ஸர்வ ஸ்வரூபே ஸர்வேஸே ஸர்வ-சக்தி-ஸமன்விதே!
பயேப்யஸ் -த்ராஹி-நோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!
- அசுரனை அழிக்க முப்பெரும் தேவிகளும் இணைந்து தவம் செய்ததே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
- தமிழகத்தில் நவராத்தரி விழா கொலுவாக கொண்டாடப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற மைசூரில், நவராத்திரி விழாவான தசரா விழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கோலாகலமாக பத்து நாட்களுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
- மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியைக் கொண்டாடும் நவராத்திரித் திருவிழா .சாமுண்டி மலையில் உள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்...
நவராத்திரி 9வது நாளை தொடர்ந்து 10வது நாளில் இந்த விழா, முழு விடுமுறையுடன் கொண்டாட்டம் களை கட்டுகிறது.
விழாவின் 10-ம் நாளன்று அன்னை சாமுண்டீஸ்வரி அலங்கரிக்கப்பட்ட யானையில் தங்க பல்லக்கில் தகதகவென்று ஜொலிக்கும் சர்வ அலங்காரத்தில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
- அம்மன் பவனி வரும் யானையை பின்தொடர்ந்து யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவையும் வரும்
மைசூர் தசரா பண்டிகையில் யானைகளுக்கு முக்கியப்பங்கு உண்டு.
மொத்தம் 12 யானைகள் கலந்து கொள்வதற்காக யானைகள்
நாகாஹொளே தேசியப் பூங்காவிலிருந்து அழைத்து
வரப்படுகின்றன.
யானைப் பேரணிக்கு தலைமை
தாங்கும் பலராமாவுக்கு தனிச் சிறப்புண்டு.
தொடர்ந்து
பல வருடமாக அது தங்க அம்பாரியைச் சுமக்கிறது
துரோணா என்ற யானை இதுவரை 14 தடவை தங்க அம்பாரியைச்
சுமந்து சாதனை படைத்துள்ளது.
பலராமாவுடன் அர்ஜுனா, பரதா, கஜேந்திரா போன்ற யானைகளும்
வரும்
அரண்மனை மின்னொளியில் ஜொலிக்கும் அழகையும், மைசூர் நகரமே மின்னொளியில் ஜொலி ஜொலிக்கும் காட்சியையும் காண
இந்தியா வரும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் அன்றைய தினம் தவறாமல் மைசூருக்கு வந்து விடுகின்றனர் ...
முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அசத்தலான ஆர்க்கிடெக்ச்சர்!
BALARAMA ELEPHANT CARRYING THE GOLDEN HOWDAH
- தசராவுக்காக காட்டிலிருந்து வரும் இந்த யானைகளுக்குத் தரப்படும் வரவேற்பே தனி அழகு.
- மலர்கள் தூவப்பட்டு ஆட்டம் பாட்டத்துடன் யானைகள் வரவேற்கப்படுவதைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர்.
- யானைகள் வந்துவிட்டாலே தசரா களை கட்டிவிடும்.
- வண்ண, வண்ண ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பலராமா யானை கம்பீரமாக நடந்து செல்ல, அதன் இருபக்கமும் இரு யானைகள் நடந்து வர ஊர்வலம் அரண்மனையில் இருந்து புறப்படும்.
DASARA ELEPHANT
மைசூர் தசரா விழாவின் விஜயதசமியன்று நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் யானைகள், குதிரைகள் கலந்து கொள்ளும். ஊர்வலம் தொடங்கும் முன்பு 21 தடவை பீரங்கிகளில் இருந்து குண்டுகள் வெடிக்கப்படும். பட்டாசுகள், வாணவேடிக்கையும் நடைபெறும்.
ஜம்பு சவாரி ஊர்வலம் முடிந்த பிறகு மண்டபத்தில் உள்ள மைதானத்தில் தீப விளையாட்டு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும் வெடிகுண்டுகள் மற்றும் வாண வெடிகள் வெடிக்கப்படும் சந்தர்ப்பத்தில் தசரா ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் யானைகள், குதிரைகள் மிரண்டு ஓடாமல் இருப்பதற்காக அரண்மனை வளாகத்தில வெடிகுண்டு
சத்தத்தை எழுப்பி பயத்தை போக்கும்
வகையில் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே விழாவில் கலந்துகொள்ள
வகையில் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகே விழாவில் கலந்துகொள்ள
அனுமதிக்கப்படுகின்றன ,,,!
மூன்று தேவிகளையும் ரசித்தேன்.
ReplyDeleteஅருமையான படங்கள் மற்றும் தகவல்கள்.
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை...
ReplyDeleteதகவல்கள் சில அறியாதவை... நன்றி அம்மா...
விழாக்கால வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு... படங்கள் அதைவிட அருமை...
ReplyDeleteபடங்கள் மிகவும் அழாக இருக்கிறது..பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
படங்கள் மிகவும் அருமை பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்
பதிவும் படங்களும் மிக அழகு அக்கா ..படங்கள் அத்தனையும் superb
ReplyDeleteJust Beautiful
ReplyDeletesubbu rathinam.
அருமையான படங்களுடன் தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅனைத்து படங்களும் அருமை.அதிலும் முதல் மூன்றும் அன்னையின் கம்பீரத்தைக் காட்டுகிறது.
ReplyDeleteஆனை, அம்பாரம், அதில் அன்னை சாமூண்டேஸ்வரி என்று தசராக் கொண்டாட்டம், அற்புதம்..
ReplyDelete”அட்டகாசமான தஸராக் கொண்டாட்டங்கள்” என்ற இந்தப்பதிவினில் அனைத்துப் படங்களும் அழகோ அழகு தான்.
ReplyDeleteஎதைச்சொல்வது எதை விடுவது!!!!
கம்பீரமான யானைகளுடன் கூடிய கம்பீரமான பதிவுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.