Monday, October 29, 2012

அன்னாபிஷேக அருளாட்சிபெருவுடையார், அன்னாபிஷேகம், தஞ்சாவூர்.

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே 

ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாக காசியில் அருளாட்சி நடத்துகிறாள் அன்னை ...பெருவுடையார், அன்னாபிஷேகம், தஞ்சாவூர்.

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா  அன்னாபிஷேகம்.
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக சாம வேதத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது,

உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடியாக உலக வாழ்கைக்கு அச்சாணியாக  விளங்கும் அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ  என்னும் மும்மூர்த்திகளின் சொரூபம்.

ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சாயரட்சையின்போது சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது..

ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. 
பால் நினைந்தூட்டும் அன்னைபோல் அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.

அன்னம் வேறு, ஆண்டவன் வேறல்ல. இரண்டும் ஒன்றுதான் இதையே சோத்துக்குள்ளே இருக்கிறார் சொக்கநாதர் என்றும் குறிப்பிடுவர்.

அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பு ...அன்னாபிஷேகமன்று சிவதரிசனம் செய்வது கோடி சிவ தரிசனம் செய்வதற்கு சமம். 
ஜீவ காருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் 
வாடிய அருளாளர் வள்ளலார்.சக மனிதனின் பசியைப் போக்குபவன் 
கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். உணவிட்டுக் 
காப்பதே  ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் 
வருத்தாது.  வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். 
மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். என்று 
குறிப்பிட்டுள்ளார்.

உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் அன்னத்தைஅனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னமாகிய அரிசி சாதம் கொண்டு சிவலிங்கத்தை மூடி அபிஷேகம் செய்வதே அன்னாபிஷேகம் ...

அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பிக்கப்படும் சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணி அளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. 

இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி,  பரவசமளிக்கிறது...

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். 

லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம்.

எனவே பாண லிங்கத்தின் மேல்பட்ட அன்னம் பிரசாதத்தில் தவிர்க்கப்பட்டு அவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் விநியோகம் செய்யப்படுகின்றது. 

 லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். 

அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக ...மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகின்றது. .

கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகப் பெருவிழா அன்று சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது. 

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள "செந்தலை' கிராமத்திலுள்ள மீனாட்சியம்மை உடனுறை சுந்தரேஸ்வரர் சிவாலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும் நாளன்று இரவு முழு நிலவின் ஒளிக்கற்றைகள் கருவறையிலுள்ள லிங்கத் திருமேனியை திருமுழுக் காட்டுவது தனிச்சிறப்பாகும்.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகிறது. 

அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகிறது. 
எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகிறது. 
இந்த அன்னத்தை அபிஷேக நிலையில் இறைவன் சிவபெருமானின் திருமேனி முழுவதும் சாத்தி நாம் வழிபடுவது, ஐம்பூதங்களும் அவருள் அடக்கம் என்பதை உணர்த்துகிறது. 
அன்னாபிஷேக தினத்தில் சிவனை வணங்கினால் பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கிறது...


அன்னாபிஷேகம் ராமநாதஸ்வாமி, காஞ்சிபுரம்,ANNABHISHEKAM, KAILASANADHAR THARAMANGALAMTHIRUVANAIKOIL KUBERA LINGAM ANNABHISHEKAM 

A feast for the eyes: The Pradoshamurthi of Sri Rathnagiriswarar Temple
Besant Nagar, decorated with fruits and vegetables on the occasion of 
Annabhishekam.
A feast for the eyes: The Pradoshamurthi of Sri Rathnagiriswarar Temple, Besant Nagar, decorated with fruits and vegetables on the occasion of Annabhishekam. Report on Page 2.


12 comments:

 1. அருமையான படங்கள்... தொடருங்கள்...

  ReplyDelete
 2. படங்களும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு நன்றி வாழ்த்துகள்

  ReplyDelete
 3. ஆஹா ... அற்புதம் !

  ReplyDelete
 4. ஆலய தரிசனம் அங்கம் நிறைந்தது.

  ReplyDelete
 5. எவ்வளவு தகவல்கள்?.. எத்தனை செய்திகள்?.. அவை தொடர்பாக எவ்வளவு விஷயஞானம்!...

  படங்களைப் போலவே மிகுந்த கவனத்துடன் எழுதும் செய்திகளும் மனசில் பதிந்து போகும் மாயம் தான் என்னே!

  ஒவ்வொரு விசேஷ நாளுக்கும், தவறாமல் அந்த சிறப்பு நாளுக்கான தகவல்கள், படங்கள் என்று திரட்டி அதை முன்னாலேயே வெளியிட்டு
  ஆன்மிக அன்பர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் உங்கள் அரும்பணி என்றென்றும் துணையாய் வழி நடத்திச் செல்லும். மிக்க நன்றி.

  ReplyDelete
 6. படங்களும் அலங்காரங்களும் அருமை . பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 7. காசி அன்னபூரணி அம்மன் உருவம் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் வண்ணம் உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. ஐயனுக்கு ஐப்பசி பவுர்ணமியில் அன்ன அபிஷேகம் போல, அன்னைக்கு விஜயதசமி அன்று திருமீயச்சூரில் அன்னை லலிதாம்பிகைக்கு சக்கரைபொங்கலில் குளம் அமைத்து அதில் நெய்ஊற்றி அம்மனின் ய்ருவம் அதில் தெரியும்படி அமைப்பார்கள்.
  ஐயனுக்கு அன்னம், அம்மனுக்கு பொங்கல்.

  ReplyDelete
 9. அனைவர்க்கும் இல்லையெனாது அள்ளிவழங்கட்டும் அன்னபூரணியவள்.

  பாதம்பணிந்து நிற்போம்.

  ReplyDelete
 10. அற்புதமான படங்கள்...

  நன்றி அம்மா...

  ReplyDelete
 11. ”அன்னாபிஷேக அருளாட்சி”

  அனைத்துப்படங்களும் விளக்கங்களும் வெகு அருமை.

  முதல் படம் சென்ற வருடம் போலவே முதல்தரப்படமாக அமைந்துள்ளது

  பாராட்டுக்கள்.

  வாழ்த்துகள்.

  நன்றிகள்.

  ReplyDelete