Saturday, October 13, 2012

திருப்பதி அழகு குடை




திருப்பதி வடை அழகு  ஸ்ரீரங்க நடை அழகு  காஞ்சி குடை அழகு’ மேல்கோட்டை முடி அழகு என்று சிறப்பிப்பார்கள் !!
மகாவிஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம் வாமன அவதாரம். முதல் நான்கு அவதாரங்களில் மிருகமாகவும் மிருகம் பாதி, மனிதன் பாதியாகவும் அவதாரம் எடுக்கும் பெருமாள், முதல்முறையாக ஐந்தாவது அவதாரத்தில் முழு மனிதனாக வருகிறார். 

ஒரு கையில் வாமனர் கமண்டலம் வைத்திருப்பார்; மறு கையில் குடை பிடித்திருக்கிறார். 

ராமனுடைய பட்டாபிஷேக காட்சியை வர்ணிக்கும் கம்பர், ‘அரியணை ஹனுமன் தாங்க. அங்கதன் உடைவாள் ஏந்த, பரதன் வெண் குடை கவிக்க’ என்று சொல்கிறார். 


திருப்பதியில் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் ஐந்தாம் நாள் கருட சேவை. கருட வாகனத்தில் பெருமாள் கம்பீரமாக, கண்கொள்ளாக் காட்சியாக கோயிலைச் சுற்றி வலம் வருவர். 
பெருமாளுக்கு மேல் வண்ணமயமான குடை காற்றில் படபடக்கும். அற்புதமான வேலைப்பாடுகள் உடைய குடையும் நம் மனத்தில் இடம்பிடிக்கும். 


கருட சேவையின் போது, பெருமாளுக்கு பிடிக்கப்படும் குடைகள் வட சென்னையில் செய்து கொடுக்கப்படுகின்றன.

 பெரிதும் சிறிதுமாக மொத்தம் பன்னிரண்டு குடைகளைஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். குடை வேலைப்பாடு என்பது நுணுக்கமான ஒன்று. இரண்டு அடியிலிருந்து ஒன்பது அடி விட்டம் வரை குடைகள் உண்டு 
அன்று வடசென்னை விழாக்கோலம் பூணும்.

 ‘கோவிந்தா’ கோஷம் விண்ணைத் தொடும். 




பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கன்            
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தோ என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் - 

அரங்கன் நடை அழகு! 
ரத்னாங்கி உடை அழகு! 
சக்கரப் படை அழகு! 
சதிராடும் குடை அழகு!

திருவல்லிக்கேணி அழகிய சிங்கர்

திருச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா

குடமாத்தம்' என்ற திருவிழா, குடைகள் வண்ண வண்ணமாக யானைகள் மீது பிடிக்க அடுக்கடுக்காக, மினுமினுப்பாக, குடைகள் விரித்துப் போட்டி நடக்கவேறுபாடு இன்றிக் கலந்து, எல்லோரும் சந்தோஷப் பரிமாற்றம் செய்து மகிழ்கின்றனர்!


Stone Umbrella




13 comments:

  1. பக்தியுடன் ரசித்தேன்.

    ReplyDelete
  2. குடை ப‌ற்றி கூடை செய்திக‌ள்... பெருமாளுக்கு எது ஒன்றும் பிர‌ம்மாண்ட‌மே. க‌ல்குடை த‌ரிச‌ன‌ம் விய‌ப்பின் உச்சி.

    ReplyDelete
  3. ஒரே பிரமிப்பாக உள்ளது.இவ்வளவு அழகையும்,நேர்த்தியையும்.படங்கள் மூலம் எப்படித்தான் கொண்டு வந்தீர்களோ,ஒரே ஆச்சர்யமாக உள்ளது.கருத்து குடைகளை பற்றி ஆனாலும் ,பல கோவில்களையும்,
    உற்சவ மூர்த்திகளையும் கொடுத்து என்னை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளீர்கள். மிக்க நன்றி.
    நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ள போகிறேன்

    ReplyDelete
  4. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்.....

    தொடரட்டும் பகிர்வுகள்.

    ReplyDelete
  5. மிக அருமையான படங்கள்

    ReplyDelete
  6. குடை பற்றிய தகவல்களுக்கும் பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. கல்லில் செதுக்கிய குடை காணக்கிடைக்காதது. அருமை.

    ReplyDelete
  8. இது போன்ற குடைகள் திருவெல்லிக்கேணியில் உருவாக்கப்பட்டு பல கோவில்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

    ReplyDelete
  9. அருமையான படங்கள் தகவல்களுடன்...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  10. wonderful pictures to enjoy with bhakti, thanks for sharing

    ReplyDelete
  11. வடை அழகு !
    நடை அழகு !!
    குடை அழகு !!!
    முடி அழகு !!!!

    ஹைய்ய்ய்ய்ய்யோ !

    உங்களுக்கு ஒன்று தெரியுமோ ?

    உங்கள் பதிவினில் மட்டுமே எல்லாமே அழகோ அழகு!

    அடி முதல் நுனி வரை அத்தனையும் சர்வமும் அழகு!! ;)))))

    >>>>>>

    ReplyDelete
  12. ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கா ரங்கா ரங்கா கோபுரம் நல்லா கவேரேஜ் செய்யப்பட்டுள்ளது.

    கடைசி தேர் படம் சூப்பர், எவ்ளோ கும்பல் அடேங்கப்பா !

    கோவிந்தா கோஷம் + காட்டியுள்ள அனைத்துப்படங்கள் + குடைகள் எல்லாமே நல்லா இருக்குதுங்க.

    இங்குள்ள நிலைமை இப்போ சரியில்லாமல் மின்தடை போன்ற சில தொல்லைகள் உள்ளன. முடிந்தால் மீண்டும் சற்று நேரம் கழித்து வருவேன். இல்லை நாளை தான் வருவேன்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  13. வழக்கம்போலவே .............:)))))

    கல் குடை பற்றின குறிப்புகள் கொடுக்கலாமே !

    ReplyDelete