Wednesday, October 31, 2012

ஸ்ரீ மஹா கணபதி ...






ஓம் விநாயகாய வித்மஹே
விக்நராஜாய தீமஹி 
தந்நோ கணநாயக ப்ரசோதயாத்.





பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம்  கருவறைக்குப் பின்புறம் மேற்கே பார்த்து அமர்ந்திருக்கும் படிஞ்ஞாறு பகவதி கோயில் உள்ளது. படிஞ்ஞாயிறு என்றால் மேற்கு என்று பொருள்.

 கோயிலின் மூலவராக சிவபெருமான் இருப்பினும் இங்குள்ள ஸ்ரீ மகாகணபதி கோயில்தான் புகழ்பெற்று விளங்குகிறது.

கருவறையை ஒட்டியபடி தெற்கு நோக்கி   பலாமரத்திலான திருமேனி கொண்ட கணபதியின் கையில் அப்பம் ஒன்று வைத்து அருள் பொழிகிறார்...

முதனமைக் கடவுளாக வணங்கப்படும் கொழுக்கட்டைப் பிரியரான கணபதி இங்கு நெய்யப்பப் பிரியராக இருக்கிறார்.
கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான ‘உண்ணியப்பம்’ மிக வும் பிரசித்தி பெற்றதாகும். 
Unniyappam

கேரளாவின் பிர சித்தி பெற்ற சிற்பி பெருந்தச்சன் கொட்டாரக்கரா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது வழியில் ஒரு பலா மரத்தை பார்த்தார். பார்த்த மாத்திரத்தி லேயே அந்த மரம் அவருக்கு பிடித்துப் போன அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து கணபதி விக்கிரகத்தை செய்தார். 

அந்த விக்கிரகத்தை அங்குள்ள சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அனுமதி கேட்டு சிவன் கோயிலின் அக்னி மூலையில் கணபதி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. 

நாளடைவில்  சிவன் கோயில் கணபதியால் புகழ் பெறத் தொடங்கி சிவன் கோயில் என்ற பெயர் மாறி கொட்டாரக்கரா கணபதி கோயில் என மாறிவிட் டது.
Kottarakkara - The Cradle of Kathakali. 

கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் என்னும் ஊரிலிருந்து வடகிழக்கே 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கொட்டாரக்காரா.






Life-size statue of Gajamuthachan Kottarakara Krishnankutty
Life-size statue of Gajamuthachan Kottarakara Krishnankutty

Kottarakkara Ganapathi temple pond








13 comments:

  1. இன்று காலை வேளையிலே ஆனைமுகத்தான் தரிசனம்.

    நல்ல பகிர்வு. படங்களும் அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. இந்தபக்கம் வந்தாலே படங்களும் பதிவும் இங்கியே கட்டிப்போடுது. கண்களை விலக்கவே முடியல்லே.

    ReplyDelete
  3. படங்கள் அனைத்தும் அருமை!பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்ற வருத்தம்! தேங்காய் மூடிகளால் சூழப்பட்ட விநாயகர் அருமை! பகிர்விற்கு நன்றி! வாருங்கள் என் வலைப்பூவில் புதிய இடுகை!

    ReplyDelete
  4. Visiting your blog gives me a fabulous virtual temple time, I had never seen the thengai alankaaram before, beautiful! I have about 65 pillayars collected from all over the world and hope to continue collecting!

    ReplyDelete
  5. கொட்டாரக்கரா கணபதி கோவில் பற்றிய அருமையான தகவல்கள்..அழகிய படங்களுடனா பதிவுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  6. காக்கும் கடவுளின் தரிசனம் கண்டேன்.

    ReplyDelete
  7. அப்ப ப்ரசாதம் அருமை. அதற்கே ஒரு முறை சென்று தரிசிக்கலாம்.

    ReplyDelete
  8. வழக்கம்போல செய்திகளும் படங்களும் அழகு!

    ReplyDelete
  9. அருமை...

    தேங்காப் பிள்ளையார் சூப்பர்ப்...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  10. ஸ்ரீ மஹா கணபதி பற்றிய புகைப்படங்கள், விவரங்கள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  11. ’கஜமுத் அச்சன் கோட்டக்கரா கிருஷ்ணன் குட்டியின்’ சிலை தத்ரூபமாக நிஜ யானை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அற்புதமான கைதேர்ந்ததோர் கலைஞரால் உருவாக்கப்பட்டிருக்கும்.

    >>>>>

    ReplyDelete
  12. எல்லாப்பிள்ளையார்களையும் அழகாகக் காட்டி விளக்கியுள்ளீர்கள்.

    ஸ்ரீ மஹாகணபதி என்ற தலைப்பும் ஸ்லோகங்களும் சூப்பர்.

    கொட்டாரக்காரா கணபதி சிலை வந்த கதையும், பிறகு கணபதியே மூலவர் போல பிரபலமாகியுள்ளது சுவையான கதையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
  13. எனக்கு உங்கள் கையால் ஓர் ‘உண்ணியப்பம்’ கொடுங்கோ.

    இதுவரை கேள்விப்பட்டதோ சாப்பிட்டதோ இல்லையாக்கும்.

    கதக்களி கலைஞர்கள் படமும், கொட்டாரக்கரா குளம் உள்ள படமும் மிக அழகாக உள்ளன.

    பாராட்டுக்கள்,

    வாழ்த்துகள்,

    நன்றியோ நன்றிகள்.

    oooooOooooo

    Good Night to Maha Ganapathy ! ;)




    ReplyDelete