மதுரை அரசாளும் பச்சைவண்ண மரகதவல்லி மங்கை மீனாட்சி பச்சைக்கிளி ஏந்தி பரவசப்படுத்தும் அழகே கண்கொள்ளாக்காட்சி ....
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் கிளியை தோளில் தாங்கி பெருமைப்படுத்துவாள்..
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டிய ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழாவின் ஐந்தாவது நாள் இரவு அம்மனை மகிஷாசுரமர்த்தினி வேடத்தில் அலங்காரமாக காட்சியளித்த போது எங்கிருந்தோ வந்த ஒரு பச்சை கிளி, அம்மனின் வலது கரத்தில் அமர்ந்ததாம்...
சிறு சத்தம் கேட்டாலும் பறந்து விடும் கிளி, சுமார் 6 மணி நேரம், மேளதாள சத்தங்களுக்கு அசையாமல் அமர்ந்திருந்ததாம்...
அம்மன் மேல் கிளி அமர்ந்திருக்கும் அதிசய செய்தி தெரிந்து சோழவந்தானை சுற்றியுள்ள பல கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோயிலில் கூடிய செய்தி பக்தி பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது....
கொலுக்கட்டையில் பிள்ளையார்....
அருமை....
ReplyDeleteஅருமை....
ReplyDeleteஆஹா... படங்கள் அழகு... அருமை...
ReplyDeleteநன்றி அம்மா...
அடடா! கொலுக்கட்டை பிள்ளையாரும் கொஞ்சும் கிளிகளும் அருமை
ReplyDeleteகிளி கொஞ்சும் அழகு என்பது இது தானோ?
ReplyDeleteகொலுக்கட்டையா, கொழுக்கட்டையா.. அட ஏதோ ஒண்ணு. விட்டுத்தள்ளுங்கள்.
ReplyDeleteபச்சைக்கிளி, மீனாட்சி அம்மன், மதுரை என்றாலே எத்தனை நினைவுகள்?..
எனது ஐந்து வயதில், 65 வருஷங்களு க்கு முன்னான ஞாபகம் இது. மீனாட்சி அம்மன் சன்னதிக்கு நுழைகையிலேயே, இடது பக்கம் பெரிய மரச்சட்டமிடப்பட்ட கம்பி வலைகளால் பின்னப்பட்ட கூண்டு உண்டு. அதனுள் இருபது, இருபத்தைந்து கிளிகள் வளையங்களில் தொங்கிக் கொண்டும், கம்பிகளில் உலாவிக் கொண்டும், சிறகடித்துக் கொண்டும் இருக்கும். பெரியவர்களிலிருந்து சிறுவர்கள் வரை சன்னதிக்கு வருவோர் எல்லாம் ஒருவர் பாக்கியில்லாமல் கிளிக்கூண்டுக்குப் பக்கத்தில் போய், "மீனாட்சியை கள்ளன் கொண்டு போய் விட்டான், தெரியுமா?" என்று உரக்கச் சொல்வார்கள். கிளிகளும் அவர்களின் கூப்பாடு கேட்டவுடனேயே, கோரஸாக
"கீக்கீக்கீக்கீ.." என்று சப்தமிடும். ஜனங்களும் கிளிகள் தங்களுக்குப் பதில் சொல்லிவிட்டதாக சந்தோஷப்பட்டு உரக்கச் சிரிப்பர். ஒரு நாளைக்கு எத்தனை கீக்கீக்கீக்கள்?.. தொண்டை விரிய ஓயாது அவைகுரலெழுப்பு வதைப் பார்க்க அந்த வயதிலும் எனக்குப் பரிதாபமாக இருக்கும்.
ஜீவி said...//
ReplyDeleteமலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள் ஐயா..
திருவரங்கத்திலும் சிறுவயதில் கிளிகளிடம் ரங்கா ரங்கா என்று சொன்னால் அவைகளும் இனிமையாக ரங்கா ரங்கா என்று பேசும் அழகு இனிமையாக மனதில் மலர்ந்தது...
அட! டாலர் நோட்டுகள்!
ReplyDeleteஃபாரின் கிளிகளோ?..
பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை படைப்பார்கள்; இங்கு கொழுக்கட்டையிலேயே பிள்ளையாரா!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஎங்கிருந்துதான் இம்மாதிரிப் படங்கள் உங்களுக்குக் கிடைக்கிறதோ.பந்தின் மீதமர்ந்து விளையாடும் கிளி/// ஆஹா மனம் கொள்ளை போகிறது. பாராட்டுக்கள்.
படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்.
ReplyDelete// எங்கிருந்தோ வந்த ஒரு பச்சை கிளி, அம்மனின் வலது கரத்தில் அமர்ந்ததாம்..//
ReplyDeleteதாயே மீனாட்சி.
அந்த ரூபாய் நோட்டுகளைக் கொட்டும் கிளையை மட்டும் நெறைய உருவாக்கி எல்லாருக்கும் கொடுத்துட்டா வறுமையே இருக்காது இராஜராஜேஸ்வரி. கண்ணைக் கவரும் அழகிய கிளிகள்.
கண்ணைக் கவரும் கிளிகள்
ReplyDeleteகருத்தைக் கவரும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பச்சைக் கிளிகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. பிள்ளையாரும் கொழுக்கட்டையாகவே மாறி விட்டாரே....
ReplyDeleteமிகவும் அருமை. வாழ்த்துகள்
கணணி முன்னால் கிளி என்ன செய்கிறது!
ReplyDeleteஓஹோ! அடுத்தபதிவுக்கு உங்களுக்கு உதவி செய்கிறதா!
பச்சைக்கிளிகள் தோளோடு .....
ReplyDeleteஆஹா உங்களுக்கென்றே தோன்றும் ஓர் தலைப்பு
கிளிகொஞ்சும் பதிவு
ஒரு சில ஸ்வாமி படங்கள்
பிறகு மீனாக்ஷி
பிறகு ஆண்டாள்
திடீரென அகிலாண்டேஸ்வரி
மேளதாள நாயனங்களுக்கும் இடையே பறந்து வந்த கிளி 6 மணி நேரம் அம்மன் கையில் என ஒரு சிறிய கதை
அதன் பிறகு வரிசையாகபலவித கிளிக்கூட்டம்
கிளிகளின் சாகசங்கள்
பச்சைக்கிளி போன்ற பசுமையான மூளை எங்கள் பதிவுக்கிளிக்கும் ;)))))
கடைசியில் பறக்கும் பைங்கிளிக்கூட்டம் அழகு.
ReplyDeleteநாயுடன் போராடி ஜெயிக்கும் கிளி ஏற்கனவே பார்த்தது தான் என்றாலும் மீண்டும் மீண்டும் பார்ப்பதில் எத்தனை மகிழ்ச்சியாக உள்ளது. ;))
டாலர் நோட்டுக்களாக அள்ளும் வெளிநாட்டுக்கிளி ஜோர் ஜோர்!!
>>>>>>>
நாய்க்கு மேல் உள்ள 2 சிறிய படங்களில் ஒரே மாதிரி கிளிகள் ஓ.கே.
ReplyDeleteஅதன் மேல் இரண்டு கட்டங்களில் படம் இல்லை. Green Parrot என்று அந்தக்கட்டங்களில் தெரிகின்றன.
பந்தின் மேல் உருளும் கிளி உங்களைப்போல நல்ல சுறுசுறுப்பு! ;)
தென்னை மர பசுமையான ஓலைகளில் பசுஞ்சோலை போன்ற அழகிய பின்னனியில் இரண்டு ஜோடிக்கிளிகள் இன்பமாக !
Looking for You Tube xxxxxx என்ற ஸ்க்ரீனை லுக் விட்டு தன் சிவந்த வளைந்த மூக்கை அங்கு கொண்டு போய் மோதும் கிளி அடடா ...... சூப்பர் தான்.
>>>>>>>
கம்ப்யூட்டர் கீ போர்டில் உள்ள கிளி, நம் ரங்கநாயகி ஆண்டாளுக்கு அடுத்த பதிவுக்கு உதவும் கிளியே தான். ;))))))
ReplyDeleteபிள்ளையாருக்குக் கொழுக்கட்டை என்றால் கொழுக்கட்டையிலேயே பிள்ளையாரா?
பதமான ருசியான தித்திக்கும் கொழுக்கட்டை தான் நீங்களும் ... போங்க! ;)
எப்படீங்க ஒரு பதிவிலேயே ஏதேதோ இப்படி ஒரேயடியாக்காட்டி அசத்திறீங்கோ?:
>>>>>>>>>
நேற்று நள்ளிரவு ஒரு கிளி என் வீட்டு ஜன்னல் கம்பியில் வந்தமர்ந்தது. என்னைப்பார்த்து அன்புடன் சிரித்தது.
ReplyDelete100009 என ஓர் அதிர்ஷ்டச்சீட்டை எடுத்து ஆசையுடன் என்னிடம் கொடுத்தது.
அதன் பிறகு என் மனசெல்லாம் அந்தக்கிளியோடு தான் இருந்தது.
பிறகு மனமகிழ்ச்சியால் ஒரு வேலையும் எனக்கு ஓடவில்லை.
நாலரை லக்ஷம் தாண்டியுள்ள கிளியை நினைத்துக்கொண்டே அப்படியே கற்பனையில் நான். நாலரைப்பங்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
ஏற்கனவே ஐந்து லக்ஷம் ஹிட்ஸ் போட்டியின் வெற்றியாளரான கிளி வேறு அது.
கிளி இப்போதும் ஒருவேளை காத்திருக்குமோ, வேறு ஏதாவது தொடர்ந்து ஜோஸ்யம் சொல்லுமோ அல்லது எங்காவது மறைந்திருந்து நமக்காக வேடிக்கை பார்க்குமோ, அல்லது ஒரு வேளை பறந்திருக்குமோ என பல்வேறு இனிமையான நினைவலைகளுடன் ஸ்தம்பித்துப்போய் இருந்தேனாக்கும்.
>>>>>>>>
இந்தக்கிளிப்பதிவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ;))))))
ReplyDeleteகிளிக்கு என் பாராட்டுக்கள்.
கிளிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
கிளிக்கு என் நன்றியோ நன்றிகள்..
கிளிபோலவே இத்துடன் நானும் இப்போது பறக்க வேண்டியுள்ளது. ;(
இன்னும் இந்த இறக்கை இழந்த நொண்டிக்கிளியால் புரட்டப்பட வேண்டியவை 49 இருக்காக்கும் ... ஹுக்க்கும்!
oooooo