Friday, July 8, 2011

மகத்தான வரமருளும் மும்பை மஹாலக்ஷ்மிமும்பையில் உள்ள மிகவும் பழங்கால கோயில்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற மஹாலக்ஷ்மி கோயில் சென்றிருந்தோம். 

ப்ரீச் கேன்டியின் பி. தேசாய் சாலையில்  கோயில் அமைந்துள்ளது. 

அரபிக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த அழகான கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

செல்வத்திற்கான கடவுளாக லக்ஷ்மியை இந்து மக்கள் வணங்குகிறார்கள். 

அதன்படிதான் இந்த கோயிலும் அமைந்துள்ளது. 

கோயிலின் உள் பிரகாரம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. அங்கு பூஜைக்கான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

மஹாலக்ஷ்மி கோயிலில் ஏராளமான கடவுள் சிலைகள் மிகவும் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. 

மஹாலக்ஷ்மி கோயிலின் வரலாறு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, மஹாலட்சுமி பகுதியை வோர்லியுடன் இணைக்க ப்ரீச் கேன்டி சாலையை அமைக்கும் பணி நடைபெற்ற போது பணிகளை முடிக்க முடியாத வகையில் அரபிக் கடலில் அலைகள் எழும்பின. 

 பணியை முடிக்க முடியாமல் போன சமயத்தில்  வேலையை எடுத்திருந்த ஒப்பந்ததாரர் ராம்ஜி சிவாஜியின் கனவில் தோன்றிய மஹாலக்ஷ்மி, அரபிக் கடலில் மூழ்கியிருக்கும் கடவுள் சிலைகளை எடுத்து கோயில் கட்டி வழிபடுமாறு கூறினார்.

 மஹாலக்ஷ்மி கோயிலை கட்டி  சிலைகளை வைத்து வழிபாடு செய்த. பிறகு கடல் அலைகளின் சீற்றம் குறைந்து ப்ரீச் கான்டி சாலை அமைக்கப்பட்டது என்கிறது வரலாறு.
ஆர்ப்பாட்டமான அரபிக்கடலின் பிண்ணனி மனதை மயக்கியது. 

மஹாலக்ஷ்மியின் அருள் பொங்கும் செல்வப்பார்வையில் மும்பை நகரம் செல்வச்செழிப்பில் திகழ்கிறது. 
[1529049_f520.jpg]
கோயி‌லி‌ல் மஹாலக்ஷ்மி, மஹாகா‌ளி, மஹாசரஸ்வதியின்அருளும் நிறைந்துள்ளன. 

மூ‌ன்று திருவுருவங்களும் ஒ‌ன்று போல மூக்குத்தி, தங்க வளையல்கள், முத்து கழுத்தணிகள் அணிந்து  கோயிலின் ஆன்மீகத் தன்மையைக் கூட்டும் வகையில் உள்ளன. 

உண்மையான பக்தியுடன் வரும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறுகிறது என்று நம்பப்படுகிறது.

கோயிலில் எப்போதும் கடவுளை தரிசிக்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் 
 வரிசையில் காத்திருந்து மஹாலக்ஷ்மியிடம் தங்களது கோரிக்கைகளைச் சொல்லி கடவுளின் ஆசி பெற்று திரும்புகின்றனர்.

கோவிலைச்சுற்றிப் பறந்தும் நடந்தும் கொள்ளை அழகாய் புறாகள் கருத்தைக்கவர்கின்றன.
இந்தியாவின் வணிக நகரமான மும்பை அனைத்து நகரங்களில் இருந்தும் சாலை, ரயில், விமான மார்கமாக இணைக்கப்பட்டுள்ளது. 
நாங்கள் சுற்றுப்பயணங்களின் சென்று திரும்பிய சில காலங்களில் மும்பை, டெல்லி நேபாளப்பகுதிகளில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தது. அங்கே நினைவுச்சின்னங்களாக வாங்கிய பொருட்களைப் பார்க்கும் போதெல்லாம்மனதில் திகில் பரவுவதைத் தவிர்க்க முடிவதில்லை.


47 comments:

 1. அருமையான ஆன்மீக பதிவு

  கடவுள் உங்களுக்கு அருள் புரிவாராக

  ReplyDelete
 2. kaalaiyile arumaiyaana theiveega tharisanam..
  thanks for sharing..

  ReplyDelete
 3. இன்று மும்பை மஹாலக்‌ஷ்மி, முந்தி வந்து அருள்புரியட்டும்.

  ReplyDelete
 4. Aha!
  Being Friday, just now I finished my Poojas and opened the computer.
  Here is also Lakshmi.
  The very first photo itself very very pretty.
  I enjoyed the post.
  Thanks Rajeswari.
  Very nice post.
  viji

  ReplyDelete
 5. @ கவி அழகன் said...
  அருமையான ஆன்மீக பதிவு

  கடவுள் உங்களுக்கு அருள் புரிவாராக//

  மிக நன்றி.

  ReplyDelete
 6. ஆமாம்..

  சரி ..

  அது எப்படி உங்களால் ஊர் சுற்றிக் கொண்டே இருக்க முடிகிறது ?

  எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது..

  நல்ல பதிவு ..
  வாழ்த்துக்கள்

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 7. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  kaalaiyile arumaiyaana theiveega tharisanam..
  thanks for sharing..//

  கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 8. @ FOOD said...
  இன்று மும்பை மஹாலக்‌ஷ்மி, முந்தி வந்து அருள்புரியட்டும்.//

  அருளுரைக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 9. @ viji said...//

  வாங்க விஜி. கருத்துரைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 10. @சிவ.சி.மா. ஜானகிராமன் sa//

  வாழ்த்துரைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 11. இன்று வெள்ளிக்கிழமைக்கு பொருத்தமாக மகத்தான வரமருளும் மும்பை ஸ்ரீ மஹாலக்ஷ்மியைக் காட்டியுள்ளது மிகவும் அருமை.

  அரபிக்கடலோரம் வீற்றிருக்கும் இந்த அம்பாளின் அருளால், இதைப்படிக்கும் எல்லோருக்குமே செல்வம் கொழித்திடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  27.12.1975 இல் நண்பர்களுடன் தனியாக பம்பாய் & கோவா சென்றபோது ஒருமுறையும், 18.12.2004 அன்று தேசிய விருது வாங்கச்சென்றபோது, குடும்பத்துடன் ஒரு முறையும் கண்டு களிக்கும் பாக்யம் பெற்றுள்ளேன்.

  மிகவும் சிறிய ஆனால் மிகவும் அழகிய கோயில். அந்த மண்டபத்துடன் கூடிய தூண்களைப்படத்தில் பார்த்ததும், அப்படிய பழைய மலரும் நினைவுகளில் மூழ்கிப்போனேன்.

  எனக்கும் இந்த 2 முறைப் பயணத்திலும் மிகவும் நல்ல நீங்காத பல அனுபவங்கள் ஏற்பட்டன. நன்றி.

  ReplyDelete
 12. @வை.கோபாலகிருஷ்ணன்//

  அருமையான அனுபவ மொழிகளின் பகிர்வுகளுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 13. கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த நீங்கள், பல கோயில் ஸ்தல வரலாறுகளை பலவழிகளில் திரட்டி, அழகிய தமிழில் அனைவருக்கும் எளிமையாகப்புரியும் வண்ணம் கொடுத்து வருவது எங்களின் பாக்யமே!

  மும்பை நகரம் முழுவதுமே புறாக்களுக்கும், கடற்கரையில் ஆலாப்பறவைகளுக்கும் பஞ்சமே இல்லை.புறாக்களின் அழகே அழகு.

