Friday, October 5, 2012

முந்தி முந்தி விநாயகரே !!

முந்தி முந்தி விநாயகரே! வந்து வந்தெம்மைக் கண் பாருமே!

முப்பத்து முக்கோடித் தேவர்களே! முப்பத்து முக்கோடித் தேவர்களே!

எப்போதும் உம் துணை வேண்டுமைய்யா!

முந்தி முந்தி விநாயகரே முக்கணனார் தன்மகனே

கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்

விநாயகரை வணங்குபவர்கள் எதையும் முந்திச்செய்யும் ஆற்றல் பெறுவர். 
"முந்தி முந்தி விநாயகனே' என்று பாடுவது கூட இதனால் தான்! 
ஒரு செயலை செய்ய முடிவெடுத்தால், அது அதிவிரைவில் முடிய வேண்டும் என ஆசைப்படுகிறோம். 

கோவை, புலியகுளத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முந்தி விநாயகர் ஆசியாவிலேயே மிகப் பெரியவர் ..

ஒரே கல்லால் 19' 10'' அடி உயரமும் 11' 10'' அடி அகலமும் 190 டன் எடையும் கொண்ட வலம்புரி விநாயகர் 
வலப்புறம் ஆண் தோற்றமும், இடப்புறம் பெண் தோற்றமும் கொண்ட அதிசயம் ...

ஏழு நிலை ராஜகோபுரமும், கற்கோவிலுமாக எழிலுற வீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர்  19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டவர்.  

மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா சிறப்பு. சித்திரை முதல் நாள் 10 டன் பழங்களைக் கொண்டு விநாயகருக்கு மாலை அணிவித்து அலங்கார பூஜை  நடைபெறுகிறது.


ஆசிய அளவில் பெரிதான புலியகுளம் விநாயகருக்கு,  68 கிலோ எடை கொண்ட பிரமாண்ட லட்டு படைக்கப்பட்டு லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.


கோவை ரேஸ் கோர்ஸில் 108 விநாயகர் சிலைகள் .  5 அடுக்குகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் பிரதட்சணம் செய்வதற்கு வசதியாக இருக்கிறது.

செல்வ விநாயகர் சந்நிதியை ஒட்டி ஸ்ரீ சக்கர வடிவத்தில் 108 விநாயகர் சிலைகள் அமைந்துள்ளன. இவை அனைத்தும் 108 நாம வழிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 108 விநாயகர்களும் உருவத்தில் வேறுபாடு உடையவர்களாக இருப்பது சிறப்பு.

விநாயக சதுர்த்தியன்று சிறப்பு வழிபாடாக ரேஸ்கோர்ஸ், தாமஸ் பார்க் அருகில் உள்ள 108 பிள்ளையார் கோவிலில் உள்ள 108 பிள்ளையாருக்கு, கணபதி ஹோமமும், சிறப்பு அபிஷேகமும் ,. ஒவ்வொரு பிள்ளையாருக்கும் செவ்வந்தி பூ மாலை, வெள்ளெருக்குமாலை அணிவிக்கப்பட்டு 108 தேங்காய் உடைக்கப்பட்டு, 216 வாழைப்பழங்கள்  சுவாமிக்கு படைக்கப்படுவது கண்கொள்ளாக்காட்சி...

17 comments:

 1. இந்த இரண்டு கோவில்களும் நூதனமானவை.

  ReplyDelete
 2. கடைசியில் இருக்கும் ஸ்ரீசக்ர வடிவில் அமைஞ்ச புள்ளையார்கள் ரொம்பவே அருமையாயிருக்காங்க.

  ReplyDelete
 3. முந்தி முந்தி விநாயகர் தரிசனம் கிடைக்கப்பெற்றோம் நன்றி படங்களும் பகிர்வும் சிறப்பாக இருக்கு நன்றி

  ReplyDelete
 4. ஆஹா! இது எங்க ஏரியாவாச்சே.....

  புலியகுளமும், ரேஸ்கோர்ஸ் பிள்ளையாரும் பார்த்து நான்கு வருடங்களாகி விட்டது.

  தாமஸ்பார்க் தான் நான் 20 வருடங்கள் இருந்த, வளர்ந்த இடம்.

  என் அம்மா உடல்நிலை முடியாத இறுதி நிலையிலும் தினமும் 108 பிள்ளையாரை 108 சுற்றி விட்டு வந்து தான் சாப்பிடுவார்.அது நினைவுக்கு வந்து கண் கலங்க வைத்து விட்டது.

