Thursday, June 16, 2011

அனுமன் வால் வழிபாடு

       


 "அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்"

என்பது அனுமனைப் போற்றும் புகழ் பெற்ற பாடல்.
Jai+anuman
அன்பு, அறம், அருள் ஆகியவற்றின் முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சனேயர் வழிபாடு சர்வமங்களங்களையும் அளிக்கக்கூடியது. அனைத்து உயர்ந்த குணங்களுக்கும் உறைவிடமாகத் திகழும் ஸ்ரீஆஞ்சனேயரின் வலிமை முழுதும் அவரது வாலில் இருக்கிறது. அவரது வாலில் நவகிரகங்களும் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். ஆஞ்சனேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட்டதற்கு ஒப்பாகும். இந்தப் பூஜையானது நவகிரகப் பூஜைக்குச் சமமாகக் கருதப் படுகிறது.





Jai+anuman
முதன் முதலில் பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பீமன் வால் வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது.






பீமன் பாரிஜாத மலரைத் தேடி காட்டில் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். களைப்படைந்த நிலையில் அவன் சென்று கொண்டி ருந்தபோது வழியின் குறுக்கே குரங்கின் வால் ஒன்று இடையூறாக இருந்தது. அது ஆஞ்சனேயரின் வால் என்பதை அறியாத பீமன், "பாதையை விட்டு உன் வாலை நகர்த்து'' என்று கோபமாகக் கூறினான்.

அதற்கு ஆஞ்சனேயர், "முதுமையின் காரண மாக என் வாலை நகர்த்த முடியாமல் படுத் திருக்கிறேன். நீயே வாலை ஓரமாக நகர்த்தி வைத்து விட்டுப் போ'' என்றார்.


பீமன் அலட்சியத்தோடு வாலை அகற்ற முயல, அது அசையவில்லை. பலமுறை கடுமை யாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியவில்லை. பீமன் மலைத்து நிற்க, அனுமனே தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, தான் வாயுபுத்திர னான அனுமன் என்று கூறி பீமனை ஆசீர்வதித்தார். தான் கோபப்பட்டதற்காக தன்னை மன்னிக்கும்படி வேண்டிய பீமன், அனு மனின் வலிமையை வியந்து பாராட்டி, அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கினான்.









மேலும், ""எனக்கு சர்வ சக்திகளையும் மங்களங் களையும் அளித்து வாழ்த்தி யதுபோல், தங்கள் வாலைப் பூஜித்து வழிபடுபவர்களுக்கும் சகல சௌபாக்கியங் களையும் அருள வேண்டும்'' என வரம் வேண்டினான். அவ்வாறே அனுமனும் வரம் அருள, அனுமன் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.


ஸ்ரீராம காரியத்தில் பங்குகொள்ள சிவபெருமானே ஆஞ்சனேய வடிவம் எடுத்ததாகவும், சிவபெருமானைப் பிரிய விரும்பாத பார்வதி தேவி அனுமனின் வாலாக உருவெடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆகவே அனுமனை வணங்கு வது சிவபெருமானை வணங்குவதாகவும்; அனுமனது வாலை வணங்குவது பார்வதி தேவியை வணங்குவதாகவும் கருதப்படுகிறது.

 Hindu god Hanuman




அனுமனது வாலை வணங்குபவர்கள் தாங்கள் பூஜிக்கும் ஸ்ரீஅனுமன் படத்தில், உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியில் பொட்டு வைக்க வேண்டும். முதலில் சந்தனப் பொட்டு வைத்து அதன்மேல் குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். அடுத்த நாள் அதன் அருகே பொட்டு வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாலின் நுனி வரை பொட்டு வைக்க வேண்டும். இதற்கு சில நாட்கள் ஆகலாம். வால் நுனியில் பொட்டு வைத்து முடிக்கின்ற நாளில் ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் ஆஞ்சனேயர் நாமத்தையும் ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும். இவ்வாறு அனுமன் வாலை வழிபட்டால் நினைத்த காரியத்தில் பூரண வெற்றி கிடைக்கும்.

Download Hindu God Hanuman Wallpapers

திருமணமாகாத பெண்கள் ஆஞ்சனேயர் வால் வழிபாடு செய்வதன் மூலம் பார்வதி தேவியின் அருள் பெற்று விரைவில் திருமண பாக்கியம் பெறுவர்.
The sacred and colourful form of the 'monkey God' Hanuman,worshipped by


Lord+hanuman+chalisa


Lord+hanuman+chalisa





Hanumaninfo





39 comments:

  1. அனுமனைப்பற்றி இதுவரை நான் அறியாத விவரங்கள் பல அறிந்து கொண்டேன்.பார்வதி அனுமன் வாலாய் அமைந்த விஷயம் புதிது.

    நன்றி.

    ReplyDelete
  2. காலையிலேயே, பல ரூபங்களில் என் செல்ல ”ஆஞ்சி”யின் தரிசனம். நன்றி.

    ReplyDelete
  3. அனுமன் குறித்தும் அனுமன் வாலின் மகிமைகுறித்தும்
    அறியாத பல தகவலகள் தங்கள் பதிவின் மூலம்
    அறிந்து கொண்டேன்
    படங்களும் சொல்லிச் செல்லும் விதமும்
    வழக்கம்போல் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Really great to learn the Hanuman story !! thanks madam.

    ReplyDelete
  5. //ஆஞ்சனேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட்டதற்கு ஒப்பாகும். இந்தப் பூஜையானது நவகிரகப் பூஜைக்குச் சமமாகக் கருதப் படுகிறது.//
    தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். நன்றி.

    ReplyDelete
  6. @ goma said...
    அனுமனைப்பற்றி இதுவரை நான் அறியாத விவரங்கள் பல அறிந்து கொண்டேன்.பார்வதி அனுமன் வாலாய் அமைந்த விஷயம் புதிது.

    நன்றி.//

    Thank you Madam.

    ReplyDelete
  7. @ வெங்கட் நாகராஜ் said...
    காலையிலேயே, பல ரூபங்களில் என் செல்ல ”ஆஞ்சி”யின் தரிசனம். நன்றி./

    Thank you sir.

    ReplyDelete
  8. Ramani said...//

    படங்களும் சொல்லிச் செல்லும் விதமும்
    வழக்கம்போல் அருமை
    தொடர வாழ்த்துக்கள்//

    Thank you sir.

    ReplyDelete
  9. @ sanju said...
    Really great to learn the Hanuman story !! thanks madam.//

    Very Happy to your comments.Thank you.

    ReplyDelete
  10. அனுமார் வால் வழிபாடு புதிய தகவல்கள். ஆஞ்சநேயரின் படத்தில் வியாழக்கிழமை தோறும் ஸ்ரீராமஜெயம் எழுதி பூர்த்தி பண்ணியதும். கோவிலில் ஆஞ்சநேயர் வாலில் பொட்டிட்டதும் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  11. இலங்கையில் என் அறிவிற்கு எட்டிய வகையில் அனுமன் வால் வழிபாடு இருப்பதாக நான் அறியவில்லை.
    அல்லது எனக்குத் தெரியவில்லை.

    ஆனால் என் போன்றோருக்கு இது ஒரு புதிய உபரித் தகவலும் கூட////

    நானும் இதைதாங்க சொல்றேன்...

    தங்களிடம் ஒரு வித்தியாசமான ஆலயம் பற்றி தெரிந்துக் கொண்டேன்..
    நன்றி

    ReplyDelete
  12. ஹனுமனின் வாலை இப்போது தான் பிடித்துள்ளேன். மிகவும் நீளம் அது என்பதால், மொத்த வாலையும், தொட்டுப்பார்த்து, மகிழ்ந்து விட்டு,
    பிறகு மீண்டும் வருவேன்,
    ஹனுமன் அருளால்.

    ஜெய் ஹனுமான்!

    ReplyDelete
  13. பல அரிய தகவல்கள்...

    ReplyDelete
  14. செய்திகளும் காற்பனைவாய்ந்த அழகிய படங்களும் அருமை பாராட்டுகள் தொடர்க.

    ReplyDelete
  15. அனுமனைப் பற்றிய தகவல்களும், படங்களும் அருமை.. காணக் கிடைக்காத பொக்கிஷம் ஒரு பக்கத்தில் இருப்பதாக உணர்கிறேன்.. பகிவுக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்..!

    அன்புடன்,
    தங்கம்பழனி

    www.thangampalani.blogspot.com

    ReplyDelete
  16. //ஆஞ்சனேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் பூஜித்து வந்தால் நவகிரகங்களை வழிபட்டதற்கு ஒப்பாகும். //

    ஆமாம், ஆமாம்.
    அப்படியே செய்திடுவோம்.

    ReplyDelete
  17. //"அஞ்சிலே ஒன்று பெற்றான்

    அஞ்சிலே ஒன்றைத் தாவி

    அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி

    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலாரூரில்

    அஞ்சிலே ஒன்று வைத்தான்

    அவன் எம்மை அளித்துக் காப்பான்"//

    இது கம்பராமாயணப்பாடல்:

    பொருள்: பஞ்சபூதங்களில் ஒன்றான ‘வாயு’ வின் மகனான அனுமன், கடலைத் (’நீர்’)தாண்டி,
    ‘வான்’ வழியாக இலங்கை சென்று, ‘பூமி’ தேவியின் மகளான சீதாதேவியைக்கண்டு,
    பிறகு இலங்கைக்கு ‘நெருப்பு’ வைத்தான்.

    இந்த அனுமன் நிச்சயம் நம்மைக் காப்பான்.

    ReplyDelete
  18. //பீமன், அனு மனின் வலிமையை வியந்து பாராட்டி, அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கினான்.//

    யாரும் வாலாட்டமுடியாத பராக்ரமசாலியான பீமனிடமே
    வால் ஆட்டிய ஹனுமான்!

    ஆஹாஹாஹா!
    சரியான போட்டி பற்றி சிறு வயதில் கேட்ட கதை.

    நினைவு படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  19. //ஸ்ரீராம காரியத்தில் பங்குகொள்ள சிவபெருமானே ஆஞ்சனேய வடிவம் எடுத்ததாகவும், சிவபெருமானைப் பிரிய விரும்பாத பார்வதி தேவி அனுமனின் வாலாக உருவெடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.//

    ஆஹா! இதுவும் சூப்பார்.
    அந்த பராசக்தியே
    ஹனுமனின் வால்!
    அதனால் தான் அந்த வாலுக்கு
    [பரா] மஹாசக்தியோ!

    இருக்கலாம்! இருக்கலாம்!!

    ReplyDelete
  20. //வால் நுனியில் பொட்டு வைத்து முடிக்கின்ற நாளில் ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்றி பூஜை செய்ய வேண்டும்.//

    அடிக்கடி செய்வேன்.
    [வால் மேல் கொண்ட பக்தியைவிட வடை மேல் கொண்ட ஆசையினாலும் கூட.]

    [ஒரே நாளில் 5 படங்களுக்கு, அமர்க்களமாக வடைமாலை சாற்றினோம். முடிந்தால் தேடி அந்தப்படத்தை மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்]

    ReplyDelete
  21. அனுமன் பற்றின அற்புதமான பதிவு. எங்கிருந்து இப்படி படங்கள் தருவிக்கிறீர்கள்? தொடருங்கள்

    ReplyDelete
  22. அனுமனின் சக்தியை விளக்க என் பேரக் குழந்தைகளுக்கு அனுமன் பீமன் கதை கூறும்போது, அனுமனாக நடிக்க குழந்தைகள் விரும்புவார்கள் பதிவைப் படிக்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. Respected Madam,
    வழக்கம்போலவே அனைத்து அனுமன் படங்களும் அருமை. முதல் படத்தில் நெஞ்சைப்பிளந்து ஸ்ரீராமரைக் காட்டிடும் படம் எனக்கு மிகவும் பிடித்தது.

    இன்று வியாழக்கிழமை (குரு வாரம்) ஹனுமனுக்கு உகந்த மூலா நக்ஷத்திரம் வேறு. சிக்கல் என்ற ஊரில் ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு மாதஜெயந்தி உத்ஸவம் நடைபெறுவதாக, பாம்புப் பஞ்சாங்கத்தில் போட்டுள்ளது.

    இன்று இந்தப்பதிவு வெளியிட்டு ஸ்ரீ ஹனுமனையும் ஸ்ரீ இராமனையும் பற்றி கொஞ்சமாவது சிந்தனையைத் திருப்பிவிட்ட தங்களுக்கு என் நன்றிகள்.

    மிளகுடன், மொறுமொறுவென்று, கும்மென்று, மெத்தென்று, மிருதுவாக, சற்றே சூடான, சுவையான வடைகள் (ஒரே ஒரு டஜன் மட்டும்) பிரஸாதமாக சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டுள்ளது, உங்களின் இந்தப்பதிவைப்படித்து முடித்ததும்.

    நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்க என மனமார்ந்த ஆசிகளுடன்.
    vgk

    ReplyDelete
  24. பல புதிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  25. உங்கள் வலைக்கு நான் புதியவன் முடிந்தால் www.kingraja.co.nr பார்க்கவும்

    ReplyDelete
  26. மனதில் இனம்புரியாத, சொல்லிக் கொள்ளமுடியாத, வேதனைகளும் கவலைகளும் குடிகொண்டு நம்மை ஆட்டிவைக்கும்போது, கொஞ்சம் ஒரு சாம்பிள் பாக்கெட் வெண்ணெயை வாங்கிக்கொண்டுபோய், ஏதாவது ஒரு ஹனுமார் கோவிலில், ஹனுமன் நெஞ்சில் தடவச்சொல்லி, அது போலத் தடவுவதை பார்த்து விட்டு வந்தால், நம் நியாயமான நெஞ்சுக்குறைகள் நீங்கி, மனம் குளிரும்.

    இதைக்கூட நீங்கள் உங்கள் பதிவில் சேர்த்திருக்கலாம்.

    அடிக்கடி இதுபோல செய்வதால், கைமேல் பலன் அளித்து வரும் அனுபவங்கள் பல எனக்கு உண்டு.

    vgk

    ReplyDelete
  27. அழகான படங்களும் அதோடு தொடர்புடைய குட்டி கதைகளும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க

    ReplyDelete
  28. உண்மையில் புதுமையான விஷயங்கள்.அதுவும் அநுமர் வாலில் பொட்டு வைப்பது !

    ReplyDelete
  29. வால் வழிபாடு பற்றி புதிய விவரங்களை அறிது கொண்டேன். மிக்க நன்றி தோழி.

    ReplyDelete
  30. Seenivasan KalaiyarasiJune 18, 2011 at 10:49 PM

    Anjanai Maindan Hanumanin Arumaigalai Vilakkum Arumaiyana Pathivu.. Ahangarathudan Ariyanaiyil Amarndhirundha Raavananin Simhasanathai kaatilum Rama Bakthiyil Sirandha Hanumanin Vaal Aasaname Uyarndhadhu Enbathai Hanumanin Vaal Vazhipadu Unarthiyathu..

    ReplyDelete
  31. Seenivasan KalaiyarasiJune 18, 2011 at 10:59 PM

    Anjanai Maindan Hanumanin Arumaigalai Vilakkum Arumaiyana Pathivu.. Ahangarathudan Ariyanaiyil Amarndhirundha Raavananin Simhasanathai kaatilum Hanumanin Vaal Aasaname Uyarndhadhu Enbathai 'Hanuman Vaal Vazhipadu' Unarthiyadhu..

    ReplyDelete
  32. @ Seenivasan Kalaiyarasi said...//

    கருத்துக்கு மிக்க நன்றி. சரியாகச் சொன்னீர்கள். அஹங்காரத்தால் வீற்றிருந்த ராவணனின் அரியணையைவிட ராமபக்தியில் சிறந்திருந்த ஹனுமனின் வாலாசனம் சந்தேகமின்றி உயர்ந்ததுதான்.

    ReplyDelete
  33. அருமையான பதிவு.
    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. அம்மா,

    அனுமன் வால் வழிபாடு (புகைபடம் வாயிலாக) செய்தோம். பூஜிக்கும் அனைவரும், சகல சௌபாக்கியங் களையும் பெறுவோமாக.

    விழிப்புணர்வுக்கு மிகவும் நன்றி.

    என்றும் அன்புடன்,
    தமிழ் பிரியன்.

    ReplyDelete
  35. Prakash said...//

    அருமையான கருத்துரைக்கு நன்றி மகனே! சிலிர்த்துப்போனேன் எழுத்துக்களைப் பார்த்து.
    அனுமன சகல சகல சௌபாக்கியங்களையும், பலம், நற்புத்திரப்பாக்கியம், வற்றாத சொல்வம், சந்துஷ்டியான வாழ்வு அனைத்தையும் அருள பிரார்த்திக்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  36. intha thagaval miga puthithaga ullathu

    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  37. 608+9+1=618

    அன்று தங்கள் பதிலை பெறும் பாக்யம் எனக்கு மட்டும் இல்லை. ;(

    மேலே ஒருசிலருக்கும், கீழே ஒருசிலருக்கும் மட்டுமே பதில் அளித்துள்ளீர்கள். நடுவில் மாட்டிய எனக்கு இல்லை. பரவாயில்லை.

    கடைசியில் தமிழ்பிரியனான தங்கள் குழந்தைக்கு பதில் அளித்துள்ளதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. ;)

    ReplyDelete