Friday, November 29, 2013

பிருந்தாவன துளசி பூஜை


 பிருந்தா, பிருந்தாவனீ, விஸ்வபூஜிதா, விஸ்வபாவனி, 
புஷ்பஸாரா, நந்தினீ, துளசீ, கிருஷ்ண ஜீவனி,
ஏதந் நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்ரம் நாமார்த்த ஸம்யுதம் 
ய: படேத் தாஞ்ச ஸம்பூஜ்ய ஸோஸ்வமேத பலம் லபேத்..


மஹா விஷ்ணு புகழ்ந்து போற்றிய இந்த துதியின் எட்டு நாமங்களும் 
காரண பெயர்கள் ஆகையால் இதை மனனம் செய்வோர் அசுவமேத யாகம் செய்த பலனை அடைவார்கள்.


துளசி ஒரிடத்தில் மிக நெருங்கி அடர்ந்து இருப்பதால் அவளை பிருந்தை என்று போற்றுகிறோம்..!

பிருந்தாவனம் தோறும் இருந்து பிருந்தாவனீ என்ற பெயர் பெற்றாள். 

அகில ப்ரபஞ்சத்தினால் பூஜிக்கப்பட்டு விஸ்வபூஜிதை என்ற பெயர் பெற்றாள். 

எண்ணற்ற ப்ரபஞ்சமெல்லாம் பரிசுத்தமாக்கி விஸ்வபாவனீ என்ற பெயர் பெற்றாள்.

மலர்களின் மீது ப்ரீதி உள்ள தேவர்களும் அவைகளால் ஆன்ந்தமடையாமல் துளசியாலேயே ஆனந்த மடைந்ததால் புஷ்ப ஸாரா என்ற பெயர் பெற்றாள். 

அடைந்ததுமே ஆனந்தத்தை அளிக்கும் தன்மையினால் நந்தினீ என்ற பெயர். பெற்ற துளசி. க்ருஷ்ணனால் உருக்கொன்டு வாழ்வதால் க்ருஷ்ண ஜீவனி என்ற பெயர். பெற்றவள்.

துளசியின் தோத்திரம் புனிதம் மிக்கது.

மஹா விஷ்ணுவின் மனைவி பகவானின் அம்சம் நிறைந்த துளசி செடி.
பிருந்தையாகிய துளசி மஹா விஷ்ணுவை மணந்து கொன்ட நாள் . ஐப்பசி மாத சுக்ல பக்ஷ த்வாதசி திதி. ப்ருந்தாவன த்வாதசி என்று போற்றப்படுகிறது..!.
துளசி செடியை ஒரு மேடையில் அல்லது பூந்தொட்டியில் வைத்து ப்ருந்தாவனம் என்று வணங்குவோம்..!

துளசி செடியில் துளசி தேவியையும் பக்கத்தில் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி மர குச்சியையோ வைத்து அதில் மஹா விஷ்ணுவை ஆவாஹனம் செய்து துளசி அமைந்துள்ள இடத்திற்கு ( பிருந்தாவனத்திற்கு) அருகில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து பூஜை செய்வது விஷேசம்..!

 பக்தியுடன் துளஸியை பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, ஒற்றுமை, ,குடும்பத்தில் அமைதி, லக்ஷிமி கடக்ஷம், வம்சம் தழைக்கும்.உடல் வலிமை, மனோ தைர்யம் உண்டாகும்.நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கிட்டும்.,

பூஜை செய்யும் துளசி செடியிலிருந்து துளசி பறிக்க கூடாது. 
வேறு துளசி செடியிலிருந்து தான் துளசி பறிக்க வேண்டும்..


ஸெளமங்கல்யம் தனைஸ்வர்யம் புத்ர பெளத்ராதி ஸம்பதம்
புஷ்பாஞ்சலி ப்ரதானேன தேஹி மே பக்தவத்ஸலே.

இல்லங்களில் துளசியை வளர்த்துப் பூஜிப்பதால் அந்த இல்லமே செழிப்படையும் என்பது ஐதீகம். 

துளசியின் மஞ்சரியை ஸ்ரீகிருஷ்ணருக்குச் சமர்ப்பிப்பவர் எல்லா 
விதப் பூக்களையும் சமர்ப்பித்த பலனை அடைவார்கள்


துளசி இலை, ஹரியின் பூஜையில் சேர்க்கப்படாவிட்டால் அந்தப் பூஜையின் பலன் கிடைப்பதில்லை. 

 நிவேதனத்தின் போது துளசியின் ஸ்பரிசம் இருந்தால் மட்டுமே அந்த நிவேதனத்தை இறைவன் ஏற்கிறார். 

ஆகவே, துளசி தீர்த்தத்தால் மட்டுமே நிவேதனம் செய்ய வேண்டும்.

துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

ஸ்ரீ கிருஷ்ணரை துளசியால் அர்ச்சிப்பவர், தம் முன்னோர்களையும் பிறவித்தளையில் இருந்து விடுவிக்கிறார். 

துளசி நிறைந்த காட்டுக்குள் பிரவேசிப்பவரது பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியாகிறது. 

எந்த இல்லத்தில் துளசி இருக்கிறாளோ அந்த இல்லத்தை துர்சக்திகள் அண்டாது.

அதனால் தான் வீட்டு முற்றத்தில் துளசி வளர்க்கும் மரபு உண்டாகியது. இல்லத்தில் வசிப்பவர்களுக்கு யம பயம் கிடையாது. துளசியை வளர்த்து, தரிசித்து, பூஜிப்பதால் மனம், வாக்கு, உடல் ஆகிய மூன்றாலும் செய்த பாவங்கள் தொலையும்.


துளசியைப் பூஜிப்பது, கங்கா ஸ்நானத்திற்குச் சமமான பலனைக் கொடுக்கும்.

துளசி மணிமாலை அணிவது உடலை நோய்கள் அண்டாது காக்கும். 

துளசி மணி மாலையால் செய்யப்படும் ஜபம் பன்மடங்கு பலனைக் கொடுக்கும்.

மூதாதையரின் திதி காரியங்களில் துளசி பயன்படுத்துவதாலும், 
துளசிச் செடிகளின் நிழல் படும் இடங்களில் செய்வதாலும் பரிபூரணப் பலன் கிடைக்கிறது. 
தானங்கள் செய்யும் போது முழுமையான பலன், தானம் செய்யும் பொருளுடன் துளசித் தளம் சேர்த்துக் கொடுப்பதாலேயே கிடைக்கிறது.

சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பவர்களுக்கு முக்காலமும் உணரும் மகா ஞானியாகும் பாக்கியம் கிடைக்கும். 
கார்த்திகை மாதம், சுக்ல பட்ச துவாதசி திதியை `பிருந்தாவன துவாதசி’ என கர்நாடக, மராட்டிய மாநிலங்களில் கொண்டாடுகிறார்கள். 

அன்றுதான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும், துளசிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம்.

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.
 நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம். 

எல்லா நலன்களும் தரும் ஸ்ரீ துளசியைப் பூஜித்து,

துளசியை தினமும் மூன்று வேளை வலம் வர வேண்டும். வலம் வரும் போது

"பிரசீத துளசி தேவி பிரசீத ஹரி வல்லயே
க்ஷீ ரோதமத நோத்புதே துளசி த்வாம் நமாம்யகம்''

என்ற மந்திரம் சொல்ல வேண்டும்.

துளசி மாடம்  அமைந்தகரை சென்னை तुलसी पॉट अमैन्दकरै चेन्नई  - తుల్సి మొక్క అమైన్ధకరై చెన్నైഅമൈന്ധകരൈ ചെന്നൈ অময়ন্ধকরই চেন্নই ਅਮੈਨ੍ਧਕਰੈ ਚੇਨ੍ਨੈ امیندھھکرائی چھیننے Amaindhakarai Chennai

27 comments:

 1. துளசியின் பெருமை அறிந்தேன். நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. வணக்கம
  அம்மா
  அருமையான விளக்கம் .. அழகிய படங்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அத்தனையும் அற்புதம் அருமையான படங்களுடன்

  ReplyDelete
 4. துளசி மகிமைகளையும் , துளசி வழைபாட்டைப்பற்றியும் அழகாய் விரிவாக சொன்னீர்கள். துளசி, படங்கள், மற்றும் எல்லா படங்களும் தெய்வீகம். கங்கைக்கு நிகரானது துளசி தீர்த்தம்.
  வெள்ளிக்கிழமை துளசி மாதா பூஜை செய்து மகிழ்வோம்.உடற்பிணி, உள்ளபிணி, ஆகிய பிணிகளைப் போக்கி பேரின்ப வாழ்வளிப்பாள்.
  வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 5. பெயர்க் காரண விளக்கம் மிகவும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. காலையில் துளசி தரிசனத்திற்க்கு மிக்க நன்றிம்மா....

  ReplyDelete
 7. துளசியின் அருமை பெருமைகளை அறிந்து உவகை கொண்டேன்!

  மிகச் சிறப்பு சகோதரி!

  நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 8. அருமையான பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றி!! பிருந்தாவன துளசி பூஜை பற்றிய என் வலைப்பூவின் ஒரு பதிவு தங்களது மேலான பார்வைக்கு அம்மா!!!..

  http://aalosanai.blogspot.in/2012/11/brindavana-tulasi-viratham25112012-part.html

  ReplyDelete
  Replies
  1. வ்ணக்கம் ..வாழ்க வளமுடன் .
   அருமையான கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   தங்களின் சிற்ப்பான தொகுப்புகளுக்கு பாராட்டுக்கள்..!

   Delete
 9. இந்த பதிவினில், பூஜை செய்யும் துளசிச் செடியிலிருந்து பூஜைக்கு துளசி இலை பறிக்கக் கூடாது என்ற கருத்து முக்கியமான ஒன்று. மாயக் கண்ணன் படங்கள் எப்போதும் போல் அலங்கரிக்கின்றன.

  ReplyDelete
 10. துளஸியின் எட்டு திவ்ய நாமங்களும், அவற்றின் பெயர் காரணங்களும், அவற்றைச்சொல்வதால் ஏற்படும் பலன்களும் மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளன.

  >>>>>

  ReplyDelete
 11. படங்கள் அத்தனையும் அருமையோ அருமை. அதிலும் துளஸி தீர்த்தத்துடன் வெள்ளிப்பஞ்சபாத்திர உத்ரணி, சங்கு, துளஸி மாலை, கிருஷ்ண விக்ரஹம் என காட்டியுள்ள படம் மிக அழகு.

  >>>>>

  ReplyDelete

 12. கோலமிட்டு துளஸி மாடத்துக்கு புடவைகட்டி பூஜிக்கும் படமும் மனதுக்கு நிறைவாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 13. துளஸி மஹாத்மியத்தை ஆங்காங்கே வெகு அழகாகச் சொல்லியுள்ளது பாராட்டுக்குரியவை.

  >>>>>

  ReplyDelete
 14. கார்த்திகை மாத பிருந்தாவன துவாதஸியைப்பற்றிய விளக்கங்கள் மிகவும் பயனுள்ளவை.

  >>>>>

  ReplyDelete
 15. துளஸி மாடத்தை பிரதக்ஷணம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் கொடுத்துள்ளது .... சூப்பர்.

  >>>>>

  ReplyDelete
 16. நெல்லி மரமே மஹாவிஷ்ணு, துளஸியே அம்பாள். இவைகளைச் சேர்த்து, பயபக்தியுடன் வழிபடும் வீடுகளில் எப்போதுமே சுபிக்க்ஷம் தான். ;)

  >>>>>

  ReplyDelete
 17. அன்றாட ஸ்வாமி நைவேத்யம், தானங்கள் அளித்தல், முன்னோர்களுக்கான திதி காரியங்கள் என எல்லாவற்றிலும் துளஸி தளம் சேர்த்தே செய்வதால் மட்டுமே முழுப்பலனும் கிட்டும் என்பதே மிகச்சரியானது.

  >>>>>

  ReplyDelete
 18. ஆச்சர்யமான தகவல்களுடன் அழகான பதிவினை அருமையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளது வியக்க வைக்கிறது.

  >>>>>

  ReplyDelete
 19. துளஸி ராசியில்லாத ஒரு அம்மாளுக்கு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொன்ன சிலவிஷயங்களால் ... துளஸியின் மஹிமை புரியவந்து, அதனால் அதற்குப்பிறகு அவருக்கு ஏற்பட்ட பலன்கள் பற்றி, என் தொடரின் பகுதி-93ல் வெளியாக உள்ளது.


  oo oo oo oo oo

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..
   அனைத்து அருமையான கருத்துரைகளுக்கும் மனம் நிரைந்த இனிய நன்றிகள்..!

   ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடப்படும் ஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்‘ - கருந்துளசிச் செடி பூஜை செய்’ என்று அனுக்ரஹம் ஆன அமுத மழையை பதிவாக்குவதற்கு இனிய நன்றிகள்..!

   Delete
  2. இராஜராஜேஸ்வரி has left a new comment on the post "பிருந்தாவன துளசி பூஜை":

   //வணக்கம் ..வாழ்க வளமுடன் .. அனைத்து அருமையான கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..!

   ஸ்ரீவைஷ்ணவான்னு கூப்பிடப்படும் ஸ்ரீமதி ஜெயலெஷ்மி அம்மாளின் அனுபவங்கள்‘ - கருந்துளசிச் செடி பூஜை செய்’ என்று அனுக்ரஹம் ஆன அமுத மழையை பதிவாக்குவதற்கு இனிய நன்றிகள்..! //

   ஆஹா, தங்களிடம் நான் [Total Surrender] சரணாகதி அடைவதைத்தவிர வேறு வழியே இல்லை.

   எப்படி ... எப்படி ... எப்படித்தான் ... இப்படிப் பளிச்சென்று அசரீரி போலச் சொல்கிறீர்களோ !!!!!!!

   பல்வேறு வழிகளில், பலவற்றை தாங்கள் வாசிப்பதும், வாசித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்வதும், எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது.

   அம்பாள் அனுக்ரஹம் உங்களுக்கு எக்கச்சக்கமாகவே இருக்கிறது.

   தங்களின் அதிபுத்திசாலித்தனத்தை நினைக்க நினைக்க என் மனதுக்கு மேலும் மேலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

   YOU ARE REALLY SO SWEET & GREAT !

   மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். நீடூழி வாழ்க !

   அன்புடன் VGK

   Delete
 20. துளசியின் மகிமைகளை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி...

  ReplyDelete
 21. துளசியின் பெருமைகளையும் பூஜை முறைகளையும் சிறப்பாக விளக்கியமைக்கு நன்றி! அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. துளசியின் மருத்துவ பயன்கள் பற்றி கேள்வி இப்போதே ஆன்மீகம் பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றிங்க.

   Delete
 22. துளசியின் நாம்ன்களிப் படித்ததில் அஸ்வமேத யாகத்தின் பலன் கிடைக்க வைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 23. துளசியைப் பற்றிய அருமையான பகிர்வு. படங்களும் அருமை....

  ReplyDelete