  இந்த பதிவின் சுட்டியை என் தம்பிக்கு அனுப்புகிறேன்.

  ReplyDelete
 5. ஆசியாவின் பெரிய வினாயகர்! வீபூதி அபிஷெகம் அழகு!

  ReplyDelete
 6. superb post nice to hear that this pillyar is the largest in asia missed this even though i had studied and worked in kovai

  ReplyDelete
 7. அசர வைக்கிறது...

  நன்றி அம்மா...

  ReplyDelete

 8. கோவையில் ஈச்சநாரி பிள்ளையார் கோயில் பற்றித்தான் கேள்விப்பட்டு தரிசனம் செய்திருக்கிறேன். அடுத்த முறை கோவை வரும்போது முந்தி விநாயகரைக் காண வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. முந்தி முந்தி விநாயகரே !

  மிக அருமையான பதிவு.

  மின் தடை நீடிப்பதால்

  விந்தி விந்தித்தான் பின்னூட்டம் தர முடிகிறது.

  எப்படியும் இன்று நான் 2012 அக்டோபரையாவது முடித்து விட வேண்டும் என நினைக்கிறேன்.

  விநாயகா அருள் புரிவாயப்பா !

  ReplyDelete
 10. அத்தனை விநாயகர்களும் பளபளவென்று முரட்டு சைஸ் ஆக உள்ளன.

  பால் அபிஷேகம் படு அம்ர்க்களமாகப் படமாக்கப்பட்டுள்ளன.

  நம்மீது தெளிப்பது போல ஓர் உணர்வு ஏற்படுகிறது.

  அசத்தலான படங்கள்.

  அற்புதமாகக் காட்டியுள்ளீர்கள்.

  >>>>>

  ReplyDelete
 11. ஒரே கல்லில் 19’ 10” உயரம்
  11’ 10” அகலம்
  190 டன் எடை

  ஹைய்யோ ! அடேங்கப்பா !!

  ஆச்சர்யமாக உள்ளதே!!!!!!!!!!

  10 டன் பழங்களா - வெரி குட்

  >>>>>> இடைவேளை >>>>>>

  ReplyDelete
 12. கடைசி படம் திறக்கவே இல்லை.

  கீழிருந்து மேல் மூன்றாவது படத்தில் மேலிருந்து ஒருவர் பாலாபிஷேகம் செய்வது, நம் தொந்திப்பிள்ளையார்
  ஷவர்பாத் [அதுவும் ஷவர் பால் பாத்]
  எடுப்ப்பது போல எனக்குத்தெரிகிறது.;)

  >>>>>>

  ReplyDelete
 13. 68 கிலோ எடை கொண்ட ஒரே லட்டு.

  அட்டா, சூப்பராக இருக்குமே.

  அடுத்தமுறை அதையும் படம் எடுத்து வந்து காட்டுங்கோ, ப்ளீஸ்.


  >>>>>>

  ReplyDelete
 14. கீழிருந்து மூன்று + நாலு வேடிக்கையான படங்கள்.

  CHESS விளையாடும் விநாயகர்

  எலியாரை மெளஸ் ஆக வைத்து கம்ப்யூட்டர் ஆபரேட் செய்யும் விநாயகர் போன்ற வேடிக்கையான படங்களை எப்படித்தான் எங்கிருந்து தான் பிடித்து வந்து காட்டி அசத்துகிறீர்களோ !

  சபாஷ், ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  இப்போது அந்த கடைசி படமும் தெரிகிறது. மகிழ்ச்சி.

  ReplyDelete
 15. மிகவும் தமாஷான செய்திகளுடன்

  மிக பிரும்மாண்ட பதிவு போலத்தெரிகிறது.

  இவ்வளவு பெரிய விநாயகருக்கு, அவரின் சர்வாங்கங்கமும் நனையுமாறு, தினமும் பல்வேறு அபிஷேகங்கள் செய்து, வஸ்திரம் வேஷ்டி கட்டிவிட்டு, அலங்காரம் செய்து, அர்ச்சனைகள் செய்து, நைவேத்யம் செய்து, அவற்றை விநியோகித்து

  அடேங்கப்பா .... எல்லாவற்றையும் கற்பனை செய்து நினைத்துப் பார்க்கவே மலைப்பாக உள்ளது.

  அற்புதமான பதிவுக்குப் பாராட்டுக்கள்.

  மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றியோ ந்ன்றிகள்.

  ooooo

  ReplyDelete