Thursday, October 4, 2012

வாழ்த்தும் வசந்த மலர்கள் ...




I wandered lonely as a cloud That floats on high o'er vales and hills,
When all at once I saw a crowd, A host, of golden daffodils;
Beside the lake, beneath the trees, Fluttering and dancing in the breeze.

William Wordsworth --

உயர்நிலைப்பள்ளியில் மனப்பாடமாக பாடம் செய்தது பசுமை மாறாமல் மனதில் பூத்திருக்கிறது...


ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் கடைசி வெள்ளி டாபோடில் டே ஆக நியூசிலாந்தில் கொண்டாடப்படுகிறது...

நல்ல மஞ்சள் நிறத்தில் ஆறு இதழ்கள் வெளிப்புற வட்டத்தில். நடுவில் இன்னும் கொஞ்சம் அழுத்தமான மஞ்சள் நிறத்தில் சிறிய ஒரு பூவுமாக . அழகாக பூத்துக்குலுங்கும் மலர்களைப் பார்க்கவே ஆனந்தம் தரும்...
மஞ்சளும் ஆரஞ்சுமாக இருக்கும் சில வகைகளும் ,
வெளிவட்டம் முழுவதும் வெள்ளை நிறமாகவும் உட்புறம் ஆரஞ்சு  மஞ்சளாகவும் கலந்து பூக்கும் வகைகளும் உண்டு..

சற்றே விஷ குணமும் இருப்பதால் பூச்சித்தொல்லை இல்லை ...

 நட்புக்கு அடையாளமாக பூவாக விளங்குகிறது...

ஸ்பெயின், போர்ச்சுக்கல், துருக்கி போன்ற பிரதேசங்கள் இந்த மலரின் தாயகம் ...

ரோமானியர்களும், கிரீஸ் நாட்டுக்காரர்களும் , மருத்துவ குணமுள்ளமலரைப்பயன்படுத்தி நோய் நீங்கப்பெற்றிருக்கிறார்கள்..
நீளமான தண்டுகளின் உச்சியில் பூ மலர்ந்து சிரிப்பதால் மலர்க்கொத்து தயாரிக்கப் பயன்படுகிறது..

செடிகள், பூத்து முடித்து இலைகள் எல்லாம் பழுத்துக் காயத்தொடங்கியதும் செடிகளைத் தோண்டி அடியில் உள்ள கிழங்குகளை எடுத்து காற்றோட்டமான இடத்தில் காயவைத்து சேமித்து வைத்த  கிழங்குகளை மீண்டும் குளிர் காலம் வர ஒரு மாதம் இருக்கும்போது நட்டுவைக்கிறார்கள்..

கிழங்கின் உயரம் போல மூன்று மடங்கு ஆழமான குழியில் நட்டுவைத்தால் போதும் .. தண்ணிர் எதுவும் ஊற்ற வேண்டிய அவசியமே இல்லாமல் வசந்தம் ஆரம்பிக்கும்போது செடிகள் வளர்ந்து மலர்களை புஷ்பித்து ஆனந்தம் கொண்டாடி மகிழ்விக்கின்றன....


18 comments:

  1. மலர்களை பார்த்தாலே மனம் லேசாகி விடும். உற்சாகம் தோன்றும். அதுவும் தகவல்களுடன்.....

    அருமையான பகிர்வு. படங்கள் அற்புதம்.

    ReplyDelete
  2. பூப்பூவா பூத்திருக்கு உங்க தளத்திலே!

    இத்தனை பூக்களுக்கு மத்தியில் 2சிறு மழலை பட்டாம்பூச்சிகள்!

    ReplyDelete
  3. அன்பின் இராஜராஜேஸ்வரிம்மா,

    உங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கோப்பா..

    இவர்களை தெரியாத பதிவர்களே இருக்கமுடியாது என்பது என் நம்பிக்கை. நானெல்லாம் ஒரு நாள் ஒரு பதிவு போட்டாலே எனக்கு கைகள், தோள்பட்டை முதுகு வலிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் இவர்கள் தினமும் சிரத்தையுடன் அழகிய பொருத்தமான படங்கள் சேகரித்து சுவாரஸ்யமாக நம்மை செலவில்லாமல் ஒவ்வொரு இடத்துக்கும் அழைத்துச்சென்று அங்கே அந்த கோயில்களின் வரலாற்றை, அது தொடர்பான செய்திகளை, அதற்கான ஸ்லோகங்களை ஒன்று கூட விடாமல் மிக சிரத்தையுடன் கொடுப்பதில் இவருக்கு நிகர் இவரே... ஆன்மீக பதிவுகள் என்றால் எனக்கு சட்டென இவர் நினைவு தான் வரும்.... பார்ப்போமா இவர் பதிவுகளில் சில?

    சுகம் தரும் சிம்ம சுதர்சனர்
    ஐஸ்வர்யம் அருளும் அஷ்டலஷ்மி
    அருளும் அன்பு ஸ்ரீ ராதேக்ருஷ்ணா

    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    ReplyDelete
  4. மிக அருமையான படங்கள்,,
    உங்க ரசனையே தனி தான் போங்க...

    கூடவே தகவல்களும் சிறப்பு..

    தொடருங்கள்,,,

    ReplyDelete
  5. டாபோடில்ஸ் என்றாலே Wordsworth தான் சொல்லி வைத்தாற் போல சட்டென்று நினைவுக்கு வருகிறார்! அந்த அளவுக்கு அவருக்கும் அந்த மலர்களுக்கும் நெருக்கம்!

    முதல் சுற்றில் மொட்டுகளாய், அடுத்த சுற்றில் பூத்துச் சிரிக்கும் மலர்களாய் என்று, சரசரவென்று எதையோ சாதிக்கப் போகும் வேகத்தில் தலைக்கு மேலே தாழச் செல்லும் மேகக்கூட்டங்கள், ஒய்யாரமாய் ஒசிந்து அழகு காட்டும் வானவில், பட்டுப்பாய் விரித்தது போன்ற மலர் வனம் என்று-- உங்கள் புகைப்பட ஆல்பம் மனசைக் கவர்ந்து மயக்கியது, ராஜி மேடம்!

    ReplyDelete
  6. அழகு மலர்கள் - ரசித்தேன்.

    ReplyDelete
  7. கண்களுக்கு விருந்தளிக்கும் படங்கள் சகோ.!


    பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  8. உயர்நிலைப் ப்ள்ளியில் எங்களுக்கும் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் எழுதிய மறக்கமுடியாத இதே கவிதைதான். பதிவில் படங்கள் எப்போதும் போல் கவிதை பாடுகின்றன.

    ReplyDelete
  9. வாழ்த்தும் வசந்தங்கள் தலைப்பே அசத்துகிறது, படங்கள் மேலும் நம்மை அசர வைக்கிறது.
    ஓடும் மேகங்கள், சுத்தும் மலர்கள், வானவில், கதிரவன், பூனைக்குட்டியுடன் ஆடும் குழந்தை எல்லாம் கண்ணை கவர்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. பூக்கள் படங்களும் தகவல்களும் அருமை...

    நன்றி அம்மா...

    ReplyDelete
  11. கொட்டிப் பூத்து ஆனந்தத்தை தருகின்றன.

    ReplyDelete
  12. அழகான படங்கள் அம்மா. இங்கு வந்து முதல் முறை டாஃப்டில்ஸ் பார்க்கக் கிடத்தபோது எனக்கும் அந்தக் கவிதைதான் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  13. வாழ்த்தும் வசந்த மலர்கள்

    பதிவு கண்ணால் பார்க்கவே மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.

    முதலில் காட்டியுள்ள சுழலும் படம் அருமை அருமை அருமை ..;)))))

    >>>>>>

    ReplyDelete
  14. William Wordsworth அவர்களின் கவிதை தங்களின் இந்தப்பதிவினாலும் படங்களினாலும் மேலும் சிறப்புப்பெறுகிறது.

    இரண்டாவது படத்தைப்பார்த்ததும்

    ”ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீறோ”

    எனப் பாடத்தோன்றுகிறது.

    >>>>>

    ReplyDelete
  15. மிகவும் அழகான அசத்தலான பதிவு.

    உங்களைத்தவிர வேறு யாரால் இவ்வளவு சிரத்தையாக ஒவ்வொன்றையும் படமும் பட விளக்கங்களுமாகவும் காட்ட்வே முடியாதுங்க.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றியோ நன்றிகள்.

    ooooo

    ReplyDelete
  16. நீல வானம், ஆறு இதழ்கள் கொண்ட அந்த மஞ்சள் பூக்கள் நடுவில் சிகப்பு மகரந்தம் .... ;)))))

    அடுத்தபடத்தில்[நியூசிலாந்து] மஞ்சள் கம்பளம் விரித்தால் போல, மஞ்சம்.. நெஞ்சம் குளிரும் வண்ணம் அழகோ அழகு .... ;)))))

    அடுத்ததில் செவ்வானம் + மஞ்சள் பூக்களின் அழகான வரிசையான இடைவெளியுடன் கூடிய மிக நீண்ட அணிவரிசை சூப்பரோ சூப்பர். ;)))))

    >>>>>>

    ReplyDelete
  17. நீல வானம், ஆறு இதழ்கள் கொண்ட அந்த மஞ்சள் பூக்கள் நடுவில் சிகப்பு மகரந்தம் .... ;)))))

    அடுத்தபடத்தில்[நியூசிலாந்து] மஞ்சள் கம்பளம் விரித்தால் போல, மஞ்சம்.. நெஞ்சம் குளிரும் வண்ணம் அழகோ அழகு .... ;)))))

    அடுத்ததில் செவ்வானம் + மஞ்சள் பூக்களின் அழகான வரிசையான இடைவெளியுடன் கூடிய மிக நீண்ட அணிவரிசை சூப்பரோ சூப்பர். ;)))))

    >>>>>>

    ReplyDelete