Tuesday, June 14, 2011

உ‌ல்டா' ஹனும‌ன்'
வரலா‌ற்று‌ச் ‌சிற‌ப்பு‌மி‌க்க உ‌ஜ்ஜை‌னிநகர‌த்‌தி‌ல் இரு‌ந்து 15 ‌கி.மீ. தொலை‌வி‌ல் சா‌ன்வெ‌ரா எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு அரு‌கி‌லு‌ள்ள த‌னி‌ச்‌ சிற‌ப்பு‌மி‌க்க ஹனுமன் கோ‌வில் வித்தியாசமானது 


 கோ‌விலி‌ன் ‌சிற‌ப்பு இ‌ங்கு‌ள்ள ஹனுமன் ‌சிலை, தலை‌கீழாக இருப்பதால்உ‌ல்டாஹனும‌ன்' கோ‌யி‌ல் எ‌ன்று அழை‌க்கப்படுகிறது.
ஹனும‌ன் ‌சிலை‌யி‌ன் தலை‌ப்பகு‌தி ம‌ட்டுமே உ‌ள்ளது


கோ‌‌வில் ‌மிக‌ப்பழமையானது ராமாயண கால‌த்‌தி‌ல்... 

அ‌கிராவண‌ன் ராமனையு‌ம் ல‌ட்சுமணனையு‌ம் பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌‌க் கட‌த்‌திச் செ‌ன்றபோது, ஹனுமா‌ன் பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌‌ன்று அவ‌‌ர்க‌ள் இருவரையு‌ம் ‌மீ‌ட்டு வ‌ந்தா‌ர். 

அ‌ப்படி ஹனும‌ன் தலை‌கீ‌ழாக‌ப் பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌‌ப் புற‌ப்ப‌ட்ட
 இட‌ம் இதுதா‌ன் எ‌ன்‌கி‌ன்றன‌ர்.  


இ‌ங்கு‌ள்ள ஹனும‌ன் ‌மிகவு‌ம் ச‌க்‌தி வா‌ய்‌ந்தவ‌ர்.


இ‌ந்த‌‌க் கோ‌‌விலை‌ச் சு‌ற்‌றிலும் உள்ள ஏராளமான துற‌‌விக‌ளி‌ன் வ‌சி‌ப்‌பிட‌ங்களு‌ம் க‌ல்லறைகளு‌ம்  அனை‌த்து‌ம் சுமா‌ர் 1,200 ஆ‌ண்டுக‌ள் பழமையானவை எ‌ன்று தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.


ஹனும‌ன் கோ‌வில் வளாக‌த்‌தி‌ற்கு‌ள் ஆலமர‌ம்,வே‌ப்பமரம், பா‌ரிஜாத‌ம், துள‌சி உ‌‌ள்‌ளி‌ட்ட தாவர‌ங்க‌ள் உ‌ள்ளன. 

இவ‌ற்‌றி‌ல் இர‌ண்டு பா‌ரிஜாத மர‌ங்க‌ள் ‌மிகவு‌ம் பழமையானவை. 
இ‌ந்த மர‌ங்க‌ளி‌ல் ஹனும‌ன் குடி‌யிரு‌ப்பதாக கதைக‌ள் கூறு‌கி‌ன்றன. 
இவ‌ற்‌றி‌ல் ஏராளமான ‌கி‌ளிகளு‌ம் உ‌ள்ளன.

பிர‌ம்மா ஒருமுறை ‌கி‌ளி‌யி‌ன் உட‌லி‌ல் கூடு பா‌ய்‌ந்ததாகவு‌ம், ஹனும‌ன் அ‌ந்த‌க் ‌கி‌ளி‌யி‌ன் மூல‌ம், ராமனை‌ச் ச‌‌ந்‌தி‌க்க துள‌சிதா‌சி‌ற்கு வா‌ய்‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொடு‌‌த்ததாகவு‌ம் கதைக‌ள் கூறு‌கி‌ன்றன.

கோ‌வில் வளாக‌த்‌தி‌ற்கு‌‌ள் ராம‌ர், ‌சீதை, ல‌ட்சுமண‌ன், ‌சிவ‌ன் ,பா‌ர்வ‌தி ஆ‌கியோ‌ரி‌ன் ‌சிலைகளும் உ‌ள்ளன. 
ஒ‌வ்வொரு செ‌வ்வா‌ய்‌க்‌கிழமையு‌ம் ஹனுமனு‌க்கு 
ஆர‌ஞ்சு ‌நிற‌ம் பூச‌ப்படு‌கிறது.

 ஹனுமனை மூ‌ன்று அ‌ல்லது நா‌ன்கு வார‌ங்க‌ள் த‌ரி‌சி‌ப்பத‌ன் மூல‌ம் த‌ங்க‌ள் வே‌ண்டுத‌ல்க‌ள் அனை‌த்து‌ம் ‌நிறைவேறு‌ம் என்பது நம்பிக்கை ..

ப‌க்த‌ர்களை உ‌ல்டா கோ‌விலை நோ‌‌க்‌கி ஹனும‌ன் ஈ‌ர்‌‌ப்பதாகவு‌ம் ந‌ம்‌பி‌க்கை 


சாலை வழி: உ‌ஜ்ஜை‌னி‌யி‌ல் இரு‌ந்து 15 ‌கி.மீ. தொலை‌விலு‌ம், இ‌ந்தூ‌ரி‌ல் இரு‌ந்து 30 ‌கி.மீ. தொலை‌விலு‌ம் உ‌ள்ள இ‌க்கோ‌வி‌லி‌ற்கு பேரு‌ந்து அ‌ல்லது கா‌ர் மூல‌மாக சாலை மா‌ர்‌க்கமாக‌ச் செ‌ல்லலா‌ம். 


‌விமான மா‌ர்‌க்க‌ம்: உ‌ல்டா ஹனும‌ன் கோ‌வி‌லி‌ற்கு அரு‌கி‌ல் உ‌ள்ள ‌விமான ‌நிலைய‌ம் இ‌ந்தூ‌ர் (30 ‌கி.மீ.)

[5280_1039809373796_1782415579_81479_7768342_n.jpg]

35 comments:

 1. மயில் ராவணன் கதை கேள்விப் பட்டிருக்கிறேன். அது சம்பந்தமான தலைகீழ் ஆஞ்சநேயர் புதுசு. நன்றிங்க

  ReplyDelete
 2. எங்கிருந்த்துதான் இத்தனை தகவல்கள் உங்களுக்கு கிடைக்கிறது சகோ. ஹையா..நான் தான் முதல் ஆள் ..கருத்தை சொல்வதற்கு..

  ReplyDelete
 3. @ எல் கே said...
  மயில் ராவணன் கதை கேள்விப் பட்டிருக்கிறேன். அது சம்பந்தமான தலைகீழ் ஆஞ்சநேயர் புதுசு. நன்றிங்க//

  கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 4. @குணசேகரன்... said...//

  முதல் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 5. பொதுவாக தமிழில் உல்டா என்பது
  பொய் என்பதுபோ ல் அர்த்தமாகி இருக்கிறது
  நான் கடந்த மாதம் டெல்ஹி சென்றிருந்த போதுதான்
  அது தலைகீழ் என அர்த்தம் என்றே புரிந்தது
  வழக்கம்போல் உல்டா அனுமன் பதிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. @ Ramani said...
  பொதுவாக தமிழில் உல்டா என்பது
  பொய் என்பதுபோ ல் அர்த்தமாகி இருக்கிறது//

  ஆம். உல்டா..புல்டா என்று தொலைக்காட்சியில் கூட ஒரு தொடர் வந்த ஞாபகம் இருக்கிறது.

  கருத்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 7. தலைகீழ் ஆஞ்சநேயர் வித்தியாசமான விக்கிரகம்..தலைகீழாக நின்றாவது நம் வேண்டுதலை நிறைவேற்றி விடுவாரோ

  ReplyDelete
 8. @ ஆர்.கே.சதீஷ்குமார் said...
  தலைகீழ் ஆஞ்சநேயர் வித்தியாசமான விக்கிரகம்..தலைகீழாக நின்றாவது நம் வேண்டுதலை நிறைவேற்றி விடுவாரோ/

  புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன உங்கள் கருத்துரைகள். நன்றி ஐயா.

  ReplyDelete
 9. @kavitendral panneerselvam to me

  சகோதரிக்கு வணக்கம் !உல்டா ஹனுமான் 24
  கேரட் சவரன் கோல்ட்//

  நன்றி.

  ReplyDelete
 10. அந்த பாரிஜாதம் என்னும் பவழமல்லிப்பூ பார்க்கவே அழகோ அழகுதாங்க.

  அதன் மணம் மனதைக்கொள்ளை கொள்ளும்.

  நாங்கள் முன்பிருந்த குவார்டர்ஸ்ஸில் எங்கள் வீட்டு வாசலில், பவழமல்லிச்செடி, நந்தியாவட்டை & செம்பருத்தி மூன்றும் ஏராளமாக பூத்துக்குலுங்கும்.

  பாரிஜாத மரத்தின் வேரினில் ஆஞ்சநேயர் எப்போதும் குடிகொண்டுள்ளதாக ஸ்லோகமே உள்ளது. மீண்டும் வருவேன். vgk

  ReplyDelete
 11. 2
  =
  ஸ்ரீராமஜயம்


  ஆஞ்சநேய மதிபாடலானனம்
  காஞ்சனாத்ரி கமணீய விக்ரஹம்!

  பாரிஜாத தருமூல வாஸினம்
  பாவயாமி பவமான நந்தனம்!!

  யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
  தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்ஜலிம்!

  பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்,
  மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்!!

  மனோஜவம் மாருத துல்ய வேகம்
  ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்!

  வாதாத்மஜம் வானர யூதமுக்யம்,
  ஸ்ரீராம தூதம் சிரஸா நமாமி!!

  -o-o-o-o-o-o-o-o-

  மூன்றாவது வரியில் வரும்
  பாரிஜாத = பவழமல்லி
  தரு = மரம்
  மூல = வேர் [Root]
  வாஸினம்= வாஸம் செய்பவர்
  (வசிப்பவர்)


  அன்புடன்
  vgk

  ReplyDelete
 12. //இ‌ந்த‌க் கோ‌விலி‌ன் ‌சிற‌ப்பு இ‌ங்கு‌ள்ள ஹனுமன் ‌சிலை, தலை‌கீழாக உ‌ள்ளது.//

  அகிராவணனிடமிருந்து இராம லக்ஷ்மணரை பாதாள லோகத்திலிருந்து மீட்டு வர

  //ஹனும‌ன் தலை‌கீ‌ழாக‌ப் பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌‌ப் புற‌ப்ப‌ட்ட இட‌ம் இதுதா‌ன் எ‌ன்‌கி‌ன்றன‌ர்.//

  பொதுவாகவே மரத்தில் உள்ள வானரங்களை நான் பலமுறை பார்த்து பலவித ஆராய்ச்சிகள் செய்ததுண்டு. தலைகீழாகத்தொங்கும், குட்டிக்கரணம் போடும். தலைகீழாக குனிந்து ஒரு மாதிரியாக போஸ் கொடுக்கும். அதன் கையில் முகம்பார்க்கும் கண்ணாடி (Mirror) கிடைத்துவிட்டால் நன்றாக குனிந்து குனிந்து அழகு பார்த்துக்கொள்ளும்.

  எனவே ஹனுமனின் தலைகீழ்ப் பயணமும் தரிஸனமும், நியாயமானதாகவே, ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

  vgk

  ReplyDelete
 13. @ வை.கோபாலகிருஷ்ணன் said.//

  பாரிஜாத தருமூல வாஸினம்
  பாவயாமி பவமான நந்தனம்!!//

  நன்றி ஐயா. சிரத்தையுடன் ஸ்லோகம் பகிர்ந்த தங்களின் உழைப்பிறகு. அனுமன் கோவில்களில் அர்ச்சனை செய்யுப் போது இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 14. அபராஜித பிங்காக்ஷ
  நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித
  ப்ரஸ்தானம்ச கரிஷ்யாமி
  ஸித்திர் பவதுமே ஸதா!

  என்று முடியும் ஒரு ஸ்லோகம் உள்ளது. அதன் கடைசி நான்கு
  வரிகள் இவை.

  [ஹனுமான் அஞ்சனாசுனுஹூ, வாயு புத்ரோ மஹாபலஹா! என்று ஆரம்பிக்கும் அந்த ஸ்லோகம்.]

  மேலே கூறியுள்ள 4 வரிகளை மட்டுமாவது ஒரு விசிடிங் கார்டு போல எழுதி, நம் கைப்பையிலோ, பர்ஸிலோ எப்போதும் வைத்துக்கொண்டும், வாயினால் உச்சரித்துக்கொண்டும் பயணம் செய்தால் நல்லது. நடக்கும் போதோ, வாகனங்களில் செல்லும் போதோ, விபத்துக்கள் ஏற்படாமல் இன்பப்பயணமாக இருப்பதோடு மட்டுமின்றி, போகும் கார்யம் வெற்றிகரமாக ’கார்யஸித்தி’ யுடன் முடியும் என்பது என் அனுபவம்.

  உல்டா ஹனுமானை தரிஸிக்க
  இந்தூருக்கோ, உஜ்ஜைனிக்கோ புறப்பட்டுச்செல்ல இருப்பவர்களுக்கு பயன் படுமே என்று எழுதியுள்ளேன்.

  இன்றுள்ள போக்குவரத்து நெரிசலில், சாதாரணமாக வீட்டைவிட்டுப்புறப்பட்டு காய்கறி வாங்கச்சென்றாலே, சொல்லப்பட வேண்டிய மிகவும் முக்கியமான ஸ்லோகம் இது.

  அன்புடன் vgk

  ReplyDelete
 15. @ வை.கோபாலகிருஷ்ணன் said...//

  வானரங்களை நான் பலமுறை பார்த்து பலவித ஆராய்ச்சிகள் செய்ததுண்டு. //

  வாரிசுகளான நாம் ஆராய்சி செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவுக்ள் அருமை. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 16. @வை.கோபாலகிருஷ்ணன் s//
  @அபராஜித பிங்காக்ஷ
  நமஸ்தே ஸ்ரீ ராமபூஜித
  ப்ரஸ்தானம்ச கரிஷ்யாமி
  ஸித்திர் பவதுமே ஸதா!//

  மிக பயனுள்ள அருமையான எளிமையான அருள் நிறைந்த ஸ்லோகப் பகிர்வுக்கு நமஸ்காரம் ஐயா.

  ReplyDelete
 17. @வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on your post "உ‌ல்டா' ஹனும‌ன்'":

  கடைசி படத்தில்
  கைலாசபதியான ஸ்
  ரீபார்வதி பரமேஸ்வரரை, மலைஉச்சியில் அமர வைத்துக்காட்டியுள்ளது
  அருமையாக உள்ளது.

  மொத்தத்தில் தங்களின் இந்தப்பதிவு
  எனக்கு மிகவும் பிடித்த பாரிஜாதப்புஷ்பத்தின் கும்மென்ற மணத்துடன் வெகு அருமையாக உள்ளது.

  தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி வாழ்க, வாழ்க, வாழ்க!!!

  பிரியமுள்ள vgk //
  Thank you sir.

  ReplyDelete
 18. நல்ல பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. @Rathnavel said...//

  வாழ்த்துக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 20. கருத்துக்கு நன்றிங்க.

  ReplyDelete
 21. தகவல் பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 22. உல்டா ஹனுமான் - புதிய செய்தி - ஆன்மீகத்தி ஈடு பாடு கொண்டு நாட்டில் உள்ள அத்தனை கோவில்களைப் பற்றியும் எழுதுவது அரிய செயல். நல்ல செயல் - நல்வாழ்த்துகள் இராஜ ராஜேஸ்வரி. நட்புடன் சீனா

  ReplyDelete
 23. @cheena (சீனா) said...//

  நல்வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 24. @ சந்ரு said...
  தகவல் பகிர்வுக்கு நன்றிகள்//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 25. @மாலதி said...
  கருத்துக்கு நன்றிங்க.//

  வாங்க மாலதி. நன்றி.

  ReplyDelete
 26. "தலைகீழ் ஆஞ்சநேயர்" அரிய தர்சனம்.

  ReplyDelete
 27. அற்புத
  கருத்துக்களும்
  அபார
  நடையும்
  அதிசய
  தகவல்களும்
  சங்கமித்த
  சந்தன
  பதிவு
  பக்தி மணம்
  மனமெல்லாம்...........
  நன்றி

  ReplyDelete
 28. @மாதேவி said...
  "தலைகீழ் ஆஞ்சநேயர்" அரிய தர்சனம்./

  வாங்க மாதேவி. நன்றி.

  ReplyDelete
 29. @A.R.ராஜகோபாலன் said...
  அற்புத
  கருத்துக்களும்
  அபார
  நடையும்
  அதிசய
  தகவல்களும்
  சங்கமித்த
  சந்தன
  பதிவு
  பக்தி மணம்
  மனமெல்லாம்...........
  நன்றி//

  அருமையாய் கருத்து கூறியதற்கு நன்றி.

  ReplyDelete
 30. அனுமன் எத்தனை கோலத்தில் இருந்தாலும் எங்கள் வீட்டு ஃபேவரிட் நங்க நல்லூர் ஆஞ்சநேயர்தான். வட நாட்டில் சிந்தூரம் கணபதிக்கும், காசியில் பைரவருக்கும் தடவி பார்த்துள்ளேன். உத்தரகோசமங்கைக்கு பிறகு ராமேஸ்வரம் என்று எதிர்பார்த்தேன்.

  ReplyDelete
 31. @சாகம்பரி said...//

  வாங்க சாகம்பரி. நங்கநல்லூர், ராமேஸ்வரம் கருத்தில் கொள்ள வைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 32. கோவிலுக்கு சென்று தரிசிக்க இயலாதவர்களுக்காக "உர்ச்சவ சுவாமிகள்" கோவிலுக்கு வெளியில் வலம் வரும். தங்களின் "தளத்தில்" வீ ட்டில் இருந்தபடி பல கோவில்களை தரிசனம் செய்ய உதவுவதற்கு என் தாள்பணிந்த வணக்கங்கள்------- பத்மாசூரி.

  ReplyDelete
 33. @சந்திர வம்சம் said...//
  தங்களின் "தளத்தில்" வீ ட்டில் இருந்தபடி பல கோவில்களை தரிசனம் செய்ய உதவுவதற்கு என் தாள்பணிந்த வணக்கங்கள்------- பத்மாசூரி.//

  என் தாள்பணிந்த வணக்கங்கள்.. நன்றிகள்..

  ReplyDelete
 34. இதுதான் பாரிஜாதப் பூவா ?

  ReplyDelete
 35. 594+6*+1=601

  ;))))) சந்தோஷமான நகைச்சுவையான பதில்களுக்கு நன்றிகள் ;)))))

  *1 out of 6 is not appearing but it is there in your reply as 'message sent by me'

  ReplyDelete