Saturday, November 30, 2013

அன்னகூட மகோத்ஸவம்


ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய கராவலம்ப ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால்  ஆபத்துகள் நீங்கி, சகல நலன்களும் உண்டாகும்.

1.ஸ்ரீ மத் பயோநிதி நிகேதந சக்ரபாணே 
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

2. ப்ரஹ்மேந்த்ர ருத்ர மருதர்க்க கிரீடகோடி
ஸங்கட்டிதாங்க்ரி கமலாமல காந்திகாந்த
லக்ஷ்மீ லஸத்குச ஸரோருஹ ராஜஹம்ஸ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

3. ஸம்ஸார தாவ தஹநாதுர பீகரோரு
ஜ்வாலா வலீபி ரதிதக்த தநூருஹஸ்ய
த்வத்பாத பத்மஸரஸீ சரணாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

4. ஸம்ஸார ஜாலபதிதஸ்ய ஜகந்நிவாஸ
ஸர்வேந்த்ரியார்த்த படிஷாஸ ஜ÷ஷாபமஸ்ய
ப்ரோத்கண்டித ப்ரசுர தாலுக மஸ்தகஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

5. ஸம்ஸாரகூப மதிகோர மகாத மூலம்
ஸம்ப்ராப்ய துக்க சதஸர்ப்ப ஸமாகுலஸ்ய
தீநஸ்ய தேவ க்ருபணாபத மாகதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

6. ஸம்ஸார பீகர கரீச கராபிகாத
நிஷ்பிஷ்ட மர்ம வபுஷஸ் ஸகலார்த்திநாச
ப்ராண ப்ரயாண பவபீதி ஸமாகுலஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

7. ஸம்ஸார ஸர்ப்ப கநவக்த்ர பயோக்ர தீவ்ர
தம்ஷ்ட்ரா கராள விஷதக்த விநஷ்ட மூர்த்தே
நாகாரி வாஹந ஸுதாப்தி நிவாஸ சௌரே
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

8. ஸம்ஸார வ்ருக்ஷ மகபீஜ மநந்தகர்ம
சாகா சதம் கரணபத்ர மநங்க புஷ்பம்
ஆருஹ்ய துக்க பலிதம் பததோ தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

9. ஸம்ஸார ஸாகர விசால கரால கால
நக்ர க்ரஹ க்ரஸந நிக்ரஹ விக்ரஹஸ்ய
வ்யாக்ரஸ்ய ராக ரஸநோர்மி நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
10. ஸம்ஸார ஸாகர நிமஜ்ஜந முஹ்யமாநம்
தீநம் விலோகய விபோ கருணாநிதே மாம்
ப்ரஹ்லாத கேத பரிஹார பராவதார
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

11. ஸம்ஸாரகோர கஹநே சரதோ முராரே
மாரோக்ர பீகர ம்ருக ப்ரவரார்திதஸ்ய
ஆர்த்தஸ்ய மத்ஸர நிதாக நிபீடிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

12. பத்வா களே யமபடா பஹு தர்ஜயந்த :
கர்ஷந்தி யத்ர பவபாச சதைர் யுதம்ச மாம்
ஏகாகிநம் பரவசம் சகிதம் தயாளோ
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

13. லக்ஷ்மீபதே கமலநாப ஸுரேச விஷ்ணோ
வைகுண்ட க்ருஷ்ண மதுஸூதந புஷ்கராக்ஷ
ப்ராஹ்மண்ய கேச வஜநார்தந வாஸு தேவ
தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம்

14. ஏகேந சக்ர மபரேண கரேண சங்கம்
அந்யேந ஸிந்து தநயா மவலம்ப்ய திஷ்டந்
வாமேதரேண வரதாபய பத்ம சிஹ்ந
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
15. அந்தஸ்ய மே ஹ்ருத விவேக மஹாதநஸ்ய
சோரை: ப்ரபோ பலிபி ரிந்த்ரிய நாமதேயை:
மோஹாந்த கூப குஹரே விநிபாதிதஸ்ய
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

16. ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸாதி பாகவத புங்கவ ஹ்ருந்நிவாஸ
பக்தாநுரக்த பரிபாலந பாரிஜாத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்

17. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ சரணாப்ஜ மதுவ்ரதேந
ஸ்தோத்ரம் க்ருதம் சுபகரம் புவி சங்கரேண
யே தத் படந்தி மநுஜா ஹரிபக்தி யுக்தா:
தே யாந்தி தத்பத ஸரோஜ மகண்ட ரூபம்

வஜ்ர நகாய வித்மஹே, தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரசிம்ம ப்ரசோதயாத். - நரசிம்ம காயத்ரி
"அன்னகூட மகோத்ஸவம்'.  "திருப்பாவாடை உற்ஸவம்' என்றும் அழைக்கப்படும்  உற்ஸவம்  வைணவ ஆலயங்களில் நடைபெறும் சிறப்பான விழாவாகத்திகழ்கிறது..!
பெருமாளின் சந்நிதியில் அவர் முன்பு  சித்ரான்னங்கள் எனச் சொல்லப்படும் பல்வேறு அன்ன வகைகளையும், பட்சண வகைகளையும், பழங்கள், காய்கறிகள் என அனைத்தையும் அழகாக வரிசைப்படுத்தி வைத்து படைப்பார்கள். 

சாற்றுமுறை,  வேத திவ்ய பிரபந்த பாராயணங்களுடன் நிவேதனம் செய்துவிட்டு பின்பு அனைத்து பக்தர்களுக்கும் வழங்குவார்கள். 

சிவாலயங்களில் நடைபெறுவது அன்னாபிஷேகம். அங்கு சிவபெருமானின் லிங்கத்  திருமேனி முழுவதும் அன்னத்தால் அலங்கரித்திருப்பார்கள்.. 

பகவான் கண்ணன் கோவர்த்தன கிரிதரனாக இருந்த பொழுது அவன் அருளிய வண்ணம் பல்வேறு உணவுகள் படைக்கப்பட்டு  கோவர்த்தனகிரிக்கும் (மலைக்கும்), பசுக்கள், பிற விலங்குகள்,வேதியர்கள், ஆயர்கள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டதாம். 
இன்றும் கோவர்த்தன பூஜை வட மாநிலத்தில் பிருந்தாவனத்திலும், பிற  ஆலயங்களிலும் நடத்தப்பட்டு, உணவு பெரும் அளவில் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இது "அன்னகூடம்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த அன்னகூட மகோத்ஸவம் திருவள்ளூர் மாவட்டத்தில், பேரம்பாக்கம் அருகில் உள்ள அருள்மிகு மரகதவல்லி சமேத ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில்  நடைபெறுகிறது. 

ஏழரை அடி உயரத்தில் நரசிம்மர் சேவை சாதிக்கிறார். மகாலட்சுமியை இடது மடியில்  அமர்த்தி அருள்கிறார். 
 தாயாரின் பார்வை முழுவதும் தரிசிப்பவர்கள் மீது விழுவது 
தலத்தின் தனிச்சிறப்பு.

கார்த்திகை மாதம் நரசிம்மர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது.  

நரசிம்மரின் சுவாதி நட்சத்திரத்தன்று  அன்னகூட உற்ஸவம் 
நடைபெறுவது விசேஷம்.

Friday, November 29, 2013

பிருந்தாவன துளசி பூஜை


 பிருந்தா, பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா, விஸ்வபாவனி, 
புஷ்பஸாரா, நந்தினீ, துளசீ, கிருஷ்ண ஜீவனி,
ஏதந் நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம் நாமார்த்த ஸம்யுதம் 
ய: படேத் தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்..


மஹா விஷ்ணு புகழ்ந்து போற்றிய இந்த துதியின் எட்டு நாமங்களும் 
காரண பெயர்கள் ஆகையால் இதை மனனம் செய்வோர் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.


துளசி ஒரிடத்தில் மிக நெருங்கி அடர்ந்து இருப்பதால் அவளை பிருந்தை என்று போற்றுகிறோம்..!

பிருந்தாவனம் தோறும் இருந்து பிருந்தாவனீ என்ற பெயர் பெற்றாள். 

அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என்ற பெயர் பெற்றாள். 

எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாக்கி விஸ்வபாவனீ என்ற பெயர் பெற்றாள்.

மலர்களின் மீது ப்ரீதி உள்ள தேவர்களும் அவைகளால் ஆன்ந்தமடையாமல் துளசியாலேயே ஆனந்த மடைந்ததால் புஷ்ப ஸாரா என்ற பெயர் பெற்றாள். 

அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையினால் நந்தினீ என்ற பெயர். பெற்ற துளசி. க்ருஷ்ணனால் உருக்கொன்டு வாழ்வதால் க்ருஷ்ண ஜீவனி என்ற பெயர். பெற்றவள்.

துளசியின் தோத்திரம் புனிதம் மிக்கது.

மஹா விஷ்ணுவின் மனைவி பகவானின் அம்சம் நிறைந்த துளசி செடி.
பிருந்தையாகிய துளசி மஹா விஷ்ணுவை மணந்து கொன்ட நாள் . ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி. ப்ருந்தாவன த்வாதசி என்று போற்றப்படுகிறது..!.
துளசி செடியை ஒரு மேடையில் அல்லது பூந்தொட்டியில் வைத்து ப்ருந்தாவனம் என்று வணங்குவோம்..!

துளசி செடியில் துளசி தேவியையும் பக்கத்தில் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி மர குச்சியையோ வைத்து அதில் மஹா விஷ்ணுவை ஆவாஹனம் செய்து துளசி அமைந்துள்ள இடத்திற்கு ( பிருந்தாவனத்திற்கு) அருகில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து பூஜை செய்வது விஷேசம்..!

 பக்தியுடன் துளஸியை பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, ஒற்றுமை, ,குடும்பத்தில் அமைதி, லக்ஷிமி கடக்ஷம், வம்சம் தழைக்கும்.உடல் வலிமை, மனோ தைர்யம் உண்டாகும்.நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும்.,

பூஜை செய்யும் துளசி செடியிலிருந்து துளசி பறிக்க கூடாது. 
வேறு துளசி செடியிலிருந்து தான் துளசி பறிக்க வேண்டும்..


ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம்
புஷ்பாஞ்சலி ப்ரதானேன தேஹி மே பக்தவத்ஸலே.

இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். 

துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா 
விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள்


துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை. 

 நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். 

ஆகவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.

துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் முன்னோர்களையும் பிறவித்தளையில் இருந்து விடுவிக்கிறார். 

துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகிறது. 

எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.

அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகியது. இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யம பயம் கிடையாது. துளசியை வளர்த்து, தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.


துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமான பலனைக் கொடுக்கும்.

துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். 

துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.

மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், 
துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது. 
தானங்கள் செய்யும் போது முழுமையான பலன், தானம் செய்யும் பொருளுடன் துளசித் தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது.

சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். 
கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி’ என கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள். 

அன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.
 நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம். 

எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து,

துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். வலம் வரும் போது

"பிரசீத துளசி தேவி பிரசீத ஹரி வல்லயே
க்ஷீ ரோதமத நோத்புதே துளசி த்வாம் நமாம்யகம்''

என்ற மந்திரம் சொல்ல வேண்டும்.









துளசி மாடம்   அமைந்தகரை சென்னை  तुलसी  पॉट अमैन्दकरै चेन्नई   - తుల్సి మొక్క అమైన్ధకరై చెన్నైഅമൈന്ധകരൈ ചെന്നൈ অময়ন্ধকরই চেন্নই ਅਮੈਨ੍ਧਕਰੈ ਚੇਨ੍ਨੈ  امیندھھکرائی  چھیننے  Amaindhakarai Chennai

Thursday, November 28, 2013

திருப்பெருந்துறை இறைவன்..!




சிவபுராணம்

"ஈசனடி போற்றி எந்யைடி போற்றி
தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி"

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்  என்பது மூதுரை.....

தில்லை அம்பலவாணனாகிய ஆண்டவன் கைப்பட எழுதிக் கையொப்பமிட்ட திருவாசகம் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் பெருமை சேர்த்த திரு வாசகம் ஒப்பற்ற சிவனடியாராகிய மாணிக்கவாசகர் என்னும் திருவாதவூரர் இயற்றியது. 

இறைவனே "மாணிக்கவாசக' என்றழைத்து ஞானகுருவாகி உபதேசமும் அருளினார்.

தில்லை திருச்சிற்றம்பலத்தில் மணிவாசகர் என்னும் மனிதன் கூற ஆண்டவனே ஏட்டில் எழுதினார்!

ஆக, மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; 

தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; 

மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள்.

 திருமுறையாகிய திருவாசகம் இயற்றி முடிக்கப்பட்டதும் மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலவாணரின் ஜோதியுள் கலந்து இறைநிலை அடைந்துவிட்டார். 

"திருவாசகம் ஒருகால் ஓதக் கருங்கல் மனமும் கசிந்துருகும்' என்றார்கள்.

ஆத்ம ஒளியை அதிகரிக்கச் செய்யும் திருவாசகத்தை அருளியவர் மாணிக்க வாசகர். இவரை ஈசன் குருவாக வந்து திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆட்கொண்டார்.

திருப்பெருந்துறைகோவிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் வகையில் தீபங்களை அமைத்துள்ளனர். இது வேறெங்கும் இல்லாத அமைப்பாகும்.

எல்லா நட்சத்திரங்களையும் காட்ட முடியாது. எனவே, 27 நட்சத்திரங்கள் 
கரு வறையில் தீபமாக எரிகின்றன.

உலகைப் படைத்து, காத்து, அழித்து வழிநடத்தும் மும்மூர்த்திகளைக் காட்டும் வகையில் மஞ்சள், பச்சை, சிவப்பு என மூன்று வண்ணக் கண்ணாடி சட்டங்கள் இட்ட மூன்று விளக்குகள் கருவறையில் எரிகின்றன.

36 தத்துவங்களைக் குறிக்கும் தீபமாலை விளக்கை 
தேவ சபையில் ஏற்றி வைத்துள் ளனர்.

ஐந்து வகை கலைகளைக் குறிக்கும் ஐந்து விளக்குகளைக் 
கருவறையில் ஒன்றின்கீழ் ஒன்றாக ஏற்றி வைத்துள்ளனர்.

51 எழுத்துகளைக் கொண்டது வர்ணம். இதனைக் குறிக்கும் 51 விளக்குகள் கருவறைமுன் உள்ள அர்த்தமண்டபத்தில் உள்ளன.

உலகங்கள் 87. இதனைக் குறிப்பதற்கு கனக சபையில் 
குதிரைச் சாமிக்குப்பின் 87 விளக்கு கள் உள்ளன.

11 மந்திரங்களைக் குறிக்கும் 11 விளக்குகளை 
நடனசபையில் ஏற்றி வைத்துள்ளனர்.

இப்படி 27 நட்சத்திரங்கள், மும்மூர்த்திகள், 36 தத்துவங்கள், ஐந்து கலைகள்,
51 வர்ணங்கள், 87 உலகங்கள், 11 மந்திரங்கள் என ஒவ்வொன்றையும் விளக்கும் வண்ணமுள்ளன இவ்விளக்குகள். 

இப்படிப்பட்ட அதிசய அமைப்பு ஆவுடையார் கோவிலின் 
மட்டுமேதான் உள்ளது.

முத்து விநாயகர் மண்டபத்தின் மேற்கூறையில் தொங்கும் கற்சங்கிலிகளும்,    கொடுங்கைகளின் அற்புதங்களும் கண்களைக் கவர்கின்றன.

எவ்வுளவு கனமான கருங்கல்லை எந்த அளவுக்கு மெல்லியதாக இழைத்து, எத்தனை எத்தனை மடிப்புக்களாகக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதைக் கண்டு வியப்படைவதற்காக இடப்பக்கத்தின் கோடியில் இரண்டு மூன்றிடங்களில் துளையிட்டுக் காட்டியுள்ளார்கள்.

Wednesday, November 27, 2013

அருளோங்கும் திருத்தலங்கள்







ஆறு படை வீடு மன அமைதியைத் தரும் வீடு
அழகு முருகன் அருளோங்கும் தலமெனும்

பாரில் முருகன் அடியார் திருக்கூட்டம்
பார்த்து மகிழ்ந்து பணிந்திடும் அருவி

அந்தர தேவர்கள் வந்து அருள் பெற
பணிந்தது திருவாவினன் குடியாம்

அருளாளர் போற்றும் பிரணவப் பொருள் தனை
அப்பனுக்கே சொன்ன ஸ்வாமி மலை

இந்திரன் மகளாய் வளர்ந்த குஞ்சரியை
ஏற்று மணம் கொண்ட பரங்குன்றம்

குறவர் குலக்கொடி வள்ளி தனை அன்று
குமரன் மணந்த திருத் தணிகை

தந்திரம் பல கற்ற சூரனை வென்றது
தாரணியே போற்றும் சீரலைவாய்

மறத்தமிழ் மக்கள் தெய்வமெனும் குகன்
மகிழ்ந்து விளையாடும் சோலை மலை ..!

பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். 

ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. 

பழநி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பிக்கை.

தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். 

அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.

Photo: திருப்பரங்குன்றம்:

தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்க முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்தது.

முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. 

வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். 

பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். 

முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

கடல் அலைகள்  'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். 

சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். 

அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். 

சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். 

அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். 

அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். 

போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். 

அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார்..

குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

திருப்புகழ்

அகரமு மாகிஅதிபனு மாகிஅதிகமு மாகி அகமாகி -
அயனென வாகிஅரியென வாகிஅரனென வாகி அவர்மேலாய்;

இகரமு மாகி யைவைகளு மாகியினிமையுமாகி வருவோனே -
இருநில மீதி லெளியனும் வாழ  எனதுமுனோடி வரவேணும்

மகபதி யாகிமருவும்வ லாரி மகிழ்களி கூரும்வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே -
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில்  மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. 

கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும்.
முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்.