Wednesday, October 31, 2012

ஸ்ரீ மஹா கணபதி ...






ஓம் விநாயகாய வித்மஹே
விக்நராஜாய தீமஹி 
தந்நோ கணநாயக ப்ரசோதயாத்.





பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்  கருவறைக்குப் பின்புறம் மேற்கே பார்த்து அமர்ந்திருக்கும் படிஞ்ஞாறு பகவதி கோயில் உள்ளது. படிஞ்ஞாயிறு என்றால் மேற்கு என்று பொருள்.

 கோயிலின் மூலவராக சிவபெருமான் இருப்பினும் இங்குள்ள ஸ்ரீ மகாகணபதி கோயில்தான் புகழ்பெற்று விளங்குகிறது.

கருவறையை ஒட்டியபடி தெற்கு நோக்கி   பலாமரத்திலான திருமேனி கொண்ட கணபதியின் கையில் அப்பம் ஒன்று வைத்து அருள் பொழிகிறார்...

முதனமைக் கடவுளாக வணங்கப்படும் கொழுக்கட்டைப் பிரியரான கணபதி இங்கு நெய்யப்பப் பிரியராக இருக்கிறார்.
கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான ‘உண்ணியப்பம்’ மிக வும் பிரசித்தி பெற்றதாகும். 
Unniyappam

கேரளாவின் பிர சித்தி பெற்ற சிற்பி பெருந்தச்சன் கொட்டாரக்கரா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது வழியில் ஒரு பலா மரத்தை பார்த்தார். பார்த்த மாத்திரத்தி லேயே அந்த மரம் அவருக்கு பிடித்துப் போன அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து கணபதி விக்கிரகத்தை செய்தார். 

அந்த விக்கிரகத்தை அங்குள்ள சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அனுமதி கேட்டு சிவன் கோயிலின் அக்னி மூலையில் கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. 

நாளடைவில்  சிவன் கோயில் கணபதியால் புகழ் பெறத் தொடங்கி சிவன் கோயில் என்ற பெயர் மாறி கொட்டாரக்கரா கணபதி கோயில் என மாறிவிட் டது.
Kottarakkara - The Cradle of Kathakali. 

கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் என்னும் ஊரிலிருந்து வடகிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கொட்டாரக்காரா.






Life-size statue of Gajamuthachan Kottarakara Krishnankutty
Life-size statue of Gajamuthachan Kottarakara Krishnankutty

Kottarakkara Ganapathi temple pond








Tuesday, October 30, 2012

தங்கத்தால் ஜொலிக்கும் ஸ்ரீரங்கநாதர்








Raw00256.JPGஸ்ரீ ரங்கநாதர் ஸ்துதி.

ஸப்தப்ராகார மத்யே ஸரஸி ஜ முகுலோத் பாஸமாநே விமாநே
காவேரீ மத்யதேசே பணிபதிஸயநே சேஷபர்யங்க பாகே 
நித்ராமுத்ராபிராமம் கடிநிச்டஸிர: பார்கவ விந்யஸ்த ஹஸ்தம் 

பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கநாதம்பஜேஹம்.

ஐப்பசி மாதத்தில் குரு பகவான் துலா ராசியில் இருப்பதால், பிரம்ம கங்கை- காவேரியில் கலக்கிறது என்பது ஐதீகம்.
16.jpg
ஐப்பசி மாதத்தில் காவேரியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். 
எனவே பிரம்ம முகூர்த்தத்தில்  காவேரியில் நீராடினால் மகாவிஷ்ணுவின் அருள் கிட்டும். 
சூரிய உதயத்திற்கு சுமார் ஒன் றரை மணி நேரத்திற்குமுன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும் முனிவர்களும் காவேரியில் நீராடுவதாக துலாக் காவேரி புராணம் கூறுகிறது.
02.JPG
ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கு, வழக்கமாக ஸ்ரீரங்கம் கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள கொள்ளிடத்தி லிருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுத்துச் செல்வார்கள்.
 ஐப்பசி மாதத்தில் மட்டும், ஸ்ரீரங்கம் கோவிலின்  தென்பகுதி யிலுள்ள காவேரி அம்மா மண்டபப் படித்துறையிலிருந்து தங்கக் குடங்களில் திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் சேகரித்து, யானைமீது வைத்து வேதங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.
DSCF2006DSCF0047.JPGd2.JPG
DSCF0320.JPG
ஸ்ரீரங்கம் கோவிலில் வருடம் முழுவதும் பயன் படுத்திவரும் வெள்ளியிலான பூஜைப் பொருட்களை ஐப்பசி மாதத்தில் பயன்படுத்த மாட்டார்கள். 
அதற்கு மாற்றாக தங்கக் குடம், தங்கக் குடை, தங்கச் சாமரம், தங்கத் தடி என அனைத்தும் தங்கமயமானதாக இருக்கும். 
DSCF0184.JPG
பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் பாதங்களை தங்கக் கவசத்தால் அலங்கரித்திருப்பார்கள். 
 பல நூறு ஆண்டுகளுக்குமுன் நேபாள மன்னர் கோவிலுக்கு அளித்த சாளக்கிராம மாலையை பெருமாளுக்கு அணிவித்திருப்பார்கள். 
முழுக்க முழுக்க தங்கத்தால் ஜொலிக்கும் பெருமாளை துலா மாதமான ஐப்பசியில் மட்டுமே தரிசிக்க முடியுமென்பது தனிச்சிறப்பாகும்.
ஸ்ரீரங்கம் ஆலயத்தின் தென்பகுதியில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் நீராடி பெருமாளை தரிசித்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைப்பதாக  தர்மசாஸ்திரம்  குறிப்பிடுகிறது....

Thayar Sanathi

 The golden Vimanam of Srirangam Temple
srirangam temple rare picture

Monday, October 29, 2012

அன்னாபிஷேக அருளாட்சி



பெருவுடையார், அன்னாபிஷேகம், தஞ்சாவூர்.

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே 

ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாக காசியில் அருளாட்சி நடத்துகிறாள் அன்னை ...



பெருவுடையார், அன்னாபிஷேகம், தஞ்சாவூர்.

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா  அன்னாபிஷேகம்.
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக சாம வேதத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது,

உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடியாக உலக வாழ்கைக்கு அச்சாணியாக  விளங்கும் அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ  என்னும் மும்மூர்த்திகளின் சொரூபம்.

ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது..

ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. 
பால் நினைந்தூட்டும் அன்னைபோல் அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர்.

அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு ...அன்னாபிஷேகமன்று சிவதரிசனம் செய்வது கோடி சிவ தரிசனம் செய்வதற்கு சமம். 
ஜீவ காருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் 
வாடிய அருளாளர் வள்ளலார்.சக மனிதனின் பசியைப் போக்குபவன் 
கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். உணவிட்டுக் 
காப்பதே  ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் 
வருத்தாது.  வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். 
மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். என்று 
குறிப்பிட்டுள்ளார்.

உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தைஅனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ...

அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பிக்கப்படும் சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணி அளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. 

இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி,  பரவசமளிக்கிறது...

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். 

லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம்.

எனவே பாண லிங்கத்தின் மேல்பட்ட அன்னம் பிரசாதத்தில் தவிர்க்கப்பட்டு அவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் விநியோகம் செய்யப்படுகின்றது. 

 லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். 

அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக ...மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகின்றது. .

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா அன்று சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது. 

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள "செந்தலை' கிராமத்திலுள்ள மீனாட்சியம்மை உடனுறை சுந்தரேஸ்வரர் சிவாலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும் நாளன்று இரவு முழு நிலவின் ஒளிக்கற்றைகள் கருவறையிலுள்ள லிங்கத் திருமேனியை திருமுழுக் காட்டுவது தனிச்சிறப்பாகும்.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. 

அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. 
எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. 
இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. 
அன்னாபிஷேக தினத்தில் சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கிறது...


அன்னாபிஷேகம் ராமநாதஸ்வாமி, காஞ்சிபுரம்,



ANNABHISHEKAM, KAILASANADHAR THARAMANGALAM



THIRUVANAIKOIL KUBERA LINGAM ANNABHISHEKAM 

A feast for the eyes: The Pradoshamurthi of Sri Rathnagiriswarar Temple
Besant Nagar, decorated with fruits and vegetables on the occasion of 
Annabhishekam.
A feast for the eyes: The Pradoshamurthi of Sri Rathnagiriswarar Temple, Besant Nagar, decorated with fruits and vegetables on the occasion of Annabhishekam. Report on Page 2.