Friday, June 17, 2011

தாமரையாள் தங்கும் தாமரை ஆலயம்அமைதி ,செல்வம், புகழ், இனிமை முதலான அஷ்ட ஐஸ்வர்யங்களும் அளிக்கும் சின்னமாக தாமரை மலர் விளங்குகிறது.

தாமரையில் கொலுவிருப்பவளாக, தாமரையைக் கையில் ஏந்தியவளாக ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்கிறோம்.

ஸ்ரீபங்கஜ நாயகனாக பத்ம நாபனாக, கமலக்கண்ணனாக பாதரவிந்தனாக கராரவிந்தனாக முகாரவிந்தனாக இதயக்கமல வாசனாக மஹாவிஷ்ணுவை துதிக்கிறோம்
.
கராரவிந்தேந பதாரவிந்தம் முகாரவிந்தேந விநிவேசயந்தம்
வடஸ்யபத்ரஸ்ய புடே சயாநம் பாலம் முகுந்தம் மநசா ஸ்மராமி

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் அருள்மிகு ஸ்ரீ வெங்கடேஸ்வரர் தாமரை ஆலயம் தாமரை வடிவில் அமைந்திருப்பது புகழ்பெற்ற சிறப்பம்சம் 

ஆச்சாரியர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சைன ஜீயர் சுவாமியால் தாமரைக் கோவில் ஃபேர்பெக்ஸ் பகுதியில் கட்டப்பட்டது.


தாமரையின் எட்டு இதழ்கள் விரிக்கப்பட்ட வடிவில், குளத்தின் நடுவில் அமைந்துள்ளது. தாமரையின் எட்டு இதழ்களும் அஷ்டாட்சர மந்திரத்தை
 (ஓம் நமோ நாராயணாய) உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

சுற்றுப்புறத்தில் உள்ள தீமைகளை அழித்து சுத்தத்தை ஏற்படுத்துவது தாமரையின் இயல்பாகும். 

சேற்றிலே மலர்ந்தாலும் தூய்மை கெடாது. 
தண்ணீரில் மலர்ந்தாலும் நீர் ஒட்டாது.


சுமார் 18 ஏக்கர் பரப்பில் அழகிய சூழலில் அமந்து, 2005 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி அன்று சிறப்பு சுற்றுப்புற அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

பாலாயத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வரர், ராம பரிவாரங்கள், தாயார், சுதர்சன நரசிம்மசாமி, ஆண்டாள், போன்ற தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலேயே இங்குதான் நம்மாழ்வார், பாகவதஸ்ரீ ராமானுஜர், மணவாள மாமுனி ஆகியோருக்கு விக்ரஹங்கள் அமைக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்ரீமன் நாராயணனைப் போன்று ஆழ்வார்களுக்கும் அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்கள்.

இணைய தளம் :  www. svlotustemple.org

சாந்திகிரி பர்ணசாலா

திருவனந்தபுரம்: முப்பது கோடி ரூபாய் செலவில் தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள சாந்திகிரி பர்ணசாலாவை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் திறந்து வைத்தார்.
 • தாமரை வடிவில் அமைந்து முழுமை பெற்றுள்ள பர்ணசாலா முழுக்க முழுக்க வெண் பளிங்கு கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. சாந்திகிரி பர்ணசாலா கட்டடம் தாமரைப்பூவின் இதழ்கள் விரிந்து இருப்பது போல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 இதழ்களைப் போல் உள்ள கட்டடம், 91 அடி உயரமும், 84 அடி அகலமும் கொண்டது. கட்டடத்தின் மேல் பகுதியில் 12 இதழ்களைப் போன்றும், கீழ்பகுதியில் ஒன்பது இதழ்களைப் போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
 • மேல்பகுதியில் உள்ள இதழ்கள் 41 அடியும், கீழ்பகுதியில் உள்ள இதழ்கள் 31 அடியும் நீளம் கொண்டவை.  இக்கட்டடம் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.  
 • இந்தியாவிலிருந்து முதன்முறையாக "புனிதர்' பட்டம் பெற்ற சகோதரி அல்போன்சாவின நூற்றாண்டு விழா, கோட்டயத்தில் நடந்தது. இந்த விழாவில், பிரதிபா பாட்டீல் பங்கேற்றார். 
 • திருவனந்தபுரத்தில்,  நடந்த நிகழ்ச்சியில், "தாமரைக் கோவிலை' பிரதிபா பாட்டீல்நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.. 


35 comments:

 1. படங்கள் நல்லா இருக்கு நன்றிங்க

  ReplyDelete
 2. தாமரையாள் தங்கும் தாமரை ஆலயம் தரிசித்தேன்
  தொடர்ந்து தரிசிக்க இணைய தள முகவரி
  தந்தமைக்கும் நன்றி
  தங்களுக்கு எந்த நாளும் இனிய நாளாக அமைய
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. @ எல் கே said...
  படங்கள் நல்லா இருக்கு நன்றிங்க//

  Thank you Sir.

  ReplyDelete
 4. @Ramani said...
  தாமரையாள் தங்கும் தாமரை ஆலயம் தரிசித்தேன்
  தொடர்ந்து தரிசிக்க இணைய தள முகவரி
  தந்தமைக்கும் நன்றி
  தங்களுக்கு எந்த நாளும் இனிய நாளாக அமைய
  மனமார்ந்த வாழ்த்துக்கள்..//

  Thank you very much for kind words.

  ReplyDelete
 5. Dear thozi,
  marvellous presentation is rendered by you.It will direct everyone in devotional way.

  ReplyDelete
 6. படங்களும், கட்டுரையும் நன்றாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 7. தலைப்பைப்பார்த்ததும்
  செந்தாமரையே! செந்தேன் நிலவே!!
  பாடலை வாய் முணுமுணுத்தவாறு வரிசையாக படங்களையும், பதிவின் நீள அகலமும் கண்டு ரஸித்தேன்.

  இனிதான் முழுவதும் படித்துப்பார்த்து
  ஆழம் கண்டுபிடிக்க வேண்டும்.

  மீண்டும் வருவேன்.

  [ஆல இலையில் படுத்திருக்கும் குட்டிக்கிருஷ்ணனின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது]

  ReplyDelete
 8. படங்கள் நல்லா இருக்கு

  ReplyDelete
 9. இன்றை ஆன்மீக பதிவையும் நான் ரசித்தேன்..

  தாமரையாளின் அருளையும் பெற்றேன்...

  ReplyDelete
 10. //அமைதி ,செல்வம், புகழ், இனிமை முதலான அஷ்ட ஐஸ்வர்யங்களும் அளிக்கும் சின்னமாக தாமரை மலர் விளங்குகிறது.//

  புரிகிறது, புரிகிறது.
  அது தங்களின் சின்னமாக இருப்பதிலிருந்தே ஏற்கனவே நான் நினைத்தது தான்.இப்போது தெளிவானது.

  ReplyDelete
 11. //தாமரையின் எட்டு இதழ்களும் அஷ்டாட்சர மந்திரத்தை
  (ஓம் நமோ நாராயணாய) உணர்த்தும் //

  //சேற்றிலே மலர்ந்தாலும் தூய்மை கெடாது. தண்ணீரில் மலர்ந்தாலும் நீர் ஒட்டாது.//


  ஆஹா! ஆஹா!! அருமையாக காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது.

  ReplyDelete
 12. @ tamilvirumbi said...
  Dear thozi,
  marvellous presentation is rendered by you.It will direct everyone in devotional way.//

  அப்படி ஆனால் மகிழ்ச்சிதான்.
  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 13. @ வெங்கட் நாகராஜ் said...
  படங்களும், கட்டுரையும் நன்றாக இருக்கிறது. பகிர்ந்தமைக்கு நன்றி.//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 14. தாமரைத் தடாகத்தில் நீரின் அசைவுடன், செந்தாமரையை காட்டியிருக்கும் படம் அழகோ அழகு.

  வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீலக்ஷ்மி முதலான பல அரிய படங்களை வழக்கம்போல தரிஸனம் செய்ய அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்.

  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
  அன்புடன் vgk

  ReplyDelete
 15. @வை.கோபாலகிருஷ்ணன் said//
  ஆல இலையில் படுத்திருக்கும் குட்டிக்கிருஷ்ணனின் அழகு மனதைக் கொள்ளை கொண்டது]/

  குட்டிக்கிருஷ்ணனுக்கு நன்றி.

  ReplyDelete
 16. அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் // நாமெல்லாம் படிக்கத்தான் முடியும்..

  நன்றி தோழி பகிர்வுக்கு..

  ReplyDelete
 17. @ சமுத்ரா said...
  படங்கள் நல்லா இருக்கு//

  நன்றி.

  ReplyDelete
 18. @ கவிதை வீதி # சௌந்தர் said...
  இன்றை ஆன்மீக பதிவையும் நான் ரசித்தேன்..

  தாமரையாளின் அருளையும் பெற்றேன்...//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 19. @ வை.கோபாலகிருஷ்ணன் //

  அனைத்து கருத்துக்களுக்கும் மனம்நிறைந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 20. @ !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் // நாமெல்லாம் படிக்கத்தான் முடியும்..

  நன்றி தோழி பகிர்வுக்கு.//

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 21. அனைத்துப் படங்களும் அருமை. குறிப்பாக மாறிக் கொண்டே இருக்கும் கடைசி படத் தொகுப்பு.

  ReplyDelete
 22. இரண்டு நாளாக வர முடிய வில்லை ஆனால் இன்று வெள்ளிகிழமை மகாலட்சுமி தரிசனம் காண வந்து விட்டேன்

  ReplyDelete
 23. சுற்றுப்புறத்தில் உள்ள தீமைகளை அழித்து சுத்தத்தை ஏற்படுத்துவது தாமரையின் இயல்பாகும். சேற்றிலே மலர்ந்தாலும் தூய்மை கெடாது. தண்ணீரில் மலர்ந்தாலும் நீர் ஒட்டாது.


  உண்மை மிக உண்மை
  துன்பங்களும் துயரங்களும் நம்மை சூழ்திருந்தாலும் இறைவனை யன்றி எதனையும் நினைக்கதிருக்கும் சரணாகதி தத்துவத்தை சொல்லும் சூட்சமம் , அற்புதம் மேடம்

  ReplyDelete
 24. சுற்றுப்புறத்தில் உள்ள தீமைகளை அழித்து சுத்தத்தை ஏற்படுத்துவது தாமரையின் இயல்பாகும். சேற்றிலே மலர்ந்தாலும் தூய்மை கெடாது. தண்ணீரில் மலர்ந்தாலும் நீர் ஒட்டாது.


  உண்மை மிக உண்மை
  துன்பங்களும் துயரங்களும் நம்மை சூழ்திருந்தாலும் இறைவனை யன்றி எதனையும் நினைக்கதிருக்கும் சரணாகதி தத்துவத்தை சொல்லும் சூட்சமம் , அற்புதம் மேடம்

  ReplyDelete
 25. மனம்
  மகிழ
  மஹாலக்ஷ்மி
  தரிசனம்
  தந்த
  உங்களுக்கு
  மனம்
  நிறைந்த
  வந்தனம்

  ReplyDelete
 26. "எக்ககோலத்தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
  அக்கோலத்து அவ்வுருவே ஆம்"---- காரைக்கால் அம்மையார்.
  வெள்ளியன்று மகாலஷ்மி தரிசனம் தந்தமைக்கு பணிவான நன்றி.

  ReplyDelete
 27. @ ஸ்ரீராம். said...
  அனைத்துப் படங்களும் அருமை. குறிப்பாக மாறிக் கொண்டே இருக்கும் கடைசி படத் தொகுப்பு.//

  ரசனக்கு நன்றி.

  ReplyDelete
 28. @ A.R.ராஜகோபாலன் said...
  இரண்டு நாளாக வர முடிய வில்லை ஆனால் இன்று வெள்ளிகிழமை மகாலட்சுமி தரிசனம் காண வந்து விட்டேன்//

  தரிசனத்திற்கு நன்றி.

  ReplyDelete
 29. @ A.R.ராஜகோபாலன் said...//
  இறைவனை யன்றி எதனையும் நினைக்கதிருக்கும் சரணாகதி தத்துவத்தை சொல்லும் சூட்சமம் , அற்புதம் மேடம்//

  மாம் ஏகம் சரணம் வ்ரஜ்..

  ReplyDelete
 30. @ A.R.ராஜகோபாலன் said...//

  அனைத்துக் கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.

  ReplyDelete
 31. @சந்திர வம்சம் said...//
  கருத்துக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 32. அருமை அருமை, உங்கள் தளத்துக்கு வந்தாலே மனம் குளிர்கிறது

  ReplyDelete
 33. தாமரை ஆலயம் பற்றி இப்போதுதான் அறிகிறேன். செல்லும் ஆவல் ஏற்பட்டுள்ளது. படங்கள் யாவும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 34. 618+5+1=624

  ;))))) ஒரு பதிலில் அதிக சுவாரஸ்யம் உணர்ந்தேன். மிக்க நன்றி ;)))))

  ReplyDelete
 35. சாந்திகிரி பர்ணசாலா படமும் விபரங்களும் புதிது.அதன் அழகு அங்கு சென்று பார்க்க தூண்டும் விதம் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete