Friday, November 22, 2013

ஐஸ்வர்யம் வர்ஷிக்கும் சங்காபிஷேகம்


பாஞ்ச ஜன்யாய வித்மஹே சங்க ராஜாய தீமஹி 
தந்நோ சங்கப் பரசோதயாத் 


பிபிசங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் 
சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் 
ப்ரம்மஹத்யாயுதம் தாகத்''

என்று தர்ம சாஸ்திரம். விளக்குகிறது.

சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார். 

லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கும்  சங்கு  நுண் கிருமிகளை நீக்கும் தன்மை கொண்டதனை அறிந்த நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சங்கை பாதி பூமிக்கு அடியிலும் மீகுதி மேலே தெரியும் படியும் பதித்திருப்பார்கள். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது. 
இதனால் தான்  சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். 

பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். 

வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் நீங்கும்  

ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் புகட்டுவதற்கும் பயன்படுத்தினர். 

வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. உடலில் , கண்களில் ஏற்படும் கட்டிகளை குணப்படுத்தவும் சங்கு உரசி பூசுவார்கள்..!
சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். 
மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ
அங்கு லட்சுமி வசிக்கிறாள். 
வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஷ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. 
ஆலயங்களில் பிரதான சங்காக பூஜைக்கு உகந்ததாக
வலம்புரிசங்கு பெருமை பெற்றது. 

சங்கின் அமைப்பு, ஓம் என்னும் பிரணவத்தை உணர்த்துகிறது. 

வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். 
பாற்கடல் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு,  தன் கரத்தில் வைத்து சங்கு சக்ரதாரி ஆனார். பெருமாள் திருக்கரத்தில் விளங்கும் பாஞ்சசன்னியம் கோடியில் ஒன்று. பெருமாளுடன் எப்போது நீங்காது இருப்பது சங்கு எனவேதான் படைப்போர்புக்கு முழங்கும் பாஞ்சசன்னியமும் பல்லாண்டு 
என்று, பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்,
சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. 

வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்வதால்
பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும். 
ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். 
எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. 

அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். 

இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு 
அபிஷேகம் செய்யப்படுவது என்பர். 

கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. 
சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானது. சிறப்பு மிக்க சங்கை வழிபடுவதால்  
ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறலாம்.

சிவன் கோவில்களில் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் போல, கார்த்திகை, சோமவார சங்காபிஷேகம் மிகவும் விசேஷமானது.

[DSC02439.JPG]
வலம்புரி சங்குகளை கொண்டு சிவலிங்க வடிவில் வரிசையாக அடுக்கி . ஒவ்வொரு சங்கிலும் ஏலக்காய், பச்சை கற்பூரம் கலந்து காசி தீர்த்தம் ஊற்றப்பட்ட, ஒவ்வொரு சங்கிலும்  பூ வைத்து அலங்கரிக்கப்டுகிறது..

வெள்ளியால் ஆன பெரிய சங்கு வைக்கப்பட்டு நத்தி வாகனத்தின் மேல் தீர்த்தகலசம் வைத்து யாக குண்டம் வளர்த்து மகா கணபதி ஹோமம் செய்த பின்னர் ஒவ்வொரு சங்காக எடுத்துச் அதில் இருந்த தீர்த்தத்தை சுவாமி ஈஸ்வரன் மீது ஊற்றி மகா சங்கு அபிஷேகம் செய்யப்படும் கண்கொள்ளாக்காட்சி சகல சௌபாக்கியங்களையும் அளிக்கவல்லது ..!


கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்தி திருவருள் பொழியும் திருக்கடையூர் திருத்தலத்தில் கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். 

அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தரிசிக்கத் தெரியும். 

முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது. 
[Anmegamalar-8D.jpg]

16 comments:

 1. சங்காபிஷேகத்தின் மகத்துவம் அறிந்தேன். நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. illustrative and educative.
  subbu thatha.

  ReplyDelete
 3. மிகவும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. மேலிருந்து கீழ் ஆறாவது கோலம் அழகோ அழகு.

  அதுவும், அதிலுள்ள ... விரிந்து மலர்ந்துள்ள ... ஆறு தாமரைகளும் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளன.

  >>>>>

  ReplyDelete
 5. சங்கைப்பற்றிய இவ்வளவு தகவல்களையும் சங்கெடுத்து முழங்கியதுபோல வழங்கியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

  >>>>>

  ReplyDelete
 6. ஒரு தாய், தன் சேய்க்கு, சங்கினால் பால் ஊட்டுவது போல, ஒவ்வொரு தகவல்களும், மென்மையாகவும், மேன்மையாகவும், தாய்மை சேர்த்து தரத்துடன் தரப்பட்டுள்ளன.

  >>>>>

  ReplyDelete
 7. படங்கள் அத்தனையும் அருமை. ஒருசிலவற்றை மீண்டும் மீண்டும் தரிஸித்ததில் திகட்டாத மகிழ்ச்சியே.

  >>>>>

  ReplyDelete
 8. சில குறிப்பிட்ட பதிவர்கள் என்ற ஸத் ச-ங்-க த்திலே மட்டும் சேர்ந்திருப்பதால் சங்கைப்பற்றிய பல விஷயங்கள் அறிய முடிகிறது.

  வலம்புரிச்சங்காக மனதினில் புனிதமாக நினைத்து மகிழவும் முடிகிறது.

  ஸமுத்திரத்தில் உள்ள எவ்வளவோ கச்சடாக்களுக்கு நடுவே இது போன்ற வலம்புரிச் சங்குகளும் ஆங்காங்கே கொஞ்சம் இருப்பது ஆறுதலாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 9. ஐஸ்வர்யம் வர்ஷிக்கும் சங்கே நீ வாழ்க !

  -oO [ 6 ] Oo-

  ReplyDelete
 10. Thanks a lot madam very informative and interesting information about sangu abhishegam....

  ReplyDelete
 11. ஐஸ்வர்யதேவி, சங்காபிஷேகம் அற்புத விளக்கம். அழகிய படங்கள்.

  ReplyDelete
 12. வணக்கம்
  அம்மா
  அருமையான தகவல்.. பதிவு அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 13. சங்காபிஷேகம் பற்றிய பதிவு அருமை. கோலம் மிக மிக அழகு .
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 14. சங்காபிஷேகம் பற்றி படங்களுடன் பகிர்வு அருமை அம்மா....

  ReplyDelete
 15. சங்கு பற்றிய உங்கள்
  பங்கு விளக்கம் நன்று.
  தங்கள் படங்களும் விசேடம்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. தில்லியில் ஒரு ஆலயத்தில் சங்காபிஷேகம் பார்த்திருக்கிறேன்.... விவரங்கள் அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete