Saturday, June 18, 2011

பாந்தமாய் அருளும் பாண்டவ தூத ஹரி

[Image1]
கிருஷ்ணாவதாரத்தின் நோக்கமே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது தான். இதற்காக, பகவான் கிருஷ்ணன் நிகழ்த்திய லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல.
krishna scraps

ராஜ கோபுரம்

[Gal1]
கோயில் வலது பிரகாரம்




 பாண்டவர்களைக் காக்க அவர் லீலைகளை நிகழ்த்தி விட்டு, 
"பாண்டவ தூதப் பெருமாள்" என்ற பெயரில் பூலோகத்தில் வாசம் கொண்டார்.


பாண்டவ தூதப் பெருமாள் கோயில் - பெரிய காஞ்சிபுரம்
 -பெரிய காஞ்சியில் கங்கைகொண்டான் மண்டபத்தில் உள்ளது.

மூலவர்: பாண்டவதூதர். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்.
தாயார்: ருக்மணி, சத்யபாமா.
விமானம்: பத்ர விமானம், வேத கோடி விமானம்.
[Gal1]
மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
தீர்த்தம்: மத்ஸய தீர்த்தம்.
மங்களாசாசனம்: திருமழிசையாழ்வார்.
மூலவர் 25 அடி உயர பிரம்மாண்டமான திருமேனி. 
சிறிய சன்னதி. பெரிய பெருமாள்.

தல வரலாறு: கிருஷ்ணாவதாரத்தில் பாண்டவர்களுக்காக ஐந்து வீடாவது கேட்டு வாங்கி வர, துரியோதனனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார். 

அவரை அவமானப் படுத்த நினைத்த துரியோதனன், அவர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன்மீதுபசுந்தழைகளை போட்டு மறைத்தான்.  

கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில தயாராக நின்ற மல்லர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.




பாரத யுத்தம் முடிந்த வெகுகாலத்திற்கு பின் ஜனமேஜயர் என்ற மகாராஜா, வைசம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்க வந்தார். 

அப்போது ராஜா, "கிருஷ்ணர் தூது சென்றபோது நிலவறையில் அமர்ந்த கோலத்தில் எடுத்த விஸ்வரூப தரிசனத்தை நானும் தரிசிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை கூறுங்கள்," என வேண்டினார். 

ரிஷி கூறிய அறிவுரையின் படி இத்தலத்தில் தவம் செய்து, அந்த தரிசனத்தைப் பெற்றார்.



[Gal1]
மகாமண்டபம்


 இங்குள்ள கல்வெட்டுக்களில் இந்த கிருஷ்ணரின் பெயர் "தூதஹரி" என குறிக்கப்பட்டுள்ளது.  

திருதராஷ்டிரனுக்கு கண்பார்வை அளித்து தனது விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ண பகவான் இத்தலத்தில் காட்டியருளினார். 

25 அடி உயரமுடைய அவரது சிலை அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிப்பது பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம். 

ருக்மிணி, பாமா அருகில் உள்ளனர். 

யோக நரசிம்மர் இங்கு அருள்கிறார்.

இத்தலத்தில் "அருளாளப்பெருமாள் எம்பெருமானார்" என்ற ஆச்சாரியார் எழுந்தருளியுள்ளார். இவர் யக்ஞமூர்த்தி என்ற பெயருடன் ராமானுஜருடன் 18 நாள் வாதம் செய்து, அவரைச் சரணடைந்து, பின் அனேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கினார். 

மணவாள மாமுனிகளும் இங்கு அருள்பாலிக்கிறார்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் 


ரோகிணி நட்சத்திரம்: ரோகிணிதேவி கிருஷ்ண பகவானை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். 

சந்திரன் தனது 27 நட்சத்திர தேவியர்களில் முதலில், ஞான சக்திகளை கொண்ட ரோகிணியையும், அக்னி சக்திகளை கொண்ட கார்த்திகையையும் மணந்த பிறகே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்தார். 

ரோகிணி தனக்கு ஞான சக்திகளையும், விஸ்வரூப தரிசனமும் கொடுத்த கிருஷ்ணனை இத்தலத்தில் சூட்சும வடிவில் தினமும் வழிபாடு செய்வதாக ஐதீகம். 

எனவே ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து கிருஷ்ணனை தரிசித்து வந்தால் எந்தக் கஷ்டமாக இருந்தாலும் விலகிவிடும் என்பது நம்பிக்கை. 

கிருஷ்ணரே ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிருஷ்ணர் தன் பாதங்களை பூமியில் அழுத்தி "விஸ்வபாதயோக சக்திகளை' கொண்டு  அருளும் தலம். 

எனவே இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்பவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளும் துடிப்புடன் செயல்படும். 

சோதனைகளும், துன்பங்களும் விலகும். 

புதன், சனி, ரோகிணி, அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளில் இங்கு வழிபடுவது சிறப்பு.
சக்கரத்தாழ்வார்
[Gal1]

யோக நரசிம்மர்
[Gal1]
கிருஷ்ண ஜெயந்தி,  தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம். அருளாளப் பெருமாள் எம்பெருமானாருக்காக கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம்.

திறக்கும் நேரம்: காலை 7-11மணி, மாலை 4-7.30மணி.


இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரில் அமைந்துள்ளது.

23 comments:

  1. வழக்கம்போல் படமும் பதிவும் அருமை
    குறிப்பாக ரோகிணி நட்சத்திரத்திற்கு
    கொடுத்திருந்த விளக்கம் புதிய தகவல்
    நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //கிருஷ்ணாவதாரத்தின் நோக்கமே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவது தான். இதற்காக, பகவான் கிருஷ்ணன் நிகழ்த்திய லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல.//

    ஆம். குட்டியூண்டு கிருஷ்ணனின் பால்ய வயது லீலைகளே படிக்கப்படிக்க பரவசம் தருபவை. தொட்டில் குழந்தையாய் இருக்கும் போது சகடாசுரன், பூதனை வதங்களில் ஆரம்பிக்கும் அவன் லீலைகள் கடைசியில் குருக்ஷேத்ர பாரதப்போர் முடியும்வரை மிகவும் அற்புதமானவை தான்.

    பாண்டவர்களுக்கு சாதகமாய், பாந்தமாய் தூதுசென்று அருளிய அந்த தூத ஹரியை நினைப்போம். அவன் அருள் நமக்கும் கிடைக்கட்டும்.

    அழகிய படங்கள், ஸ்தல வரலாறு முதலியன வழக்கம் போல மிகவும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள்.

    காஞ்சீபுரத்தில் ஸ்ரீ மஹாபெரியவா இருந்தபோது, பலமுறை குடும்பத்துடன் தரிஸனத்திற்குச்சென்று, பல நாட்கள் தங்கியிருந்து, அங்குள்ள அனைத்துக் கோயில்களையும், கண் குளிர காணும் பாக்யம் பெற்றுள்ளேன்.

    ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன்
    ஏகாம்பரேஸ்வரர்
    கச்சபேஸ்வரர்
    உலகளந்த பெருமாள்
    கஞ்சி வரதராஜ பெருமாள்
    குமரக்கோட்டம் முருகன்
    கைலாஸநாதர் கோயில்
    முதலியன மிகவும் பிரசித்தி பெற்றவை.

    காஞ்சீபுரத்தில் உள்ள எந்த சிவன் கோயிலிலும் அம்பாளுக்கு என்று தனி சந்நதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாளுக்கு தனி கோயில் மட்டுமே; அதுவே மிகப்பிரபலமான ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் ஆலயம்.

    பதிவுக்கு நன்றி.

    நட்புடன் vgk

    ReplyDelete
  3. கிருஷ்ண கிருஷ்ண சனிக்கிழமை ஸ்பெஷலா

    ReplyDelete
  4. குழலூதும் கண்ணன் படம் அழகோ அழகு .உங்கள் பதிவுகள் என் டாஷ் போர்டில் வர மாட்டேன்கிறதே ?.
    பதிவும் படம்களும் அருமை

    ReplyDelete
  5. படிக்க படிக்க பேரானந்தம் தரும் பதிவு
    கிருஷ்ணனின் லீலைகளை சொல்லவும் கேக்கவும் புண்ணியம்
    சொன்னதால் உங்களுக்கு புண்ணியம்
    கேட்டதால் எங்களுக்கு புண்ணியம்

    ReplyDelete
  6. துரியோதனனிடம் பகவான் கிருஷ்ணன் தூது சென்றார். அவரை அவமானப் படுத்த நினைத்தான். துரியோதனன், அவர் அமர்வதற்காக போடப் பட்ட ஆசனத்தின் கீழே, ஒரு நிலவறையை உண்டாக்கி அதன்மீதுபசுந்தழைகளை போட்டு மறைத்தான். கண்ணனும் வந்து அமர்ந்தார். திட்டப்படி நிலவறை சரிந்து உள்ளே விழுந்தது. கண்ணன் உள்ளே விழுந்தார். அங்கே அவரைத் தாக்க சில மல்யுத்த வீரர்கள் தயாராக நின்றனர். அந்த மல்லர்களை அழித்து விஸ்வரூபம் எடுத்தார் கிருஷ்ணர்.


    இது எனக்கு புதிய விஷயம் மேடம்
    இது மாதிரியான விஷயங்கள் மனதுக்கு
    இன்பத்தை அள்ளி அள்ளித் தருகின்றன
    நன்றி உங்களுக்கு

    ReplyDelete
  7. @Ramani said...
    வழக்கம்போல் படமும் பதிவும் அருமை
    குறிப்பாக ரோகிணி நட்சத்திரத்திற்கு
    கொடுத்திருந்த விளக்கம் புதிய தகவல்
    நன்றி வாழ்த்துக்கள்//

    Thank you sir.

    ReplyDelete
  8. @ வை.கோபாலகிருஷ்ணன் said...//
    காஞ்சீபுரத்தில் உள்ள எந்த சிவன் கோயிலிலும் அம்பாளுக்கு என்று தனி சந்நதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாளுக்கு தனி கோயில் மட்டுமே; அதுவே மிகப்பிரபலமான ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் ஆலயம்.

    பதிவுக்கு நன்றி.//
    Thank you for sharing.

    ReplyDelete
  9. @ ஆர்.கே.சதீஷ்குமார் said...
    கிருஷ்ண கிருஷ்ண சனிக்கிழமை ஸ்பெஷலா சனிக்கிழமை ஸ்பெஷலா//

    கிருஷ்ண! கிருஷ்ண!!
    Thank you for comment.

    ReplyDelete
  10. @angelin said...
    குழலூதும் கண்ணன் படம் அழகோ அழகு .உங்கள் பதிவுகள் என் டாஷ் போர்டில் வர மாட்டேன்கிறதே ?.
    பதிவும் படம்களும் அருமை//

    Yes. my posts not publish in Dashboard and not able to correct it. Thank you for comment.

    ReplyDelete
  11. @ A.R.ராஜகோபாலன் said...
    படிக்க படிக்க பேரானந்தம் தரும் பதிவு
    கிருஷ்ணனின் லீலைகளை சொல்லவும் கேக்கவும் புண்ணியம்
    சொன்னதால் உங்களுக்கு புண்ணியம்
    கேட்டதால் எங்களுக்கு புண்ணியம்//

    Thank you.

    ReplyDelete
  12. @
    A.R.ராஜகோபாலன் said...//

    இது எனக்கு புதிய விஷயம் மேடம்
    இது மாதிரியான விஷயங்கள் மனதுக்கு
    இன்பத்தை அள்ளி அள்ளித் தருகின்றன
    நன்றி உங்களுக்கு//

    Thank you for comments.

    ReplyDelete
  13. மணிராஜ்-இராஜராஜேஸ்வரி

    http://bloggersbiodata.blogspot.com/2011/06/blog-post_3260.html

    ReplyDelete
  14. Seenivasan KalaiyarasiJune 18, 2011 at 11:25 PM

    Enganamavathu Mahabharatha Porinai Thavirka Vendum Ennum Seeriya Nokkathudan Panja Pandavargalukku Thoodhu Sendra Parandhamanin Perunthanmaiyai Pottrum Bakthi Manam Kamazhum Pathivu..

    ReplyDelete
  15. @ Seenivasan Kalaiyarasi said...//
    அருமையான சிரத்தையான கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  16. இங்கு ஒருமுறை சென்று வந்துள்ளேன். கிருஷ்ணரைத் தாக்க நிலவறையில் மல்லர்கள் எனக்கும் புதிய தகவல்.

    ReplyDelete
  17. @ ஸ்ரீராம். said...
    இங்கு ஒருமுறை சென்று வந்துள்ளேன். கிருஷ்ணரைத் தாக்க நிலவறையில் மல்லர்கள் எனக்கும் புதிய தகவல்//

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  18. @ பலே பிரபு said...
    மணிராஜ்-இராஜராஜேஸ்வரி

    http://bloggersbiodata.blogspot.com/2011/06/blog-post_3260.html//

    அறிவிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  19. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. பாண்டவ தூதனைப் பற்றிய படங்களும் பதிவும் கண்ணுக்கு விருந்தாகவும் மனதுக்கு அமைதியையும் தந்தன.
    பாராட்டுக்கள்.
    அன்புடன்,
    ரஞ்ஜனி

    ReplyDelete
  21. பாண்டவ தூதனைப் பற்றிய படங்களும் பதிவும் கண்ணுக்கு விருந்தாகவும் மனதுக்கு அமைதியையும் தந்தன.
    பாராட்டுக்கள்.
    அன்புடன்,
    ரஞ்ஜனி

    ReplyDelete