  கேட் வே ஆஃப் இண்டியாவிலிருந்து படகில் எலிஃபெண்டா குகைக்குப் போகும் நம்மை, தாஜ் ஹோட்டல் அருகே, ஆயிரக்கணக்கான புறாக்கள் அருகில் வந்து, சற்றும் பயப்படாமல் (நமக்குதான் கொத்திவிடுமோ என்ற பயம் ஏற்படும்)பிரியா விடை கொடுக்குமே!

  அடடா அந்த அமைதிப்புறாக்களின் அழகே அழகு. சாம்பல் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும், அழகழகான கண்கள், மூக்கு (அலகு), கழுத்து, கால்கள் என பிரமிக்க வைக்குமே!

  அவற்றிற்கு நடுவில் நான் அமர்ந்து தீனிகள் தூவுவதை என் மனைவி போட்டோ எடுத்ததும் நினைவில் நிழலாடுகிறது. மலரும் நினைவுகளில் மூழ்கிப்போக வைத்தது உங்களின் இந்தப்பதிவு. நன்றி.

  ReplyDelete
 14. ஏதோ ஒரு ஊருக்குப்போனாமாம்; ஒரு சில இடங்களைப்பார்த்தோமாம்; திரும்ப வந்தோமாம்; அத்துடன் நாளடைவில் அதை மறந்தோமாம் என்பது தான், பலரும் கடைபிடிக்கும் விஷயங்கள்.

  எனக்கு மட்டும் ஒருமுறை ஒரு இடத்திற்குப்போய் வந்தால் அது அப்படியே மனதில் படம் பிடித்தது போல என்றும் நினைவில் நின்றுவிடும்.உங்களைப்போல அதைப்பற்றி வர்ணித்து எழுத வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். ஒரு சில மிகவும் பிடித்த குறிப்புகள் [Hints]மட்டும் எழுதி வைத்துக்கொள்வேன். பிறகு அவற்றைப்பற்றிய பயணக்கட்டுரை எழுதத் துவங்குவேன். பயணங்கள் முடிவதில்லை என்பது போல என் பயணக்கட்டுரைகள் பலவும் முடிவடையாமல் அப்படி அப்படியே அறைகுறையாகவே உள்ளன.

  நாளடைவில் உற்சாகம் இழந்து விடுகிறேன். அதற்குள் நான் போய் வந்த இடங்களிலேயே கூட பலவித மாற்றங்கள் நிகழ்ந்து விடுகிறது.

  ஆறியகஞ்சி பழங்கஞ்சி போல ஆகி விடுகிறது. இவற்றையெல்லாம் நினைக்கும் போது சுடச்சுட செய்திகள் தரும் தங்களைப்பார்க்க எனக்கு ஒருபுறம் பெரு மகிழ்ச்சியாகவும், மறுபுறம் சற்றே பொறாமையாகக்கூட இருக்கிறது. தெய்வாம்சம் பொருந்திய தாங்கள் நீடூழி வாழ்க! வாழ்க! வாழ்க!என மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன்.

  தாங்கள் இறுதியில் சொன்னதுபோல
  பயணங்களில் பலவித இடையூறுகள், மத மொழி இனக் கலவரங்களையும் சந்திக்க நேரிடும் என்பது மிகவும் உண்மை.

  ஒருமுறை காரில் சென்ற என் பெரிய மகன் மும்பை ட்ராபிக் ஜாமில் மாட்டி, தான் வெளிநாடு செல்ல வேண்டிய விமானத்தையே தவறவிடும்படி, நேரிட்டது என்றான்.

  அது போல நாம் புறப்படும் எல்லாப்பயணங்களுமே இன்ப மயமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

  எந்த ஊருக்கு நாம் புறப்படுவதாக இருந்தாலும், பிள்ளையாருக்கு ஒரு சதுர் தேங்காய் உடைத்து விட்டே புறப்ப்பட வேண்டும் என்பது என் வழக்கம். அப்போது தான் விக்னம் ஏதும் இல்லாமல் நாம் நல்லபடியாகப்
  போய் நல்லபடியாக திரும்பி வர முடியும்.

