பறவைகள் கூட நற்கதி எய்தும் என்பது ஆன்றோர் மொழி. 


கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்:
கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா 
ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா த்ருஷ்ட்வா
 ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:
பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.
இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம் என்பது ஐதீகம். 
எனவே தான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், முத்தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும்.
தீபமும் - லட்சுமியும்!
கார்த்திகை என்றாலே தீபம் தானே நம் நினைவுக்கு வரும். விளக்கில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. திருவிளக்கை தீபலட்சுமி என்பர். துர்கையின் வடிவங்களிலும் தீப துர்கை உண்டு. 


தீபத்தில், தீபலட்சுமியாகத் திகழ்பவள், 
வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்; 
சொர்க்கத்தில் - சொர்க்கலட்சுமியாகவும்; 
ராஜ்ஜியத்தில் - ராஜ்யலட்சுமியாகவும்; 
இல்லங்களில் - கிரகலட்சுமியாகவும் இருப்பதாக ஐதீகம். 

ஒரு வீட்டில் இருந்து, இன்னொரு வீட்டுக்கு தீபமேற்றப்பட்ட விளக்கை எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம்.

கோவில்களில் சுவாமிகளுக்கு நைவேத்யம் படைத்து பூஜை செய்வது தெரியும்; 

ஆனால், வேலூரிலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சுத்தன்ன நைவேத்யம் செய்யப்படுகிறது

விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத்துணியார்.

மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை

திருமூலரின் திருமந்திரம், ஐம்புலன்களை வென்றோர் அப்புலன்களையே விளக்காக்கி வழிபடுவதை உணர்த்துகிறது. 


நம் உடம்பே ஆலயம் என்றால், அங்கு புலனடக்கம் செய்த ஞானி அப்புலன்களையே விளக்காக்கி இறைவனை வழிபடுகிறான். புலன்களை இவ்வாறு ஞானத்தால் எரித்து விடுகிறான் (not in literal sense) என்றும் கொள்ளலாம்.

உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
ஐம்புலன்களும் காலா மணிவிளக்கு
திருக்கார்த்திகை தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நாட்டி, அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்துக் கட்டுவர். 

மாலையில், சொக்கப் பனை கொளுத்தப்படும். ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். 

சிவன் முப்புரம் எரிந்த பாவனையை காட்டுவதற்காக சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர். 

சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. சிவபெருமானை ஜோதிசொரூபமாக காணவே சொக்கப்பனை கொளுத்து கின்றனர்


அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறைவனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.

திருவண்ணாமலையில் சமாதி நிலையில் அருள்பாலிக்கும் விசிறி சாமிகள் என்னும் பகவான் யோகிராம் சுரத்குமார் தனது அருளுரையில்,
‘இறைவன் ஓர் ஒளிப்பிழம்பு, நெருப்பு பந்து வடிவமாக உள்ளார்’ 
என்று கூறுகிறார்.
தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். 


கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். 

திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள். 

தீபஜோதி வழிபாடானது இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமசனி போன்வற்றால் ஏற்படக்கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.
தீபஜோதியாக நின்று உலகை காக்கும் பரம்பொருளை வழிபட்டு சகல நலமும் பெறுவோமாக.
இருமலு ரோக முயலகன் வாத
     மெரிகுண நாசி ...... விடமே நீ 

ரிழிவுவி டாத தலைவலி சோகை
     யெழுகள மாலை ...... யிவையோடே 

பெருவயி றீளை யெரிகுலை சூலை
     பெருவலி வேறு ...... முளநோய்கள் 

பிறவிகள் தோறு மெனைநலி யாத
     படியுன தாள்கள் ...... அருள்வாயே 

வருமொரு கோடி யசுரர்ப தாதி
     மடியஅ நேக ...... இசைபாடி 

வருமொரு கால வயிரவ ராட
     வடிசுடர் வேலை ...... விடுவோனே 

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
     தருதிரு மாதின் ...... மணவாளா 

சலமிடை பூவி னடுவினில் வீறு
     தணிமலை மேவு ...... பெருமாளே. அருவாய்த் தகிக்கும் தணலில் மலர்ந்து 
உருவாய்த் திகைக்கும் ஒளியில் மிளிர்ந்து 
தருவாய்த் தழைத்துத் தரணி நிறைக்கும்
இருளில் அகலால் பகல்...
அகல் விளக்கே ஒளிரும்
அருணை மலையில் மலர் ..


 கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்  

54 comments:

 1. நல்ல பகிர்வு....

  புகைப்படங்களும் அருமை....

  ReplyDelete
 2. படங்களும் பதிவும் அழகு.

  ReplyDelete
 3. கடைசி இரண்டு புகைப்படங்களும் அருமை.அதிலும் அந்த தீபங்கள் பதிவிற்கு தனி பிரகாசம் தருகிறது.
  வாகனங்களில் இறைவனின் அழகு மெய் சிலிர்க்க வைக்கிறது.

  அப்பறம் அந்த பொரி உருண்டையில் பருப்புத் தேங்காய் பிடிச்சு வச்சுருக்கீங்களே!ஏற்கனவே பொரி உருண்டை விஷயமா உங்களோட எனக்கு ஒரு டீலிங் இருக்கு.திரும்பியும் ஞாபகப் படுத்தறேன்(படுத்தறேன்?)

  அடடா!பொரி உருண்டை பார்த்த உடனே பதிவை பத்தி சொல்ல மறந்துட்டேனே.தீபங்கள் பற்றிய சுடர் விடும் தகவல்களுடன் ஜெகஜோதியாய்
  ஒளி வீசுகிறது. :-))

  ReplyDelete
 4. வெங்கட் நாகராஜ் said...
  நல்ல பகிர்வு....

  புகைப்படங்களும் அருமை....//

  கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 5. Lakshmi said...
  படங்களும் பதிவும் அழகு.

  அழகான கருத்துரைக்கு ம்னம் நிறைந்த நன்றிகள் அம்மா..

  ReplyDelete
 6. raji said...
  கடைசி இரண்டு புகைப்படங்களும் அருமை.அதிலும் அந்த தீபங்கள் பதிவிற்கு தனி பிரகாசம் தருகிறது.
  வாகனங்களில் இறைவனின் அழகு மெய் சிலிர்க்க வைக்கிறது.

  அப்பறம் அந்த பொரி உருண்டையில் பருப்புத் தேங்காய் பிடிச்சு வச்சுருக்கீங்களே!ஏற்கனவே பொரி உருண்டை விஷயமா உங்களோட எனக்கு ஒரு டீலிங் இருக்கு.திரும்பியும் ஞாபகப் படுத்தறேன்(படுத்தறேன்?)

  அடடா!பொரி உருண்டை பார்த்த உடனே பதிவை பத்தி சொல்ல மறந்துட்டேனே.தீபங்கள் பற்றிய சுடர் விடும் தகவல்களுடன் ஜெகஜோதியாய்
  ஒளி வீசுகிறது. :-))/

  ஜெகஜோதியாய்
  ஒளி வீசுகிற கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  பொரி உருண்டை டீலிங்க்???!!1

  ReplyDelete
 7. Nov 29ம் தேதி தாங்கள் போட்டிருந்த "ஞானச்சுடர் விளக்கு" பதிவிற்கு நான் தந்திருக்கும் பின்னூட்டத்தில் சென்று 'பொரி உருண்டை டீலிங் பற்றி தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். :)

  ReplyDelete
 8. Nov 29ம் தேதி தாங்கள் போட்டிருந்த "ஞானச்சுடர் விளக்கு" பதிவிற்கு நான் தந்திருக்கும் பின்னூட்டத்தில் சென்று 'பொரி உருண்டை டீலிங் பற்றி தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். :)

  ReplyDelete
 9. காணக்கிடைக்காத புகைப்படங்கள்.புறத்தோற்றத்திற்கும் அகத்தோற்றத்திற்குமான கருத்துக்கள் அருமை.

  ReplyDelete
 10. பதிவும் படங்களும் வழமைபோல அழகு.

  ஊரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீட்டை ஞாபகப்படுத்தி விட்டீங்கள். எப்போ இருளும் எனக் காத்திருந்து, இருண்டதும், அப்பா கொழுத்தி தரத்தர ஓடி ஓடி வளவெல்லாம் பந்தம் கொழுத்திய காலம் கண்ணில் தெரிகிறது...

  ReplyDelete
 11. முதல் படத்தில் அசைந்தாடும் அகல் விளக்குகள் மனதைக்கவர்வதாக உள்ளது.

  தனியே காட்டியுள்ள ஐந்து முகக்குத்து விளக்கும், மற்ற எல்லா விளக்குகளுமே பதிவை ஜொலிக்கத்தான் செய்துள்ளன.

  சொக்கப்பனைகள் எரியூட்டப்படும் படங்களும் சிறப்பாகக்கொடுத்துள்ளீர்கள்.

  அழகிய செந்தாமரைக்குள் ஆறுமுகக் கடவுள் குழந்தையாக அழகாக!

  பறந்து பறந்து வந்து தன் ஜோடியைக் கொத்தும் பறவை கொள்ளை அழகு.

  ReplyDelete
 12. ஐந்து விளக்குகளைப் பார்த்தபடி
  ”ஐந்து கரத்தனை
  யானை முகத்தனை
  இந்தின் இளம்பிறை
  போலும் எயிற்றனை
  நந்தி மகன் தனை
  ஞானக்கொழுந்தினை
  புந்தியில் வைத்து
  போற்றுகின்றேனே”
  என நாம் வழிபடும் அந்த நம் தொந்திப்பிள்ளையார்
  அழகாக ஒளிமயமாக உள்ளாரே!;)))

  ReplyDelete
 13. அறுகோண அழகிய ட்ரே ஒன்றில்
  நான்கு திசை நோக்கி 4 அகல் விளக்குகள் எரிய, இருபுறமும் அழகிய இரு ரோஸ் பூக்களுடன், ஏழு பொரி உருண்டைகளுடன் இரண்டு பொரியினில் செய்த முரட்டுப்பருப்புத்தேங்காய் பார்க்கவே பரவசப்படுத்தி நாக்கில் நீரை வரவழைக்கிறதே.

  அதிலும் அவற்றில் ஆங்காங்கே பாகு வெல்லம், தேங்காய்ப்பல்லுடன் தோன்றி, என்னைத்தின்ன .... வா வா என என்னைப்பார்த்து ஏங்கி அழைக்குதே!

  அதுவல்லவோ எல்லாவற்றையும் விட வெகு அழகான இன்பமூற்றும் படம்.

  அவல்பொரி உருண்டையை விட நெல்பொரியில் செய்த உருண்டைகளே வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.
  நடுவில் தப்பித்தவறி கூட நெல் ஏதும் இருந்துவிடக்கூடாது. அது ருசியைக் கெடுத்து, துப்ப வைத்துவிடும்.

  கார்த்திகை தீபத்திருநாளில் இந்தப்பொரி உருண்டைகளையும், பொங்கலின் போது கரும்பையும் அதிகம் தின்றதால் சின்ன வயதில் என் நாக்கெல்லாம் புண்ணாகிப் போன அனுபவமும் உண்டு.

  ReplyDelete
 14. மண்ணும் நமச்சிவாயம்
  மலையும் நமச்சிவாயம்

  கல்கியின் தீபம் இதழில் தங்கள் படைப்புகள் ஏதும் இதுவரை வந்துள்ளதா?

  உங்களின் படைப்புக்களை தீபத்தில் வெளியிடலாம் என நானே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று இருந்தேன்.

  முயற்சி செய்யுங்கள். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. சரவணபவா அறுங்கோணப்பட்டை பேக் க்ரெளண்டில் அந்த புறப்பாட்டு முருகண் ஜோர்.

  மின்னொளியுடன் அந்த கோபுரம் இன்று மேலும் ஒரு கோடி புண்ணியம் தருவதாக உள்ளது.

  கார்த்திகைப்பெண்கள் ஆறு பேர் ஆறு குழந்தைகளுடன் [ நான் அதில் எங்கே?]

  சுத்தன்ன நைவேத்யம் போல் சுத்தமான பதிவு தான் இதுவும்.

  குதிரை வாகனத்தில் புறப்பாட்டு ஸ்வாமி அருமை. ;))))

  ReplyDelete
 16. வை.கோபாலகிருஷ்ணன் said...
  சரவணபவா அறுங்கோணப்பட்டை பேக் க்ரெளண்டில் அந்த புறப்பாட்டு முருகண் ஜோர்.

  மின்னொளியுடன் அந்த கோபுரம் இன்று மேலும் ஒரு கோடி புண்ணியம் தருவதாக உள்ளது.

  கார்த்திகைப்பெண்கள் ஆறு பேர் ஆறு குழந்தைகளுடன் [ நான் அதில் எங்கே?]

  சுத்தன்ன நைவேத்யம் போல் சுத்தமான பதிவு தான் இதுவும்.

  குதிரை வாகனத்தில் புறப்பாட்டு ஸ்வாமி அருமை. ;))))/

  அருமையான ஒளிரும் கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 17. வை.கோபாலகிருஷ்ணன் said...
  மண்ணும் நமச்சிவாயம்
  மலையும் நமச்சிவாயம்

  கல்கியின் தீபம் இதழில் தங்கள் படைப்புகள் ஏதும் இதுவரை வந்துள்ளதா?

  உங்களின் படைப்புக்களை தீபத்தில் வெளியிடலாம் என நானே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று இருந்தேன்.

  முயற்சி செய்யுங்கள். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்./

  எந்த இதழிலும் படைப்புகள் ஏதும் இதுவரை வந்ததில்லை ஐயா..

  வாழ்த்துகளுக்கு நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 18. வை.கோபாலகிருஷ்ணன் said...
  அறுகோண அழகிய ட்ரே ஒன்றில்
  நான்கு திசை நோக்கி 4 அகல் விளக்குகள் எரிய, இருபுறமும் அழகிய இரு ரோஸ் பூக்களுடன், ஏழு பொரி உருண்டைகளுடன் இரண்டு பொரியினில் செய்த முரட்டுப்பருப்புத்தேங்காய் பார்க்கவே பரவசப்படுத்தி நாக்கில் நீரை வரவழைக்கிறதே

  ரசித்து மலரும் நினைவுகளுடன் அளித்த இனிய கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 19. ஆங்காங்கே அழகிய கோலங்களும், தீபங்களும், தீபமேற்றும் பெண்மணிகளும், அனைத்துப் புறப்பாட்டு ஸ்வாமிகளும், அனைத்துப்படங்களும் விளக்கங்களும், கடைசியில் காட்டப்பட்டுள்ள மலையும் அதன் மேல் ஏற்றப்பட்டுள்ள கார்த்திகை தீபமும் என அசத்தலான அழகான அட்டகாசமான பதிவு. தங்களைப்போல பொறுமையாக திறமையாக தினமும் யாரால் இவ்வளவு பெரிய பதிவுகள் தொடர்ச்சியாகத் தரமுடியும்.

  தங்கள் தனித்திறமைக்கும் விடா முயற்சிக்கும், ஆர்வத்திற்கும் நான் தலை வணங்குகிறேன்.

  மனமார்ந்த பாராட்டுக்கள், ஆசிகள்.

  அனைத்துச் செல்வங்களும் மகிழ்ச்சிகளும் பெற்று நீடூழி வாழ்க!

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 20. வை.கோபாலகிருஷ்ணன் said...
  ஐந்து விளக்குகளைப் பார்த்தபடி
  ”ஐந்து கரத்தனை
  யானை முகத்தனை
  இந்தின் இளம்பிறை
  போலும் எயிற்றனை
  நந்தி மகன் தனை
  ஞானக்கொழுந்தினை
  புந்தியில் வைத்து
  போற்றுகின்றேனே”
  என நாம் வழிபடும் அந்த நம் தொந்திப்பிள்ளையார்
  அழகாக ஒளிமயமாக உள்ளாரே!;)))/

  ஒளிமயமான் கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 21. வை.கோபாலகிருஷ்ணன் said...
  முதல் படத்தில் அசைந்தாடும் அகல் விளக்குகள் மனதைக்கவர்வதாக உள்ளது.

  தனியே காட்டியுள்ள ஐந்து முகக்குத்து விளக்கும், மற்ற எல்லா விளக்குகளுமே பதிவை ஜொலிக்கத்தான் செய்துள்ளன.

  சொக்கப்பனைகள் எரியூட்டப்படும் படங்களும் சிறப்பாகக்கொடுத்துள்ளீர்கள்.

  அழகிய செந்தாமரைக்குள் ஆறுமுகக் கடவுள் குழந்தையாக அழகாக!

  பறந்து பறந்து வந்து தன் ஜோடியைக் கொத்தும் பறவை கொள்ளை அழகு./

  கொள்ளை அழகாய் சிறப்பாய் அளித்த கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 22. athira said...
  பதிவும் படங்களும் வழமைபோல அழகு.

  ஊரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீட்டை ஞாபகப்படுத்தி விட்டீங்கள். எப்போ இருளும் எனக் காத்திருந்து, இருண்டதும், அப்பா கொழுத்தி தரத்தர ஓடி ஓடி வளவெல்லாம் பந்தம் கொழுத்திய காலம் கண்ணில் தெரிகிறது.../

  மலர்ந்து நினைவுகளில் ஒளிர்ந்த கண்ணில் தெரிந்த விளக்கீட்டுக் கருத்துரைகளுக்கு நிறைவான நன்றிகள்..

  ReplyDelete
 23. shanmugavel said...
  காணக்கிடைக்காத புகைப்படங்கள்.புறத்தோற்றத்திற்கும் அகத்தோற்றத்திற்குமான கருத்துக்கள் அருமை./

  அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 24. கார்த்திகைத் திருநாளின் விளக்கங்கள்
  மிக அருமை சகோதரி. படங்கள் மனதில்
  ஒளியேற்றி வைத்துவிட்டன..

  கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. கார்த்திகைத் திருநாள் ஆக்கமும், படற்களும் அற்புதம் . பொரி உருண்டை கண்ணைச் சுண்டி இழுக்கிறது. சகோதரி....வாழ்த்துகள். இறை ஆசி கிடைக்கும்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 26. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

  முதலில் பதிவினைப் படிக்கும் முன் அருமை நண்பர் வை.கோ வின் மறுமொழிகளைப் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். படித்து - இரசித்து - மகிழ்ந்து - அனுபவித்து - அசை போட்டு - ஒவ்வொரு வரிக்கும் கருத்துகள் கூறி - அடடா எவ்வளவு நேரம் ஆன்ந்தமாகச் செலவிடுகிறார். ஏனோ தெரியவில்லை - முதல் மறுமொழி அவருடையது இல்லை. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
 27. அன்பின் இராஜ இராஜேஸ்வரி

  எப்படி உங்களால் முடிகிறது - இத்தனை படங்கள் - அத்தனைக்கும் விளக்கம் - பொதுவான தலைப்பிற்கேற்ற பதிவு - பொறுமையின் சிகரம் - தினம் ஒரு பதிவென ஆன்மீகச் சேவையில் தொண்டு புரிவதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள்.

  நட்புடன் சீனா

  ReplyDelete
 28. புறத்தோற்றத்தை பார்த்து அகத்தோற்றத்தை புரிந்து கொள்ள வேண்டிய பதிவு...படங்களுடன் அருமை மேடம்!

  ReplyDelete
 29. படங்கள் அழகாக இருக்கு அருமையான பதிவு

  ReplyDelete
 30. தீபமங்கள ஜோதி தரிசனம் அருமை

  ReplyDelete
 31. படங்கள் அற்புதம், விளக்குகள், சொக்கப்பானை, பணியாரக்காய்,எல்லாம் சிறப்பாக இருக்கு.
  மனதையும் கண்ணையும் கொள்ளை கொண்டது உங்க பதிவு.

  ReplyDelete
 32. மகேந்திரன் said...
  கார்த்திகைத் திருநாளின் விளக்கங்கள்
  மிக அருமை சகோதரி. படங்கள் மனதில்
  ஒளியேற்றி வைத்துவிட்டன..

  கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

  மனதில் ஒளியேற்றிய நிறைவான கருத்துரைக்கு நன்றி..

  இனிய கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. kavithai (kovaikkavi) said...
  கார்த்திகைத் திருநாள் ஆக்கமும், படற்களும் அற்புதம் . பொரி உருண்டை கண்ணைச் சுண்டி இழுக்கிறது. சகோதரி....வாழ்த்துகள். இறை ஆசி கிடைக்கும்./

  வாழ்த்துகளுக்கும் இறை ஆசிகளுடன் அருமையான கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றிகள்...

  ReplyDelete
 34. cheena (சீனா) said...
  அன்பின் இராஜ இராஜேஸ்வரி

  முதலில் பதிவினைப் படிக்கும் முன் அருமை நண்பர் வை.கோ வின் மறுமொழிகளைப் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். படித்து - இரசித்து - மகிழ்ந்து - அனுபவித்து - அசை போட்டு - ஒவ்வொரு வரிக்கும் கருத்துகள் கூறி - அடடா எவ்வளவு நேரம் ஆன்ந்தமாகச் செலவிடுகிறார். ஏனோ தெரியவில்லை - முதல் மறுமொழி அவருடையது இல்லை. பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா/

  அத்திப்பூக்கள் பூத்தது போல் முதல் மறுமொழி பூக்காமல் காய்த்துவிட்டது போலும்...
  அவருடைய கருத்துரைக்குப் பின்னே மறுபடியும் பதிவைப் படித்தால்தான் சிறப்பு உணரமுடிகிறது..

  ஆக்கபூர்வமாக உற்சாகப்படுத்தும் அவருக்கும் ,

  கணித்து சிறப்பாக ஊக்கப்படுத்தும் கற்கண்டான தங்களின் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா...

  ReplyDelete
 35. cheena (சீனா) said...
  அன்பின் இராஜ இராஜேஸ்வரி

  எப்படி உங்களால் முடிகிறது - இத்தனை படங்கள் - அத்தனைக்கும் விளக்கம் - பொதுவான தலைப்பிற்கேற்ற பதிவு - பொறுமையின் சிகரம் - தினம் ஒரு பதிவென ஆன்மீகச் சேவையில் தொண்டு புரிவதற்கு பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள்.

  நட்புடன் சீனா//

  வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி எனக்கு என்னை அறிமுகப்படுத்தி
  சிறப்பித்து ந்ல்வாழ்த்துகள் நல்கி உற்சாகப்படுத்தும் ஊக்கமான கருத்துரைகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 36. விக்கியுலகம் said...
  புறத்தோற்றத்தை பார்த்து அகத்தோற்றத்தை புரிந்து கொள்ள வேண்டிய பதிவு...படங்களுடன் அருமை மேடம்!/


  அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 37. K.s.s.Rajh said...
  படங்கள் அழகாக இருக்கு அருமையான பதிவு/

  அழகான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 38. கடம்பவன குயில் said...
  தீபமங்கள ஜோதி தரிசனம் அருமை/  அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..

  ReplyDelete
 39. RAMVI said...
  படங்கள் அற்புதம், விளக்குகள், சொக்கப்பானை, பணியாரக்காய்,எல்லாம் சிறப்பாக இருக்கு.
  மனதையும் கண்ணையும் கொள்ளை கொண்டது உங்க பதிவு./

  சிறப்பான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

  ReplyDelete
 40. DrPKandaswamyPhD said...
  ரசித்தேன்./

  ஒரே வார்த்தையில் மகிழ்ச்சியளித்த கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

  ReplyDelete
 41. cheena (சீனா) said...
  அன்பின் இராஜ இராஜேஸ்வரி

  //முதலில் பதிவினைப் படிக்கும் முன் அருமை நண்பர் வை.கோ வின் மறுமொழிகளைப் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.//

  கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது ஐயா! ;))))) மிக்க நன்றி!!


  //படித்து - இரசித்து - மகிழ்ந்து - அனுபவித்து - அசை போட்டு - ஒவ்வொரு வரிக்கும் கருத்துகள் கூறி - அடடா எவ்வளவு நேரம் ஆன்ந்தமாகச் செலவிடுகிறார்.//

  வெறும் ஆனந்தமா! எனக்கு அதுவே பரமானந்தமாக உள்ளது ஐயா! ;))))

  //ஏனோ தெரியவில்லை - முதல் மறுமொழி அவருடையது இல்லை.//

  என் மனம் பூராவும், எப்போதுமே இந்த மிக அருமையான பதிவரின் பதிவுகளைச்சுற்றிச்சுற்றியே வந்து கொண்டு இருந்தாலும், என் உடல் வேறு இடத்தில், பல்வேறு யதார்த்த அன்றாடச் சூழ்நிலையில் அல்லவா
  மாட்டிக்கொண்டுள்ளது. அதிலிருந்து மீண்டு வர சில நாட்களில் சற்று தாமதமாகின்றது, ஐயா. எனக்கும் முதலிடம் பிடிக்காமல் போவதில் அவ்வப்போது அதிக வருத்தம் தான் ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?
  இது பற்றி அந்தப்பதிவருக்குப் புரிய வைத்துள்ளேன். உங்களுக்கும் தனியாக இதைப்பற்றி, தொலைபேசி மூலமோ மெயில் மூலமோ பிறகு எடுத்துச் சொல்கிறேன், ஐயா.

  //பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா//

  மிக்க நன்றி, ஐயா! எல்லாம் தாங்கள் எங்கள் இருவருக்கும் அவ்வப்போது கொடுத்துவரும் உற்சாகமும், பாராட்டுக்களும் தான் காரணம் ஐயா!

  பிரியமுள்ள vgk

  ReplyDelete
 42. படங்களும் பதிவும் அழகு.மனதையும் கண்ணையும் கொள்ளை கொண்டது ....

  ReplyDelete
 43. எல்லா படங்களும் அழகு. அந்த நெல் பொரி பருப்புத் தேங்காய் படம் தான் எனக்கும் மிகவும் பிடித்தது.

  அண்ணாமலைக்கு அரோஹரா.....

  ReplyDelete
 44. எல்லா படங்களும் அருமை. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. வீட்டில் அனைவரிடமும் காண்பித்து விட்டேன். அருமை. நன்றி சகோ!

  "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

  ReplyDelete
 45. கார்த்திகை தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.

  படங்கள் , கருத்துக்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
 46. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 47. Aha!!!!!!!!!!
  Fentastic dear.
  I enjoyed everybit Rajeswari.
  I like to read, see, enjoy animation pictures more and more.
  Keep doing dear.
  viji

  ReplyDelete
 48. கார்த்திகை விளக்கு முருகனை நினைத்து ஏற்றவேண்டும் என்ற பகிர்வுக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 49. கல்வி,செல்வம்,வீரமான முப்பெரும் தேவியரின் வடிவம் தான் தீபம் என்ற செய்தி அருமை...

  ReplyDelete
 50. ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு விளக்கு எடுத்துசெல்லகூடாது என்ற செய்து அறிந்து கொண்டேன்..

  ReplyDelete
 51. நாரதர் 12 வருடம் கார்த்திகை விரதம் இருந்ததாக தெரிந்து கொள்ள முடிந்தது.. கார்த்திகை விரதம் எப்படி முறையாக செய்ய வேண்டும் என்பதை பகிர்ந்தால் உபயோகமாக இருக்கும் சகோ!... பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 52. 1504+8+1=1513 ;)))))

  அழகழகான ஐந்து பதில்கள் + சீனா ஐயாவின் கருத்துக்கள் + சீனா ஐயாவுக்கு தாங்கள் எழுதியுள்ள பதில் எல்லாமே கற்கண்டாக இனிக்குது. மிக்க மகிழ்ச்சி + நன்றிகள்.

  ReplyDelete