Friday, November 8, 2013

வெற்றி வேல் ..! வீர வேல்..!



அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
ப்ரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம் பதுவோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டும் கொண்டே 
ஒருதிரு முருகன் அங்கு உதித்தனன் உலகம் உய்ய.'

கந்தசஷ்டி விரதம் கடைப்பிடித்த  முசுகுந்த ம்மை இன்பம், மறுமை இன்பம் இரண்டையும் பெற்றான் 

முசுகுந்தன் என்ற சோழ சக்கரவர்த்தி, தேவாசுரப் போர் நடந்தபோது இந்திரனுக்குத் துணை நின்றவன். புறாவுக்கு தன் தசையை கொடுக்கவந்த சிபிச்சக்ரவர்த்தியின் வழித்தோன்றல் ....!
சூரபன்மனை முருகப்பெருமான் அழித்த பிறகு, இந்திரன் தன் மகளான தெய்வானையை முருகப் பெருமானுக்குத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்து, ஏற்பாடுகள் செய்தான். 

போரின்போது தனக்கு உதவிசெய்த முசுகுந்தனுக்கும் இந்திரன் 
திருமண அழைப்பிதழ் அனுப்பியிருந்தான்.
திருமணவிழாவில் கலந்துகொண்ட முசுகுந்தன், வசிஷ்ட முனிவரிடம் கந்த சஷ்டி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து முறைப்படி சஷ்டி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டான். 
முசுகுந்தனது வழிபாட்டில் திருப்தியுற்ற முருகப்பெருமான் முசுகுந்தனுக்குக் காட்சி தந்து, ""வேண்டும் வரம்யாது?'' என்று கேட்டார். வீரபாகுத்தேவர் உள்ளிட்ட நவவீரர்களும் தனக்குத் துணைபுரிய அருளவேண்டுமென முசுகுந்தன் வரம் வேண்டினான்.

முருகப்பெருமான் அவ்வாறே வரமருளினார்.
[m18.jpg]
ஆனால் வீரபாகுத் தேவர் உள்ளிட்டோர் "மானிடர்க்கு உதவி செய்வதில்லை' என்று கூறி மறுத்தனர். அதனை ஏற்காத முருகப்பெருமான் அவர்களை மானிடர்களாகப் பிறக்க சாபமிட்டு முசுகுந்தனுக்கு துணைசெய்ய ஆணையிட்டார்.
[chendur_kp_08.jpg]
 இராவண வதம், ஹிரண்ய வதம் என்பதுபோலல்லாமல், சூரபத்மாதியர் வதத்தை சம்ஹாரம் என்போம்.... ஏனெனில், அவர்களின் ஆணவ மாயை பற்றிய அசுர உடல்களை அழித்து, ஞானமளித்து வாகனமாக்கிக் கொண்டார் முருகன். தாரகாசுரன் ஐயப்பனுக்கு யானை வாகனமானான். சிங்கமுகன் துர்க்கைக்கு சிங்க வாகனமானான். சூரபத்மன் முருகப்பெருமானுக்கு மயில்வாகனமாகவும், சேவற்கொடியாகவும் ஆனான். சூரபத்மனை அழிக்கும் முன்பே, போர்க்களத்தில் அவனுக்கு  தன் விஸ்வரூபத்தைக் காட்டிய முருகப் பெருமான், அதைக் காண ஞானக்கண்ணையும் ஒருகணம் சூரனுக்குக் கொடுத்தார். 
மானிடர்களாகப் பிறந்த நவ வீரர்கள் துணையுடன் முசுகுந்தன் விண்ணுலகும் மண்ணுலகும் புகழ அரசாண்டு, கயிலையில் கணநாதர் நிலையை அடைந்தான்.

அகங்காரத்தின் வடிவமான சூரபன்மன், 
குரோதத்தின் வடிவமான சிங்கமுகன், 
மோகத்தின் வடிவமான தாருகாசுரன் 
ஆகிய மூவரையும் முருகப்பெருமான் அழித்தது மனிதனின் 
அகங்காரம், குரோதம், மோகம் ஆகிய தீய இயல்புகளை ஒழிக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது ..!

சிங்கமுகனும் தாருகாசுரனும் போரில் முன்னதாகவே மாண்டு விட, சூரபன்மன் மட்டும் கடைசிவரை போராடி முருகப் பெருமானால் ஞானம் அருளப் பெற்று அவரால் ஆட்கொள்ளப் பட்டான்.
குரோதம், மோகம் போன்றவற்றை ஒழித்துவிட்டாலும் ஆணவத்தை அடியோடு அழிக்க முடியாது என்பதையே சூரசம்ஹார நிகழ்வு உணர்த்துகிறது.
முருகப்பெருமான் அசுரனை சம்ஹரித்து ஆட்கொண்டது- ஆணவம் அழியும்போது இறையருள் கிட்டுவதோடு வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம் என்பதை உணர்த்துகிறது. 
அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும், பகைவனையும் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற வாழ்க்கை நெறிகளையும் போதிக்கிறது.

[thiruparamkundram04.jpg]

23 comments:

  1. இந்த அளவிற்கு பக்தி இந்தக்
    கலியுகத்தில் யார் செலுத்துவர் ?
    கடினப் பரீக்ஷை. ஆனாலும் முருகர் தம்
    சேனைக்கு சாபமிட்டது சரியெனத் தோன்றவில்லை.
    அவர்கள் வாதம் சரிதானே ? ஏன் தான் இப்படி இக்கட்டான
    வரங்களைக் கேட்கின்றனரோ ? அதற்கு இறைவனும்
    மறுக்காது ஒப்புக் கொள்கின்றனரோ ? என்ன
    திருவிளையாடாலோ ?
    படங்கள் அருமை !

    ReplyDelete
  2. கந்த சஷ்டி நாளின் காலைப் பொழுதில் இனியதோர் பதிவு!.. அழகிய படங்களுடன் அருமை!..

    ReplyDelete
  3. கந்த சஷ்டி நாளின் காலைப் பொழுதில் இனியதோர் பதிவு!.. அழகிய படங்களுடன் அருமை!..

    ReplyDelete
  4. அருமையான தகவல்களுடனும் அழகழகான படங்களுடனும் கூடிய பதிவு!.. ஆணவம் துறந்தால் ஆண்டவன் அருள் கிடைக்கும் என்ற‌ உன்னதமான உண்மையைப் பறைசாற்றியுள்ளீர்கள்... அற்புதமான பகிர்வை அளித்தமைக்கு வணங்குகிறேன் அம்மா!!.. மிக்க நன்றி!!

    ReplyDelete
  5. கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வெற்றி வேல் ! .... வீர வேல் !

    இன்றைக்கு வெற்றிகரமான பதிவாக அமைந்துள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. சிபிச்சக்கரவர்த்தி போன்ற கதை + அருமையான அபூர்வமான படங்கள் பதிவுக்கு சிறப்புச் சேர்ப்பதாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  8. வசிஷ்ட முனிவர் சொன்னது - சஷ்டி விரதம் பற்றிய கதை - நல்லதொரு தகவல்.

    வதம் வேறு சம்ஹாரம் வேறு என்பதைப்பற்றிச் சொல்லியுள்ள தகவல்களும் சிறப்பு தான்.

    >>>>>

    ReplyDelete
  9. யானை, சிங்கம், மயில் போன்ற வாஹனங்கள் + சேவல் கொடி பற்றிய கதைகள் சுவாரஸ்யமாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  10. ஆணவம் அழிந்தால் இறையருள் கிட்டி வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடையலாம்.

    அனைவரிடமும் அன்பு பாராட்ட வேண்டும்.

    வெறுத்து ஒதுக்கத்தான் நினைக்கும் பகைவரையும் கூட திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும்.

    மிக நல்ல வழிகாட்டுதல்கள்.


    அதனால் தான் மரியாதை தராத ஜன்மங்களையும் மதித்துப் போய் தொடர்ந்து அவ்வப்போது ஆதரித்து வருகிறீர்களோ?

    தங்களின் நல்ல கொள்கை [எனக்கு மிகுந்த எரிச்சலூட்டுவதாக இருப்பினும்] வாழ்க !

    -oOo-

    ReplyDelete
  11. சூரபத்மன் வதம் பற்றி அருமையான விளக்கம்! அழகிய படங்களுடன் முருக தரிசனம்! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. இன்று சூரசம்ஹாரம் நாள் முருகனை உங்கள் வீட்டில் நிட்சயம் வணங்க கிடைக்கும் என வந்தேன் .

    தர்சித்து மகிழ்ந்தேன். விளக்கங்களும் அறிந்தேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. முசுகுந்த சக்ரவர்த்தி கதை புதியது! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  14. கந்தசஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் கண்டு மகிழ்ந்தேன்.
    படங்கள், செய்திகள் எல்லாம் மிக அருமை.
    அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழ்வோம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அருமையான பதிவு சகோதரி. படங்களே அழகாக கதை சொல்லிச் செல்கிறது. நல்ல நாளில் நல்லதொரு பகிர்வு. தங்கள் ஆன்மீகப் பணிக்கு எனது நன்றிகள் அம்மா.

    ReplyDelete
  16. வணக்கம்
    அம்மா

    வெற்றிவேல் வீர வேல் எம்மை காக்கட்டும் பதிவு அருமை படங்களும் அருமை வாழ்த்துக்கள்
    சில நாட்கள் உங்கள் பக்கம் தொடர முடியாமல் போனது ஏன் என்றால் வெளியிடம் போனதால்.....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. படங்கள் கதை சொன்னது.
    அருமை.
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. How to take the above all images, please anyone say....

    ReplyDelete
  19. how to take the above all images...

    please anyone say...

    ReplyDelete
  20. how to take the above all images...
    please anyone say...

    ReplyDelete
  21. how to take the above all images, plz anyone say..

    ReplyDelete
  22. சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்..... நன்றி.

    ReplyDelete