Wednesday, November 27, 2013

அருளோங்கும் திருத்தலங்கள்ஆறு படை வீடு மன அமைதியைத் தரும் வீடு
அழகு முருகன் அருளோங்கும் தலமெனும்

பாரில் முருகன் அடியார் திருக்கூட்டம்
பார்த்து மகிழ்ந்து பணிந்திடும் அருவி

அந்தர தேவர்கள் வந்து அருள் பெற
பணிந்தது திருவாவினன் குடியாம்

அருளாளர் போற்றும் பிரணவப் பொருள் தனை
அப்பனுக்கே சொன்ன ஸ்வாமி மலை

இந்திரன் மகளாய் வளர்ந்த குஞ்சரியை
ஏற்று மணம் கொண்ட பரங்குன்றம்

குறவர் குலக்கொடி வள்ளி தனை அன்று
குமரன் மணந்த திருத் தணிகை

தந்திரம் பல கற்ற சூரனை வென்றது
தாரணியே போற்றும் சீரலைவாய்

மறத்தமிழ் மக்கள் தெய்வமெனும் குகன்
மகிழ்ந்து விளையாடும் சோலை மலை ..!

பழநி ஆறுபடைவீடுகளில் முதலாவதாகும். 

ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் தன் பெற்றோர்களிடம் கோபம்கொண்டு முருகன் ஆண்டியின் கோலத்தில் நிற்கும் இடமே பழநி. 

பழநி மலையில் உள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்று நம்பிக்கை.

தந்தைக்குப் பாடம் சொன்ன இடம் சுவாமி மலை. பிரணவ மந்திரத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை முருகன் சிறையில் அடைக்கக் கேள்வியுற்ற சிவபெருமான், எனக்கும், பிரம்மாவுக்கும் கூடத் தெரியாத பிரணவமந்திரத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என்று கேட்கிறார். 

அதன்படி உபதேசிப்பவன் குரு, கேட்பவன் சீடன் என்ற முறையில் முருகன் ஆசனத்தில் அமர, அவர் கீழ் சிவன் அமர்ந்து தன் கரத்தால் வாய் பொத்தி உபதேசம் கேட்ட இடமே சுவாமிமலை.

Photo: திருப்பரங்குன்றம்:

தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறான். முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
தேவேந்திரனையும், தேவர்களையும் சிறை மீட்டதற்கு நன்றிக் கடனாக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்குத் திருமணம் செய்துகொடுக்க முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம். முருகனுக்கும் சூரபத்மனுக்கும் போர் முடிந்து முருகன் போரில் வெற்றி பெற்ற மறுநாள் இத்தெய்வீகத்திருமணம் நடந்தது.

முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி. 

வள்ளியின் தந்தை நம்பிராஜன் முருகனுக்கு வள்ளியைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்து, முருகனுடன் போரிட்டு மடிகிறான். 

பின் முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். 

முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது.

கடல் அலைகள்  'ஓம்' என்ற ரீங்காரத்துடன் கரை மோதும் 'அலைவாய்' என்னும் திருச்செந்தூர் முருகன், சூரபத்மன் என்ற அசுரனுடன் போரிட்டு வென்ற இடமாகும். 

சூரபத்மன் தேவர்களையும், இந்திரனையும், அவன் மனைவியையும் சிறை செய்து கொடுமை செய்தான். 

அவர்களைக் காப்பாற்ற முருகன் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றினார். 

சூரபத்மனுடன் முருகன் போர்புரிந்த இடமே திருச்செந்தூர். 

அவர் போர்புரிந்த காலம் கார்த்திகை மாதம் சஷ்டியாகும். 

அதனால்தான் கார்த்திகை மாதம் சஷ்டியின் போது விரதம் இருந்து முருகனை வழிபடுகின்றனர். 

போரின் இறுதியில் சூரபத்மன் பெரியமரமாக நிற்க முருகன் தன் தாய் தந்த சக்திவேலால் மரத்தைப் பிளக்கிறார். 

அதில் ஒருபாதி மயில் ஆகிறது. மற்றொரு பாதி சேவலாகிறது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக் கொள்கிறார்.

நக்கீரர், 'இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர்ச்சோலை கிழவோனே' என்று முருகனின் ஆறாவது படைவீடாகப் பழமுதிர்ச்சோலையைக் கூறித் திருமுருகாற்றுப் படையை நிறைவு செய்கிறார்..

குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம் பழமுதிர்ச்சோலையாகும்.

திருப்புகழ்

அகரமு மாகிஅதிபனு மாகிஅதிகமு மாகி அகமாகி -
அயனென வாகிஅரியென வாகிஅரனென வாகி அவர்மேலாய்;

இகரமு மாகி யைவைகளு மாகியினிமையுமாகி வருவோனே -
இருநில மீதி லெளியனும் வாழ  எனதுமுனோடி வரவேணும்

மகபதி யாகிமருவும்வ லாரி மகிழ்களி கூரும்வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே -
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில்  மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. 

கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும்.
முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்.


25 comments:

 1. அறுபடை வீடுகள்
  படமும்
  செய்தியும் அருமை
  சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
 2. அழகான படங்கள் அம்மா.... சிறப்பான தகவல்கள்... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஆறு படை வீடுகளின் பெறுமை, திருப்புகழ் பாடல் பகிர்வு, படங்கள் எல்லாம் அருமை.
  நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ’அருளோங்கும் திருத்தலங்கள்’

  அற்புதமான தலைப்.....பூ ! ;)

  >>>>>

  ReplyDelete
 5. படங்கள் அத்தனையும் அழகோ அழகு, தமிழ்க் கடவுள் முருகனைப்போலவே.

  >>>>>

  ReplyDelete
 6. எண்ணிரண்டு பதினாறு வரிகளில் 'என்றும் பதினாறு - ஸ்வீட் சிக்ஸ்டீன்' ஆன பாலமுருகனைப்பற்றிய பாடலுடன் நல்ல துவக்கம்.

  >>>>>

  ReplyDelete
 7. ஆறுபடைவீடுகளில் முதல் படை வீடு பழநி.

  ஆஹா அருமை .... சென்று பார்த்துள்ளேன் .... அதுவும் என் தாயாருடன் .... மகிழ்ச்சி. ;)

  >>>>>

  ReplyDelete
 8. இரண்டாவது தந்தைக்கே பிரணவப்பாடம் சொன்ன ’ஸ்வாமி மலை’ -

  ஆஹா! இதுவும் பலமுறை சென்று தரிஸித்துள்ளேன்.

  அறுபது தமிழ் வருஷப்பெயர்களுடன் 60 படிகள் அழகாக இருக்குமே !

  ஒவ்வொரு ஆண்டும் இங்கு மிகச்சிறப்பாக நடைபெறும் ஸ்ரீருத்ராபிஷேகத்திற்கு கமிட்டியினர் என்னிடம் கடந்த 15 ஆண்டுகளாக கணிசமான தொகை வாங்கிச் செல்கிறார்கள்.

  ஓய்வு பெற்றுள்ள இன்றும் நான் அவர்களின் தொடர்பு எல்லைக்குள் தான்.

  >>>>>

  ReplyDelete
 9. மூன்றாவது தெய்வானையை திருமணம் செய்துகொண்ட திருப்பரங்குன்றம்.

  ஆஹா .... மதுரையில் மாநகரின் மத்தியில் இதையும் போய் தரிஸித்துள்ளேன்.

  அங்கு அன்று நான் நிறைய மயில்களையும் பார்த்து ரஸித்தேன்.

  >>>>>

  ReplyDelete
 10. நான்காவது வள்ளியை காதல் மணம் செய்த திருத்தணியா - ஜோர் ஜோர்!!

  இவரையும் நான் நேரில் சென்று தரிஸித்துள்ளேன் .... காதல் போலவே இந்த மலையில், எனக்கு மிகச்சுவையான, என்றுமே மறக்க முடியாத சில அனுபவங்கள் ஏற்பட்டன. அவற்றைத் தனிப்பதிவாகத்தான் தர வேண்டும்.

  >>>>>

  ReplyDelete
 11. அடுத்து ஐந்தாவதாக திருச்செந்தூர் .... சூப்பர்.

  கோயிலின் மதில்சுவர் அருகேயே குளம் போல முட்டி நிற்கும் சமுத்திரத்தில் ஸ்நானமும் செய்து .... தரிஸித்துள்ளேன்.

  நான் சென்ற அன்று கோயிலில் கும்பலான கும்பல். இருப்பினும் மிக நல்ல தரிஸனம் கிடைக்கப்பெற்றேன்.

  இப்போதும் பசுமையான நினைவலைகளில் உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 12. ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலையையும் பார்க்க வேண்டித்தான் சென்றேன். கள்ளழகர் கோயில் பார்த்து விட்டோம். அதன் பிறகு மேலே ஏற எத்தனிக்கும்போது சரியான நல்ல மழை கொட்டித் தீர்த்து விட்டது.

  திரும்பவும் கள்ளழகரிடம் தஞ்சமடைந்து, திரும்பி விட்டோம்.

  இது ஒன்றே அடியேன் இன்றுவரை பார்க்காததோர் படைவீடு. நக்கீரருக்கு காட்சியளித்த முருகன் போல ஆகிவருவதால் இனி பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதும் அரிது தான்.

  இருப்பினும் அறிவினில் ஒளவையைப்போன்றத் தங்களின் பதிவுகளில் இவரை அடிக்கடி என்னால் தரிஸித்துவிட முடிகிறதே! அதுவே நான் செய்த பாக்யம்.

  நெல்லிக்கனியாக அவ்வப்போது சுட்ட பழமும் மற்றும் சுடாத பழமுமாகத்தான் அள்ளித் தருகிறீர்களே ..... என்னே என் அதிர்ஷ்டம் .... முருகா!

  ஆனால் இங்கு மட்டுமே மூலஸ்தானத்தில் தம்பதியினருடன் காட்சி தருகிறார் என்று சொல்லி ஆவலைத் தூண்டி விட்டுள்ளீர்கள். பிராப்தம் இருந்தால் தம்பதி ஸமேதராய் சென்று வர முயற்சிப்போம். ;)

  >>>>>

  ReplyDelete
 13. கடைசியாகச் சொல்லியுள்ள பத்தற்கிர ..... பாடல் உச்சரிப்பே அழகோ அழகு தான்.

  >>>>>

  ReplyDelete
 14. அட நம் முருகனைப்பற்றி தானே ...... ஏதோ ஒருசில கருத்துக்கள் சொல்லலாம் என்று தான் ஆரம்பித்தேன் ..... அதிகாலை மிகச்சரியாக 5 மணிக்கே.

  [நெட் கிடைப்பதில் இடையிடையே பல தொந்தரவுகள் ஆகிவிட்டன. சேமிக்க மட்டுமே முடிந்தது. அனுப்ப இயலவில்லை]

  ஆனாலும் அது ஷண்முகம் போலவே எண்ணிக்கையில் ஆறில் முடிந்துவிடும் என்றுதான் நான் எதிர்பார்த்தேன்.

  ஆனாலும் அது தொடர்ந்து கொண்டே போனது.

  சரி .... கோபாலகிருஷ்ணன் கொடுக்கும் கமெண்ட்ஸ் அல்லவா ... அதனால் அது எட்டில் தான் ... அஷ்டமியாக ... கோகுலாஷ்டமியாக முடியுமோ என நினைத்தேன்.

  ஆனால் அதையும் தாண்டிவிட்டது.

  ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? என்று யோசித்தேன்.

  யோசித்.......தேன்!

  >>>>>

  ReplyDelete

 15. நேற்று இரவு [பொதுவாக இரவினில் தாமரை மலராது] தங்கள் தெய்வீக சக்தியால் முருகப்பெருமானின் தலைகள் போலவே ஆறு செந்தாமரைகளை என் பதிவினில் மலரச்செய்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினீர்கள்.

  எப்போதுமே சம்பந்தி ஒன்று செய்தால், நாம் இரு மடங்காகச் செய்வது தான் ... மரியாதை .... அது தான் சம்பந்தி மரியாதை ..... எதிர் மரியாதை என்றும் சொல்லுவார்கள்.

  யாருக்கு யார் சம்பந்தி? என நினைத்துக் குழம்ப வேண்டாம். [அதற்காக சம்பந்தி சண்டையும் நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். ]

  தங்களின் பேரன்/பேத்தி + என் பேரன்/பேத்தி பிற்காலத்தில் ஒருவேளை சம்பந்தம் செய்து கொள்ளும்படியும் அமையலாம். இல்லாவிட்டாலும் அடுத்த ஜன்மத்தில் நிச்சயமாக நமக்குள் நெருங்கிய சம்பந்தம் ஏற்படலாம்.

  எதற்குச்சொல்ல வந்தேன் என்றால் நேற்றைய தங்களின் ஆறு கமெண்ட்ஸ்களுக்கு பதிலாக, இன்று நான் சம்பந்தி மரியாதையாக மேலும் ஆறு சேர்த்து பன்னிருகை வேலன்போல பன்னிரண்டு கமெண்ட்ஸ் கொடுக்கும்படி நேர்ந்துள்ளது. ;))))))))))))

  இவற்றில் எத்தனைப்போய்ச் சேருமோ!

  அதில் எத்தனை வெளியிடப்படுமோ!!

  ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம் !!!

  ooo ooo ooo ooo

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் .. வாழ்க வளமுடன் ..!

   இனிய கருத்துரைகள் அனைத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள்..!

   எங்கள் இல்லத்தில் விளையாட்டுக்குக் கூட இந்த சம்பந்தி என்று அழைக்கும் முறை தவிர்க்கப்படும் ..

   Delete
 16. [வெளியிட விட்டுப்போயுள்ள ஓர் பின்னூட்டம் - எண்ணிக்கையில்: 4]


  ஆறுபடைவீடுகளில் முதல் படை வீடு பழநி.

  ஆஹா அருமை .... சென்று பார்த்துள்ளேன் .... அதுவும் என் தாயாருடன் .... மகிழ்ச்சி. ;)

  >>>>>

  ReplyDelete
 17. அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தாற் போன்ற உணர்வு!..
  அழகன் முருகனின் அழகான படங்கள்!.. மகிழ்ச்சி!..

  ReplyDelete
 18. அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்தாற் போன்ற உணர்வு!..
  அழகன் முருகனின் அழகான படங்கள்!.. மகிழ்ச்சி!..

  ReplyDelete
 19. ஆறுபடையில் மூன்று பார்த்ததில்லை! தகவல்களுடன் பதிவு பிரமாதம்.

  ReplyDelete
 20. அழகிய அறுபடைவீடுகளும், அழகன் முகனின் தரிசனமும் அற்புதம்!

  பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரி!

  ReplyDelete
 21. ஆறுபடை வீடுகளையும்,அதிலிருந்து அருள்பாலிக்கும் முருகனையும் தரிசிக்க செய்திருக்கிறீங்க. நன்றிகள்.

  ReplyDelete
 22. ஆறுபடை வீடுகளையும் தரிசிக்க வைத்தமைக்கு நன்றி....

  ReplyDelete
 23. வணக்கம்
  அம்மா
  சிறப்பான கருத்துக்கள் ஒவ்வொரு படங்களும்... மிக மிக அழகு... வாழ்த்துக்கள் அம்மா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 24. அறுபடை வீடுகளுக்கும் சென்று வந்துள்ளோம். அப்படிப் போக முடியாதவர்கள் சென்று தரிசிக்க என்றே சென்னை பெசண்ட் நகர் அருகே கடலோரத்தில் ஆறு படை வீட்டுக் கோவில்களும் இருக்கின்றன. அருமையான படங்கள் அழகான பகிர்வு.

  ReplyDelete