குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
மூதறிஞர் இராஜாஜி எழுதி ~ இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் வழங்கும் நிறைவான பாடல்...
கேசவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...
உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...
ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...
என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....
கண்ணபரமாத்மா குந்தி தேவிக்கு வரம்தர முன்வந்தபோது குந்தி தேவி எப்போதும் ஏதேனும் கஷ்டத்தையே வரமாக கேட்டாளாம் அந்த அறிவார்ந்த மாது சிரோண்மணி...
நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.
கஷ்ட்டம் வந்தால்தானே பகவான் நினைவு வருகிறது !
சுகத்தில் கடவுள் நினைவு வருவதில்லையே !!
திருவேங்கடமுடையான் தனது தண்ணிய கடைக்கண்களால் உலகத்தை கடாக்ஷிக்கிறான்.
அலை நிறைந்த அம்ருத ந்தியில் அமிழ்ந்தெழுந்தது போல உலகம் களிக்கின்றது.
அத்தகைய திருவேங்கடமுடையானுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.
மனத்திற்கு நிம்மதி தரும் பாடல்களில் சிறந்த பாடல்...
ReplyDeleteஎத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்...
பாடல் வரிகளுக்கும், அருமையான படங்களுக்கும் நன்றி அம்மா...
ஆமா குறையொன்றுமே இல்லைதான். படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு
ReplyDeleteகோவிந்தா ! கோவிந்தா !
ReplyDeleteசுப்பு தாத்தா.
//தண்ணிய கடைக்கண்களால்//
ReplyDeleteஏன் எப்பொழுதும் கடவுள்கள் கடைக்கண்ணால் மட்டும் கடாட்சிக்கிறார்கள்?
எனக்கு மிகவும் பிடித்தபாடல். எல்லோருக்கும் பிடித்தபாடல்.பாடல் பகிர்வு, படங்கள் எல்லாம் அழகு.தெய்வீகம்.
ReplyDeleteஅருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅற்புதமான பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.வழக்கம்போல் படங்கள் அருமை.
ReplyDelete"நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.
ReplyDeleteகஷ்ட்டம் வந்தால்தானே பகவான் நினைவு வருகிறது !
சுகத்தில் கடவுள் நினைவு வருவதில்லையே !!"
உண்மைதான்.
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
ReplyDeleteஎன்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா!!
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.
அருமையான பாடல் பகிர்வு.
ReplyDeleteகஷ்டம் வந்தால்தானே பகவான் நினைவு வருகிறது !
ReplyDeleteசுகத்தில் கடவுள் நினைவு வருவதில்லையே !!"
இது மிகவும் உண்மைதான்.
பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
குறையொன்றும் இல்லை
ReplyDeleteமறை மூர்த்திக்கண்ணா ....
மூதறிஞர் இராஜாஜி எழுதியது.
எம்.எஸ். இசையில் பிரபலமானது
மனதுக்கு மிகவும் நிறைவான பாடல் தான்.
அழகாக படங்களுடன் பாடலையும் வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.
ooooo