  இன்று மாலை நான் தேங்காய் உடைத்துப்புறப்பட ரெடியாகி விட்டேன்.

  அன்புடன்,

  vgk

  ReplyDelete
 15. அறிய பதிவு..
  வாழ்த்துக்கள்..

  (நேரம் குறைவாக இருக்கிறது அதான்..)

  ReplyDelete
 16. வெள்ளியில் நல்ல வரம் அருளும் மும்பை மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கப் பெற்றோம். மிக்க நன்றி.

  ReplyDelete
 17. @வை.கோபாலகிருஷ்ணன் s//
  தங்களின் அனுபவப்பகிர்வுகளுடனான பின்னூட்டங்கள் பதிவுக்கு ஊட்டம் சேர்ப்பதாக அமைகின்றன. பாராட்டுக்கள். மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.

  ReplyDelete
 18. @# கவிதை வீதி # சௌந்தர் said...
  அறிய பதிவு..
  வாழ்த்துக்கள்..

  (நேரம் குறைவாக இருக்கிறது அதான்..)

  குறைவான நேரத்திலும் கருத்துரை நல்கிய நல்ல உள்ளத்திற்கு நன்றி.

  ReplyDelete
 19. @ வெங்கட் நாகராஜ் said...
  வெள்ளியில் நல்ல வரம் அருளும் மும்பை மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கப் பெற்றோம். மிக்க நன்றி.//

  கருத்துரைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 20. ”நமஸ்தேஸ்து மஹா மாயே”
  வெள்ளியன்று மங்களகரமான பதிவு!
  நன்றி!

  ReplyDelete
 21. @ சென்னை பித்தன் said...
  ”நமஸ்தேஸ்து மஹா மாயே”
  வெள்ளியன்று மங்களகரமான பதிவு!
  நன்றி!//

  மஹாலஷ்மி நமோஸ்துதே...

  நன்றி.

  ReplyDelete
 22. அடுத்த மும்பை விசிட்ல போயிடவேண்டியதுதான் .நன்றி .

  ReplyDelete
 23. மும்பை மகாலட்சுமியை தரிசித்தேன்...

  ReplyDelete
 24. அரபிக் கடலின் பின்னணியில் கோவில் கொள்ளை அழகு
  படங்களும் பதிவும் அருமை
  பதிவைத் தொடர்பவார்கள் அனைவர் வீட்டிலும்
  வெள்ளிக் கிழமை யன்று மகாலஷ்மி தரிசனத்திற்கு
  ஏற்பாடு செய்தமைக்கு நன்றி

  ReplyDelete
 25. மஹாலக்ஷ்மியின் தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது.

  பயணக்கட்டுரை அருமை.

  படங்கள் எல்லாம் மிகவும் அருமை.

  ReplyDelete
 26. வெள்ளிகிழமைகளில் மகாலக்ஷ்மியை பார்ப்பதும் படிப்பதும் புண்ணியம், ஐஸ்வர்யம், அதை தரும் உங்களுக்கு முதல் நன்றி

  நானும் சென்றிருக்கிறேன் இந்த கோவிலுக்கு , அந்த கோவிலில் தாழும் புறாக்களை என் அன்னை பிடித்து நின்றது இன்னும் பசுமையாக இருக்கிறது.

  ReplyDelete
 27. மும்பைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 28. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. மிகவும் அழகான பதிவு, படங்கள் அருமையாக இருக்கிறது.சிறு வயதில் எப்பொழுதோ சென்றிருக்கிறேன். உங்கள் பதிவு படித்தவுடன் மறுபடியும் சென்று பார்க்க வேண்டும் என தோன்றுகிறது. நன்றி...

  ReplyDelete
 30. @koodal bala said...
  அடுத்த மும்பை விசிட்ல போயிடவேண்டியதுதான் .நன்றி ./

  Thank you.

  ReplyDelete
 31. @ தமிழ்வாசி - Prakash said...
  மும்பை மகாலட்சுமியை தரிசித்தேன்...//

  நன்றி.

  ReplyDelete
 32. @ Ramani said...
  அரபிக் கடலின் பின்னணியில் கோவில் கொள்ளை அழகு
  படங்களும் பதிவும் அருமை
  பதிவைத் தொடர்பவார்கள் அனைவர் வீட்டிலும்
  வெள்ளிக் கிழமை யன்று மகாலஷ்மி தரிசனத்திற்கு
  ஏற்பாடு செய்தமைக்கு நன்றி//

  அருமையாய் அளித்த கருத்துரை தரிசனத்திற்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 33. @கோமதி அரசு said...
  மஹாலக்ஷ்மியின் தரிசனம் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது.

  பயணக்கட்டுரை அருமை.

  படங்கள் எல்லாம் மிகவும் அருமை.//

  மகிழ்ச்சி அளித்த கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 34. @ A.R.ராஜகோபாலன் said...
  வெள்ளிகிழமைகளில் மகாலக்ஷ்மியை பார்ப்பதும் படிப்பதும் புண்ணியம், ஐஸ்வர்யம், அதை தரும் உங்களுக்கு முதல் நன்றி

  நானும் சென்றிருக்கிறேன் இந்த கோவிலுக்கு , அந்த கோவிலில் தாழும் புறாக்களை என் அன்னை பிடித்து நின்றது இன்னும் பசுமையாக இருக்கிறது.//

  பசுமையான இனிமையான நினைவுகளுடனான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 35. @ கோவை2தில்லி said...
  மும்பைக்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி.//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 36. @Rathnavel said...
  நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 37. @ RAMVI said...//

  வாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 38. ஃஃஃஃஃஅப்போது அப்பணிகளை முடிக்க முடியாத வகையில் அரபிக் கடலில் அலைகள் எழும்பின. இதனால் அந்த பணியை முடிக்க முடியாமல் போனது. ஃஃஃஃஃ

  படங்களுடன் புதுமையான தகவல்களும் தித்திக்க வைக்குதுங்க...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்

  ReplyDelete
 39. ரொம்ப நல்ல பகிர்வு :)

  ReplyDelete
 40. மும்பை வாழ்க்கையை ஃப்ளாஷ் பாக் பண்ணி விட்டது உங்கள் பதிவு.எனக்காக 5முறை என்றால் வந்த விருந்தாளிகளுக்காக 15 முறை மஹாலஷ்மியைத் தரிசித்த நினைவலைகள் இன்று இங்கே சென்னையில் அடிக்கிறது

  ReplyDelete
 41. எங்க மஹாலஷ்மிய மனசார தரிசிச்சேன்..

  ReplyDelete
 42. ஸ்ரீ ராம ஸ்தோத்ரம்
  ==================
  ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்!

  லோகாபிராமம் ஸ்ரீராமம்
  பூயோ பூயோ நமாம்யஹம்!!-1

  ஆர்த்தானாமார்த்திஹந்தாரம்
  பீதானாம் பீதி நாசனம்!

  த்விஷதாம் காலதண்டம்தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்!!-2

  நம: கோதண்டஹஸ்தாய ஸந்தீக்ருதசராய ச!

  கண்டிதாகிலதைத்யாய ராமாயாபந்நிவாரிணே!!-3

  ReplyDelete
 43. 732+4+1=737

  ;))))) பின்னூட்டங்களும் பதில்களும் மீண்டும் படிக்க மகிழ்ச்சியளித்தன. மிக்க நன்றி. சந்தோஷம் ;)))))

  ReplyDelete
 44. கடற்கரை பின்னணியில் கோவில் அழகாக இருக்கிறது. கோவிலின் வரலாறைச் சொல்லியிருப்பதுவும் சிறப்பு.

  ReplyDelete