Friday, November 1, 2013

மகிமை மிக்க ஸ்ரீ மங்கள கௌரி பூஜை


deeparathana-01
மங்கள ரூபினி மதியனி சூலினி மன்மத பானியளே ,
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் ஷங்கரி சௌந்தரியே,
கங்கன பானியன் கனிமுகம் கண்ட நல் கற்பக காமினியே,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.

கானுரு மலரென கதிரொலி காட்டி காத்திட வந்திடுவாள்,
தானுரு தவஒலி தாரொலி மதியோலி தாங்கியே வீசிடுவாள்,
மானுரு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்,
ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.

மங்களஸ்வரூபியாகவே உள்ளவளும், ஸுக்ருதம் (புண்யம்) செய்யப்பட்டவர்களுக்குச் சுலபமாக அடையப் படுபவளும், மஹான்களால் எந்த உன்னதமான லக்ஷ்யம் அடையப் பெறுகிறதோ அந்த உயர்ந்த லக்ஷ்யமாகவும், எந்தப் பதத்தை அடைந்த பிறகு மற்றவற்றில் நாட்டம் ஏற்படாதோ அந்த இன்பமய ஸ்தானமே மங்கள கௌரியின் பாதாரவிந்தம் என வணங்குகிறோம் ..!

“மாங்கல்ய கௌரீ பததர்சனஸ்ய கர்த்தா து பூத்வா ஸுக்ருதஸ்ய பர்த்தா”
ஆசார பூதைரதிகம்யமக்ரயம் விதானம் ப்ரபத்யேத் யதோ ந பாத

சரீரத்தையே காசி க்ஷேத்திரமாகவும், ஞானத்தையே கங்கையாகவும், பக்தி சிரத்தையையே கயையாகவும் குரு சரணத்யான யோகமே பிரயாகையாகவும், துரியங்கண்ட நிலையே விச்வேசனாகவும்  திகழ்கிறது ..!
flow-show
கணபதியும் முருகனும் உல்லாசமாக விளையாடும் கயிலையில் எங்கும் இன்பமயம்: சௌபாக்கியத்தின் இருப்பிடமாக ஒளிர்கிறது ..!

பராம்பிகையின் வாசஸ்தலமாகிய கயிலாயத்தை நினைத்த மாத்திரம் பாபங்கள் அகன்று மங்களம் ஏற்படும்.
swan

ஆகாசத்தில் பூர்ணமாக நிரம்பியவள். 
இமயத்தின் வெள்ளிப் பனியில் விளையாடுகிறாள். 
சந்திரனை விட அதிக சோபையுடைய தேவி 
காசி முதலிய க்ஷேத்திரங்களில் ரகஸ்ய சக்தியாக வசிக்கிறாள். 
அதே சக்தி இந்த ஸ்துதியிலும் ஸத்யமாக பூர்ணப்ரகாசத்துடன் விளங்குவதால், கைமேல் பலனை அடையலாம் ...!dharshanambal-comming

புரட்டாசி மாதம் அஷ்டமி முதல் ஐப்பசி மாதம் அமாவாசை வரை இருபத்தொரு நாளும் கௌதமர் தெரிவித்த படி நியப்படி உபவாசமிருந்து  சிவபெருமான்   காட்சியளித்து இடப்பாகத்தை அன்னைக்கு அருளி அர்த்தனாரீஸ்வரராய் திருக்கையிலாயத்திற்கு எழுந்தருளி வீற்றிருந்தார். 

உத்திர மேரூரில் சிவபெருமான் கேதாரீஸ்வரராக எழுந்தருளி 
அருள்பாலிக்கின்றார். 

தீபாவளியன்று ஸ்ரீ கேதாரீஸ்வரரையும், கௌரியையும் இரு 
கலசங்களில் ஆவாஹணம் செய்து அலங்கரித்து வைக்கின்றனர். 

விரதம் இருப்பவர்கள் தங்கள் வீட்டிலிருந்து அதிரசம் பழ வகைகள், இனிப்புகள், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, நோன்புக்கயிறு, கருகு மணி, காதோலை முதலியன பிரசாதமாக எடுத்து வந்து அம்மையப்பருக்கு நைவேத்யம் செய்து அர்ச்சனை செய்து அருள் பெறுகின்றனர்..!

உமையம்மை மங்களகரமான விரதத்தின்ன் பலனால்  பரமனைப் பாதியாய் மாற்றினாள் ..!
மஹா விஷ்ணு வைகுண்டபதியானார். 

பிரம்ம அன்னத்தை வாகனமாக பெற்றார், 

அஷ்ட திக் பாலகர்கள் பிரம்மனிடமிருந்து பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் அடைந்ததும் விரத மகிமையினால்தான். 

இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டார். 

 மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாத உயர்வுடையது..!

சிவபெருமானின் அருகேயுள்ள நந்திகேசர் விரத மகிமையை சிவபக்தனான கந்தர்வராஜனுக்கு கூறியருளினார். 

விரதத்தை அனுஷ்டித்துப் பெருமானை அடைந்த கந்தர்வராஜனும் மானிட உலகில் இவ்விரத்தைப் பரப்ப எண்ணி பூலோகத்தில் உஜ்ஜயனி பட்டணத்தின் மன்னனுக்கு கூறினான். 

மன்னனும் இவ்விரத்தினால் சிறந்த சுகபோகங்களைப் பெற்றான். 

உஜ்ஜயனி தேசத்து புண்ணியவதியும், பாக்கியவதியும் இவ்விரதத்தை அனுஷ்டித்தாகள். 

 புண்ணியவதி, பாக்கியவதி என்னும் இரு இராஜ குமாரிகள் தேவ கன்னியர் கங்கைக் கரையில்விரதம் மேற்கொள்வதைக் கண்டு விரதம் பற்றிய விவரமறிந்து தேவ கன்னியர் கொடுத்த நோன்புக் கயிற்றையும் பெற்று வீட்டிற்கு சென்றபோது  வீடு   மாட மாளிகையாக மாறி அஷ்ட ஐஸ்வரியம் பெருகியிருக்கும் புதுமையைக் கண்டு ஆச்சரியமடைந்து சுகமாக வாழந்து வரும் நாளில் இராஜ கிரி அரசன் புண்ணியவதியையும், அளகாபுரியரசன் பாக்கியவதியையும் மணந்து தத்தம் ஊர்களுக்கு சென்று புத்திர பாக்கியத்துடன் வாழந்து வந்தனர்.
தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். 

பூஜைக்காக முதலில் மஞ்சள் பிள்ளையாருக்கு  சந்தனம், குங்குமம், புஷ்பம், அருகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து
தூப தீபம் காட்டி தாம்பூலம் நைவேத்தியம் செய்து தீபாரதணைசெய்யவேண்டும் ..!
ஸ்ரீ கேதாரீஸ்வரரை ஆவாகனம் செய்து அம்மி, குழவி அலங்கரித்து அம்மியின் மேல் குழவியை நிறுத்தி குங்கும சந்தனம் திரவியங்கள் அணிவித்து பருத்திமாலையிட்டு மலர் அலங்காரம் செய்யவேண்டும் ..! 
எதிரில் கலசத்திற்கும் பருத்திமாலை புஷ்பம்சார்த்தி பூஜை செய்பவர் கேதாரீஸ்வரரை மனதில் தியானம் செய்து , காசி, கங்கா தீர்த்தமாட்டியது போலும், பட்டுப் பீதாம்பரம் ஆபரணங்களினால் அலங்கரித்தது போலும் மனதில் சங்கல்பம் செய்து கொண்டு, வில்வம், தும்பை, கொன்றை மலர்களினால் கேதாரீஸ்வர்ரை அர்ச்சனை செய்யவேண்டும் ..!
முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப்பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, பழுப்பு, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து , எலுமிச்சம் பழம் இரண்டு, நோன்புக்கயிறு ( 21 இழை, 21 முடிச்சுடன்) சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்க்கு), கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பிக்கவேண்டும்..!
பிரசாதமாக 21 அதிரசம், சர்க்கரைப் பொங்கல், பாயசம், புளியோதரை முதலியன நைவேத்தியமாக சமர்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அக்ஷதை கையில் கொண்டு மூன்று முறை ஶ்ரீ கேதாரீஸ்வர்ரை வலம் வந்து வணங்கி புஷ்ப அக்ஷதையை சுவாமியின் பாதங்களில் சமர்ப்பித்து, தூப தீபம் காட்டி நைவேத்தியம் தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக்கயிறை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். 

பூஜையின் போது அந்தணரைக் கொண்டு கேதார கௌரி விரதக்கதை பாராயணம் செய்யக் கேட்பது நல்லது.
01-kailash

35 comments:

 1. மிகவும் சிறப்பான தகவல்கள்... முதல் படம் கண்ணை விட்டு அகல மறுக்கிறது... வாழ்த்துக்கள் அம்மா... நன்றி...

  ReplyDelete
 2. கௌரி விரதத்தின் மகிமைகளை எடுத்துக் கூறியது சிறப்பு.அழகான படங்கள் மன மகிழ்ச்சியைத் தந்ததன

  ReplyDelete
 3. எங்கெங்கு காணினும் உன் ஆடலடி
  இந்தவரிகள் தான் நினைவுக்கு வருகிறது.
  உங்கள் கைவண்ணத்தில் ஆரத்தி எடுக்கும் படம்,பூக்கள் சொரியும் படங்கள் ஆஹா...........கண்ணுக்கும் கருத்துக்கும் ஏற்ற அருமையான பதிவு
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்குள்.

  ReplyDelete
 4. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. ஸ்ரீ மங்கள கௌரி பூஜை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
  எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அருமை

  உங்களுக்கு என் இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. ” மஹிமை மிக்க மங்கள கெளரி பூஜை”

  ஒரே ஆட்டம் .... பாட்டம் ..... கொண்டாட்டமாக உள்ளது.;)

  >>>>>

  ReplyDelete
 9. முதல் படத்தில் அந்த தீபாராதனைத் தட்டு ....

  ”சுற்றிச்சுற்றி வந்ததினால்
  சொந்தமாகிப்போனாயே ....

  சித்தம் குளிர இப்போ ......
  சேர்த்தணைக்கப்போறேண்டி”

  என்ற அழகான பாடலை நினைவுப்படுத்துகிறது.

  >>>>>

  ReplyDelete
 10. அம்பாள் கெளரியைப்பற்றிய ஸ்லோகங்களும் அதற்கான அர்த்தங்களும் மிக அழகாக அளித்துள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 11. தீபச்சுடர் ஒளியினில் அம்பிகைப்படம் புதுமை.

  >>>>>

  ReplyDelete
 12. சிவலிங்கத்தைச் சுற்றி தூவித்தூவி மறையும் வெள்ளைப் புஷ்பங்கள் அனிமேஷன் ரஸிக்கும்படியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 13. அம்பிகையை ஏந்திச்செல்லும் அன்னபக்ஷிக்குத்தான் எவ்வளவு பெருமை.

  தன் இறக்கையை சும்மா ...... இந்த ஆட்டு ஆட்டுகிறதே !

  ஆனால் ஒரு இஞ்ச் கூட நகரக்காணோம். ;)

  >>>>>

  ReplyDelete
 14. அடுத்து அது என்ன ......

  ரிஷப வாகனத்தில் அம்பிகையா?

  கண்ணைப்பறிக்குது.

  அது .... துளியாவது நின்றால்தானே ரஸித்துப்பார்க்க!

  என்னவொரு அவசரத் தோற்றமும் ... ஓட்டமுமாக !

  >>>>>

  ReplyDelete
 15. அடுத்து அம்பாளின் ஆட்டம் - ஜொலிப்பு - நெளிப்பு !

  அடடா ..... சூப்பர் ! ;)

  ”அடி, எ ன் ன டீ ரா க் க ம் மா ...

  ப ல் லா க் கு நெ ளி ப் பு .....

  என் நெஞ்சு குலுங்குதடி ....

  கண்ணாடி மூக்குத்தி .......

  மாணிக்கச்சிவப்பு .............

  மச்சானை மயக்குதுதடி .......

  அஞ்சாறு ரூபாய்க்கு மணி மாலை
  உன் கழுத்துக்குப் பொருத்தமடி ....

  அம்பூரு மீனாக்ஷி பார்த்தாலும்
  அவ கண்ணுக்கு வருத்தமடீ ....”

  என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

  >>>>>

  ReplyDelete
 16. நாளைக்கு அங்கு நான் நேரில் வந்தால் 21 அதிரஸம், சர்க்கரைப்பொங்கல், பாயஸம், புளியோதரை முதலியன நோன்புக்கயிறு கட்டிய தங்கள் திருக்கரங்களால் எனக்குப் பிரஸாதமாகக் கிடைக்குமா? ;)

  >>>>>

  ReplyDelete
 17. கடைசியாகக் காட்டியுள்ள படத்தில் புஷ்பங்கள் தோன்றி மறையும் அனிமேஷனும் அழகாக உள்ளது.

  அ ரு மை யா ன
  அ ச த் த லா ன
  அ ற் பு த மா ன
  அ தி ஸ ய மா ன
  அ னி மே ஷ னா ன
  அ தி ர ஸ மா ன

  பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

  -oOo-

  ReplyDelete
 18. தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 19. மிகுந்த புண்ணியம் கிடைத்தது. மங்கள கௌரியின் தரிசனமும்

  இந்தத் தீபாவளியைப் பொலிய வைத்துவிட்டது.

  ReplyDelete
 20. கேதார கௌரி விரத (தீபாவளி) நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. என் மனதுக்கு நெருக்கமான பாடலுடன் ஆரம்பித்து மிக அழகாகவும் ஆழமாகவும் கேதார கௌரி பூசையின் மகிமையினை விளக்கிய விதம் அருமை !படங்கள் எப்போதும் போல மனதோடு ஒட்டிக் கொண்டது .மிக்க நன்றி .வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
 22. கேதார கௌரி விரத்தச் சிறப்பும் படங்களும் அருமை!

  அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. முதல் படமே கண்ணைக் கட்டி நிறுத்தி விட்டது!

  ReplyDelete
 24. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
  மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 25. hearty deepavali Greetings

  https://www.youtube.com/watch?v=yBgnmK-gK2w

  subbu thatha.

  ReplyDelete
 26. பார்த்தேன்,படித்தேன்,ரஸித்தேன். தீபாவளி நல்வாழ்த்துகள் உங்கள் யாவருக்கும். அன்புடன்

  ReplyDelete
 27. கேதார கௌரி விரத சிறப்புக்களும் படங்களும் அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. இனிய தீபாவளி வாழ்த்துக்கள். படங்கள் எல்லாம் டக்கு பகென ஒளிருதே...

  ReplyDelete
 29. படங்களும் பகிர்வும் அருமை.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 30. informative post thanks for sharing

  ReplyDelete
 31. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. சிறப்பான தகவல்களால் தீபாவளி திருநாளை சிறப்பித்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் அம்மா.
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 33. கேதார கௌரி விரதம் பற்றிய முழு விவரம் அறிந்து கொண்டேன்.,நன்றி.
  தீபாவளி வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 35. கேதாரகெளரி விரத சிறப்பினை அழகிய படங்களுடன் அருமையாக இருக்கு. முதல் படம் மிக அருமை.நன்றி.

  உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete