Sunday, July 10, 2011

கண்ணாடிப் பாலமும் தொட்டிப் பாலமும்



உலகின் மிக பெரிய கண்ணாடிப் பாலம் கிராண்ட் கனியன் Colorado நதிக்கு மேலே 4,000 அடி உயர மலையின் விளிம்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த கண்ணாடி பாலத்தின் இறுதி  சோதனையின் போது, இதில் உள்ள கண்ணாடிகள் போயிங் வகையான 747 போன்ற விமானங்களின் எடையை தாங்கும் என்று உறுதி செய்யப்பட்டது.

இதற்குக் குறையாத நுணுக்கம் கொண்டது நம் நாட்டின் இருக்கும் பாலம்தான்....
ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம்,   கண்ணாடிப் பாலத்திற்குச் சற்றும் குறையாத ஆச்சரியம் கொடுத்தது.
படிமம்:Mathur Hanging Trough Bridge.JPG
பார்க்குமிடங்களெல்லாம் நெருக்கமாகக் காணப்படும் தென்னை மரங்கள்.... கோடைக் காலத்திலும் வற்றாத ஆறுகளென, கேரளத்தின் சாயலோடு காணப்படும் மலைப் பாங்கான பிரதேசம் மாத்தூராகும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலுக்கு அருகில் மாத்தூர் அமைந்திருக்கிறது. 

கன்னியாகுமரியிலிருந்தும் கேரளத்தின் தலைநகரான திருவனந்த புரத்திலிருந்தும் சம தூரத்தில் அமைந்திருக்கும் மாத்தூரில்ஆசியாவிலேயே மிகவும் நீளமானதும் உயரமானதுமான தொட்டிப் பாலம் அமைந்திருக்கிறது.

தொட்டிப் பாலமெனப்படுவது இரண்டு உயரமான இடங்களுக்கிடையிலே காணப்படும் பள்ளத்தாக்கை ஒட்டி அமைக்கப்பட்ட வாய்க்காலுடனான பாலமாகும்.

நீரைக் கொண்டு செல்லும் நோக்குடன் அமைக்கப்பட்ட பாலத்தையே தொட்டிப் பாலம் என அழைப்பர்.

சில வேளைகளில் கப்பல் போக்குவரத்துக்காகவும் தொட்டிப் பாலம் அமைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப் பாறையென்ற மலையையும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே பாலம் அமைந்துள்ளது. 

தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ 115 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்  பாலத்தின் நீளம் 1240 அடி ( 1 கி.மீ) நீளமுடையது. 40 அடி இடைத்தூரத்தில் அமைக்கப்பட்ட 28 இராட்சதத் தூண்கள் பாலத்தைத் தாங்குகின்றன.
பறளியாற்றின் நீரானது 7 அடி உயரமும் 7 அடி அகலமுமுடைய பெரிய தொட்டிகளாகக் தொடுக்கப்பட்ட பகுதியால் கொண்டு செல்லப்படுகிறது.

இரு மலைகளுக்கு நடுவில் தொட்டில் போன்ற அமைப்புடன் காணப்படுவதால் தொட்டில் பாலமெனவும் அழைக்கப்படுகிறது.

சக்கர நாற்காலியொன்று செல்லக்கூடிய அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியினூடாக பாலத்தின் ஒரு முனையிலிருந்து மறு பகுதிக்குச் செல்லமுடிந்தது.

இரு மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னை, ரப்பர் மரங்கள், நீல வானம், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே தெரியும் காட்சியை விவரிக்க எவரிடமும் வார்த்தைகளிருக்காது தான்.
பாலத்தின் மேற்பகுதியில் நடப்போரின் பாதுகாப்புக் கருதி, நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால், நமது கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும் கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம்.

அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்.

 இடமொன்றில் 115 அடி உயரத்திலிருந்து இயற்கையை ரசிப்பது கூட ஒரு சுகமான வித்தியாசமான அனுபவம் தான்.

இயற்கையின் அருள் மழையில் நனைந்தபடியே பாலத்தின் மறு முனை அடைந்தால் பார்க்குமிடங்களில் எல்லாம் ரப்பர் தோட்டங்கள் மட்டுமே தெரியும்.

தோட்டங்களில் உள்ள ரப்பர் மரங்களினிடையே சிறிய பெட்டிகள் காணப்பட்டன.

ரப்பர் மரங்களின் பூக்கும் காலத்தை ஆதாரமாகக் கொண்டே  சிறு கைத்தொழில் முயற்சியாக, தேனீ வளர்ப்பும்நடைபெறுகிறது. 

வீட்டுக்கு வீடு சுற்று சுவர் போன்று அன்னாச்சி பழம் செடி உள்ளது.

போகும் வழியாவும் செடி கொடிகளால் கேரளாவின் தனி அழகில்
நாஞ்சில் நாடு காட்சி தருகின்றது.
ஆரம்பித்த இடத்துக்கு மீண்டும் வர இரு வழிகள் இருக்கின்றன.

வந்த பாதையினாலே அதாவது தொட்டிப் பாலத்தின் மேற் பகுதியாலேயே திரும்பி வரலாம்.

அல்லது, பாலத்தின் அருகிலேயுள்ள படிக்கட்டுக்களால் திரும்பி வரலாம்.

பாலம் முடிவடையுமிடத்திலே தொடங்கும் படிக்கட்டுக்களின் வழியே குறிப்பிட்ட ஆழம் வரை இயங்கிப் பின் அங்கே அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுக்களின் வழியே ஆரம்பித்த இடத்தைச் சென்றடையலாம்.

பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு.

அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் .

சில தமிழ் படங்கள்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர்.

வெயில் காலமான பிப்ரவரியிலிருந்து மே மாதம் வரை இங்கு தண்ணீர் இல்லாதிருப்பதால் செல்லும் போது தண்ணீர் இல்லாததும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது.

மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயன்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!

File:Mathur bridge.jpg
சூழலின் வழி நெடுகிலும் பூந்தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பாலத்தைப் பார்வையிட, கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.


தொட்டிப் பாலம் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

ஒரு காலத்தில் கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடு, கல்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்த பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும்.

அவரது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் அக்காலம் முடிவடைந்த பின்னரும் தொடரப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்..

படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜர் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால், உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.

மாத்தூர் தொட்டிப் பாலத்தின் பயனாக பல ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன் பெறத் தொடங்கின.

தரிசு நிலங்கள் பல விவசாய நிலங்களாகின. கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு கண்டது.

மாத்தூரில் உள்ள பாலம் மட்டும்தான் தொட்டிப் பாலமல்ல. உலகின் பல நாடுகளிலும் வெவ்வேறுபட்ட தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.

தொட்டிப் பாலத்திற்குப் பின்னால் இருக்கும் தத்துவம் மிகவும் புராதனமானது.

வரலாற்றிலே விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பயிர்களுக்கு நீரைப் பாய்ச்சுவதற்குத் தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்தினர்.

ரோம சாம்ராஜ்யத்தின் போது கட்டப்பட்ட தொட்டிப் பாலங்களுள் சில இன்னும் உபயோகத்தில் இருக்கின்றன.

பயிர்களுக்கு நீரைபாய்ச்சுவதற்கு மட்டுமன்றி பெரிய நகர்களுக்கு குடிநீரை வழங்குவதற்கும்  ரோம தொட்டிப் பாலங்கள் பயன்பட்டிருக்கின்றன. இன்னும் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தொட்டிப் பாலங்கள் ரோம சாம்ராஜ்யத்துடன் தொடர்புடையவை என வரலாறு குறிப்பிட்டாலும் அவற்றின் அடிப்படைத் தத்துவத்தின் பின்னணியில் சிறந்த நீர்ப்பாசன முறைமைகளைப் பயன்படுத்திய எகிப்திய, ஹரப்பா நாகரிக மக்களும் காணப்படுகின்றனர்.
பிரான்சில் அமைந்துள்ள பண்டைய ரோம தொட்டிப்பாலம்
படிமம்:Pont du gard.jpg
ரோம சாம்ராஜ்யம் பரவியிருந்த இன்றைய ஜெர்மனி முதல் ஆப்பிரிக்கா வரையான பல நாடுகளிலும்  ரோம் நகரிலும் பல தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன.

இந்தியத் துணை கண்டத்திலும் பல புராதன தொட்டிப் பாலங்கள் காணப்படுகின்றன. துங்க பத்ரா நதிக் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தொட்டிப்பாலம் 24 கி.மீ. நீளமாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

புராதன பாரசீகத்திப் தொட்டிப் பாலத்தின் தத்துவத்தையொட்டிய அமைப்பு நிலத்துக்குக் கீழ் அமைக்கப்பட்டது.

கோடைக்காலங்களில் நீரைப் பாய்ச்சுவதற்கு செயல்திறன் மிக்கது.

நிலத்திற்குக் கீழாக நீரைக்கொண்டு செல்வதால், வெப்பம் காரணமாக இழக்கப்படும் நீர் வெகுவாகக் குறைக்கப்பட்டது.

தென்னமெரிக்காவின் பெரு நாட்டிலே இன்றும் உயோகத்தில் இருக்கும் தொட்டிப் பாலங்கள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

புராதன இலங்கையிலும் கூட தொட்டிப் பாலங்கள் காணப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

இன்றைய நவீன யுகத்திலும், ஐக்கிய அமெரிக்கா தனது நகரங்களுக்கு நீரைக்கொண்டு செல்வதற்காக பெரிய தொட்டிப் பாலங்களைப் பயன்படுத்துகிறது.

அவை ஒவ்வொன்றும் பலநூறு கிலோ மீட்டர்கள் நீளமானவை. தொட்டிப் பாலத்தின் புதிய பரிமாணமாகவே குழாய் வழிப் பாலங்கள் காணப்படுகின்றன.

கைத்தொழில் புரட்சியுடன் உருவாகிய கால்வாய்கள் தொட்டிப் பாலங்களின் ஒரு பகுதியாகவே அமைக்கப்பட்டன.
The canal on the bridge carries water for irrigation from one side of a hill to the 
other side of a hill. The trough has a height of seven feet with a width of seven feet six inches.
பாலங்கள் நீரைக் கொண்டுசெல்லமுடியுமென்பது பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்.. ஆனால் தொட்டிப் பாலங்களின் பின்னணியிலிருக்கும் வரலாற்றை ஆழ நோக்குகையில் நாம் எந்தக் காலத்தில் இருக்கிறோம் என்பதும் புரிய வேண்டும். 2000 வருடங்களுக்கு முன்னரே இந்தத் தொழில்நுட்பங்கள் இருந்திருக்கின்றன. அத்தகையதோர் சமூகத்தில் வழித்தோன்றிய நாம் அதே வழியில் புதியதோர் உலகொன்றை உருவாக்க முயல வேண்டும்.



61 comments:

  1. உங்கள் பதிவுக்குள் நுழைந்தால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது.நல்ல ஒரு நூலகம் வந்தது போல் உணர்கிறேன்

    ReplyDelete
  2. @ from venkat s //

    சொல்லிச் செல்லும் விதமும்
    படங்களை பல கோணங்களில் அடுக்கி தந்து செல்லும் விதமும்
    அருமை அருமை
    மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்த்தேன்.படித்தேன்
    நன்றி வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி
    > --

    >

    ReplyDelete
  3. @ வை.கோபாலகிருஷ்ணன் said...//

    மிக்க நன்றி கருத்துரைக்கு.

    ReplyDelete
  4. @ goma said...
    உங்கள் பதிவுக்குள் நுழைந்தால் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது.நல்ல ஒரு நூலகம் வந்தது போல் உணர்கிறேன்//

    கருத்துரைக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  5. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    நன்றி.. பதிவிற்கு ...//

    நன்றி. கருத்துரைக்கு...

    ReplyDelete
  6. எப்படி உங்களால பெரிய பெரிய பதிவெல்லாம் எழுத முடியுது பொறுமையாய்

    ReplyDelete
  7. நல்ல தகவல்கள். தொட்டிப் பாலம் பற்றி முன்பே படித்திருந்தாலும், இத்தனை விவரங்கள் அவற்றில் இல்லை. வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. பாலங்கள் பகிர்வு, பலர் மனதை கொள்ளை கொள்ளும்.

    ReplyDelete
  9. பாலங்கள் பகிர்வு, பலர் மனதை கொள்ளை கொள்ளும்.

    ReplyDelete
  10. நேரில் பார்த்து மிகுந்த ஆச்சர்யபட்ட பாலத்தை பற்றிய விவரங்களின் விரிவான தொகுப்புக்கு நன்றி தோழி.

    உண்மையில் கொஞ்ச தூரம் பாலத்தின் மீது நடந்ததும் லேசா தலைசுத்துற மாதிரி இருந்ததால் வெற்றிகரமா பின் வாங்கிவிட்டேன் :))

    எப்படியும் மறுபடியும் அங்கே சென்று அடுத்த பக்கம் வரை செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன்...உங்க போஸ்ட் படிச்சதும் உடனே ப்ரோக்ராம் பிக்ஸ் பண்ணிட்டேன்... :)

    நன்றி தோழி.

    goma அவர்கள் சொன்னது போல் ஒரு நூலகம் வந்த திருப்தி உணருகிறேன்.

    ReplyDelete
  11. எத்தனை இடங்கள்!எத்தனை தகவல்கள்!வியக்க வைக்கிறீர்கள்!

    ReplyDelete
  12. நம்ம ஊரு தொட்டி பாலம்தான் பெஸ்ட்

    ReplyDelete
  13. பைசா செலவு இல்லாமலே அடிக்கடி டூர் கூட்டிட்டு போறீங்க .....

    ReplyDelete
  14. மிகவும் அழகான விளக்கம், உங்கள் பதிவுகளை படிப்பதில் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி..

    ReplyDelete
  15. சகோதரி, எந்தப் பதிவு ஆனலும்,
    நீங்கள் தந்த, தருகின்ற, தரப்
    போகின்ற ஒவ்வொன்றும் முத்துப்
    பதிவுகளே ஆகும்
    கண்ணுக்கும், கருத்துக்கும்
    விருந்தும் ஆகிறது வளம் தரும்
    மருந்தும் ஆகிறது
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. மாத்தூர் தொட்டிப்பாலம் உண்மையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பது. காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. அருமையான பதிவு.

    ReplyDelete
  17. கண்ணாடி பாலத்தை பற்றி படிக்கும் போதே கால்கள் குறு குறுக்கின்றன , நம் தமிழகத்திலும் இது மாதிரியான பலம் இருப்பதை பதிந்தது அருமை நன்றி

    ReplyDelete
  18. அருமையான தகவல்கள். சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பற்றிய உங்கள் ஞானம் வியப்பை அளிக்கிறது.

    ReplyDelete
  19. Very interesting.
    One of college from Kanyakumari was explaining us about this and invite our friends to her place. But We had no chance to visit. Now I regreat for not going there.
    The details are known to us because she used to explain about her place every now and then. But on seeing from your photo I felt as if I visited over there.
    Now i am having a thought that why I shouldnot call her on to visit there.
    Let me try.
    Thanks Rajeswari. Nice post.
    viji

    ReplyDelete
  20. அட்டகாசமான தகவளுங்கன்னோவ் இப்படியே எழுதுங்க! அசத்துங்க

    ReplyDelete
  21. பார்க்கும் பொழுது மனதை தொடும் விஷயங்கள் படிக்கும் போதும் மனதை தொட வைத்துவிட்டீர்கள். நேரில் பார்த்த உணர்வு. பகிற்வுக்கு நன்றி

    ReplyDelete
  22. சகோ..எங்கிருந்துதான் இத்தனை விசயங்களை எடுக்கிறீங்க..?.! Very informative..and useful to all..thanks

    ReplyDelete
  23. கருத்து இட்டதற்கு நன்றி

    ReplyDelete
  24. நீங்கள் டீச்சரா படிப்பிக்கலாம்..:P

    ReplyDelete
  25. வணக்கம் அம்மா, ஆச்சரியமான- இது நாள் வரை நான் அறிந்திருக்காத தகவலைப் பகிர்ந்து அசத்தியிருக்கிறீங்க. நன்றி.

    ReplyDelete
  26. @ கவி அழகன் said...
    எப்படி உங்களால பெரிய பெரிய பதிவெல்லாம் எழுத முடியுது பொறுமையாய்//

    நன்றி.

    ReplyDelete
  27. @வெங்கட் நாகராஜ் said...
    நல்ல தகவல்கள். தொட்டிப் பாலம் பற்றி முன்பே படித்திருந்தாலும், இத்தனை விவரங்கள் அவற்றில் இல்லை. வாழ்த்துகள்.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  28. @ FOOD said...
    பாலங்கள் பகிர்வு, பலர் மனதை கொள்ளை கொள்ளும்.//

    நன்றி ஐயா,

    ReplyDelete
  29. மேடம் ! நீங்கள் ஒரு தகவல் பெட்டகம்.. தொடர்ந்து எங்களை அசத்துங்கள்.

    ReplyDelete
  30. @Kousalya said...//

    கருத்துரைகளுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  31. @ சென்னை பித்தன் said...
    எத்தனை இடங்கள்!எத்தனை தகவல்கள்!வியக்க வைக்கிறீர்கள்!//

    மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  32. @koodal bala said...
    நம்ம ஊரு தொட்டி பாலம்தான் பெஸ்ட்//

    ஆம். நம் ஊர் பாலம் தான் பெஸ்ட். நன்றி.

    ReplyDelete
  33. @ RAMVI said...
    மிகவும் அழகான விளக்கம், உங்கள் பதிவுகளை படிப்பதில் நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. நன்றி..//

    வாங்க தோழி. கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  34. @புலவர் சா இராமாநுசம் said...
    சகோதரி, எந்தப் பதிவு ஆனலும்,
    நீங்கள் தந்த, தருகின்ற, தரப்
    போகின்ற ஒவ்வொன்றும் முத்துப்
    பதிவுகளே ஆகும்
    கண்ணுக்கும், கருத்துக்கும்
    விருந்தும் ஆகிறது வளம் தரும்
    மருந்தும் ஆகிறது
    புலவர் சா இராமாநுசம்//

    விருந்தாய் அமைந்த கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  35. @ சந்திர வம்சம் said...
    மாத்தூர் தொட்டிப்பாலம் உண்மையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பது. காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது. அருமையான பதிவு.//

    அருமையாய் கருத்துரைத்தமைக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  36. @ A.R.ராஜகோபாலன் said...
    கண்ணாடி பாலத்தை பற்றி படிக்கும் போதே கால்கள் குறு குறுக்கின்றன , நம் தமிழகத்திலும் இது மாதிரியான பலம் இருப்பதை பதிந்தது அருமை நன்றி//
    தமிழ்கத்திற்கு வள்மும் பெருமையும் சேர்க்கும் பாலம் பற்றிய கருத்துரைக்கு நன்றி .

    ReplyDelete
  37. @ Gopi Ramamoorthy said...
    அருமையான தகவல்கள். சுற்றுலா செல்லக்கூடிய இடங்கள் பற்றிய உங்கள் ஞானம் வியப்பை அளிக்கிறது.//

    வியப்பான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  38. @viji said...//

    வாங்க விஜி. சென்று நடந்துவந்து பதிவிடுங்கள். நன்றி.

    ReplyDelete
  39. @ கார்த்தி-ஸ்பார்க் said...
    அட்டகாசமான தகவளுங்கன்னோவ் இப்படியே எழுதுங்க! அசத்துங்க//

    நன்றி.

    ReplyDelete
  40. @ M.R said...
    பார்க்கும் பொழுது மனதை தொடும் விஷயங்கள் படிக்கும் போதும் மனதை தொட வைத்துவிட்டீர்கள். நேரில் பார்த்த உணர்வு. பகிற்வுக்கு நன்றி//

    கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  41. @ குணசேகரன்... said...
    சகோ..எங்கிருந்துதான் இத்தனை விசயங்களை எடுக்கிறீங்க..?.! Very informative..and useful to all..thanks//

    நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  42. @ கூழாங் கற்கள் said...
    கருத்து இட்டதற்கு நன்றி//

    நன்றி.

    ReplyDelete
  43. @ Keddavan said...
    நீங்கள் டீச்சரா படிப்பிக்கலாம்..:P//

    நன்றி. படிப்பித்துக்கொண்டுதானே இருக்கிறேன்.

    ReplyDelete
  44. @ மோகன்ஜி said...
    மேடம் ! நீங்கள் ஒரு தகவல் பெட்டகம்.. தொடர்ந்து எங்களை அசத்துங்கள்//

    மிக்க நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  45. எப்பவும் அதிசயம்.எப்பவும் ரசிப்பு. எப்பவும் நன்றி.அவ்ளோதான் !

    ReplyDelete
  46. தெரியாத நிறைய விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  47. @ஹேமா said...//
    எப்பவும் அதிசயம்.எப்பவும் ரசிப்பு. எப்பவும் நன்றி.அவ்ளோதான் !//

    இவ்ளோவ்..கருத்துரைரைக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  48. @ shanmugavel said...
    தெரியாத நிறைய விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி.//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  49. தொட்டிப்பாலம் பற்றி விரிவான தகவல்களுடன் தெரிந்து கொள்ள முடிந்தது.பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  50. @கோவை2தில்லி said...//

    கருத்துரைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  51. koduththu vechchavanga neenga ella edamum paththarreenga

    ReplyDelete
  52. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  53. க்ரேன்ட் கேன்யனில் தொடங்கி உலக முழுதும் சுற்றி வந்துவிட்டது பதிவு. நடுவில் காமராஜரை புகுத்தியது நிறைவு (ஏன் இன்னொரு காமராஜ் உருவாகவில்லை?).

    மாத்தூர் எங்கே இருக்கிறது? எப்படிப் போவது? படத்தைப் பார்த்தவுடன் அங்கே ஓய்வெடுத்து தங்கவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.

    ReplyDelete
  54. ஹை.. எங்கூரு தொட்டிப்பாலம். எப்ப ஊருக்குப்போனாலும் இங்க போகாம, பாலத்துல நடக்காம வர்றதில்லை.. ரொம்ப நன்றிங்க, கண்ணுல காமிச்சதுக்கு :-))

    ReplyDelete
  55. ''..நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால், நமது கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும் கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம். அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்...''
    உணர்வது போல எழுதியது ரெம்ப பயத்தைத் தருகிறது...ம்....-Vetha.Elangathialkam.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete