Saturday, November 2, 2013

தித்திப்புத் திருநாள் தீபாவளி..!





தீபாவளியின் முதல் நாள் 'தந்தேரஸ்'என்று 
வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது..

தந்தேரஸ் அன்று செய்யப்படும் தானம் பலமடங்கு பலனளிக்கும் தானத்திருநாள் ..

மருந்துகளுக்கும் வைத்தியத்திற்கும் தலைவரான  தன்வந்திரி‘ பகவான். பாற்கடலைக் கடைந்த போது அமிர்த கலசத்தை  கரத்தில்  எடுத்தபடி வெளியே வந்தவர். 
வாசுகிப் பாம்பின் விஷத்தின் நெடி தங்காமல் சிலர் மயக்கம் போட அதே நேரத்தில் மஹாவிஷ்ணுவே ‘தன்வந்த்திரியாகத் தோன்றினார்.

ஆகவே தீபாவளித்திரு நாளின் முதல் நாள் தன்வந்திரி திரயோதசியாக ஆரோக்கியம் அருள பிரார்த்திக்கப்படுகிறது ..! 

தந்தேரஸ் அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றிவைப்பது , 
எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்..
எனவேஅந்த விளக்கு 'எமதீபம்' என்று அழைக்கப்படுகிறது....
யம  தீபம-  யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க  யமுனையும் மனம் மகிழ்ந்து, சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். 
சனி பகவானும் யமனும் சகோதரர்கள். எனினும் கருத்து வேறுபாடு உள்ளவர்கள். 

இருவரும் இறைவனை வழிபட்டுத் தகுந்த பதவியினைப் பெற்று பூலோகவாசிகளுக்கு அவரவர் செய்யும் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார்கள்.

யமனும் சனியும்  தீபாவளி அன்று மட்டும்  தங்களை மகிழ்விக்கும் 
மக்களுக்கு நன்மைகள் செய்வது வழக்கம்.

மகாளய பட்ச நாட்களில் மறைந்த முன்னோர்கள், தாங்கள் வசித்த ஊருக்கு வருவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதனால், அவர்களுக்கு மகாளய பட்ச நாட்களிலும் மகாளய அமாவாசையிலும் தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

பிதுர்லோகத்திலிருந்து தங்கள் ஊருக்கு வந்தவர்கள் 
உடனே திரும்பிச் செல்வதில்லை. 

தீபாவளி சமயத்தில்தான் தங்கள் உலகத்திற்குச் 
செல்வதாகச் சொல்லப்படுகிறது. 

அதனால் வடநாட்டில் வீட்டைச் சுற்றி விளக்குகள் ஏற்றி வைப்பது வழக்கம். இந்த தன திரயோதசி நாளில் யம தீபம் என்ற விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. 

தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசியன்று மாலை நேரத்தில் யமதீபம் ஏற்றுவது வழக்கம். இந்த தீபத்தினை வீட்டின் உயரமான இடத்தில் ஏற்றுவார்கள். 

இதனால் முன்னோர்கள் மட்டுமல்ல; யமனும் மகிழ்வானாம்.

யமதீபம் ஏற்றினால் விபத்துகள், எதிர் பாராத மரணம் ஆகியவை ஏற்படாமலும்; ஆரோக்கியமாக வாழவும் யமன் அருள் புரிவார் என்பது நம்பிக்கை.








எத்தனைதான் இனிப்பு ,காரம் என்று பலவகை பலகாரம் இருந்தாலும் தீபாவளிக்கு இட்லி தனிச்சிறப்பளிக்கும் ..!

சாதாரண இஞ்சி கஷாயம் லேகியமாக  சாப்பிட்ட இனிப்புகள் ஜீரணமாகி வயிறு பத்திரமாக இருக்க  தீபாவளி லேகியம்.
இஞ்சி - 50 கிராம் , வெல்லம் - 100 கிராம் , சீரகம் - 25 கிராம், தனியா - 10 கிராம் ,
நெய் - 25 கிராம்
தனியாவையும், சீரகத்தையும் நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
இளசாக இருக்கும் இஞ்சியாகப் பார்த்து வாங்கவும். இஞ்சியை நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்சியில் அல்லது அம்மியில் இஞ்சியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த தனியாவையும், சீரகத்தையும் இஞ்சியுடன் சேர்த்து அரைக்கவும்.
கலவை நன்றாக அரைந்து விழுதாக ஆனதும் அதில் வெல்லத்தை பொடி செய்து கலக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து விழுதை அதில் போட்டு நன்கு கிளறவும்.
பின்னர் அதில் நெய்யை விட்டு கிளறிக் கொண்டே இருங்கள்.
 லேகியம் பதத்திற்கு வந்ததும் இறக்கி உலர்ந்த பாத்திரத்தில் பத்திரப்படுத்தி
அனைவரும் சாப்பிடலாம். பலகாரங்களால் வயிற்றுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை இந்த லேகியமே சரி செய்து விடும்.


.தீபாவளி நாளன்று லக்ஷ்மி ஒவ்வொரு வீட்டிற்கும் வருகிறாள் என்பது நம்பிக்கை. ஆகையால் அவள் வரவுக்காக வாசலில் ரங்கோலி என்ற வண்ணக் கோலங்கள் பெரிய அளவில் போடப்பட்டு,  கிருஷ்ண ஜயந்தியில் போடும் சிறு பாதங்கள் போல் ஸ்ரீ லட்சுமியின் சிறு பாதங்களும் கோல மாவினால் போடப்படுகின்றன.

மாலையில் விளக்குகள் ஏற்றப்பட்டு, விடிய விடிய அணையாமல் பாதுகாக்கபடுகின்றன. இந்த ஒளிக்குத் தனிப்பட்ட சக்தி வந்து, தீய சக்திகளை விரட்டிவிடுகிறது என்ற நம்பிக்கை.
தீப அலங்காரங்கள் செய்து மகாலட்சுமி பூஜை செய்வார்கள்

பெரிய நிறுவனங்களிலும் தன்வந்தரி பூஜை, லக்ஷ்மி – குபேர பூஜை என்று நடக்கிறது.
மந்தார மலையை மத்தாகக் கொண்டு வாசுகியைக் கயிறாகக் கொண்டு அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடைந்த போது, நடுவில் மந்தார மலை சாய்ந்து ஆட்டம் கண்டது. மஹாவிஷ்ணு கூர்மவதாரம் எடுத்து, பாற்கடலுக்குள் சென்று, அதைத் தூக்கிப் பிடித்துச் சரிசெய்தார். பின் கடைய, பல பொருட்கள் வெளிவந்தன. அதில் உச்சைசரஸ் என்ற குதிரை, காமதேனு, கற்பகத் தரு, அப்சரர்கள் என்று வந்த பின் மிக அழகுடன் ஜ்வலிப்புடன் தோன்றினாள் லக்ஷ்மி.

தாமரையில் வீற்றிருந்தாள். தாமரை மாலை அணிந்திருந்தாள்.

இரு யானைகள் இரு பக்கமும் கங்கை நீரைத் தும்பிக்கையால் தெளிக்க, அவள் “கஜ லட்சுமி” ஆனாள். பாற்கடலில் தோன்றியதால் “க்ஷீராப்த புத்திரி”. அதாவது சமுத்திர தனயா ஆனாள்.

சமுத்திரராஜன் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களுடன் பட்டு வஸ்திரங்கள் அளித்தான். மஹாலட்சுமியின் வருகை, அந்த இடத்தையே ஒளிமயமாக்கியது. தேவர்கள் மலர் தூவ, மகாலட்சுமியின் கண்கள், மஹாவிஷ்ணுவைப் பார்க்க, தன் கழுத்தில் இருந்த தாமரை மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள். மஹாவிஷ்ணுவிடம்  இணைந்த தனாலேயே இந்நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சனி பகவானுக்குப் பிடித்தமானது கருப்பு எள். 
தீபாவளிப் பண்டிகை தினத்தில் காலையில் கோள்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கும்போது, சனிக்கோள் தனக்குப் பிடித்தமான எள்ளுக்குப் புத்துயிர் ஊட்டுகிறது. 

அதனால், அன்று அதிகாலையில் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயைப் பூஜித்து மக்கள் தலையிலும் உடலிலும் தேய்த்துக் குளிப்பதால், சனி பகவான் அவர்களை வாழ்த்துவதாக சாஸ்திரங்கள்சொல்கின்றன. 

அன்று நல்லெண்ணெயில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் நம்பிக்கை. 

எனவே, தீபாவளித் திருநாள் சனி பகவானுக்கு மகிழ்ச்சியூட்டும் நாள்

தீபாவளிக்குப் பலகாரங்கள் செய்யும்போது, முறுக்கு தயாரிக்க மாவு பிசையும்போது அதில் கருப்பு எள் சேர்ப்பார்கள். அதேபோல எள் தட்டை என்னும் பலகாரத்திலும் எள் சேர்க்கப்படுவதால் சனி பகவான் மகிழ்ச்சி அடைகிறார்.

தீபாவளி நாளன்று எள் செடிகள் நிரம்பிய தில த்வீபத்தில் திருமகளின் திருமணம் நடந்தது என்பதால் அன்று நல்லெண்ணெயில் திருமகள் வாசம் செய்கிறாள். 


குஜராத் திலும் மகாராஷ்டிர மாநிலத்தி லும் நேபாள நாட்டிலும் தீபாவளிப் பண்டிகையை ஐந்து நாட்கள் கொண்டாடுவர். அதில் ஒருநாள் "யமதுவிதியை' ஆகும்.

தீபாவளி அமாவாசையை அடுத்து வரும் துவிதியை நாளே "யமதுவிதியை'. இதனை "பால்பிஜி' என்றும்; "பையாதுஜ்' என்றும் சொல்வர்.

இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று (தீபாவளியன்று) அதிகாலையில் நீராடி, புத்தாடை அணிந்து, வீட்டின் வெளிப்புறங் களில் வரிசையாக விளக்குகள் ஏற்றி, தங்கள் குல வழக்கப்படி பூஜை செய்வார்கள்.

 விரதம் கடைப்பிடித்து நோன்புத் திருநாளாகவும் கொண்டாடுவர்.

மூன்றாம் நாள் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி ஆகியோருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து, வணிகர்கள் புதுக்கணக்கு எழுதுவார்கள். சில இடங்களில் ஸ்ரீலட்சுமி குபேர பூஜையும் நடைபெறும்.

நான்காம் நாள் புதுவருடம் பிறந்ததாகக் கொண்டாடுவர்.

 கோகுலத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் ஸ்ரீகிருஷ்ண பகவான் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து மக்களைக் காப்பாற்றிய நாளாகவும் கொண்டாடுவர்.



ஐந்தாம் நாள்தான் யம துவிதியை. இது சகோதர- சகோதரிகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. 

அன்று உடன்பிறந்தவர்கள் வீட்டிற்குச் சென்று வாழ்த்து பெறுவதுடன், பரிசுகளும் கொடுப்பார்கள்; பெறும் ஐந்தாம் நாள் விழா தான் யமனுக்குப் பிடித்தமான விழா ஆகும்.

யமன், ஐப்பசி மாத துவிதியை அன்று தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். 

யமனின் சகோதரியான எமி, தன் சகோதரனுக்கு ஆரத்தி எடுத்து மலர்மாலை சூட்டி, நெற்றியில் திலகம் இட்டு அன்புடன் வரவேற்று உபசரித்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து இனிப்பு உண்டு, தங்கள் சகோதரப் பாசத்தைப் பரிமாறிக் கொண்டார்கள். 

தன் சகோதரியிடம் நெற்றியில் திகலமிட்டுக் கொண்ட நாள் யமனுக்குப் பிடித்தமான நாளானது. 

அப்போது, யமன், "இந்த நாளில் யார் ஒருவர் தன் சகோதரியிடம் திலகமிட்டுக் கொள்கிறார்களோ, அவர்களை நான் துன்புறுத்த மாட்டேன். 
அவர்களுக்கு யமவாதனை கிடையாது' என்று வரம் கொடுத்தாராம்.

இந்தப் புராணக்கதையின் அடிப்படையில் தான் வடநாட்டில் பெண்கள் தங்கள் சகோதரர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள். அண்ணன்- தம்பி ஆகியோருக்கு நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தும் சகோதரப் பாசத்தை வளர்க்கும் விழாவாக திகழ்கிறது.

தீபாவளித் திருநாளில் எல்லா நீரிலும் கங்கை வாசம் செய்வதாக ஐதிகம் உள்ளது. அதனால் வீட்டில் வழக்கமாக குளிக்கும் நீர் கூட அன்றைய தினம் கங்கா தேவியின் அம்சம் நிரம்பியதாக இருக்கும். 
தீபாவளி நாளில் அதிகாலையில் எழுந்து, 
தைலே லட்சுமி, ஜலே கங்கா தீபாவளி வசேத் என்று சொல்லி எண்ணெயையும். நீராட வெந்நீரும் எடுத்து வைத்து  புனித கங்கையை மனதால் துதித்து,  பாவங்கள் எல்லாம் தொலைந்து புண்ணியம் சேருவதாக நினைத்தபடி நீராடுவார்கள்..!.

கங்கே ச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நதிம் குரு

கங்கை உள்ளிட்ட ஏழு புனித நதிகளும் இந்த நீரில் எழுந்தருளி புனிதமாக்கட்டும் என்ற இந்தத் துதியையும் சொல்லலாம். 

தீபாவளியன்று பூவுலகில் உள்ள எல்லா நீரும் கங்கை

புனிதம், புண்ணியத்தோடு திருமகள் அருளும்  கிடைக்கும். 

விஷ்ணோ: பாதப் ஏஸுதாஸி வைஷ்ணவி விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத ஆஜன்ம மரணாத்திகாத்
திஸ்ர கோட் யோர்த்த கோடீச தீர்த்தானாம் வாயுப்ரவீத்
திவிபுவ்யந்தரிக    க்ஷேதானிமே ஸந்து ஜாஹ்னவி!

என்று பக்தியுடன் தியானம் செய்ய வேண்டும்.

19 comments:

  1. VERY VERY GOOD MORNING !

    VERY VERY HAPPY DEEPAVALI

    கங்கா ஸ்நானம் ஆச்சா ?

    சந்தோஷம் .... ;)))))

    மீண்டும் வருவேன்.

    Bye for now !

    >>>>>

    ReplyDelete
  2. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete


  4. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  8. ஹப்பி தீபாவளி.

    பண்டங்கள் அனைத்தும் எனக்கே.. ஸ்பெஷலா தட்டை வடை முழுவதும் எனக்கே எனக்கூஊஊஊஊஊஉ.

    ReplyDelete
  9. தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.


    ReplyDelete
  10. வணக்கம் சகோதரி.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.
    அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீப ஒளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. யம தர்மராஜன் யமுனை வீட்டுக்குச்சென்றது போலவே நானும் இப்போது என் முத்த சகோதரி வீட்டுக்குச்சென்று வந்தேன்.

    நமஸ்கரித்து விட்டு ஓடி வந்து விடலாம் என நினைத்துத்தான் சென்றேன். அது எப்போதுமே நடக்காத காரியம் என்பதும் எனக்குத்தெரியும்.

    அவர்களுடைய சொந்த பிள்ளைகள், நாட்டுப்பெண்கள், பேரன் பேத்திகள் என ஒரு 25 பேர்கள் கூடி இருந்தனர். இத்தனைக்கும் பாதி பேர்கள் வெளியூரில் இருப்பதால் வருகை தரவில்லை என்ற குறை வேறு. போன் மேல் போன் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன.

    அங்கு போனால் என் அக்கா என்னை லேஸில் விடமாட்டாள் என்பதும் எனக்குத் தெரியும்.

    என்ன செய்ய? அவ்வளவு ஒரு பா ச ம் !

    ஒவ்வொருவரின் ஜவுளிகளைக் காட்டுவதும், குழந்தைகள் எங்களை நமஸ்கரிப்பதும் என நேரம் போனதே தெரியவில்லை. நடுவில் சமையல் சாப்பாடு பாயஸம் பக்ஷணங்கள் என ஒரே அமர்க்களமாக இருந்தன.

    ஒரு கப் பாயஸமும், கொஞ்சம் சுக்கு வெல்லமும் மட்டும் எடுத்துக்கொண்டு, ஒருவக்ழியாக தப்பித்து வந்து விட்டேன்.

    அதனால் இங்கு வருகை தர தாமதமாகி விட்டது.

    மி கு ந் த
    ஆ வ லு ட ன்
    வி ரு ம் பி
    அ ழை ப் போ ரி ன்
    வீ ட் டு க் கா வ து

    சென்று தானே வர வேண்டியுள்ளது!

    [நியாயமாகப் பார்க்கப் போனால் நான் இன்று கோவையில் ஒரு விசேஷத்தில் கலந்துகொண்டு இருக்க வேண்டியவன்.]

    >>>>>

    ReplyDelete
  12. ஸ்வீட்ஸ் பார்க்கவே திகட்டி விடுகின்றன.

    தாங்கள் காட்டியுள்ள இட்லி சட்னி சாம்பார் பிரமாதமாத்தான் இருக்கும் போலத் தெரிகிறது.

    இருப்பினும் எனக்கு அதுவும் வேண்டாம்.

    லேகியம் மட்டும் கொடுங்கோ போதும். ;)))))

    >>>>>

    ReplyDelete
  13. பாற்கடலில் தோன்றிய அம்பாளுக்கு ”க்ஷீராப்த புத்ரி” என்ற சொல்லே சூப்பர் ! ;)

    சனி பகவானுக்கு உகந்தது கருப்பு எள் - முறுக்கு மற்றும் தட்டைகளில் சேர்க்கப்படுவது - எள்ளிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் - அதில் ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்வது - வெந்நீரில் தைல ஸ்நானம் செய்வது - அதற்கான மந்திரங்கள் என தினமும் ஏதேதோ பதிவுகள் கொடுத்து இந்த வருஷ தீபாவளியை அமர்க்களப்
    ப டு த் தி வி ட் டீ ர் க ள்.

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

    >>>>>

    ReplyDelete
  14. வழக்கம்போல் அனைத்துப்படங்களும் விளக்கங்களும் அருமையோ அருமை.

    தினமும் கஷ்டப்பட்டு பக்தி-சிரத்தையுடன் பதிவு தருவது மகிழ்ச்சியளிக்கிறது. மிகக் கடுமையான உழைப்புக்குப் பாராட்டுக்கள் + நன்றிகள்.

    மேலிருந்து கீழ் ஆறு மற்றும் எட்டு வரிசையில் தீபங்கள் எரியும் படங்கள் மிகவும் பிடித்துள்ளன.

    மீண்டும் மீண்டும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    -oOo-

    ReplyDelete
  15. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. மங்களம் பொங்கும் திருநாளாக
    மனதினில் இந்நாள் நிலைத்திடவே
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
    அனைவருக்கும் என் இனிய
    தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !

    ReplyDelete
  18. நீங்கள் சொல்வது போல் எவ்வளவு பலகாரம் இருந்தாலும் இட்லி, சட்னிதான் தனி சிறப்பளிக்கும் என்பது உண்மைதான்.
    பலகாரங்கள், மருந்து , இட்லி, தீபாவளி செய்திகள், படங்கள் எல்லாம் மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

  19. இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
    ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
    இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
    அன்பாம் அமுதை அளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete